TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் : தமிழக எம்.பி.,க்கள் ஆவேசம்

Go down

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் : தமிழக எம்.பி.,க்கள் ஆவேசம் Empty மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் : தமிழக எம்.பி.,க்கள் ஆவேசம்

Post by மாலதி Thu Aug 12, 2010 7:56 am

"தமிழக
மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்விஷயத்தில்
மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் உருப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்' என,
பார்லிமென்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து
ராஜ்யசபாவில் கவன ஈர்ப்பு தீர்மான விவாதத்தில் தமிழக எம்.பி.,க்கள்
பேசியதாவது:
மைத்ரேயன்: சம்பிரதாயமாக உள்ள இந்த அறிக்கை ஏமாற்றம்
அளிக்கிறது. தங்களை காப்பாற்ற, மத்திய அரசு வராதா என, தமிழக மீனவர்களின்
நம்பிக்கை பொய்த்து போகிறது. 24 மாதங்களில், 22 தாக்குதல்கள் நடந்துள்ளன.
வெறுமனே கடிதம் மட்டும் எழுதுகிறீர்களே என கேட்டால், படையா அனுப்ப
முடியும் என்கின்றனர். கடலில் நீரோட்டம் மாறும்போது மீனவர்களின் பாதையும்
மாறும். இதை எல்லை தாண்டுவதாக கூறக் கூடாது. கச்சத்தீவை மீட்க வேண்டும்.
அதுதான் மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே தீர்வு.
ராஜா: எப்போது விவாதம் நடந்தாலும் ஒரே மாதிரியான அறிக்கையை
மத்திய அரசு தருகிறது. சார்க் அமைப்பில் இந்தியாவும் உள்ளது; இலங்கையும்
உள்ளது. அந்த அமைப்பில் மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னை குறித்து
இலங்கையிடம் இந்தியா எழுப்ப வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையில் பொதுவான
அமைதி கடற்பரப்பை ஏற்படுத்த வேண்டும். அங்கு தாக்குதல் எதுவும் இருக்கக்
கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழக
மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை அளிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய அந்த உரிமை
ஏன் மறுக்கப்படுகிறது. இந்த உரிமை கைவிடப்படுவதை இந்தியா ஏற்கிறதா? இந்த
ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இலங்கை குறித்த வெளியுறவுக்
கொள்கை மாற வேண்டும்.
கனிமொழி: குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போல, மீனவர்கள்
பிரச்னையிலும்கூட சிலர் அரசியல் லாபம் பார்க்க ஆசைப்படுகின்றனர். தமிழக
அரசை இதில் குறைகூற முடியாது. இலங்கையுடனான பிரச்னையை மத்திய அரசு தான்
கையாள முடியும். மத்திய அரசு மேற்கொள்ளும் முடிவுகளையும் நடவடிக்கைகளையும்
தான் ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. மீனவர்கள் தாக்குதலுக்காக
ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் முதலில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால்
போகபோக நம்பிக்கை இழக்கும்படி ஆகிவிட்டது. தமிழக மீனவர்கள்
தாக்கப்படுகின்றனர் என பல முறை கூறியும் இலங்கை திரும்ப திரும்ப அதை
மறுக்கிறது. மத்திய அரசிடம் சேட்டிலைட் உட்பட எத்தனையோ நவீன தொழில்நுட்ப
வசதிகள் உள்ளன. அவற்றை வைத்து நடுக்கடலில் யார் குற்றம் செய்கின்றனர்
என்பதை கண்டுபிடிக்க முடியாதா?
வெங்கையா நாயுடு: ஒப்புக்காக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை இது.
இலங்கையின் போக்கில் மாற்றம் இல்லை என தமிழக முதல்வரே கடிதத்தில்
கூறுகிறார். பிறகு எப்படி மத்திய அரசு மறுக்கிறது? இது அரசியல் பிரச்னை
அல்ல. மீனவர்கள் பிரச்னை. கச்சத்தீவை மீட்பது வேறு விஷயும். அதற்காக
அப்பகுதியில் மீன்பிடிக்கக் கூடாதா? இந்திய கடல் எல்லைக்குள்ளேயே
மீனவர்கள் தாக்கப்படுவதற்கு மத்திய அரசின் பதில் என்ன? தமிழகத்தில்
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்ட பிறகுதான் இவ்விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக
கவனம் செலுத்துமா?
சுதர்சன நாச்சியப்பன்: இரு நாட்டு மீனவர்களும் ஒரே நேரத்தில்
மீன்பிடிக்கச் செல்வதாலேயே பிரச்னை. இலங்கை மக்கள் விரும்பும் லூனா
மீன்கள், இந்திய கடல்பகுதியில் நிறைய உள்ளன. இந்தியர் விரும்பும் இறால்
மீன்கள் இலங்கை கடல் பகுதியில் அதிகம் உள்ளன. எனவே, இருதரப்பு
மீனவர்களுக்கும் இடையில் கூட்டு அமைப்பு ஏற்படுத்த வேண்டும். தலைமன்னார் -
ராமேஸ்வரம் இடையில் படகு போக்குவரத்து விட வேண்டும். கொழும்பு -
தூத்துக்குடி இடையில் கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும். இருநாட்டு
வர்த்தக தொடர்புகளை அதிகரிக்க வேண்டும். இந்திய மீனவர்களுக்கு அடையாள
அட்டையும், இன்சூரன்ஸ் திட்டமும் அளிக்க வேண்டும்.
திருச்சி சிவா: தமிழர்கள் என்றாலே இலங்கைக்கு பிடிக்காது. தமிழக
மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய ராணுவம் வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழக
முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதியும் தாக்குதல்கள் தொடர்கின்றன. சர்வதேச
கடல் எல்லை கோடு இருநாட்டையும் பிரிக்கிறதா அல்லது தமிழக மீனவர்களின்
உயிர்களை பறிக்கிறதா? இலங்கையுடன் எத்தனையோ ஒப்பந்தங்களை இந்தியா போட்டு
வரும்போது மீனவர்கள் பிரச்னை குறித்து பேசி தீர்வு காணக் கூடாதா?
ஜெயந்தி நடராஜன்: தமிழகத்தின் பிரச்னை இல்லை இது. இந்தியாவின்
பிரச்னை. நிறைய தடவை இந்த அவையில் விவாதிக்கப்பட்டும் தீர்வு வரவில்லை.
பிரதமர் நிறைய நடவடிக்கைகள் எடுத்தும் பிரச்னை தீரவில்லை. கடல்
எல்லைக்கோடு ஒன்றும் இறுதியானது அல்ல. இவ்விஷயத்தில் வெறும் பார்வையாளராக
வேடிக்கை பார்க்கக் கூடாது. வான் வழி உட்பட அனைத்து வழிகளிலும் கண்காணிக்க
வேண்டும். கொள்கைகள் இவ்விஷயத்தில் முக்கியமல்ல. மனித உயிர்கள் பலியாகக்
கூடாது. இவ்வாறு எம்.பி.,க்கள் பேசினர்.
இரண்டு முறை சபை ஒத்திவைப்பு: தமிழக மீனவர்கள் தாக்கப்படும்
சம்பவம் குறித்து நேற்று ராஜ்யசபாவில் நடந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின்
மீது, தமிழக எம்.பி.,க்கள் ஒவ்வொருவராக பேச அழைக்கப்பட்டனர். முதலில்
மைத்ரேயன் பேசியபோது தி.மு.க., எம்.பி.,க்களின் குறுக்கீடு பலமாக
இருந்தது. திருச்சி சிவா, செல்வகணபதி போன்றவர்கள், "பாயின்ட் ஆப் ஆர்டர்'
கிளப்பவே, பெரும் ரகளை ஆனது. ஒருகட்டத்தில் கனிமொழிக்கும்,
மைத்ரேயனுக்கும் வாக்குவாதம் முற்றியது. தன்னை பார்த்து மைத்ரேயன்
பேசுவதாக கனிமொழி கூற, அவைத் தலைவரை பார்த்துதான் பேச வேண்டுமென மைத்ரேயன்
அறிவுறுத்தப்பட்டார். மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னையை விட்டுவிட்டு
சம்பந்தமில்லாமல் பேசுவதாக தி.மு.க., எம்.பி.,க்கள் குற்றம் சாட்ட, அதை
மறுத்தார் மைத்ரேயன். மீனவர்கள் பிரச்னையை ஒட்டிதான் தான் பேசுவதாகவும்,
தன்னை பேச விடாது குறுக்கிடுவதாகவும் மைத்ரேயன் கூறினார். அனைவரையும்
அமைதி காக்கும்படி துணைத் தலைவர் ரகுமான்கான் கேட்டுக் கொண்டே இருந்தார்.
ரகுமான்கானுக்கும், மைத்ரேயனுக்கும் வாக்குவாதம் முற்றியது. "என்னை பேச
விடாது தடுக்கும் தி.மு.க., எம்.பி.,க்களை அமரச் சொன்னால்தான் நான்
பேசுவேன். இல்லையேல் நான் தொடர்ந்து பேசப் போவதில்லை' என, இருக்கையில்
அமரவே, சபையில் கூச்சல் குழப்பமும் அதிகரித்தது. கவனஈர்ப்பு தீர்மான விவாத
நேரம் நீட்டிக்கப்படாது என்றார் ரகுமான்கான். தொடர்ந்து தி.மு.க.,வும்,
அ.தி.மு.க., வும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதனால் சபை, 10 நிமிடங்கள்
ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை கூடியபோதும், மீண்டும் இன்னொரு முறை
ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடிய போது, உணர்ச்சிவசப்பட்டு
விட்டதாகக் கூறி, சபைத் தலைவரிடம் மைத்ரேயன் மன்னிப்பு கேட்டுவிட்டு,
தொடர்ந்து பேசி முடித்தார்.
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கைப் பிரச்னை: தமிழக எம்.பி.க்கள் ஆவேசம்
» தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : வட மாநில எம்.பி.,க்கள் குரல்
» மனித உரிமை மீறலை தமிழகத்தில் தடுத்து நிறுத்துங்கள்: தி.மு.க., மனு
» முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்
» வேட்டி கட்ட தடை; கலாச்சாரத்தின் மீதான தாக்குதலை தகர்க்க வேண்டும்: சகாயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum