Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)by வாகரைமைந்தன் Today at 6:21 pm
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
தலைகீழ் விகிதங்கள்: கிராமப்புறங்களில் தி.மு.க.,; நகர்புறங்களில் அ.தி.மு.க., முன்னணி
Page 1 of 1

தமிழகத்தில், காலம் காலமாக அரசியல் கட்சிகளுக்கு இருந்த ஓட்டு வங்கி,
தற்போது தலைகீழாக மாறியுள்ளது. தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக
கிராமப்புறங்களும், அ.தி.மு.க., வின் நம்பிக்கைக் களங்களாக நகர்புறங்களும்
மாறிவிட்டன.
அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியது முதல், தமிழகத்தில்
கிராமப்புறங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் அக்கட்சிக்கு ஓட்டுகள் மொத்த
மொத்தமாக கிடைத்து வந்தன. எம்.ஜி.ஆர்., இருந்த போதே, நகர்பகுதிகளிலும்,
படித்த மற்றும் நடுத்தர மக்களிடமும், தி.மு.க.,வுக்கு ஆதரவு இருந்தது.
குறிப்பாக, தலைநகரான சென்னை, எப்போதும் தி.மு.க.,வின் கோட்டையாகவே
திகழ்ந்தது. மூன்று தேர்தல்களில் தொடர்ந்து வென்ற எம்.ஜி.ஆரால் கூட இதை
மாற்ற முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கு பிறகும், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில்
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தொடர்ந்து நீடித்தது. எத்தனையோ பிளவுகள்,
இழப்புகளை சந்தித்தபோதும், "இரட்டை இலை' சின்னத்துக்கான ஓட்டு வங்கியை
மாற்ற முடியவில்லை. அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், படித்தவர்கள், நடுத்தர
மக்கள் போன்றோரின் ஆதரவு தி.மு.க.,வுக்குத் தொடர்ந்தது. 1991ல் ராஜிவ்
கொலை என்ற அலை வீசியதால், சென்னையில் கூட தி.மு.க., தோல்வியைத் தழுவியது.
ஆனாலும், தன் ஓட்டு வங்கியை தி.மு.க., தக்கவைத்துக் கொண்டது.
கடந்த, 2006 சட்டசபை தேர்தலுக்குப் பின், தமிழகத்தில் அரசியல்
கட்சிகளின் ஓட்டு வங்கி நிலை தலைகீழாக மாறிவிட்டது. அந்த தேர்தலில்,
தி.மு.க.,வின் கோட்டையாகக் கருதப்பட்ட சென்னையில், மொத்தம் இருந்த 14
தொகுதிகளில், அ.தி.மு.க., ஏழு தொகுதிகளில் வென்றது. கருணாநிதி, அன்பழகன்,
ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி போன்றோர் மட்டுமே வெற்றி பெற
முடிந்தது. இதேபோல, கோவை, மதுரை போன்ற படித்த மக்கள் அதிகம் வாழும்
நகர்பகுதிகளிலும் அ.தி.மு.க.,வே அதிக இடங்களில் வென்றது. இதன் பின் நடந்த
இடைத்தேர்தல்களில் மதுரை மத்தி, மேற்கு தவிர மற்ற அனைத்துமே
கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதிகளாக இருந்தன. இதனால், வாக்காளர்களை
ஆளுங்கட்சி கவர்வதற்கு எளிதாக இருந்தது. ஆளுங்கட்சியும் தொடர்ந்து
வெற்றிகளைக் குவித்தது.
தற்போதைய நிலையில், கிராமப்புறங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில்,
தி.மு.க., அணிக்கு அதிக ஆதரவும், நடுத்தர மக்கள், படித்தவர்கள் மத்தியில்
அ.தி.மு.க.,வுக்கு அதிக ஆதரவும் என, நிலைமை மாறியுள்ளது. இதை அறிந்துள்ள
ஆளுங்கட்சியும், கிராமப்புற தொகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளது. தலைநகர்
சென்னையில் ஐந்து தொகுதிகளை காங்கிரசுக்கும், பா.ம.க., மற்றும் விடுதலைச்
சிறுத்தைகளுக்கு தலா ஒரு தொகுதியையும் தி.மு.க., விட்டுக்கொடுத்துள்ளது.
முதல்வர், துணை முதல்வர், நிதியமைச்சர் போன்றவர்களே தொகுதி மாறியுள்ளனர்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தேர்தல் களத்தில் இருந்தே ஒதுங்கிவிட்டார்.
அதேபோல, கிராமப்புற தொகுதியான ஆண்டிபட்டியில் போட்டியிட்ட ஜெயலலிதா,
இம்முறை ஸ்ரீரங்கத்துக்கு மாறியிருப்பதும், படித்தவர்கள் மற்றும் மேல்
ஜாதியினர் அதிகமுள்ள தொகுதி என்பதால் தான். இவ்வளவு ஆண்டுகளாக இருந்த
ஓட்டு வங்கி, தலைகீழாக மாறியதற்கு, சில காரணங்கள் உள்ளன.
தி.மு.க., ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பொங்கல் பரிசு,
இலவச வேட்டி, சேலை, குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள், இலவச காஸ், ஊரக
வேலை உறுதித் திட்டம், இலவச "டிவி' போன்ற திட்டங்களின் பயனை ஏழைகளும்,
கிராமப்புறத்தினரும் அதிகம் அனுபவித்துள்ளனர். அதனால், அவர்களின் ஆதரவு
தி.மு.க., பக்கம் இருக்கிறது. இவர்கள் யாரும், ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப
அரசியல், லஞ்ச விவகாரம் போன்றவை பற்றி கவலைப்படவில்லை. அதேநேரத்தில்,
படித்தவர்கள், நடுத்தர மக்கள், "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் பற்றி நன்கு
அறிந்துள்ளனர். விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,
இவர்களது பார்வை, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பக்கம் சென்றுள்ளது. இந்த
தலைகீழ் மாற்றம், எந்த கூட்டணிக்கு சாதகமாக அமைகிறது என்பது, மே 13ல்
தெரியும்.
எவ்வளவு தொகுதிகள்? : சென்னையில் 16, மதுரை, கோவை, திருச்சி,
நெல்லை, ஆலந்தூர், தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருப்பூர்,
ஸ்ரீரங்கம், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர்,
ராஜபாளையம், கும்பகோணம் மற்றும் ஓசூர் உட்பட நகர்புற தொகுதிகள் மொத்தம்,
60 இருக்கின்றன. மற்ற தொகுதிகள் அனைத்தும், பெரும்பான்மை
கிராமப்புறங்களைக் கொண்டதாக இருக்கின்றன.dinamalr

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» சட்டசபை இருக்கை அமைப்புகளில் தலைகீழ் மாற்றம்
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
» 101 தொகுதிகள் : பெண் வாக்காளர்கள் முன்னணி
» வாக்களிப்பதற்காக படபிடிப்பை ரத்து செய்த முன்னணி நடிகர்கள்
» டெல்லி 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 63 இடங்கள் முன்னணி..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum