Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
மரம் வெட்டுவதும், குடிசைக்கு தீ வைப்பதும் சமூக நீதியா? விஜயகாந்த் கேள்வி
Page 1 of 1
மரம் வெட்டுவதும், குடிசைக்கு தீ வைப்பதும் சமூக நீதியா? விஜயகாந்த் கேள்வி
தர்மபுரி : ""விஜயகாந்த் எந்த சமூக நீதி போராட்டத்தில் பங்கேற்றார் என,
ராமதாஸ் கேட்டு வருகிறார். மரம் வெட்டுவதும், அடுத்தவர்கள் குடிசைக்கு தீ
வைப்பதும் தான் சமூக நீதியா?,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை
ஆதரித்து, பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில் வேனில் இருந்தபடி தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த் பேசியதாவது: ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி நல்ல
திட்டங்களை கொண்டு வரவில்லை. மக்கள் பிரச்னை குறித்து அவர் கவலைபட்டது
உண்டா? விலை உயர்வு, மின் நிறுத்தம் மக்களை பெரிதும் பாதிப்படைய
செய்துள்ளது. நல்ல வேளை இந்த முறை ஆற்காடு வீராசாமி தேர்தலில்
போட்டியிடவில்லை. கடந்த ஐந்தாண்டாக தி.மு.க.,வுக்கு எதிராக, பா.ம.க.,
ராமதாஸ் டாஸ்மாக் கடைகளை பூட்டு போட்டு போராட்டம் நடத்தினார். பெண்களை
திரட்டி டாஸ்மாக் கடை முன் போராட்டம் நடத்தினார். இப்போது, தி.மு.க.,வுடன்
கூட்டணி வைத்துள்ளார். விஜயகாந்த் எந்த சமூக நீதி போராட்டத்திலாவது கலந்து
கொண்டு, சிறை சென்றாறா? என, ராமதாஸ் கேள்வி கேட்கிறார். இவருக்கு ஜாதி
பிரச்னையை தூண்டிவிட்டு குளிர் காய்வது தான் வேலை. ராமதாஸ் எந்த சமூக நீதி
போராட்டத்தில் கலந்து கொண்டார். இவர் எத்தனை வன்னியர்களுக்கு வேலை வாங்கி
கொடுத்திருப்பார். நான் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன். எல்லா சமுதாய
மக்களும் முன்னுக்கு வர வேண்டும் என நினைப்பவன்.
தற்போது, அனுதாபத்தை தேடும் முயற்சியில் தி.மு.க.,வினர்
ஈடுபட்டுள்ளது. எந்த அனுதாபத்தையும் மக்கள் நம்பி விடாதீர்கள். எம்.ஜி.ஆர்
துவங்கிய கட்சியில் மக்களுக்காக நான் கூட்டணி சேர்ந்துள்ளேன். தி.மு.க.,
ஆட்சிக்கு முடிவு கட்ட, அ.தி.மு.க., கூட்டணியை ஆதரியுங்கள்.இவ்வாறு
விஜயகாந்த் பேசினார்.
ஓசூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் டாக்டர் ஜானை ஆதரித்து,
ராம்நகர் அண்ணாதுரை சிலை அருகே, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
சினிமாவிலும், தேர்தல் அறிக்கை வெளியிடுவதிலும் யார் கதாநாயகன், கதாநாயகி
என்பதை விட, பொது வாழ்வில் யார் கதாநாயன் என்பது தான் முக்கியம்.
மக்களுக்காக வாழ்ந்த பெரியார், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், காயிதே மில்லத்,
அம்பேத்கர் ஆகியோர் கதாநாயகன்கள்.பொய் மற்றும் ஊழலின் மொத்த உருவமான
கருணாநிதி, பொதுஜன வில்லனாக உள்ளார். தமிழின தலைவர் என தன்னை சொல்லி
கொள்ளும் கருணாநிதி, தமிழர் உரிமையை கடுகளவு கூட விட்டு கொடுக்க மாட்டேன்,
என்றார்.தற்போது, கடலளவு விட்டு கொடுத்துள்ளார். குறிப்பாக இலங்கை
தமிழினத்தை மொத்தமாக அழித்து விட்டனர். அதற்கு துணை போன மத்திய அரசை
இதுவரை கருணாநிதி தட்டிகேட்கவில்லை. காவிரி நதி நீர், முல்லைப் பெரியாறு
பிரச்னை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், பாலாறு அணை விவகாரம்
உள்ளிட்டவைகளில் சுப்ரீம் கோர்ட் தமிழகத்துக்கு வழங்கிய உரிமைகளை கூட,
கருணாநிதி இதுவரை பெற்று கொடுக்கவில்லை.
அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்ததால் விஜயகாந்த், 200 கோடி, 500 கோடி
ரூபாய் வாங்கி விட்டதாக பரப்புகின்றனர். 30 ஆண்டாக சினிமா மூலம் என்
குடும்பத்துக்கு தேவையான சொத்துகளை சேர்த்து விட்டேன். அதனால், இனி
பொதுமக்களுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளேன். பணத்துக்காகவும்,
சீட்டுக்காகவும் நான் ஒருபோதும் விலைபோக மாட்டேன். மக்களுக்காகதான்
கூட்டணி வைத்துள்ளேன். காங்கிரசில் தொண்டனுக்கு சீட் கொடுக்காமல்,
பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணுக்கு வழங்கியுள்ளார். இவர்களை நம்பி
ஆட்சியை ஒப்படைத்தால், நாட்டை சுடுகாடாக மாற்றி விடுவர்.ஜாதி ரீதியாக
கட்சி நடத்தும் பா.ம.க., இந்த சட்டசபை தேர்தலோடு குளோஸ் ஆகிவிடும்.இவ்வாறு
விஜயகாந்த் பேசினார்.
மக்கள் ஏமாற வேண்டாம் : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி
தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் முருகேசனை ஆதரித்து, வேப்பனஹள்ளியில் நடந்த
தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்
பேசியதாவது:தே.மு.தி.க., மூன்றாவது அணி அமைப்பதாக கருணாநிதியின் குடும்ப,
"டிவி'க்கள் பொய்யான செய்தியை பரப்பி வந்தது. ஆனால், என் மானசீக குருவான
எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சியுடன் நான் கூட்டணி
வைத்துள்ளேன்.எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஓட்டு
சேகரித்து வெற்றி பெற்றார். இதே போன்று, வரும் தேர்தலில் தி.மு.க., வெற்றி
பெற, வரும் 5ம் தேதியில் இருந்து, உடல் நிலை சரியில்லை என்று நாடகமாடி,
மருத்துவமனையில் சேர்ந்து, பொதுமக்களிடம் இருந்து அனுதாப ஓட்டுகளை பெற,
கருணாநிதி முயற்சித்து வருகிறார். இதை, வாக்காளர்கள் நம்பக்
கூடாது.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழக அரசுக்கு விஜயகாந்த் ஆவேசமாக கேள்வி
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» கோபால் கோட்சேவுக்கு ஒரு நீதி பேரறிவாளனுக்கு ஒரு நீதியா... ...?
» இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
» உனக்கொரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதியா?
» மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது
» கோபால் கோட்சேவுக்கு ஒரு நீதி பேரறிவாளனுக்கு ஒரு நீதியா... ...?
» இனப்படுகொலை நடந்த மண்ணில் சர்வதேச சமூக ஆர்வலர்கள் பங்குபெரும் சர்வதேச பருவநிலை மாற்றம் மற்றும் சமூக விடய மாநாடு
» உனக்கொரு நீதி, தமிழனுக்கு ஒரு நீதியா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum