Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
சினிமா உருப்பட ஒரு வழி!
Page 1 of 1
சினிமா உருப்பட ஒரு வழி!
(தமிழ்சினிமாவில்
தயாரிப்பு நிர்வாகி, புராஜக்ட் மேனேஜர், ஆலோசகர் என்று பன்முக சேவையாற்றி
வரும் திரு.வெங்கட் எழுதி சூரிய கதிர் இதழில் வெளிவந்த கட்டுரை இது. நமது
வாசகர்களுக்காக இங்கே....)
முன்பொரு காலத்தில் கிரிக்கெட் ஆட்டம் காண விளையாட்டு மைதானத்திற்கு செல்ல
வேண்டும். சுமார் ஐம்பதாயிரம் பேர் மைதானத்தில் நேரடியாக கண்டு
களிப்பார்கள். சில லட்சம் ரசிகர்கள் ரேடியோவில் நேரடி வர்ணணை கேட்டு
திருப்திபட்டுக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு மறுநாள் தினசரியில் வரும்
செய்திகளை வைத்து ரிசல்ட் தெரிந்து கொள்வார்கள். அதுவரை கிரிக்கெட் ஆட்டம்
ஒரு திறமைகளின் வெளிப்பாடாகவும், ஒரு விளையாட்டு என்ற அளவில்
உற்சாகப்படுத்துவதாகவும்தான் இருந்தது. ஆட்டக்காரர்கள் பெரிதாக
சம்பாதிக்கவில்லை; எங்கும் எதிலும் ஆடம்பரமில்லை. ஆனால், சமீபத்திய
வளர்ச்சியைப் பாருங்கள்.. கோடிகளில் புரளும் ஆட்டக்காரர்கள், வியாபார
அளவைத்தாண்டி வெறித்தனமான ஈடுபாடு என்ற அளவுக்கு மாறிவிட்ட மக்கள்.. என
மிகப்பெரிய விஷயமாகிவிட்டது.
ஐந்து
நாள் போட்டி 50 ஓவர் போட்டியாகி மேலும் 20 ஓவர் விறுவிறுப்பு என
மாறிவிட்டது. கிரிக்கெட் என்ற விளையாட்டு வியாபாரமாகிவிட்டது
பங்குச்சந்தைகளில் நுழையும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்துவிட்டது. என்னதான்
நடந்தது இடையில் ஒரே விஷயம். நேரடி ஒளிபரப்பு என்ற ஒரே விஷயம்தான் அனைத்து
மாற்றங்களுக்கும் காரணம்.
இப்போது
கிரிக்கெட் ஆட்டத்தால் ஆட்டம் காண்கிறது வெள்ளித்திரை. தியேட்டர்களில்
கூட்டம் இல்லை. இந்த சீசனில் வெளியாகும் திரைப்படங்கள் நன்றாக இருந்தாலும்
நஷ்டம் நிச்சயம். சின்னத்திரை சீரியல்களும்தான் டி.ஆர்.பி.ரேட்டிங்கில்
வீழ்ச்சி அடைகிறது. போதாக்குறைக்கு தியேட்டர்களும் கிரிக்கெட் ஆட்டத்தை
நேரடியாக ஒளிபரப்புவதற்கு தொடங்கினால் (தற்போதைக்கு தடை
செய்யப்பட்டுள்ளது) சினிமா மொத்தமாக காணாமல் போய்விடும் அபாயமும் உண்டு.
என்ன செய்யலாம் இதற்கு?
யோசித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். கிரிக்கெட்டைப் பார்க்க பல கோடி மக்கள்
ஆவலாக காத்திருக்கும்போது சில லட்சம் பேர் மட்டும் பார்க்கும்
மைதானங்களில் மட்டும் கிரிக்கெட் இருந்தால் என்ன நியாயம் என்ற கேள்விதான்
நேரடி ஒளிபரப்பு என்ற விஞ்ஞான வளர்ச்சியை ஆட்டத்துக்குள் புகுத்தியது.
விளைவு...
உலகமெங்கும் பரபரப்பு... விதம்விதமாய் விளம்பர உத்திகள்.. புதிதுபுதிதாய்
விற்பனை உத்திகள்... நடன நங்கைகள்.. இசை இணைப்புகள் என பல கோடி ரூபாய்கள்
புரண்டு புரண்டு ஆட்டம் போடுகின்றன.
ஆட்டக்காரர்கள்
சம்பளம் எக்கச்சக்கமாய் எகிறவிட்டது புகழ் புதிய உயரங்களைத்
தொட்டுவிடுகிறது. சினிமா நடிகர்களைவிட கிரிக்கெட் வீரர்கள் அதிக அளவு
பிரபலம் அடைகிறார்கள்.
சினிமாக்காரர்கள்
மட்டும் தலையில் துண்டுடன் மனதில் வலியுடன் நஷ்டக் கணக்கை எண்ணி புலம்பிக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம் என்ன
தெரியுமா?
நாமும் நம்மைப் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு சரியான விதத்தில் சினிமாவைக் கொண்டு
செல்கிறோமா? என் நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. மைதானத்தை
தாண்டி வீட்டு அறைகளுக்குள் கிரிக்கெட் வந்ததால் மைதானங்கள்
காலியாகிவிட்டதா? கிடையாது. டிக்கெட் விற்பனை மொத்தமும் 2 மணி நேரத்தில்
தீர்ந்துவிட்டதாக தகவல். அதே மாதிரி நாமும் திரைப்படங்களை சினிமா
தியேட்டர் என்ற எல்லையைத் தாண்டி வீட்டிற்கே கொண்டு செல்ல வேண்டும் என்ற
திட்டத்தை துவக்க வேண்டும். இங்கே நான் சொல்ல வரும் விஷயம் முதல் நாளே
திரையரங்குகளிலும் வீட்டு சின்னத்திரைகளிலும் படங்களை வெளியிட வேண்டும்.
உடனே
நான் தியேட்டர்களின் எதிரி என்பதுபோல் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.
சில தியேட்டர்கள் கட்டுப்படி ஆகவில்லை என்பதால் மண்டபங்களாகவும்
கோடிகளாகவும் மாறியது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அது அந்த தியேட்டர்
உரிமையாளர்களின் உரிமை. அதைபோல தயாரிப்பாளர்களுக்கும் வியாபாரம் என்ற
முறையில் எது அதிக வருமானம் தருகிறதோ அந்த முறையில் தொழில் செய்ய உரிமை
இருக்கிறது.
வீட்டில் இருந்து கொண்டே
முதல் நாள் முதல் காட்சியாக புதிய திரைப்படத்தை பார்த்துவிடக்கூடிய
விஞ்ஞான வசதி இருந்தால் அதற்காக கட்டணத்தை வசூல் செய்ய ஒரு சரியான முறை
இருந்தால் அனைத்து திரைப்படங்களும் லாபம் பார்த்துவிட வாய்ப்பு உண்டு.
சராசரியாக இரண்டு லட்சம் ரூபாயில் எடுக்கப்படும் அரைமணிநேர டி.வி. சீரியலை
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கோடிக்கணக்கான வீட்டில்
பார்த்துவிடுகிறார்கள் கிட்டத்தட்ட இலவசமாக, ஆனால் விளம்பர வருமானம்
இருப்பதால் சீரியல் தயாரிப்பாளர், சேனல் நடத்துபவர், கேபிள் டி.வி. தொழில்
செய்வோர் என எல்லோருக்கும் லாபம் கிடைக்கிறது.
ஆனால்,
பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களை சில தியேட்டர்களில்
மட்டும் ரிலீஸ் செய்வதால், டிக்கெட் கட்டணம் அதிகமாக இருப்பதால் தியேட்டர்
பார்க்கிங் செலவு, கேண்டீன் செலவு எல்லாம் அதிகரிப்பதால்... மீடியாவின்
ரேட்டிங்குகள், பத்திரிகைகளின் மார்க்குகள் எஸ்.எம்.எஸ்ஸில் பரவும்
விமர்சனங்கள் என பல அளவுகோல்களை வைத்து படம் பார்க்கும் முடிவை
தள்ளிப்போடுவதால் திருட்டு வி.சி.டி.க்களின் சூழ்ச்சிகளால் பெருத்த
நஷ்டத்தை சந்திக்கின்றன.
கமல்ஹாசன் நடித்த படத்தை பல கோடி மக்கள் உலகமெங்கும் முதல் நாள் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.
முதல் நாளே சரியான முறையில் ஒரு கோடி வீடுகளில் காண்பித்தால், வீட்டிற்கு
25 ரூபாய் வசூலித்தால் கூட முதல் நாள் வசூல் பல கோடியை எட்டிவிடும். ரஜினி
என்றால் நூறுகோடி... விஜய், அஜீத் என்றால்... இப்படி கணக்குப் போட்டுப்
பாருங்கள்!
சரி, இரண்டு கோடி
பட்ஜெட்டில் ஒரு படம் எடுத்தாகிவிட்டது. விளம்பரம் செலவு ஐம்பது லட்சம்
செய்தாகிவிட்டது. முதல் நாள் தியேட்டருக்கு போனால் 20 பேர் பார்க்க வருவதை
தயாரிப்பாளர் தன் கண்ணால் பார்க்க வேண்டிய கொடுமை. படம் நன்றாக இருந்தால்
பத்திரிகைகள் பாராட்டினால் மக்கள் வாய்வழிச் செய்தியாக, எஸ்.எம்.எஸ்.
வழியாக பரப்பினால் படம் மெல்ல மெல்ல வசூல் அதிகரித்து லாபம் வந்துவிட
வாய்ப்பு உண்டாம். ஆனால் அதற்குள் ஒரு பெரிய படம் வந்துவிட்டால் மக்கள்
அங்கே பாய்ந்து விடுவார்களாம். நல்ல படமாக இருந்தாலும் சின்ன படம்
நஷ்டமாகிவிடும். தயாரிப்பாளர் வேறு தொழிலுக்கு போக வேண்டியதுதான். பத்து
அல்லது இருபது லட்சம் ரூபாய்க்கு சேட்டிலைட் வியாபாரம் நடக்கும். வாங்கிய
சேனல் சமீபத்தில் வெளிவந்த புத்தம் புதிய திரைப்படம் என விளம்பரத்தின்
மூலம் வியாபாரம் செய்து வாங்கியத் தொகையைத் தாண்டி பல மடங்கு சம்பாதித்து
விடும். என்ன கொடுமை சார் இது என்கிறீர்களா? இதுதான் உண்மை.
அதே
நல்ல சின்ன திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சி உங்கள் இல்லத்திலேயே
கண்டுகளியுங்கள். கட்டணம் 25 ரூபாய் மட்டுமே என அறிவித்து முறைப்படி
வெளியிட்டு முறையாக வசூல் செய்ய திறமை இருந்தால் உலகமெங்கும் உள்ள
தமிழர்கள் குடும்பங்களில் குறைந்து 20 லட்சம் வீட்டிலாவது படம் தெரியும்,
வசூலாகும். கணக்கு நீங்களே போட்டுக் கொள்ளுங்கள். இது ஒரு காட்சியில்
வசூலாகக்கூடிய தொகை. தைரியமாக நல்ல தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யுங்கள்.
பெரிய திரை அனுபவத்திற்கு ஈடு இணையே கிடையாது அங்கும் கூட்டம் வரும்.
கிரிக்கெட்தான் உதாரணம் மைதானமும் ஹவுஸ்புல். எல்லா ஹவுஸ்களிலும் மைதானம்.
அதேபோல தியேட்டர்களிலும் அந்த அனுபவத்திற்காக கூட்டம் வரும். வீடுகளிலும்
திருட்டு வி.சி.டி. மார்க்கெட் இருக்காது. ஆவல் அதிகமாகும். தொழில்
மேம்படும்.
2 கோடி ரூபாய் செலவில் ஒரு
திரைப்படம். ஒரு லட்சம் வீடுகளில்.. வெளியீடு.. வீட்டிற்கு 25 ரூபாய்
மற்றும் விளம்பர வருமானத்தில் தயாரிப்பாளருக்கும் பங்கு, சேனல்களுக்கும்
ஒரு கட்டணம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கும் ஒரு கட்டணம். இப்படி
கூட்டி கழித்து பார்த்தால் ஒரே காட்சியில் தயாரிப்பு செலவு மொத்தமும்
வசூலாகி லாபமும் வந்துவிடும். தியேட்டர்களிலும் வெளியிடலாம். மீண்டும்
மீண்டும் தொலைக்காட்சிகளிலும் கட்டண முறையில் ஒளிபரப்பலாம்.
திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகமாகும். தியேட்டர்களுக்கு என்று சில
திரைப்படங்கள் தயாரிக்கப்படும். இல்லங்களில் ஒளிபரப்ப பல திரைப்படங்கள்
தயாரிக்கப்படும். சினிமாத் தொழில் வளரும், தொழிலாகவே அங்கீகரிக்கப்படும்.
முழுக்க
தயாராகி வெளியே வராமல் தியேட்டர்கள் கிடைக்காமல் தவித்துக்கிடக்கும்
நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு குறிப்பாக அதில் சிக்கியுள்ள நல்ல
திரைப்படங்களின் நிலையை யோசித்துப் பாருங்கள்?
இது விவாதத்திற்குரிய விஷயம்தான். நான் ஆரம்பித்து வைக்கிறேன்.
நன்றி -சூரிய கதிர் இதழ்

mmani- பண்பாளர்
- Posts : 8037
Join date : 19/12/2010
Similar topics
» HANG OVER -3 - சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» சினிமா கேலரி சோக்காலி
» மூடர்கூடம் சினிமா விமர்சனம்
» நீர்ப்பறவை-சினிமா விமர்சனம்
» ஆள் - சினிமா விமர்சனம்
» சினிமா கேலரி சோக்காலி
» மூடர்கூடம் சினிமா விமர்சனம்
» நீர்ப்பறவை-சினிமா விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum