TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Nov 19, 2024 9:43 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Nov 14, 2024 8:52 pm

» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


தலைநகரில் தி.மு.க., வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Go down

தலைநகரில் தி.மு.க., வீழ்ச்சிக்கு காரணம் என்ன? Empty தலைநகரில் தி.மு.க., வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

Post by மாலதி Mon May 16, 2011 12:31 pm

சட்டசபை தேர்தல் முடிவுகளில், தலைநகரான சென்னை மீண்டும் அ.தி.மு.க.,
கோட்டையானது.சென்னையில் கடந்த தேர்தலின்போது, 14 தொகுதிகள் இருந்தன.
தொகுதி சீரமைப்புக்கு பிறகு, 16 தொகுதிகளாக எண்ணிக்கை உயர்ந்தது.
தலைநகரில் ஆளுங்கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவதாக, உளவுத்துறை
கொடுத்த அறிக்கை காரணமாக சென்னையில் ஒன்பது தொகுதிகளில் மட்டும் தி.மு.க.,
போட்டியிட்டன.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் ஐந்து தொகுதியிலும், பா.ம.க.,
பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.
அ.தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு.க., 12 தொகுதிகளிலும், தே.மு.தி.க., இரு
தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு
தொகுதியிலும் போட்டியிட்டன.தி.மு.க., தலைவர் கருணாநிதி சேப்பாக்கம்
தொகுதியில் போட்டியிடாமல், தனது சொந்த ஊரான திருவாருக்கு இடம்
பெயர்ந்தார். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூரிலும், நிதியமைச்சர்
அன்பழகன் வில்லிவாக்கத்திலும், அமைச்சர் பரிதி இளம்வழுதி எழும்பூரிலும்,
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மயிலாப்பூரிலும்
போட்டியிட்டனர்.தி.மு.க., தலைமை எதிர்பார்த்தபடி, சென்னை நகர தொகுதிகளில்
தி.மு.க., கூட்டணி படுதோல்வியை தழுவியுள்ளது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது
முதல், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை பெற்றனர்.
எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் பரிதி இளம்வழுதிக்கும்,
தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பிக்கும் இடையே சில நூறு ஓட்டுகள் மட்டுமே
வித்தியாசம் தொடர்ந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இறுதியில்
தே.மு.தி.க.,வே வெற்றி பெற்றது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஸ்டாலின்,
துவக்கத்தில் 1000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார்.
12வது ரவுண்ட் முடிவில், 400 ஓட்டுக்கள் மட்டுமே ஸ்டாலின் முன்னிலை
பெற்றிருந்தார்.
ஆனால், அடுத்தடுத்த ரவுண்டுகளில் வித்தியாசம்
குறைந்து, அ.தி.மு.க., வேட்பாளர் சைதை துரைசாமி முன்னிலை பெற்றார். மாறி,
மாறி இருவரும் முதலிடத்துக்கு வந்ததால், எதிர்பார்ப்பு அதிகரித்தது.
பழுதான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் காரணமாக, முடிவை அறிவிப்பதில்
குழப்பம் ஏற்பட்டது.
தி.மு.க.,விற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், சேப்பாக்கம்-
திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தது. தென்சென்னை
மாவட்ட தி.மு.க., செயலர் அன்பழகன், இத்தொகுதியில் போட்டியிட்டார். தன்னை
எதிர்த்து போட்டியிட்ட, மனித நேய மக்கள் கட்சி வேட்பாளரை விட தொடர்ந்து
முன்னிலை பெற்று, இறுதியில் வெற்றி பெற்றார்.
பின்னடைவு ஏன்? சென்னை தி.மு.க.,வின் கோட்டை என்ற எதிர்பார்ப்பு, கடந்த
சட்டசபை தேர்தலிலேயே தகர்க்கப்பட்டது. அப்போது மொத்தமிருந்த 14
தொகுதிகளில், ஏழு தொகுதிகளை அ.தி.மு.க., கைப்பற்றியது. அந்த எண்ணிக்கை
தற்போது உயர்ந்துள்ளது.கடந்த 2001-06ம் ஆண்டுவரையிலான, அ.தி.மு.க.,
ஆட்சிக்காலத்தில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையைப் போக்க புதிய
வீராணம் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால், சென்னை நகர மக்களை
வாட்டிவதைத்த குடிநீர் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதனால், சென்னை நகர
மக்கள் அ.தி.மு.க., ஆதரவாளர்களாக மாறினர்.இந்த தேர்தலில் ஸ்பெக்ட்ரம்
விவகாரம் குறித்த விழிப்புணர்வு; விலைவாசி உயர்வு; மாநகராட்சி
கவுன்சிலர்களின் கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை; சட்டம் ஒழுங்கு
பாதிப்பு; ஆளுங்கட்சி போர்வையில் ரவுடிகள் நடமாடியது; தி.மு.க.,வின்
குடும்ப ஆதிக்கம் போன்றவை சென்னையில் தி.மு.க., தோல்வியடைய காரணமாக
அமைந்தது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum