Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
வளர்த்த கடா வடிவேலு..! புண்ணாக்கு குஷ்பு..!
Page 1 of 1

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
“என்னடா இது? பத்திரிகை செய்திகளையே போட்டுக்கிட்டிருக்க..?” என்று கோபப்படாதீர்கள் மக்களே..!
2011
சட்டமன்றத் தேர்தல் முடிகிறவரையில் இதை தொடர்ந்து செய்வதாகத்தான்
உள்ளேன்.. தற்போதைய நிலையில் பத்திரிகைகளில் வரும் சில ஸ்கூப் நியூஸ்களை
நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கூடவே இணையத்தில்
பதிவும் செய்து வைக்க வேண்டியுள்ளது.
உள்ளூரில்
புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவர்கள் படிப்பார்கள். வெளி மாநிலங்களில்
இருப்பவர்கள், வெளிநாடுகளில் இருப்பவர்களில் புத்தகத்தை இணையத்தின்
மூலமாகப் படிக்காமல் இருப்பவர்களுக்காக இங்கே எனது தளத்தில் அவைகள்
பதிவேற்றப்பட்டு வருகின்றன..!
கோபித்துக்
கொள்ளாமல் ஓ.பி. அடிக்கிறேன் என்றெல்லாம் நினைக்காமல் எனது உடன் பிறந்த
சகோதரனான எனது கைகளுக்காக என்னைத் திட்டாமல் ‘போய்த் தொலைடா’ என்று
பெரிய மனதுடன் மன்னித்து விட்டுவிடுங்கள்..!
இது திரையுலக அரசியல்வியாதிகளின் முதல் மோதல் கட்டுரை..!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதியை, 'ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?’ என
சவால்விட்டவர், வாழைப்பழ காமெடி நடிகர் செந்தில். இந்தத் தேர்தலிலும்,
தமிழகம் முழுக்க, தி.மு.க. கூட்டணிக்கு எதிராகப் பிச்சு உதறுகிறார்.
''மதுரையில் நாடகத்தில்
நடிச்சுட்டு இருந்தான் வடிவேலு. ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே’
படத்தில் நடிக்கிறதுக்கு சான்ஸ் கேட்டு மெட்ராஸ் வந்தான். அவனைப்
பார்த்ததுமே, 'இவன் ஆளே சரி இல்லையே... ஒரு தினுசா இருக்கானேன்’னு
கவுண்டமணி அண்ணன் கரெக்ட்டா கண்டுபிடிச்சுத் திட்டினார். நான்தான் அவரை
சமாதானம் செஞ்சு, ''அண்ணே ஏதோ நாடகத்துல நடிச்சுப் பொழைப்பை நடத்துறான்.
சினிமாவுல நடிச்சா இன்னும் கொஞ்சம் கூடுதலா நாலு காசு பார்ப்பான்,
பாவம்’னு வடிவேலுக்கு வக்காலத்து வாங்கினேன்.
சினிமாவில் அவனுக்கு வாழ்க்கை
கொடுத்தவர் ராஜ்கிரண். அந்தப் பாவத்துக்காக அவர் பக்கத்துல இருந்தவங்களை
எல்லாம் தன்கிட்டே இழுத்து வெச்சுக்கிட்டான். கஷ்டப்படுற ராஜ்கிரணுக்கு
கார் வாங்கிக் கொடுத்தேன்னு தப்பா ஒரு சேதியைக் கிளப்பிவிட்டு, தன்னை ஒரு
வள்ளலா காட்டிக்கிட்டான். விஷயத்தைக் கேள்விப்பட்டு ராஜ்கிரணே
நொந்துபோய்ட்டார். இது மாதிரி அறிமுகம் செஞ்சவரையே அசிங்கம்
செஞ்சவன்தான் வடிவேலு.
ஆர்.வி.உதயகுமாரோட 'சின்னக் கவுண்டர்’ படத்துல நானும், கவுண்டமணி
அண்ணனும் நடிச்சோம். எங்ககூட வடிவேலுவும் நடிச்சான். ஷூட்டிங்கில்
விஜயகாந்த் எங்களைவிட வடிவேலுவைத்தான் விழுந்து, விழுந்து கவனிப்பார்.
அவனை எப்பவும் தன் கூடவே வெச்சுக்குவார். அவர் சாப்பிடுற ஐயிட்டங்களையே
அவனுக்கும் பரிமாறச் சொல்லுவார். அந்தப் படத்துல வடிவேலு நிறைய ஸீன்ல
நடிக்கறதுக்கு டைரக்டர்கிட்டே சிபாரிசுகூட பண்ணினார் விஜயகாந்த்.
'என்னண்ணே இப்படிச் செய்றீங்களே?’ன்னு நான் விஜயகாந்த்கிட்ட கேட்டேன்.
'அண்ணே, நீங்க ராமநாதபுரத்து ஆளு. வடிவேலு என் ஊர்க்காரன். என்னோட ஆளு.
நீங்க வேணா பாருங்க.. அவன் பெரிய்ய ஆளா வருவான்’னு விஜயகாந்த் என்கிட்ட
சொன்னார். அப்படி அவர் வளர்த்த கடா வடிவேலு, இப்போ அவர் மார்பிலேயே
பாயுது. அவன், அவரை அசிங்க அசிங்கமாத் திட்டுறான்.
தருமபுரியில் தே.மு.தி.க.
வேட்பாளரை ஆதரிச்சுப் பேசியிருக்கார் விஜயகாந்த். அப்போ, வேனுக்குள்ளே
மைக் விழுந்துடுச்சு. உதவியாளரிடம் குனிஞ்சு எடுக்கச் சொல்லி இருக்கார்.
அந்தச் சம்பவத்தை கேமரா ட்ரிக் மூலமா வேட்பாளரை அடிச்ச மாதிரி தப்பாப்
பிரசாரம் பண்றாங்க. கருணாநிதியைக் கைது செஞ்சப்போ, பரிதாபமாக் கத்துற
மாதிரி டப்பிங் வாய்ஸ் கொடுத்தவங்கதானே இந்த தி.மு.க-காரங்க.
இன்னோர் கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, 'அ.தி.மு.க. கொடியைக்
கீழே இறக்கச் சொல்லித் திட்டின மாதிரி’ கருணாநிதி டி.வி-யில்
காட்டுறாங்க. அ.தி.மு.க., தே.மு.தி.க. கட்சியோடு கொடிகளுக்கு மத்தியில்
திடீர்னு ஒருத்தன் தி.மு.க. கொடியைத் தூக்கிக் காட்டுனான். அதைப்
பார்த்துக் கடுப்பான விஜயகாந்த், தி.மு.க. கொடியைக் கிழே இறக்கச்
சொல்லித் திட்டினார். டப்புன்னு கேமராவை அ.தி.மு.க. பக்கம் மாத்திக்
காட்டி கூட்டணிக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்துறாங்க.
சென்னையில் அம்மா பேசுன கூட்டத்துல ஜனங்க நெரிசலில் மாட்டுனதா
காட்டுறாங்க. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, அந்தக்
காட்சியைக் கை கட்டி வேடிக்கைதானே பார்த்தது? உண்மையிலே, தோல்வி
பயத்தில், தி.மு.க-வோடு அந்தக் கட்சியின் சேனல்களும் திட்டம் போட்டு
ஏற்பாடு செய்த தள்ளுமுள்ளு வேலைதான் அது...'' என்றவர் அடுத்து குஷ்பு
விஷயத்துக்குத் தாவினார்.
''ஜெயா டி.வி-யின் ஜாக்பாட் நிகழ்ச்சி மூலமாத்தான் குஷ்பு தமிழைக்
கத்துக்கிட்டாங்க. இப்போ, தி.மு.க-வை ஆரம்பிச்ச ஐம்பெரும் தலைவருங்க
வாரிசு மாதிரி... தலை, கால் புரியாம ததிங்கிணத்தோம் ஆட்டம் போடுது.
கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த
தமிழ்நாட்டில், 'கற்புன்னு ஒண்ணு இல்லவே இல்லை’ன்னு கேவலமாப் பேசி, நம்ம
தாய்மார்களை இழிவுபடுத்தின மோசமான பொம்பளைதான் குஷ்பு. அதை எதிர்த்து
கோர்ட்டில் கேஸ் போட்ட கட்சிகள் பா.ம.க-வும், விடுதலைச் சிறுத்தைகளும்.
குஷ்பூ வெளியூர்ல கோர்ட்டுக்கு வந்தப்ப செருப்பு, விளக்குமாறைக்
காட்டினது ராமதாஸ், திருமாவளவன் கட்சியோட மகளிர் அணிகள்தான். இப்போ,
அவங்களே அந்தப் பொம்பளைக்கு ஆரத்தி எடுக்குறாங்க. எம்.எல்.ஏ. பதவிக்காக
அந்த வட நாட்டுக்காரி காலில் போய் ராமதாஸும் திருமாவளவனும்
விழுறீங்களே... உங்களுக்கு வெட்கமா இல்லையா..?
“ஆண்டிபட்டியில் போட்டியிடப் பயந்துக்கிட்டு அம்மா ஸ்ரீரங்கத்தில்
நிற்கிறதா..” குஷ்பு பேசுது. தைரியசாலி கருணாநிதி எதுக்கு சென்னையை
விட்டுட்டுப் பயந்துபோய் திருவாரூர்ல நிக்கிறார்? ஸ்டாலின் எதுக்கு
ஆயிரம் விளக்கு தொகுதியை விட்டுட்டு ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற
கொளத்தூர்ல போட்டி போடுறார்? ஏற்கெனவே, போட்டியிட்ட ஆண்டிபட்டியை
அம்மா அரசப்பட்டி ஆக்கிட்டாங்க. அதனால, இப்போ ஸ்ரீரங்கத்துல நிற்கிறாங்க.
இந்த விவரம்கூட புரியாத புண்ணாக்குதான் குஷ்பு!'' கடகடக்கிறார் செந்தில்!
நன்றி : ஜூனியர் விகடன் - 04-04-2011
http://truetamilans.blogspot

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இணையத்தை வளர்த்த வல்லுநர்கள்
» வளர்த்த கடா மகிந்தவின் மார்பில் பாய்ந்தது
» தெனாலி ராமன் வளர்த்த பூனை
» 9 ஆண்டாக வளர்த்த நாய் குட்டி மாயம் : போஸ்டர் அடித்து
» வளர்த்த நாய்களுக்கு குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறை: அதிர்ச்சி தகவல் (படங்கள் இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum