TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


'சீட்' எங்களுக்கே: ஐவர் அணி ஆதரவாளர்கள் அலம்பல்

Go down

'சீட்' எங்களுக்கே: ஐவர் அணி ஆதரவாளர்கள் அலம்பல்  Empty 'சீட்' எங்களுக்கே: ஐவர் அணி ஆதரவாளர்கள் அலம்பல்

Post by Tamil Mon Feb 15, 2016 6:40 am

'சீட்' எங்களுக்கே: ஐவர் அணி ஆதரவாளர்கள் அலம்பல் 
‘நாங்கள் எல்லாம் ஐவர் அணி ஆதரவாளர்கள்; இந்த தேர்தலில் எங்களுக்கே, ‘சீட்’ கிடைக்கும்’ என, அ.தி.மு.க.,வில் பலர் அலம்பலை ஆரம்பித்துள்ளதால், கட்சியின் உண்மையான விசுவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ‘அலம்பலில் ஈடுபடுவோரின் கொட்டத்தை ஒடுக்க, முதல்வரே வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்; நல்லவர்களை தேர்வு செய்ய வேண்டும்’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

௨௬ ஆயிரம் மனுக்கள்:தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி, இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால், முக்கிய கட்சிகளான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து, விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. அ.தி.மு.க.,வில் மொத்தம், 26 ஆயிரத்து, 174 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இவற்றில், 7,936 மனுக்கள், ‘ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும்’ எனக்கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை தவிர்த்தால், தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும் போட்டியிட, 17 ஆயிரத்து, 698 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விருப்ப மனுக்களை பரிசீலனை செய்யும், மூத்த அமைச்சர்கள் இடம் பெற்ற ஐவர் அணியினர், தொகுதிக்கு மூன்று பேர் என்ற அடிப்படையில், பட்டியல் ஒன்றை தயாரித்து, அதை முதல்வரிடம் வழங்க உள்ளனர். அதன்பின், மூன்று பேரில் ஒருவர் என்ற அடிப்படையில், இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதை முதல்வர் ஜெ., வெளியிடுவார்.
'சீட்' எங்களுக்கே: ஐவர் அணி ஆதரவாளர்கள் அலம்பல்  Tamil_News_large_145692120160214233859

கடந்த லோக்சபா தேர்தலின் போது, ஐவர் அணியினர் தயாரித்துக் கொடுத்த பட்டியலில் இடம் பெற்ற வேட்பாளர்களையே, முதல்வர் அறிவித்ததால், இம்முறையும் அதேபோல் தான் நிகழும் என, ஐவர் அணியின் எடுபிடிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் நம்புகின்றனர்.

தேர்தல் பணி துவக்கம்”அதனால், ஐவர் அணிக்கு வேண்டியவர்களைச் சந்தித்து, கவனிக்க வேண்டியதை கவனித்து, வேட்பாளர்கள் பட்டியலில், தங்களின் பெயர் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகளை பலர் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அப்படி செய்தவர்கள் எல்லாம், இப்போது தொகுதிகளில், தாங்களே வேட்பாளர் என்றும், தங்களுக்கே, ‘சீட்’ என்றும் கூறி, அலம்பலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், மேலோட்டமாக தேர்தல் பணிகளையும் துவக்கி விட்டனர். இது, அ.தி.மு.க.,வின் உண்மையான விசுவாசிகளையும், முதல்வர் எப்போதும் நல்லது செய்வார் என, நம்பியிருப்பவர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

எனவே, ‘இந்த விஷயத்தில், முதல்வர் தலையிட்டு, வேட்பாளர்களை அவரே தேர்வு செய்ய வேண்டும்; அலம்பலில் ஈடுபட்டுள்ளோருக்கு, வேட்டு வைக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

திட்டமிட்டு தயாரிக்கப்படும் பட்டியல்:இது தொடர்பாக, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில், அ.தி.மு.க.,வின் செல்வாக்கு ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. அதற்கு முக்கிய காரணம், ஜாதி, மத வேறுபாடின்றி, கட்சியின் எந்த ஒரு தொண்டனும் எந்தப் பதவிக்கும் வர முடியும் என்பதை, முதல்வர் ஜெ., பல முறை செய்து காட்டியதே; அது இனியும் தொடர வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், முதல்வரின் விசுவாசிகளும் விரும்புகின்றனர்.

அ.தி.மு.க.,வில் முக்கிய பணிகளை கவனிக்கும் ஐவர் அணியினரின் ஆதரவாளர்கள் பலரே, தற்போது மாவட்ட செயலர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் தரும் பட்டியல் அடிப்படையிலும், தங்களுக்கு வேண்டியவர்கள், துதிபாடுவோர் என்ற அடிப்படையிலுமே, ஐவர் அணியினர், தொகுதிக்கு மூன்று பேர் என்ற பட்டியல் தயாரித்து, முதல்வரிடம் கொடுக்க உள்ளனர்.

இவர்கள் தயாரிக்கும் பட்டியலில், மக்கள் மத்தியில் அறிமுகமாகி, கட்சிக்கு விசுவாசியாக களப்பணியாற்றக் கூடியவர்கள் புறக்கணிக்கப்படுவர் என்பது நிச்சயம்.

அதற்கேற்ற வகையில், ஐவர் அணியின் ஆதரவாளர்களாக உள்ள பலர், இப்போதே, தங்களுக்குத் தான் இம்முறை, தேர்தலில் போட்டியிட, ‘சீட்’ கிடைக்கும் என, தொகுதிகளில் அலம்பலை ஆரம்பித்து விட்டனர். தங்களுக்கு வேண்டியவர்கள் ஆலோசனைப்படி, தேர்தல் பணிகளையும் துவக்கி விட்டனர்.

தங்களது விசுவாசிகள் வேட்பாளர்களானால், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து செயல்படுவர் என திட்டமிட்டு, மாவட்ட செயலர்களுடன் இணைந்து, ஐவர் அணியினர் தங்களுக்கு சாதகமான பட்டியலை தயாரித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. கடந்த, லோக்சபா தேர்தலில், தேர்வான எம்.பி.,க்களில் பெரும்பாலானோர், ஐவர் அணி ஆதரவாளர்கள் என்பதால், தற்போது அவர்கள் எல்லாம், இந்த அணியினரை அதிகம் சுற்றி வருகின்றனர்; மற்றவர்களை கண்டு கொள்வதில்லை.

எனவே, அ.தி.மு.க.,வின் உண்மையான விசுவாசிகளை மட்டுமே, வேட்பாளர்களாக முதல்வர் ஜெயலலிதா தேர்வு செய்ய வேண்டும். ஐவர் அணியினர் தரும் பட்டியலை, நன்கு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்குகளில், லஞ்ச புகார்களில் சிக்காத நல்லவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்ய வேண்டும் என, தொண்டர்கள் பலரும் விரும்புகின்றனர். இப்படி செய்வதன் மூலம், கட்சி மேலும் செல்வாக்கு அடையும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நேற்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்... இன்று வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!- ஜெ.களையெடுப்பின் பின்னணி
» 'வெள்ளம் பாதித்த தொகுதிகள் எங்களுக்கே': தி.மு.க., முடிவால் காங்., கடும் அதிர்ச்சி
» ஐவர் குழுவில் இடம்பெறாதது சட்ட விரோதம் : ஜெயலலிதா காட்டமான அறிக்கை
» வைகோவுக்கு புடவை, ஜெயலலிதாவுக்கு வெள்ளை சட்டை, துண்டு- உதயநிதியின் மீம்ஸ் அலம்பல்!
» பெரியாறு அணையை ஐவர் குழு பார்வையிட்டதால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum