TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!

Go down

ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்! Empty ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!

Post by mmani Sun Apr 10, 2011 9:12 am

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்பெக்ட்ரம் 2-ஜி ஊழல் சம்பந்தப்​பட்ட 'ஏ-ஒன்’ குற்றவாளியான முன்னாள்
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா. சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையை
எதிர்கொள்ளத் தயாராகி, நீதிமன்றத்தில் ஆஜரானார்!

கிட்டத்தட்ட 60 நாட்கள் சிறை​வாசத்தில் மனிதர் சற்று இளைத்து, முகம்
வாடிக் காணப்பட்டார். சரியாக அயர்ன் செய்யப்படாத பேன்ட் சட்டை​யோடு
நின்றார். மற்ற குற்றவாளி​களின் உறவினர்கள், நண்பர்கள் எல்​லாம்
வந்திருக்க... ஆ.ராசாவின் மனைவி​யோ குழந்தைகளோ, நெருங்கிய
உறவினர்​களோகூட நீதிமன்றத்துக்கு வரவில்லை.


ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்! Raja-2


''என்னுடைய பாவத்தை நானே
சுமக்கிறேன். நீங்கள் யாரும் வர வேண்டாம்!'' என்று ஆ.ராசாவே
கூறிவிட்டாராம். தி.மு.க-வுக்கு நெருக்கமான டெல்லி மூத்த வழக்கறிஞர்
வி.ஜி.பிரகாசத்திடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் ஆ.ராசா.

வெறும் 127 பக்கங்கள்தான் குற்றப் ​பத்திரிகை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட
125 சாட்சிகளுக்கும் கிட்டத்​தட்ட 80 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 654
தஸ்தாவேஜுகளும் டிரங்க் பெட்டியில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்பு வந்து
இறங்கிய​போது த்ரில் கூடியது.


ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்! Spectram-scam-1


சி.பி.ஐ. டி.ஐ.ஜி.
எஸ்.கே.பல்சானியா மற்றும் விவேக் பிரியதர்சினி ஆகியோரை சந்தித்துக் கை
குலுக்கிய ஆ.ராசா, ''நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பது வேறு.
ஆனால், உங்களைப் பாராட்டுகிறேன். இவ்வளவு விஷயங்களை, குறுகிய காலத்தில்
கொண்டு வந்தது பாராட்டுக்கு உரியது!'' என்றார்.

ஷாகித் பால்வாவும் தன் பங்குக்கு சி.பி.ஐ. அதிகாரிகளிடம் பேசினார்.
''எங்களை மட்டும் கைது செய்து உள்ளே அனுப்பிவிட்டு, மற்ற நிறுவனங்களையும்
அவர்கள் சம்பந்தப்பட்டவர்களையும் கௌர​வமாக நடத்துகிறீர்கள். இது
அக்கிரமம்!'' என்றார் பால்வா!

இந்த ஊழலில் விழுங்கப்பட்ட பண விவகாரங்களை சி.பி.ஐ. கண்டுபிடித்ததோ...
இல்லையோ, இந்த ஊழலின் ஆணி வேரைக் கண்டுபிடித்து, அதைக் குற்றப்
பத்திரிகையாக நீதிமன்றத்தில் வைத்துவிட்டது. இந்த முதல் குற்றப்
பத்திரிகையில் ஊழல் பற்றி சி.பி.ஐ. தெரிவித்துள்ளவை கொஞ்சம்தான்.

''மே 2007-ம் ஆண்டு தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசா பொறுப்பேற்றபோது,
தன்னோடு சுற்றுச்சூழல் அமைச்​சகத்தில் பிரைவேட் செக்ரெட்டரியாக இருந்த
ஆர்.கே.சந்தோலியா, கூடுதல் செயலாளராகப் பணிபுரிந்த சித்தார்த்த பெஹுரா
இருவரையும் தன் அமைச்சகத்துக்கு அழைத்து வந்து, செயலராக ஆக்கினார்.
திட்டமிட்டுத் தனக்கு வேண்டியவர்களை அழைத்து வந்து சதித் திட்டம்
தீட்டினார்.

அதேபோல, ஆ.ராசா சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோதுதான், மற்ற
குற்றவாளிகளான டிபி ரியாலிட்டி ஷாகித் பால்வா, வினோத் கோயங்கா, மற்றும்
யுனிடெக் சஞ்சய் சந்திரா எல்லோரும் அவருக்குப் பழக்கமானார்கள்.

இந்தத் தொழில் அதிபர்களின் பல ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு ஆ.ராசா
அப்போதே அனுமதி வழங்கி உள்ளார். இவர் அமைச்சரானவுடன் முதல் காரியமாக
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கும், யுனிடெக் நிறுவனத்துக்கும்,
ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிமத்தைக் கொடுப்பதில் தீவிரமாக
இருந்தார்!

ஸ்வான் டெலிகாம் ஏற்கெனவே ஸ்பெக்ட்ரம் உரிமம் கேட்டு மனு செய்து இருந்தது.
யுனிடெக் நிறுவனம் விதவிதமான பெயர்களில் எட்டு நிறுவனங்களைத் தயாராக
வைத்திருந்தது.

1999 தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை ஒன்றின் (என்.டி.பி.99)
அடிப்​படையில் டிராய் அடிக்கடி வலியுறுத்திய விஷயம், 'ஏற்கெனவே உள்ள
மொபைல் ஆபரேட்டர்களுக்குப் போக, ஸ்பெக்ட்ரம் மீதம் இருந்தால்தான்...
புதிய ஆபரேட்டர்களுக்கு உரிமங்கள் வழங்கவேண்டும்’ என்பது. ஆனால், ஆ.ராசா
இந்த ஸ்பெக்ட்ரம் இருப்பை அறிந்து கொள்ளாமலே புதிய உரிமங்களை அளிக்கத்
தொடங்கினார்.

புதிய உரிமங்களைப் பெறும் விண்ணப்பங்களை அளிக்கும் தேதியை அக்டோபர் 1
என்று அறிவித்துவிட்டு, பின்னர் 'செப்டம்பர் 24 வரை அளிக்கப்பட்டவை
மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்’ என்று அறிவித்தார். இந்த மாற்றம் குறித்து
சட்ட அமைச்சகத்துக்கு 2007 அக்டோபரில் தகவல் கொடுத்தார்.

சட்ட அமைச்சகம், 'இது அமைச்சரவைக் குழுவில் வைக்கப்பட்டு முடிவு
எடுக்கப்பட வேண்டும்’ என்று கூறியும், அமைச்சரவைக் குழுவுக்கு அனுப்பாமல்,
தன் முடிவில் ராசா குறியாக இருந்தார். அதோடு, 'அப்படி அனுப்புவது தேவை
இல்லாதது’ என்று பிரதமருக்கும் கடிதம் எழுதினார்!

02.11.2007-ல், 'ஸ்பெக்ட்ரம் போதுமானதாக இல்லாத நிலையில் ஏராளமான
விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனால் இதற்குரிய ஒதுக்கீடுகளை கவனமாகவும்
வெளிப்படையாகவும் செய்ய வேண்டும்’ என்று பதில் எழுதினார் பிரதமர்.

அந்தக் கடிதத்துக்கு, அன்று இரவே சந்தோலியாவை வைத்துக்கொண்டு பதில்
எழுதிய ஆ.ராசா, 'ஒரு சிறு விதிமுறைகூட மீறாமல் தொலைத் தொடர்பு துறை
வெளிப்படையாக இந்த உரிமங்களை வழங்குகிறது’ என்று தெரிவித்தார். ஆனால்,
நடந்தவையோ வேறு!

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை தரும் கொள்கையிலும் விதிமீறல்கள்
நடந்துள்ளன. 'முன்பு இருந்த அமைச்சர்கள் பின்பற்றியதைத்தான் பின்
​தொடர்ந்​தேன்’ என்று கூறினார் ஆ.ராசா. ஆனால், முதலில்
விண்ணப்பித்தவர்கள் என்கிற முறையை மாற்றி, 'உரிமக் கட்டணத்தை யார் முதலில்
கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு முன்னுரிமை’ என்று ஆ.ராசா மாற்றினார்.
கைப்பற்றப்பட்ட ஃபைல்கள் மூலம் இது தெரிய வருகிறது. இதில்தான்
சொலிசிட்டர் ஜெனர​லையும் ஆ.ராசா ஏமாற்றியுள்ளார். இதில் ஆ.ராசாவின்
கூட்டாளி அதிகாரிகளான ஆர்.கே.சந்தோலியா மற்றும் சித்தார்த்த பெஹுரா
ஆகி​யோர் கூட்டுச் சதிகள் புரிந்துள்​ளனர்.


ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்! Ballwa-family


முதலில்
விண்ணப்பப் படிவம் சமர்ப்பித்தவர்களுக்கு முதல் உரிமை என்கிற முறை
இருந்​திருந்​தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்​​துக்கு அனுமதிக் கடிதம்
கொடுக்கப்​பட்டவுடன் ஏழு நாட்​களுக்குள் விண்ணப்பதாரர்கள் தொலைத்
தொடர்புத் துறையின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.


அதன்
பின்னர் 15 நாட்களில் நுழைவுக் கட்டணத் தொகையை வங்கி கியாரன்ட்டிகள்
மற்றும் டிமாண்ட் டிராஃப்ட்டாக செலுத்த வேண்டும். இப்படி ஒவ்வொன்றும்
படிப்படியாக நடந்தால், ஸ்வான், யுனிடெக் நிறுவனங்கள் தகுதி இழந்துவிடும்
என்பதால், அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளனர்!


தங்களுக்கு
வேண்டிய இந்த நிறுவனங்களுக்கு மட்டும் ரகசியத் தகவல்களைக் கொடுத்தனர்.
அதாவது, 'யார் முதலில் நுழைவுக் கட்டணத்தைக் கொண்டு வருகிறார்களோ,
அவர்களுக்குத்தான் அனுமதி’ என்கிற தகவல், அறிவிப்பு வருவதற்கு
முன்கூட்டியே இவர்களுக்குத் தரப்பட்டுள்ளது.


இதன்படி
இவர்கள் வங்கி கியாரன்ட்டி, டிமாண்ட் டிராஃப்ட் எல்லாம் நவம்பர், டிசம்பர்
மாதங்களிலேயே எடுத்துத் தயாராக இருந்தனர். இந்த அறிவிப்பு, 2008 ஜனவரி
10-ம் தேதி பிற்பகல் 1.47-க்கு பத்திரிகை செய்தி, வெப்சைட் மூலமாக
வெளியிடப்படுகிறது. அன்றைய தினம் 3.30 மணிக்கு அனுமதிக் கடிதம்
விநியோகிக்கப்படும் என்கிற தகவல் வெளியிடப்படுகிறது.


இதன்படி
கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர அவகாசம் மற்ற கம்பெனிகளையெல்லாம்
திணறடித்துவிட... ஸ்வான் மற்றும் யுனிடெக்கின் எட்டு நிறுவனங்கள் இந்த
வங்கி கியாரன்ட்டிகளைக் கொடுத்தன. அனுமதிக் கடிதங்களையும் முதலில்
பெற்றுச் சென்றனர்.


இந்த இரு நிறுவனங்கள் உட்பட 120 நிறுவனங்கள் கடிதங்களைப் பெற்றன. இதில், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியே தள்ளப்பட்டன. இதனால், முதலில் வருவோர்க்கு முதல் முன்னுரிமை விவகாரத்திலேயே தில்லுமுல்லு நடந்து உள்ளது!'' என்று அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் குற்றப் பத்திரிகையில்!

இப்படி ஆதாரங்களோடு பல விஷயங்களையும் சொல்லி இருக்கும் சி.பி.ஐ.,
அடுத்து ஏப்ரல் 25-ல் வைக்கப் போகும் இரண்டாவது குற்றப் பத்திரிகையில்
இன்னும் பல அணுகுண்டுகள் வெடிக்கும்!

நன்றி : ஜூனியர்விகடன் - 13-04-2011
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2ஜி ஊழல்: ஆ.ராசா, 8 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; தீவிர விசாரணையின் கீழ் கலைஞர் டிவி!
» ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் :தயாநிதி மீது எப்.ஐ.ஆர்.- அடுத்த கட்டமாக கைது செய்ய ' ஜரூர் ’ திட்டம்
» அனில் அம்பானிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சம்மன்
» 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு விவாதம்: ராசா எதிர்ப்பை நீதிமன்றம் நிராகரித்தது
» ஊழல் வழக்குகளில் சிக்கி ஜாமீனில் வந்த ஆ.ராசா, கல்மாடிக்கு புதிய பதவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum