TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 3:01 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மூடுவிழா காணும் யாஹூ டைரக்டரி சேவை; ஒரு இணைய பிளாஷ்பேக்

Go down

மூடுவிழா காணும் யாஹூ டைரக்டரி சேவை; ஒரு இணைய பிளாஷ்பேக் Empty மூடுவிழா காணும் யாஹூ டைரக்டரி சேவை; ஒரு இணைய பிளாஷ்பேக்

Post by மாலதி Mon Sep 29, 2014 7:52 am

அந்த கால இணையத்தை அறிந்தவர்கள் நிச்சயம் யாஹூவின் அறிவிப்பால் வருத்தம் அடைவார்கள். அப்படியே ஆரம்ப கால இணைய அனுபபத்தை பிளேஷ்பேக்காக நினைத்துப்பார்த்து ஏங்கவும் செய்வார்கள். 

இப்படி பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைத்திருக்கும் அறிவிப்பு யாஹூ தனது டைரக்ட்ரி சேவைக்கான மூடுவிழா தொடர்பானது. இணையத்தில் அசத்தலான புதிய சேவைகள் கோலோச்சும் நிலையில் பழைய சேவைகள் மூடப்படுவது இயல்பானது தான். அதிலும் இணையவாசிகளின் மத்தியில் செல்வாக்கை இழந்து கிட்டத்தட்ட மறக்கப்பட்ட சேவைகள் மூடுவிழா காண்பது இன்னும் கூட இயல்பானது.

மூடுவிழா காணும் யாஹூ டைரக்டரி சேவை; ஒரு இணைய பிளாஷ்பேக் Yahoo1


இணையத்தில் வழக்கொழிந்து போய் மூடப்பட்ட சேவைகள் என ஒரு நீண்ட பட்டியலே போடலாம். சில மாதங்களுக்கு முன் கூகிள் நிறுவனமே தனது முதல் சமூக வலைப்பின்னல் சேவையான ஆர்குட்டை மூடுவதாக அறிவித்தது. யாஹு தன் பங்கிற்கு தன் வசம் இருந்த அல்டவிஸ்டா தேடியந்திரத்தை மூடுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது.

அந்த வகையில் இப்போது யாஹூ, தனது டைரக்டரி உள்ளிட்ட மூன்று சேவைகளை நிறுத்திக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. யாஹுவின் இந்த டைரக்டரி சேவையை இந்த தலைமுறை இணையவாசிகளில் பலர் அறிந்திருக்ககூட மாட்டார்கள் என்று சொல்லலாம். அந்த காரணத்திற்காகவே யாஹூவின் டைரக்டரி சேவையின் முடிவு கவனத்திற்கு உரியதாக இருக்கிறது.

ஏனெனில் ஒரு காலத்தில் பெரும்பாலான இணையவாசிகளுக்கான வழிகாட்டியாக யாஹூ டைரக்டரி சேவை தான் இருந்தது. ஒரு காலம் என்பது இணையத்தின் ஆரம்ப காலமான 1990 கள். அப்போது தேடியந்திரமாக கூகிள் அறிமுகமாகவில்லை. அல்டாவிஸ்டாவும், இன்க்டோமியும்,லைகோசும் தேடியந்திரங்களாக கொடிகட்டிப்பறந்து கொண்டிருந்தன. யாஹூ தான் அப்போது இணையத்தின் நுழைவு வாயிலாக இருந்தது. இணையத்தில் எது வேண்டும் என்றாலும் பெரும்பாலும் யாஹூ மூலம் தேடும் நிலை இருந்தது.

மூடுவிழா காணும் யாஹூ டைரக்டரி சேவை; ஒரு இணைய பிளாஷ்பேக் Yahoo21


இந்த கால ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு புரியும் படி சொல்ல வேண்டும் என்றால் இணையத்தின் கூகிளாக யாஹு இருந்த காலம் அது. அப்போது யாஹு இணையதளங்களை அறிமுகம் செய்து பட்டயலிடும் சேவை தான் யாஹூ டைரக்டரி.

புதிய மற்றும் பயனுள்ள இணையதளங்களை அறிமுகம் செய்துகொள்ள இணையவாசிகளுக்கு இந்த டைரக்டரி தான் வழிகாட்டியாக இருந்தது. தேடிய்ந்திரங்களின் இயந்திர தேடலை விட, மனிதர்களால் கவனமாக தேர்வு செய்து பரிசிலிகக்ப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட இணையதளங்களை கொண்ட இந்த கையேடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. செல்வாக்கு மிக்கதாகவும் இருந்தது. இந்த பகுதியில் இணையதளங்கள் பல்வேறு தலைப்புகளில் பட்டியலிடப்பட்டிருக்கும். விருப்பமுள்ள பகுதியை கிளிக் செய்து பார்க்கலாம். இணையதளங்களை தேடவும் செய்யலாம். 

ஆனால் 1990 களின் இறுதியில் கூகிள் தேடியந்திரத்தின் அறிமுகம் மற்றும் புத்தாயிரமாண்டில் உலகின் முன்னணி தேடியந்திரமாக அது எழுச்சி பெற்ற விதம் யாஹூ டைரக்டரியை பின்னுக்குத்தள்ளியது. (இடைப்பட்ட காலத்தில் யாஹூவே கூகிள் தேடல் முடிவுகளை பயன்படுத்தி வந்தது. ). அதோடு ஆரம்பத்தில் ஆயிரக்கணகான இணையதளங்கள் இருந்த நிலை மாறி அவற்றில் எண்ணிக்கை லட்சக்கணக்காக வெடித்த நிலையில் இணையதள அறிமுகத்திற்கான கையேடு என்பதே அர்த்தமற்றதாக ஆகிவிட்டது. பலரும் இப்படி ஒரு சேவை இருந்ததையே கூட மறந்து விட்டனர். இந்த நிலையில் யாஹூ இந்த சேவையை மூடுவதாக அறிவித்துள்ளதில் வியப்பதற்கு எதுவுமில்லை தான். ( டிசம்பர் மாத இறுதியுடன் டைரக்டரி சேவை இருக்காது என அறிவித்துள்ளது).

ஆனால், இணைய வராலாற்றில் இந்த சேவை ஒரு மைல் கல் என்று அறியும் போது இதன் வழக்கொழிந்து போகும் நிலை வருத்தம் தரத்தான் செய்யும். அது மட்டும் அல்ல, ஒருவித்திதில் இணைய நிறுவனமாக யாஹூவின் செல்வாக்கில் ஏற்பட்ட அடையாளமாகவும் இது இருக்கிறது. ஜெர்ரி யங் மற்றும் டெவிட் பைலோ ஆகியோரால் துவக்கப்பட்ட ( அந்த கால செர்ஜி பிரைன் -லாரி பேஜ் !) யாஹூ ஆரம்பத்தில் ஒரு இணைய கையேடாகதான் இருந்ந்தது. அதன் பெயரே கூட வையவிரிவு வலைக்கான ஜெர்ரி அண்ட் டேவிட்ஸ் கைடு (“Jerry and David’s Guide to the World Wide Web.”  ) என்பது தான்.  பின்னர் தான் அது யாஹூ என மாறியது. இணையத்தில் செல்வாக்கு பெற்று விளங்கியது. 

இப்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு யாஹூ இந்த சேவையை மூடுவதாக அறிவித்துள்ளது. யாஹூவே கூட இதற்கான அறிவிப்பை பெரிதாக வெளியிடாமல், விரைவில் மூடப்படும் யாஹூ கல்வி உள்ளிட்ட மூன்று சேவைகளில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அந்த அறிவிப்பின் ஆரம்பத்தில் , யாஹூ 20 ஆண்டுகளுக்கு முன்னர் இணையதளங்களின் டைரக்டரியாக ,இணையத்தை கண்டறிய துவக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆம் , ஒரு காலத்தில் இணையத்தை கண்டறிவதற்கான வழியாக இருந்த யாஹூ டைரக்டரி இனி இல்லாமால் போகப்போகிறது. 

கூகிள் மற்றும் பேஸ்புக் போன்றவை ஆதிக்கம் செலுத்தும் உலகில் தனது சேவையை கூர் தீட்டிக்கொள்ள யாஹுவுக்கு பயனில்லாத சேவைகளை மூடுவது தவிற வேறு வழியில்லை தான். ஆனாலும் கூட அந்த கால கூகிளுக்கு இந்த நிலை என்பது தான் இணைய நிதர்சனம்.
இந்த சேவை நிறுத்தம் பற்றி யாஹூவே பெரிதாக அலட்டிக்கொள்ளாத நிலையில் இணைய வல்லுனரான டேனி சலைவன் இது தொடர்பாக அழகான இறங்கற்பா எழுதியுள்ளார்; அது ; [You must be registered and logged in to see this link.]

யாஹூவின் அறிவிப்பு; [You must be registered and logged in to see this link.]

சைபர்சிம்மன் 
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum