TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


கர்நாடக கவர்னர் - எடியூரப்பா இடையே தீவிரமாகிறது மோதல்: இன்று முதல் பா.ஜ., போராட்டம்

Go down

கர்நாடக கவர்னர் - எடியூரப்பா இடையே தீவிரமாகிறது மோதல்: இன்று முதல் பா.ஜ., போராட்டம்  Empty கர்நாடக கவர்னர் - எடியூரப்பா இடையே தீவிரமாகிறது மோதல்: இன்று முதல் பா.ஜ., போராட்டம்

Post by அருள் Sat Jan 22, 2011 7:41 am

பெங்களூரு : கர்நாடக கவர்னர் பரத்வாஜ், முதல்வர் எடியூரப்பா இடையேயான
மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடக மக்களிடம் தன் கவுரவத்தை
இழந்துள்ள கவர்னரை திரும்பப் பெற வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் இன்று
முதல் போராட்டம் நடத்தப்படும் என, பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
பா.ஜ., உயர்மட்ட கமிட்டியின் உத்தரவையடுத்து, இன்று கர்நாடக அமைச்சரவை
கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நில மோசடி புகார் குறித்து, முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர்
அசோக் ஆகியோர் மீது விசாரணை நடத்த அனுமதிக்குமாறு, கவர்னர் பரத்வாஜை,
வக்கீல்கள் சிராஜின் பாஷா, பாலகிருஷ்ணா ஆகியோர் சந்தித்து, 1,700 பக்கம்
கொண்ட மனு கொடுத்தனர். இதையடுத்து, இது தொடர்பான முக்கிய பைல்களை, ஜன.,
20ம் தேதிக்குள், அனுப்புமாறு, கவர்னர் பரத்வாஜ், அரசு தலைமைச் செயலரிடம்
கேட்டுக் கொண்டிருந்தார். பரப்பரப்பான நிலையில், கடந்த 19ம் தேதி நடந்த
அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் எடியூரப்பா மீது விசாரணை நடத்த அனுமதி
அளிக்கக் கூடாது, என்று கவர்னருக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இந்த தகவலை ராஜ்பவனுக்கு, பேக்ஸ் மூலம் முதல்வர் எடியூரப்பா
அனுப்பியிருந்தார்.இதனால், கவர்னர் பரத்வாஜ் அதிருப்தியுற்றார்.
வக்கீல்கள் மனு மீது இரண்டு நாட்களில் பதில் அளிப்பதாகவும், "திருடனே
போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார்' என, கவர்னர் பரத்வாஜ்,
மறைமுகமாக எடியூரப்பாவை தாக்கி இருந்தார். தான் கேட்டபடி முக்கிய ஆவணங்களை
அரசு அனுப்பாமல் உள்ளது என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
அமைச்சர்கள் கூறுகையில், கவர்னர் கேட்டதில், 90 ஆவணங்கள்
அனுப்பப்பட்டுள்ளன. மீதி ஆவணங்கள் விரைவில் அனுப்பப்படும் என்று
தெரிவித்தனர். இந்நிலையில், கர்நாடக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,
கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் தலைமையில்,
பெங்களூரில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பின், மக்கள் தொடர்பாளர் ஆயனூர் மஞ்சுநாத், நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர்
எடியூரப்பாவுக்கு எதிராக, கவர்னர் அளவுக்குமீறி தரக்குறைவாக பேசி
வருகிறார். இதனால், கர்நாடக மக்களிடம் தன் கவுரவத்தை அவர் இழந்துள்ளார்.
இத்தகைய உள்நோக்கம் கொண்ட கவர்னரை திரும்பி பெற வேண்டும். கவர்னர், தன்
செயலுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை
வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் நாளை (இன்று) முதல் போராட்டம்
நடத்தப்படும்.
இப்போராட்டத்திற்கு பின், டில்லியில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை நாளை
மறுதினம் பா.ஜ., எம்.பி.,க்கள், மேலிட தலைவர்கள் சந்தித்து, கவர்னர் தன்
பதவியின் கவுரவத்தை மறந்து, செயல்படுவது குறித்து புகார்
செய்யவுள்ளனர்.தற்போது வக்கீல்கள் வேடத்தில் வந்துள்ள, ம.ஜ.த.,
தொண்டர்களை, தேவகவுடா பயன்படுத்தி, முதல்வருக்கு எதிராக அளித்துள்ள புகார்
மீது நடவடிக்கை மேற்கொள்ள கவர்னர் முன்வந்துள்ளார். இது சகிக்க
முடியாததாகும்.ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கவர்னருக்கு எதிராக தீவிர
போராட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று
நடப்பதாக இருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யபட்டதாக எடியூரப்பா
அறிவித்தார்.
வழக்கு தொடர கவர்னர் அனுமதி :முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு
தொடர, அனுமதி அளித்து கவர்னர் பரத்வாஜ் நேற்றிரவு உத்தரவிட்டார்.முதல்வர்
எடியூரப்பாவின் கடிதத்திற்கு பதிலளித்து கவர்னர் பரத்வாஜ் அனுப்பிய
கடிதத்தில், "அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தான் அனைத்தையும் செய்கிறேன்.
இது குறித்து முடிவு மேற்கொள்ளும் அதிகாரம் எனக்குள்ளது. பல்வேறு
புகார்களால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்களிடம் விளக்கம்
கேட்டிருந்தேன். ஆனால் நீங்களோ, அமைச்சரவையில் முடிவு மேற்கொண்டு, அனுமதி
அளிக்க வேண்டாம், என்று கடிதம் எழுதியுள்ளீர்கள். இது சரியல்ல. எனக்கு
கடிதம் எழுதி, தேவையில்லாத குழப்பத்தை உருவாக்க வேண்டாம். எனது அதிகாரத்தை
மீறி எதையும் செய்யவில்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.
பரபரப்பான சூழ்நிலையில், நேற்றிரவு முதல்வர் எடியூரப்பா மீது வழக்கு
தொடருவதற்கு கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.இது
மட்டுமின்றி, உள்துறை அமைச்சர் அசோக் மீதும் வழக்கு தொடர கவர்னர் அனுமதி
அளித்துள்ளார். இதனால், கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கவர்னர் பரத்வாஜ் கூறுகையில், "எனது
மனசாட்சியின்படி செயல்படுகிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட விரோதமல்ல.
அரசிடம் கேட்ட விளக்கங்களை எனக்கு தரவில்லை. எனவே, முதல்வர் எடியூரப்பா
மீதும், அமைச்சர் அசோக் மீதும் வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ளேன்,''
என்றார்.
அனுமதி கடிதத்தை வழங்க மறுப்பது ஏன் ?கவர்னர் மீது எடியூரப்பா
குற்றச்சாட்டு: ""என் மீது வழக்கு தொடருவதாக அனுமதியளித்த கடித நகலை
கொடுப்பதற்கு, கவர்னர் பரத்வாஜ் மறுக்கிறார்,'' என்று முதல்வர் எடியூரப்பா
குற்றம் சாட்டினார்.
நேற்றிரவு முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ""என் மீது வழக்கு
தொடர கவர்னர் அனுமதி அளித்துள்ள தகவல்கள் பத்திரிகைகள், மீடியா மூலம் தான்
தெரிகிறது. என்னிடமோ, எனது அலுவலகத்திற்கோ வரவில்லை. அனுமதி கடிதத்தை
கொடுக்க கவர்னர் மறுக்கிறார். எதிர்க்கட்சிகள் இந்த அரசை எதுவும் செய்ய
இயலவில்லை. அதனால், கவர்னர் மூலமாக ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளனர்,''
என்றார்.
இது தொடர்பாக கவர்னர் பரத்வாஜுக்கு, முதல்வர் எடியூரப்பா கடிதம்
எழுதியுள்ளார். இதற்கிடையில், கவர்னர் பரத்வாஜை சந்திக்க முதல்வர்
எடியூரப்பா செல்வதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அப்படி எதுவும்
நடக்கவில்லை, என்று பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கவர்னரின் அனுமதியை
கண்டித்து, பெங்களூரு கே.ஆர்.,புரம் உட்பட சில பகுதிகளில் சாலைகளில்
தடுப்புகள் போட்டு, மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதித்தது.
எதிர்க்கட்சிகளின் கைப்பாவை கவர்னர் :அருண்ஜெட்லி குற்றச்சாட்டு :
""எதிர்க்கட்சிகளின் கைப் பாவையாக கவர்னர் பரத்வாஜ் செயல்பட்டுள்ளார்,''
என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பா.ஜ., தலைவர் அருண்ஜெட்லி கூறியதாவது:கவர்னரின் செயலை பா.ஜ.,
கடுமையாக எதிர்க்கிறது. இது அரசியல் சதி. அரசியல் பின்னணியில் கவர்னர்
செயல்பட்டுள்ளார். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தினர் ஏற்கனவே லோக்
ஆயுக்தாவிடம், முதல்வருக்கு எதிராகவும், பா.ஜ., அரசுக்கு எதிராகவும்
புகார் கொடுத்துள்ளனர்.இதற்கிடையில், மாநில அரசு 1994ம் ஆண்டிலிருந்து
நடந்த முறைகேடுகளை விசாரிக்க, நீதிபதி பத்மராஜ் கமிஷனை நியமித்துள்ளது.
விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, இரண்டு தனிப்பட்டவர்களின் கோரிக்கையை
ஏற்று, கவர்னர் அனுமதியளித்துள்ளார். விசாரணை முடியும் வரை பொறுத்திருக்க
வேண்டும். இவை அனைத்தும் கவர்னருக்கும் தெரியும். ஆனால்,
எதிர்க்கட்சிகளின் கைப் பாவையாக செயல்பட்டுள்ளார்.மூன்று வாரங்களுக்கு
முன்பு நடந்த தாலுகா, ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில், 21 ஜில்லாக்களை கையில்
வைத்திருந்த காங்கிரஸ், இப்போது நான்கு இடத்தை பெற்றுள்ளன. மக்கள் ஆதரவை
இழந்துவிட்ட காங்கிரஸ், இத்தகைய கீழ்மட்ட அரசியலில்
ஈடுபட்டுள்ளது.கவர்னரின் முடிவு குறித்து, நாளை (இன்று) நடக்கும் பா.ஜ.,
மேலிட கூட்டத்தில் விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கையில்
ஈடுபடுவோம்.இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நாளை தர்மஸ்தலா கோவிலில் சாமி தரிசனம்
» கர்நாடக சட்டசபையில் இன்று ஓட்டெடுப்பு: எடியூரப்பா - குமாரசாமி கடைசி கட்ட முயற்சி
» வெற்றியுடன் துவக்குமா இந்தியா* இன்று ஆஸி.,யுடன் முதல் மோதல்
» இன்று குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப்-சங்மா இடையே நேரடிப் போட்டி
» பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார் : கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum