TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காமன்வெல்த் போட்டி: வண்ணமயமான துவக்க விழா!

Go down

காமன்வெல்த் போட்டி: வண்ணமயமான துவக்க விழா! Empty காமன்வெல்த் போட்டி: வண்ணமயமான துவக்க விழா!

Post by ஜனனி Mon Oct 04, 2010 8:43 am

காமன்வெல்த் போட்டி: வண்ணமயமான துவக்க விழா! Commonwealth-Open


புதுடில்லி:
உலகமே வியக்கும் அளவுக்கு, டில்லியில் காமன்வெல்த் போட்டியின் துவக்க விழா
கோலாகலமாக நடந்தது. இதற்காக, தலைநகர் டில்லியில் உச்சகட்ட பாதுகாப்புக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராணுவம் உட்பட சுமார் 1 லட்சம் பேர்
பாதுகாப்பு அரணாக செயல்பட்டு, நாட்டுக்கு பெருமை சேர்த்தனர்.
டில்லியில்
19வது காமன்வெல்த் போட்டி நேற்று துவங்கியது. வரும் 14ம் தேதி
நிறைவடைகிறது. மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 71 நாடுகளை
சேர்ந்த சுமார் 8, 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா
சார்பில் விஜேந்தர், சானியா, செய்னா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திர படை
களமிறங்குகிறது.
கண்கவர் கலைநிகழ்ச்சி:
நேற்று
இரவு 7 மணி அளவில் ஜவகர்லால் நேரு மைதானத்தில் துவக்க விழா வண்ணமயமாக
நடந்தது. இதில் ஜனாõதிபதி பிரதிபா பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர்
மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் தேசிய கீதம்
இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கொலி மற்றும் "மெகா' முரசு முழங்க,
மேளதாளத்துடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து ஒரிசாவின் டோலக்,
கேரளாவின் செண்டை மேளம் என நாட்டின் பாரம்பரியமிக்க இசை நிகழ்ச்சி
நடந்தது. ஏழு வயதான இளம் கேசவ் நிகழ்த்திய "தபலா' இசை அனைவரையும்
கவர்ந்தது. "ஸ்வாகதம்' என்ற வணக்கப் பாடலை, டில்லி பள்ளி குழந்தைகளுடன்
சேர்ந்து ஹரிஹரன் பாடினார்.
பிந்த்ராவுக்கு பெருமை:
தொடர்ந்து
நடந்த அணிவகுப்பில், இந்திய குழு சார்பில் மூவர்ணக் கொடியை "ஒலிம்பிக்
தங்க நாயகன்' அபினவ் பிந்த்ரா ஏந்தி வந்தார். அப்போது ஜனாதிபதி பிரதிபா
பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர் மன்மோகன் மற்றும் அரங்கில் இருந்த 60
ஆயிரம் ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாக கரகோஷம் எழுப்பினர்.
பலத்த பாதுகாப்பு:
இம்முறை
பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் நடக்க இருப்பதால், டில்லி முழுவதும்
பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதிகளின்
அச்சுறுத்தலை சமாளிக்கும் பொருட்டு, சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருந்தனர். விளையாட்டு கிராமம் அமைந்துள்ள பகுதியில்
ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு "கமாண்டோ' படையினர் கண்காணித்தனர். போட்டி
நடக்கும் மைதானங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரகசிய
"சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, டில்லி போலீஸ் தலைமையகத்தில்
இருந்தவாறு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடந்தன.
துவக்க விழா
நடந்த ஜவர்கலால் நேரு மைதானம் பாதுகாப்பு கோட்டையாக மாறியிருந்தது. நான்கு
அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் முழுமையான
சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு
படையினர் தான் காணப்பட்டனர். மைதானத்தில் "கமாண்டோ' படையினர் உட்பட 7, 500
பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,
டில்லி போலீஸ் கமிஷனர் தாத்வல் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக
ஆய்வு செய்தனர்.
மொத்தத்தில் இந்தியா தொடர்பான விமர்சனங்களை, மிகப்
பிரம்மாண்டமான துவக்க விழா தகர்த்தெறிந்தது. இவ்விழா சிறப்பாக நடந்ததன்
மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கவுரவம் வெகுவாக உயர்ந்துள்ளது.
வீரர்களுடன் இளவரசர் சார்லஸ்
காமன்வெல்த்
விளையாட்டு கிராமத்திற்கு சென்ற இளவரசர் சார்லஸ், அவர்களிடம் உரையாடினார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்கள் அவரிடம் தங்கள்
மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும்
வீரர்கள் தங்குவதற்காக, விளையாட்டு கிராமம் கட்டப்பட்டது. ஆனால் இது
சுகாதாரமற்ற முறையில், தங்குவதற்கு லாயக்கில்லாமல் உள்ளது என,
இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.
பின்
தாமதமான பணிகள் அதிவேகமாக நிறைவு செய்யப்பட்டது. தவிர, காமன்வெல்த்
விளையாட்டு வரலாற்றில், முதன் முறையாக விளையாட்டு கிராமத்துடன் சேர்ந்து,
வீரர்கள் பயிற்சி மையமும் அமைக்கப்பட்டது. இதில் தபால் அலுவலகம், பாங்க்,
ஏ.டி,எம்., மையம், டிஸ்கோத்தே, பார், ரெஸ்டாரண்ட், ஜிம், கைவினைப்
பொருட்கள் கடை, மர வேலைப்பாடுகளால் சிற்பங்கள் விற்பனை உட்பட பல வசதிகள்
இங்குள்ளது. இங்கு 71 நாடுகளை சேர்ந்த ஆராயிரத்தும் மேற்பட்ட வீரர்கள்
தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இளவரசர் சார்லஸ், நேற்று விளையாட்டு
கிராமத்துக்கு சென்றார். அங்கு வீரர்களுடன் அவர் உரையாடினார். அப்போது
இங்கிலாந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்கள்,
சார்லசிடம் தங்கள் மகிழ்ச்ச்சியை தெரிவித்தனர்.
வீரர்கள் பாராட்டு:
இதுகுறித்து
இங்கிலாந்து மல்யுத்த வீரர் ஜோ ஸ்மித் கூறுகையில்,"" இங்குள்ள சிறப்பான
வசதிகள், உணவு வகைகள் குறித்தும் இளவரசரிடம் கூறினோம். இங்கு நாங்கள் முழு
மகிழ்ச்சியுடன் தங்கியுள்ளோம்<,'' என்றார்.
மற்றொரு இங்கிலாந்து
வீரர் டேனியல் டேவிஸ் கூறுகையில்,"" விளையாட்டு கிராமத்தில் <உள்ள
வசதிகள் உட்பட, பலவற்றை குறித்து இளவரசர் சார்லஸ் கேட்டார். இவை அனைத்தும்
அருமையாக உள்ளதாக அவரிடம் தெரிவித்தோம்,'' என்றார்.
வியக்க வைக்கிறது:
டிரினிடாட்
அண்டு டுபாகோவின் "டிரிபிள் ஜம்ப்' வீராங்கனை அயானா அலெக்சான்டிரா
கூறுகையில்,"" இங்குள்ள வசதிகள் அனைத்தும் புராணத்தில் கற்பனையில்
கூறப்படுவது போல, வியக்கும் வகையில் உள்ளது. நான் பார்த்த விளையாட்டு
கிராமத்தில் இது தான் சிறந்ததாக உள்ளது. இதை சார்லசிடம் தெரிவித்தோம்,''
என்றார்.
ஆஸ்திரேலியாவின் லெசிக் கூறுகையில்,"" உணவு மற்றும்
விருந்தோம்பல் விளையாட்டு கிராமத்தில் சிறப்பாக உள்ளது. தவிர, இங்குள்ள
தட்பவெப்ப சூழ்நிலையும் நன்கு உள்ளது,'' என்றார்.
கூரியர் பணிகள் பாதிப்பு
டில்லியில் இலகு ரக வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், கூரியர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
காமன்வெல்த்
போட்டி நடப்பதால், டில்லி மாநில அரசு, பலவித கட்டுப்பாடுகளை
விதித்துள்ளது. குறிப்பிட்ட பாதையில் செல்லும் வாகனங்கள் பறிமுதல்,
டிரைவருக்கு சிறைத்தண்டனை என, வாகன போக்குவரத்துக்கும் கடும்
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, போட்டிகள் முடியும் வரை இலகு
ரக கமர்சியல் வாகனங்கள், பகல் நேரத்தில் நகருக்குள் வருவதை தடை
செய்துள்ளனர்.
இதனால் கடிதம் உள்ளிட்ட பார்சல் பொருட்களை
பெறுவதில்தாமதம் ஏற்படுகிறது. தவிர, சரக்கு பணிகளுக்காக கூடுதல் கட்டணம்
செலுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து டி.எச்.எல்., மார்கெட்டிங் தலைவர்
சந்திரசேகர் கூறுகையில்,"" குறிப்பிட்ட நேரத்தை விட இரண்டு அல்லது மூன்று
நாட்கள் தாமதமாக பொருட்களை பட்டுவாடா செய்வதால், தொழிலில் பாதிப்பு
ஏற்படும். இதை சரிசெய்யும் விதத்தில் இரவு நேரத்தில் பணிகளில் ஈடுபட
முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
இதுகுறித்து மற்றொரு சரக்கு
நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"" தற்போது எங்கள் அலுவலகம் இரவு 10
முதல் காலை 8 மணி வரை இயங்குகிறது. ஏற்கனவே வாகனத்துக்கான சுங்கவரியை
உயர்த்திவிட்ட நிலையில், நேரத்தையும் மாற்றினால், பல ஆர்டர்கள் குறைய
வாய்ப்புள்ளது,'' என்றார்.
இதுபோல வாடிக்கையாளர்கள் பாதிப்பு குறித்து பல நிறுனவங்கள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளன.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காமன்வெல்த் போட்டி: துவக்க விழாவில் புதுமை
» பிரமாண்டமாக நடந்தது கால்பந்து போட்டி துவக்க விழா
» இந்திய கொடியுடன் அபினவ் பிந்த்ரா : காமன்வெல்த் துவக்க விழாவில் கவுரவம்
» காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: தமிழக வீரர் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றார்!
» காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் : பிரதமர் மன்மோகன் சிங் கடும் எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum