Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கோவை, மதுரைக்கு புல்லட் ரயில் எப்போது? தி.மு.க., தேர்தல் அறிக்கை காட்டும் புதிர்
Page 1 of 1

தி.மு.க.,வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சென்னையில் இருந்து மதுரை,
கோவை நகரங்களுக்கு "புல்லட் ரயில்' விடப்படும் என்று
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது எப்போது சாத்தியமாகும் என்பது இனி
அக்கட்சியினர் தங்கள் பிரசாரத்தில் தெரிவிக்க முன்வரலாம். ஆனால் இது
எளிதில் சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை.
கடந்த மாதம் 5ம் தேதி தமிழக அரசு சார்பில், சட்டசபையில் 2011-2012ம்
ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் சென்னை மெட்ரோ
ரயில் திட்டத்திற்கு 2011-2012 ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகை
750 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த புல்லட்
ரயில் பற்றி குறிப்பு ஏதும் அதில் இல்லை. மெட்ரோ ரயில் திட்டத்தின் மொத்த
மதிப்பீடு ரூபாய் 14 ஆயிரம் 600 கோடியாகும். இதுவரை இத்திட்டத்திற்கு
தமிழக அரசு ஒதுக்கிய தொகை ரூ.1452 கோடியாகும். தமிழகத்தைப் பொறுத்தளவில்,
சென்னை -நெல்லைக்கு இரட்டை ரயில் பாதை இன்னமும் நிறைவேறாததால், மக்கள்
படும் துயரம் அதிகம். அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம் போன்றவை
தங்களுக்கு சில ரயில் திட்டங்கள் நிறைவேற ரயில்வேக்கு, ஒரு பகுதி நிதி
தந்து விரைவில் முடிக்க ஒத்துழைப்பு தந்திருக்கின்றன. ரயில்வே அமைச்சகமும்
இம்மாதிரி மாநில அரசின் ஒத்துழைப்புகளை மனமுகந்து ஏற்கிறது. ஆனால்
சமீபத்தில் வெளியிடப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் அதிக அளவு நிதி
தமிழகத்திற்கு ஒதுக்கப்படவில்லை. ஆகவே அத்திட்டங்கள் நிறைவேற தாமதமாகும்.
அப்படியிருக்கும் போது "புல்லட் ரயில்' என்ற அதிவேக ரயில் திட்டம் எப்படி
அமலாகும் என்ற கேள்வி எழுகிறது. தற்போது ராஜதானி என்றழைக்கப்படும் ரயிலை
விட அதிக வேகம் கொண்டது புல்லட் ரயில். மணிக்கு 250 கி.மீ முதல்
அதிகபட்சமாக 350 கி.மீ வரை வேகத்தில் பயணிக்க வசதியானது புல்லட் ரயில்.
இம்மாதிரி புல்லட் ரயிலுக்கு தனிப்பாதை அமைத்து, அதை இயக்க முடியும்.
ரயில்வே அமைச்சகத்தின் கருத்துருவில் இம்மாதிரி புல்லட் ரயில்களை
விடுவதற்கு ஆறு ரூட்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன.
இதில் புனே- மும்பை- ஆமதாபாத் இடையே ரயில்விட சாத்தியக் கூறுகள் பற்றி
முதல் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இத்திட்டத்தை நிறைவேற்ற
"நேஷனல் ஹை ஸ்பீடு ரயில் அத்தாரிட்டி' என்ற அமைப்பைத் தனியாக ரயில்வே
அமைத்திருக்கிறது. இத்திட்டத்திற்கான வழிகளை ஆராய்தல், பணிகள்
நிறைவேற்றப்பட நடவடிக்கைகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும் ரயில்வே அமைச்சகத்
தகவலின்படி . இது அதிக செலவுபிடிக்கும் திட்டம். சாதாரணமாக ஒரு கிலோ
மீட்டர் ரயில் பாதை அமைக்க 6 கோடி ரூபாய் தேவை. புல்லட் ரயில் பாதை அமைய
கிலோ மீட்டருக்கு 70 கோடி ரூபாய் தேவை. ஆண்டுகள் நீட்டிக்கும் போது
செலவும் அதற்கேற்ப அதிகரிக்கும். மாநில அரசுகளுடன் சேர்ந்து அதற்கான நிலம்
கையகப்படுத்துதல், நிதி பெறுவது உட்பட எல்லாப் பணிகளும் கூட்டாகச்
செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. தற்போது புனே - ஆமதாபாத்
பாதை தேர்வுக்கு பின் அடுத்ததாக ஹவுரா-ஹால்டியா , அதற்கு அடுத்ததாக
டில்லி-அமிர்தரஸ் பகுதிகளில் முதற்கட்ட ஆய்வு நடக்கும். இவைகளுக்கு
அடுத்ததாக ஐதராபாத் -விஜயவாடா- சென்னை ரயில் பாதை ஆய்வுக்கு வருகிறது.
அதற்கும் அடுத்தாக சென்னை- பெங்களூரு- கோவை - எர்ணாகுளம் புல்லட் ரயில்
பரிசீலனைக்கு வருகிறது. ரயில்வே திட்டத்தில் மதுரை பெயர் காணோம். ஆகக்
கடைசியில் சென்னை, கோவை திட்டங்கள் பரிசீலனைக்கு வருகின்றன.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், போக்குவரத்து என்ற தலைப்பில் அமைந்த
தகவலில் "சென்னையில் இருந்து தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களான மதுரை, கோவை
ஆகிய நகரங்களுக்கு அதிவிரைவு தொடர் வண்டி ( புல்லட் ரயில்) இயக்குவதற்கு
நடவடிக்கை எடுப்போம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சென்னை-
நெல்லை இரட்டை ரயில் பாதைத் திட்டம் முடியாத போது, சென்னை மெட்ரோ ரயில்
திட்டத்தை விரைவுபடுத்தாத போது இத்திட்டம் துவங்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
நிச்சயம் புல்லட் ரயில் ஓடும் காட்சியைப் பார்க்க, தமிழக மக்களுக்கு
ஐந்தாண்டுகளுக்கு மேலாகும். அதே சமயம் மத்திய அரசுடன் இணைந்து
நிறைவேற்றப்படும் திட்டம் இது என்பதால், இனி காங்கிரஸ் வெளியிடும் தேர்தல்
அறிக்கையில் இது குறித்து அதிகதகவல் வந்தாலும் வரலாம். ஆனால் எத்தனையோ
முன்னுரிமை பிரச்னைகள் இருக்கும் போது, புதிதாக ஏன் இது தேர்தல்
அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது என்பது தெரியவில்லை.

ஜனனி- வலை நடத்துனர்
- Posts : 16302
Join date : 11/02/2010
Similar topics
» கோவை, திருச்சியையடுத்து... மதுரைக்கு ஜெ., வருகை
» விரைவில் துவங்கப் போகிறது புல்லட் ரயில் பணி
» ஊழலற்ற நிர்வாகம்: காங்., தேர்தல் அறிக்கை !
» சட்டசபை தேர்தல்: கோவை வரும் ஜெ. தங்க பங்களா தயார்
» தேர்தல் அறிக்கை போட்டாபோட்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum