Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Yesterday at 4:07 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
கடலோரகாவல் படை இனி கண்காணிக்கும்: தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு புது தீர்வு
Page 1 of 1

"மீன்கள் கிடைக்கும் பகுதிகளை நோக்கித்தான் மீனவர்கள் செல்வார்கள். இது
இயற்கைதான். ஆனாலும் இலங்கை கடல்பகுதிக்குள் செல்லாதவாறு கண்காணித்து
தடுத்திட இந்திய கடலோர காவல்படையினரை ரோந்துபணியில் ஈடுபடுத்தப்படும்' என
மத்திய அரசு அறிவித்துள்ளது. தவிர இந்திய - இலங்கை நாட்டு அதிகாரிகள்
இடையே ஏற்படுத்திக் கொண்ட 2008ம் ஆண்டு ஒப்பந்தம் முழு அளவில் நீடிக்கும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் நடைபெற்ற உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு,
தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய தமிழக முதல்வர் கருணாநிதியை நண்பகல் 12
மணியளவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா சந்தித்துப்
பேசினார். அரைமணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது. சந்திப்பின்போது
வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவும் உடன் இருந்தார்.
முதல்வருடனான சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியில் வந்த அமைச்சர் கிருஷ்ணா கூறியதாவது:மத்திய
வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் அண்மையில் கொழும்பு சென்றிருந்தார்.
அந்த பயணத்தின் முடிவில் அங்கிருந்து இந்திய - இலங்கை நாடுகளின்
கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி இந்திய மீனவர்களுக்கு
முழுபாதுகாப்பு இந்திய அரசால் வழங்கப்படும். மீனவர்களின் மீன்பிடி உரிமை
முழு அளவில் பாதுகாக்கப்படும். அதையும் மீறி மீனவர்களுக்கு பாதிப்பு
ஏற்பட்டால் இந்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும். இந்திய
மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது இனி பழைய கதை.மீன்கள் கிடைக்கும்
பகுதியை நோக்கி மீனவர்கள் செல்வது இயற்கையானது. இதனால் தான் தாக்குதல்
நடக்கின்றன. இதனால் இலங்கை கடல் பகுதிக்குள் சென்று இந்திய மீனவர்கள்
மீன்பிடிக்க முற்படுகின்றனரா என்பதை கண்காணிக்க கடல் பகுதியில் இந்திய
கடலோர காவல்படை நிறுத்தப்படும். தவறுதலாக மீனவர்கள் இலங்கை பகுதிக்குள்
சென்றுவிடாமல் இந்திய கடலோர காவல்படை பார்த்துக் கொள்ளும். இந்திய, இலங்கை
நாட்டு மீனவர்களுக்கும் பிரச்னைகள் இருந்து வருகிறது. இரு நாட்டு
மீனவர்களின் பிரச்னைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதற்கென்றே ஒரு
கூட்டுக்குழு ஏற்கனவே இருக்கிறது.
அந்த குழு கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கூடாமலும் ஆலோசனை நடத்தாமலும்
உள்ளது. ஆனால் தற்போது எழுந்துள்ள புதிய சூழ்நிலைகளால் அந்த குழு கூடி
ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. எனவே
இந்தக்குழுவை கூட்டும்படி வெளியுறவுத்துறை செயலருக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது.வரும் 15ம் தேதிக்குள், இந்த குழு கூடி ஆலோசனை
நடத்தி இந்திய இலங்கை மீனவர்களின் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து
பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். கடல்பகுதியில் எல்லை தாண்டிச் செல்லும்
மீனவர்களை பாகிஸ்தான் நாட்டு ராணுவம் கூட சுடுவதில்லை. இந்த தகவலை இலங்கை
அரசாங்கத்திடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கிருஷ்ணா கூறினார்.
கிருஷ்ணா உறுதிமொழி : முதல்வர் முழு திருப்தி :"மத்திய அரசு
என்பது நம்முடைய அரசு. மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் வெளியுறவுத்துறை
அமைச்சர் கிருஷ்ணாவின் உறுதிமொழியில் முழு திருப்தி அடைகிறேன்' என்று,
முதல்வர் கருணாநிதி கூறினார். உள்துறை அமைச்சர்கள் மாநாடு மற்றும்
காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்த
பேச்சுவார்த்தைக்காக முதல்வர் கருணாநிதி, டில்லி வந்திருந்தார். கடந்த
ஞாயிற்றுக் கிழமை டில்லி வந்த முதல்வர் அன்று ஓய்வெடுத்துவிட்டு,
திங்கட்கிழமை மதியம் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசினார். பிறகு
மாலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துப் பேசினார்.
தவிர உள்துறை அமைச்சர் சிதம்பரம், கப்பல்துறை அமைச்சர் வாசன் மற்றும்
தங்கபாலு உள்ளிட்டவர்களும் தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து முதல்வரை
சந்தித்தனர்.நேற்று காலையில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில்
பங்கேற்றுவிட்டு திரும்பிய முதல்வரை, வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா
மற்றும் பிரதம அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோரும் வந்து
சந்தித்தனர். பின், தனது டில்லி பயணத்தை முடித்துவிட்டு சென்னைக்கு
கிளம்பினார். கிளம்புவதற்கு முன்பாக நிருபர்களிடம் அவரிடம்,"மத்திய அரசு
எடுக்கும் நடவடிக்கைகளில் நம்பிக்கை உள்ளதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:மத்திய அரசு என்பது நம் அரசு. தமிழக
மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என,
வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா, உறுதிமொழி அளித்துள்ளார். அதில் நான்
முழு திருப்தி அடைகிறேன். இரு தரப்பு மீனவர்களின் பிரச்னை குறித்து
கூட்டுக்குழு அமைத்து ஆலோசித்து தீர்வு காணவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் அந்த குழு கூடி ஆலோசிக்கும். சட்டசபை தேர்தலில் காங்கிரசுடனான
தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இரு கட்சிகள் சார்பில் குழுக்கள்
அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கப்படும். இவ்வாறு முதல்வர்
கூறினார். பேட்டியை முடித்துக் கொண்ட பின், நேராக விமான நிலையத்திற்கு
விரைந்து, அங்கிருந்து சென்னைக்கு கிளம்பிச் சென்றார்.
2008 ம் ஆண்டு இந்தியா- இலங்கை அதிகாரிகள் ஒப்பந்தம் நீடிக்கிறது: டில்லியில், தமிழ்நாடு இல்லத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா சந்தித்து பேசினார்.
அப்போது, அருகில் இருந்த மத்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா
ராவிடம்," இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் கடந்த 2008ம்
ஆண்டு ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் தான் இந்திய மீனவர்களின் மீன்பிடி
உரிமைக்கு பிரச்னையாக இருந்து வருகிறது. எனவே அந்த ஒப்பந்தத்தை
மறுபரிசீலனை செய்யும் திட்டம் உள்ளதா,' என்று கேட்கப்பட்டது. அதற்கு
நிருபமாராவ்," 2008ம் ஆண்டு ஒப்பந்தம் நீடிக்கிறது. அதை முழு அளவில்
அமல்படுத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,'என்றார்.

மாலதி- பண்பாளர்
- Posts : 17076
Join date : 12/02/2010
Similar topics
» தமிழக மின் பிரச்னைக்கு தீர்வு என்ன? அதிகாரிகள் புது யோசனை
» தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம்: மன்மோகனிடம் ராஜபக்ஷே புது யோசனை
» குழந்தையின்மை பிரச்னைக்கு தீர்வு
» சாயக்கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: திருப்பூரில் ஜெ., வாக்குறுதி
» ''ஐ.நா.சபையால் இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது''

Permissions in this forum:
You cannot reply to topics in this forum