TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:05 am

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Sep 19, 2024 7:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 16, 2024 3:28 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 04, 2024 9:04 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தீராத சில்லரை தட்டுப்பாடு: காரணம் என்ன?

Go down

தீராத சில்லரை தட்டுப்பாடு: காரணம் என்ன? Empty தீராத சில்லரை தட்டுப்பாடு: காரணம் என்ன?

Post by அருள் Thu May 21, 2015 6:30 pm

தீராத சில்லரை தட்டுப்பாடு: காரணம் என்ன? Coinsன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தினந்தோறும் ஒவ்வொரு பிரச்னைகளைத் சந்திக்க வேண்டியதுள்ளது. அதில் ஒன்று சில்லரை பிரச்னை.
அவசரத்தில் அலுவலகத்துக்கோ, கல்வி நிறுவனங்களுக்கோ இன்னும் ஏதோ ஒரு தேவைக்காகவோ அரசு பஸ்களில் ஏறி டிக்கெட் எடுக்க 10 ரூபாய் நோட்டை நீட்டினால், 'எங்கிருந்துதான் வருமோ கண்டக்டருக்கு அத்தனை கோபம்?' என்று தெரியாது.
'சரியான சில்லரையைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக்கோ...!' என்று ஒருமையில் பேசிவிட்டு நம்மை கண்டுக்கொள்ள மாட்டார். இந்த அனுபவம் அரசு பஸ்களில் சென்ற ஒவ்வொருக்கும் ஏற்பட்டு இருக்கும். இதற்கெல்லாம் சில்லரை நாணயத் தட்டுப்பாடு காரணம் என்கிறார்கள் வியாபாரிகளும், பொதுமக்களும்.

இது குறித்து தேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், "இன்றைக்கு சில்லரை நாணயத் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கிறது. எந்தக்கடைக்குப் போனாலும் சரியான சில்லரையைக் கொடுப்பதில்லை. சில கடைகளில் ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரைக்கும் சாக்லேட் கொடுத்து சில்லரைத் தட்டுப்பாட்டை சமாளிக்கிறார்கள். வாங்கும் பொருளின் விலை 10 ரூபாய்க்குள் இருக்கும். அதற்கு சில்லரை இல்லாமல் ஒரு ரூபாய் சாக்லேட்டை வாங்கிக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.

அதிலும் வீடுகளில் குழந்தைகள் இல்லாமல் இருக்கும் நீரழிவு நோயாளிகளான வாடிக்கையாளர்களுக்கு கூட சாக்லேட் கொடுப்பதில் எந்தவிதத்தில் நியாயம? இதுகுறித்து கடைக்காரர்களிடம் கேட்டால் சரியான சில்லரை கொடுத்து பொருளை வாங்கிவிட்டு செல்லுங்கள் என்று சொல்கிறார்கள். கடைகளிலேயே சில்லரை நாணயங்கள் இல்லை என்றால் சாதாரண மக்களிடம் எப்படி இருக்கும். சில்லரை நாணயம் இல்லாமல் பல்வேறு சிரமங்களை மக்கள் இன்று சந்தித்து வருகிறார்கள்.  இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) குறிப்பிட்ட தொகைக்கு தினமும் சில்லரையை விநியோகித்து வருகிறது.

தீராத சில்லரை தட்டுப்பாடு: காரணம் என்ன? Elangoசென்னை பாரிமுனையில் தினந்தோறும் வழங்கப்படும் சில்லரை நாணயங்களை பெறுவதற்கு என்று ஒரு கூட்டம் ஆர்.பி.ஐ. வாசலில் நள்ளிரவு முதல் காத்துக் கிடக்கிறது. அவ்வாறு பெறப்படும் சில்லரை நாணயங்களை  சிலர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, அதை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள்.

அதன்பிறகு 100 ரூபாய்க்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கமிஷன் பெற்றுக் கொண்டு சில்லரை நாயணங்கள் கொடுக்கிறார்கள். அதை பெரிய வணிக நிறுவனங்கள் வாங்கிக் கொள்கின்றன. ஆனால் சிறு, குறு வியாபாரிகளால் கமிஷன் கொடுத்து சில்லரை நாணயங்களை பெற முடியவில்லை. சில அரசு பஸ் கண்டக்டர்களும் தங்களிடம் சேரும் சில்லரை நாணயங்களை இதுபோன்ற வியாபாரிகளிடம் கொடுத்து கமிஷன் பெறுவது வாடிக்கையாக உள்ளது" என்றார்.

இதுகுறித்து வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், "வாடிக்கையாளர்களுக்காக சில்லரையை கமிஷன் கொடுத்து வாங்கி வைத்து இருக்கிறோம். ஆனால் அதை விட தேவை அதிகமாக இருக்கிறது. சில்லரை நாணய தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு கடைகள் முதல் சூப்பர் மாக்கெட் வரை சில்லரை நாணயத் தட்டுப்பாட்டை சமாளிக்க சாக்லேட் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது சில வாடிக்கையாளர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக தகராறும் ஏற்படுகிறது. எங்களது பிசினஸிலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது" என்றார்.

ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "மத்திய நிதித்துறையின் கீழ் இயங்கும் 'செக்யூரிட்டி பிரிண்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' மூலம் சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், ஐம்பது ரூபாய் வரையிலான நாணயங்கள் வடிவமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. இதை ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நாணயங்கள் புழக்கத்தில் விடப்படுகின்றன. மேலும், இந்தியாவில் மும்பை, அலிப்பூர் (கொல்கத்தா) நொய்டா (டெல்லி) ஹைதராபாத் ஆகிய நான்கு இடங்களில் நாணயங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் உள்ளன. மக்களின் தேவைக்கு ஏற்ப சில்லரை நாணயங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதைத்தவிர கடந்த சில ஆண்டுக்கு முன்பு சில்லரை மாற்றும் இயந்திரங்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பொது இடங்களில் நிறுவப்பட்டன. இதையும் மீறி சில்லரை நாணயங்கள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு உண்மையாக காரணம் என்ன என்பதை கண்டறியப்பட வேண்டும். சில்லரை நாணயங்கள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசிடம் மட்டுமே உள்ளது" என்றனர்.

காயின் போன்கள் 

செல்போன், சாமான்ய மக்கள் கைகளில் தவழ்ந்தாலும் இன்னமும் காயின் பூத் என்றழைக்கப்படும் ஒரு ரூபாய் போட்டு பேசும் போன்களுக்கு வரவேற்பு இருக்கிறது. இந்த போன்களிலும் ஒரு ரூபாய் காயின்கள் நாள்கணக்கில் அந்த இயந்திரத்திலேயே எடுக்காமல் போடப்பட்டு விடுவதும் சில்லரைக் காசு தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுபோல எடை இயந்திரங்களிலும் சில்லரைக் காசுகள் குவிந்து கிடக்கின்றன. அவைகள் தினந்தோறும் எடுக்கப்பட்டால் ஓரளவு சில்லரைக் காசு தட்டுப்பாடு பிரச்னை குறையும். மேலும் இந்து, கிறிஸ்தவ, தர்கா ஆகியவற்றில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் போடப்படும் நாணயங்களாலும் சில்லரை தட்டுப்பாடு ஏற்படுவதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

நாணயங்கள் சேகரிப்பு

குறிப்பிட்ட வருடக்காலத்தில் தயாரிக்கப்பட்ட நாணயங்களை சேகரிப்பதை சிலர் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த நாணயங்களை வாங்கவும் ஒரு கும்பல் இருக்கிறது. அவர்களிடம் அந்த நாணயங்களைக் கொடுத்தால் பல ஆயிரங்கள் கிடைக்கும் என்று கதைகட்டி விடப்படுகிறது. இதை நம்பி அந்த ஆண்டுக்குரிய நாணயங்களை பலர் வீடுகளில் சேகரித்து வருகின்றனர். இதில் சில நாணயங்கள் பிளேடு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. பிளேடு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உலோகம், சமீபத்திய வருடத்தில் தயாரிக்கப்பட்ட நாணயங்களில் உள்ளன. அதை சேகரித்து, பிளேடு தயாரிக்கும் கம்பெனிகளிடம் கொடுப்பதை சிலர் வேலையாக வைத்துள்ளனர். ஒரு ரூபாய் நாணயத்திலிருந்து 5 முதல் 6 பிளேடு தயாரிக்கப்படுகிறதாம். இது பிளேடு கம்பெனிகளுக்கு நல்ல லாபம் என்பதால் குறிப்பிட்ட அந்த வருட நாணயங்களை கூடுதல் விலை கொடுத்தும் வாங்க தயாராக இருக்கிறார்கள். இதுவும் சில்லரை நாயணங்கள் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணம். இதைத் தெரிந்து கொண்ட ரிசர்வ் வங்கி இப்போது அந்த உலோகம் இல்லாத நாணயங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தீராத சில்லரை தட்டுப்பாடு: காரணம் என்ன? Beggers%20corin
பிச்சைக்காரர்களுக்கு மவுசு

சில்லரை நாணயத் தட்டுப்பாடு காரணமாக பிச்சைக்காரர்களுக்கு கடும் மவுசு ஏற்பட்டுள்ளது. சில கடைகளில் சில்லரை கொடுத்தால் கமிஷன் கொடுக்கப்படும் என்ற போர்டு தொங்கவிடப்பட்டுள்ளது. அந்தக்கடைகளில் பிச்சைக்காரர்கள் சில்லரை நாணயங்களை கொடுத்துவிட்டு கமிஷனையும் வாங்கிச் செல்கிறார்கள். குறிப்பாக ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், 5 ரூபாய் நாணயங்களைக் கொடுக்கும் வாடிக்கையாளர்களைக் கண்டால் வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு பஸ்களிலும் சரியான சில்லரையைக் கொடுப்பவர்களுக்கு டிக்கெட் கொடுப்பதில் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.

தீராத சில்லரை தட்டுப்பாடு: காரணம் என்ன? Five%20rupresகசங்கிப் போன ஐந்து ரூபாய் நோட்டுக்கள்


சில்லரை நாணய தட்டுப்பாட்டை சமாளிக்க முன்பெல்லாம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. நாணயங்கள் வந்தபிறகு ரூபாய் நோட்டுக்களின் புழக்கம் குறைந்து விட்டன. இப்போது ஐந்து ரூபாய் நோட்டை மட்டுமே அதிக புழக்கத்தில் இருக்கின்றன. அவைகளும் கசங்கி, கிழிந்து காணப்படுகின்றன. அந்த நோட்டுக்களை கொடுத்தால், வாங்குபவர்கள் கடும் எரிச்சலடைகிறார்கள். இத்தகைய நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.

சில்லரை நாணய தட்டுப்பாட்டை சமாளிக்கவில்லை என்றால் அது பெரும் பிரச்னையாகி விடும்.

-எஸ்.மகேஷ்
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum