Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
அரையிறுதியில் நுழையப்போவது யார்? இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்
Page 1 of 1

Last Updated :
ஆமதாபாத், மார்ச் 23: உலகக் கோப்பையின் இரண்டாவது காலிறுதி ஆட்டம் ஆமதாபாதில்
வியாழக்கிழமை நடைபெறுகிறது.
இதில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவும், போட்டியை நடத்தும் நாடுகளில்
ஒன்றான இந்தியாவும் மோதுகின்றன. ஒருநாள் போட்டி தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல்
இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளுமே சமபலம் கொண்ட அணிகளாக கருதப்படுவதால் போட்டியில்
போராட்டத்துக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. கடந்த ஆட்டத்தில்
பாகிஸ்தானிடம் தோற்றுள்ளதால் ஆஸ்திரேலியா சற்று எச்சரிக்கையோடு களம் காணக்கூடும்.
அதேசமயம் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் சேவாக் விளையாடுதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவர் விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யக்கூடும்.
2003 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் அதிரடியாக ஆடி 82
ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் இந்த உலகக் கோப்பையில் இதுவரை இரண்டு சதங்களை
விளாசி சிறப்பாக ஆடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக
விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக
யுவராஜ், கம்பீர், விராட் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். யுவராஜ்
இதுவரை 6 லீக் ஆட்டங்களில் விளையாடி ஒரு சதத்துடன் 284 ரன்கள் குவித்ததோடு, 9
விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ரெய்னா இடம்பெறுவாரா?
தோனி, யூசுப் பதான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய
கட்டாயத்தில் உள்ளனர். சேவாக் ஆடாத பட்சத்தில் ரெய்னாவுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
சேவாக் களமிறங்கினால் ரெய்னா, யூசுப் பதானில் ஒருவருக்கே வாய்ப்பு வழங்கப்படும்.
இந்திய அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும், இங்கிலாந்து,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் 30 ரன்களுக்குள் 8 முதல் 9 விக்கெட்டுகளை
இழந்துள்ளது கவலையளிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்திலும்
ரெய்னா, தோனி, பதான் ஆகியோர் விரைவாகவே வெளியேறினர்.
ஜாகீர்கானை நம்பியே...
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே வீரர்களுடன்
இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில்
ஜாகீர்கானை நம்பியே இந்திய அணி களமிறங்குகிறது. ஆசிஷ் நெஹ்ரா, முனாபின் பந்துவீச்சு
மெச்சும்படி இல்லை.
2003 உலகக் கோப்பையில் ஜாகீர்கான், நெஹ்ரா ஆகியோரின் பந்துவீச்சை பாண்டிங்,
கில்கிறிஸ்ட், மார்ட்டின் ஆகியோர் பந்தாடினர். இந்த உலகக் கோப்பையில் ஜாகீர்கான்
சிறப்பாக பந்துவீசி 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சுழற்பந்துவீச்சில் ஹர்பஜன் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. தமிழக வீரர் அஸ்வின்
முதல் ஆட்டத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் அவர் இந்த ஆட்டத்தில்
இடம்பெறக்கூடும்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் இதுவரை எந்த வீரரும் சதம்
அடிக்கவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் வாட்சன், ஹாடின் ஆகியோர் சிறப்பாக விளையாடி
நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். பாண்டிங் தடுமாறி வருகிறார். மிடில்
ஆர்டரில் மைக்கேல் கிளார்க், மைக் ஹசி, ஒயிட் ஆகியோரை நம்பியே அந்த அணி உள்ளது.
இவர்களை வெளியேற்றும் பட்சத்தில் அந்த அணியை குறைவான ஸ்கோரில் சுருட்டிவிடமுடியும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பிரட் லீ, ஷான் டெய்ட், ஜான்சன் என வலுவான
வேகப்பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளது. சுழற்பந்துவீச்சில் கிரெஜாவை நம்பியே
உள்ளது. 2003 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை
இழந்ததால், இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற இந்தியா
கடுமையாகப் போராடும். அதேசமயம் தொடர்ந்து 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்ற
ஆஸ்திரேலியாவும் போராடும்.
டாஸ் வெல்வது முக்கியம்
இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்வது மிகவும் முக்கியமாகும். பகல்- இரவு ஆட்டமாக
நடைபெறுவதால் இரண்டாவது பேட்டிங்கின்போது பனிப்பொழிவு இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில்
பீல்டிங்கைத் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைதானம் எப்படி?
இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளது. அதில்
5-ல் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. கடைசி 3 ஆட்டங்களில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்,
தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. இந்த மைதானத்தில்
ஆஸ்திரேலியாவுடன் இரண்டு ஆட்டங்களில் மோதியுள்ள இந்திய அணி ஒரு வெற்றியையும், ஒரு
தோல்வியையும் பதிவு செய்துள்ளது.
சச்சின் 3,000
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 67 ஆட்டங்களில் விளையாடியுள்ள சச்சின்,
3,000 ரன்களை குவித்துள்ளார். அதில் 9 சதங்களும் அடங்கும். இந்த ஆட்டத்தில் அவர்
சதம் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச போட்டியில் 100-வது சதத்தை எட்டிவிடுவார். இதற்கு
முன் 1996- உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் 90 ரன்கள்
எடுத்துள்ளார். உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் எடுத்துள்ள
அதிகபட்ச ரன் இதுவே.
இதுவரை...
இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் இதுவரை 9 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா
2 முறையும், ஆஸ்திரேலியா 7 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 1996, 1999, 2003 உலகக்
கோப்பைகளில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருநாள்
போட்டியில் 104 முறை இவ்விரு அணிகளும் மோதியுள்ளன. இதில் இந்தியா 35 ஆட்டங்களிலும்,
ஆஸ்திரேலியா 61 ஆட்டங்களிலும் வெற்றிகண்டுள்ளன. 8 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» இறுதிப்போட்டியில் இலங்கையுடன் மோதுவது யார்?: ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் இன்று மோதல்
» முத்தரப்புத் தொடர்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
» அடிப்பார்களா அடிலெய்டில் *இன்று இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது மோதல்
» அரையிறுதியில் இந்தியா-இலங்கை மோதல்
» தெற்காசிய கால்பந்து: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா - அரையிறுதியில் ஆப்கானிஸ்தானுடன் மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum