TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்: இதயச்சந்திரன்

2 posters

Go down

மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்: இதயச்சந்திரன் Empty மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்: இதயச்சந்திரன்

Post by மாலதி Mon Oct 25, 2010 3:05 pm

மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்: இதயச்சந்திரன்



திகதி: 24.10.2010

2006
ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து
மாணவர்களின் நினைவாக, அஞ்சல் அட்டை பிரசாரத்தில் ஈடுபடத்
தீர்மானித்துள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை. இச்சபையின் அமெரிக்கப்
பணிப்பாளர் ஜீன் மக் டொனால்ட் இத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுபோன்ற
இனப் படுகொலை சம்பவங்களுக்கு அனைத்துலக விசாரணை அவசியம் என்பதனை
வலியுறுத்தி இப்பரப்புரைப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகக்
கூறப்படுகிறது.
திருமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மற்றும்
புனித சூசையப்பர் கல்லூரியைச் சேர்ந்த மனோகரன் இரஜிகர், யோகராஜா
ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகான், தங்கத்துரை சிவானந்தா, சண்கராஜா
கஜேந்திரன் ஆகிய மாணவர்கள் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு
வீச்சில் கொல்லப்பட்டனரென்று கூறப்பட்டது.

பின்னர் மூவரின் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாக, வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை வெளிப்படுத்தியது.
ஆகவே உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விசாரணைக் குழுக்கள், சரியான தீர்வினை
வழங்குவதில்லை என்பதனை வலியுறுத்தும் வகையில் இந்தச் சர்வதேச மன்னிப்புச்
சபையின் புதுவிதமான போராட்டம் உணர்த்துவதைப் புரிந்து கொள்ளலாம்.

மாயமான்
வேட்டையில் இறங்கியுள்ள அரசின் கற்றறியும் ஆணைக்குழு, ஒடுக்கு
முறைக்குள்ளான தமிழ்த் தேசிய இனத்திற்கு நீதியைப் பெற்றுத் தரப்
போவதில்லை.
சர்வதேச அளவில் உற்று நோக்கப்படும் அனைத்துலக
நெருக்கடிக் குழுவினரோ (International Crisis Group) சர்வதேச மன்னிப்புச்
சபையோ அல்லது நியூயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக்
கண்காணிப்பகமோ அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் நம்பத்தன்மையை ஏற்றுக்
கொள்ள மறுக்கின்றன.


இந்தியா சீனாவின் உதவியின்றிப் போரை வென்றெடுக்க முடியாதென்று பகிரங்கமாக
அறிவிக்கும் இலங்கை அரசு, அவர்களைத் தம்வசம் ஈர்த்தது போன்று இந்த மனித
உரிமைச் சபைகளை வளைத்துப் போட முடியாமல் தடுமாறுவதைக் காணக்
கூடியதாகவுள்ளது.
இவை தவிர, 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம்
திகதியளவில் மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக் கெதிரான அமைப்பின்
(Action Contre La Faim) 17 தொண்டர்கள் குறித்த விசாரணைக்கு என்ன நடந்தது
என்பதனையும் இந்த அனைத்துலக அமைப்புக்கள் கேட்க வேண்டும்.
மேல் விசாரணை என்கிற போர்வையில், படுகொலை செய்யப்பட்ட 17 தொண்டர்களின்
சடலங்கள், பல தடவைகள் தோண்டி எடுக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரின்
நெஞ்சங்களில் ஆறாத ரணங்களை உருவாக்கியிருந்தன.

எத்தனை தடவைகள் தோண்டியும், பாதிப்புற்ற குடும்பங்களுக்கு இன்னம் நீதி கிடைக்கவில்லை.
சுவீடனைச் சார்ந்த உல்வ் ஹென்றிக்சனை (ULF Nenricssion) தலைவராகக் கொண்டு
செயற்பட்ட ஸ்ரீலங்கா கண்காணிப்புக் குழு (SLMM) பிரான்ஸை தளமாகக்
கொண்டியங்கும் பட்டினிக்கெதிரான அமைப்பின் 17 உள்ளூர் தொண்டர்களின்
படுகொலைக்கு, பாதுகாப்புப் படையினரே பொறுப்பேற்க வேண்டுமென அன்று
அறிவித்திருந்தது.
அதேவேளை இன்று, அரசின் ஜனநாயக விரோதப் போக்கிற்கு எதிராகப் போராடும்
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ள மங்கள சமரவீர, அன்றைய
அரசின் வெளிநாட்டமைச்சராகப் பதவி வகித்தவர்.


கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சனின் கூற்று, பொறுப்பற்ற
வகையில் அமைந்திருப்பதாக பி. பி. ஸி. செய்திச் சேவைக்கு மங்கள சமரவீர
அளித்த காட்டமான பதிலை இன்று நினைவு கூர வேண்டும்.


பதவியில் இருக்கும் போது செய்த நியாயப்படுத்தல்கள், தற்போது அவர்களின்
கழுத்தை நெரிக்கும் வகையில் சுற்றி வருவதை காலம் கடந்தாவது புரிந்து
கொள்வார்கள் என நம்பலாம்.
இவ் வினப்படுகொலை குறித்து தனது
விசனத்தை வெளிப்படுத்திய பட்டினிக்கெதிரான அமைப்பின் தலைவர் டெனிஸ்
மெட்ஸ்ஜர் (Dennis Metzger) தமது அமைப்பின் 27 வருட காலப் பணியில் இத்தகைய
தொண்டர் மீதான படுகொலை, இதுவே முதன் முறையாக நிகழ்த்தப்பட்டதெனக்
கூறியிருந்தார். இதுபோன்ற எத்தனையோ கூட்டு இனப் படுகொலைகள், தமிழர்
தாயகமெங்கும் கடந்த 60 வருட காலமாக நடைபெற்று வருவதனை மனிதாபிமானம் பேசும்
உலகம் உணர்ந்து கொள்ளவில்லை.


ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கை உடைந்து போகக் கூடாதென்பதற்காக இக்கோரச்
சம்பவங்களை, இவர்கள் மௌனமாக விழுங்கிக் கொண்டார்களோவென்று எண்ணத்
தோன்றுகின்றது.
இருப்பினும் டப்ளினில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம்
(PPT), இக் குற்றங்களைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று
தீர்ப்பு வழங்கியதையிட்டு சற்று ஆறுதலடையலாம்.
ஆனாலும் பூனைக்கு மணி கட்டி நீதியை நிலைநாட்டுவது யார் என்பதில் தான் சிக்கல்.

ஏட்டுச்
சுரக்காய் போலாகும் சர்வதேசச் சட்ட நியமங்கள், டாபூரில் இனப்படுகொலை
புந்த சூடான் அதிபர் பசீரை இனப் படுகொலையாளன் என்று விளிப்பதற்கு
பின்னடித்தது, போர்க் குற்றவாளி என்று சமாளிக்க முற்படுகின்றது.
தாயகக் கோட்பாட்டை முன் வைக்கும் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை
பயங்கரவாதமாகவும் திட்டமிட்ட, அரச சார்பு பெரும்பான்மையின மக்களைக்
குடியேற்றும் முன்னெடுப்புக்களை இறைமை கொண்ட அரசின் உரிமையாகவும்
கொள்ளும் சர்வதேச ஜனநாயகவாதிகள், தமது பிராந்திய நலன் என்பதற்கு அப்பால்
எதனையும் பார்ப்பதில்லை என்பதே யதார்த்த நிலையாகும்.

அரச
அதிகாரக் கட்டமைப்பில், 18 ஆவது திருத்தச் சட்டம் போன்று ஏதாவது
மாற்றங்களைக் கொண்டு வந்தால் இந்த ஜனநாயக ஏற்றுமதியாளர்கள் துள்ளிக்
குதிக்கின்றார்கள்.
இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்கும்,
பொருத்தமான பொங்கு சனிக் காலமிதுவென அறிவுரைப் பின்னிணைப்பொன்றையும்
சேர்த்து விடுவார்கள்.
இவை தவிர சர்வ அதிகாரம் கொண்ட ஒற்றையாட்சியை உறுதிப்படுத்தும் 18 ஆவது
திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட கையோடு, மக்களின் தினசரி வாழ்வோடு
நேரடியான இணைப்பைக் கொண்ட, உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் விதிமுறைகளில்
மாற்றமேற்படுத்த புதிய சட்ட மூலமொன்று வரப் போகின்றது.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவின்
சிபாரிசின் அடிப்படையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் திருத்த
சட்ட மூலமொன்றினை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க, அரசு முற்படுகிறது.

ஜேர்மன் நாட்டில் அமுலிலுள்ள ஒரு கலப்பு முறைமையை இச்சட்டத் திருத்தம் கொண்டிருக்கும்.
மின்சாரத்திலும், பெற்றோலிலும் இயங்கும் ஹைபிட் (Hybrid) வாகனங்கள்
போன்று, விருப்புத் தேர்வும், விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும்
இப்புதிய சட்டத்தில் கலந்திருக்கும்.
வரவு செலவுத் திட்ட சமர்ப்பணத்திற்கு முன்பாக நிறைவேற்றப்படவுள்ள
இச்சட்டத் திருத்தம், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான
தேர்தல் விதிமுறைகளிலும் நடைமுறைகளிலும் பெரும் மாறுதல்களை கொண்டு வருமென
எதிர்பார்க்கலாம்.

இதில்
விகிதாசார பிரதிநிதித்துவ முறையூடாக, எத்தனை உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படுவார்கள் என்பது தீர்மானிக்கப்படவில்லை. அதேவேளை விருப்புத்
தெரிவு ஊடாக வரும் உறுப்பினர்களில் 30 சதவீதமானோர், விகிதார
பிரதிநிதித்துவ பட்டியலில் இணைத்து நியமிக்கப்படுவார்களென்று
கூறப்படுகின்றது.
இதில் மக்கள் ஜனநாயகத்தை மறுதலிக்கும் சில சரத்துக்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
சபையில் உறுப்பினர் ஒருவருக்கு வெற்றிடம் ஏற்படும் போது அந்த
நாற்காலியில் எவரை அமர்த்துவது என்கிற அதிகாரத்தை அவர் சார்ந்த அரசியல்
கட்சியின் செயலாளர் நாயகமோ அல்லது சுயேச்சைக் குழுவாயின் அதன் தலைவரோ
கொண்டிருப்பார்கள்.


அங்கு தமது வட்டாரத்திற்கு பொருத்தமானவரைத் தெரிவு செய்யும் ஜனநாயக
உரிமையை இழக்கும் நிலை அம்மக்களுக்கு ஏற்படும். மறுதேர்தல் என்கிற
பேச்சிற்கும் இடமிருக்காது.
இவற்றிற்கு அப்பால் உள்ளூராட்சி
சபைகளில் இரு கட்சி ஆட்சிமுறை வலுவாகும் சாத்தியப்பாடுகள் அதிகமிருப்பதை
அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது.
ஆனாலும் இத்திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே அது குறித்த தரவுகளோடு விரிவாக உரையாடலாம்.

தற்போது
இயங்கும் சபைகள், மக்களின் அங்கீகாரம் இல்லாமல், எவ்வாறு திருத்தச் சட்ட
மூலத்திற்கு தமது ஆதரவினையோ அல்லது எதிர்ப்பையோ முன்வைக்க முடியுமென்கிற
அடிப்படைக் கேள்வி எழுவது நியாயமே. மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம்
நாடாளுமன்றில் இருப்பதால் எத்தகைய சட்ட மூலங்களையும் நிறைவேற்றக் கூடிய
வல்லமை அரசிற்கு இருக்கிறது என்பதை மறந்துவிட முடியாது.

முன்பு
பரவலாக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மறுபடியும் மத்திய ஆட்சி
மையத்தை நோக்கி திருப்புவது தான் இந்த திருத்தச் சட்ட மூலத்தின்
சூத்திரம் போல் தெரிகிறது.
வெளிப்படையில் பல கட்சிகள் சுயாதீனமாக
இயங்கும் ஜனநாயக இலங்கை போல் இந்நாடு காட்சியளித்தாலும் ஒரு கட்சி
ஆட்சியை நோக்கியே சகல சட்டத் திருத்தங்களும் உருவாக்கப்படுகின்றன என்ற
பேருண்மையை உலகம் எப்போது புரிந்து கொள்ளும்.
"நிதியால் வசமாகா நாடு எது'' என்று பாடியவாறு அடுத்த மாதம் வருகை தரும்
இந்திய வெளிநாட்டமைச்சர் கிருஷ்ணாவிற்கு 18, 13 என்பதெல்லாம் சிறிய
கோடுகளே


© Copyright www.sankathi.com - contacts: sankathireaders@yahoo.com
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்: இதயச்சந்திரன் Empty Re: மறைக்கப்பட்ட படுகொலைகளும் புதிதாக முளைக்கும் சட்ட திருத்தங்களும்: இதயச்சந்திரன்

Post by sakthy Mon Oct 25, 2010 7:31 pm

கிரிஷ்ணாவிற்கு 18 ,13 மட்டுமல்ல வரலாறும் தெரியவில்லை. இந்திய வரலாறும்,தமிழக வரலாறும் சம்பந்தப்பட்ட இந்திய மத்திய அமைச்சர்கள் என்று கூறிக் கொள்ளும் கிருஷ்ணா மற்றும் சிதம்பரத்திற்கு ஏனோ தங்கள் அமைச்சு பற்றிய தகவல்கள் கூட தெரியாமல் பதவியில் இருக்கிறார்கள்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum