TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:03 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்?

2 posters

Go down

உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்? Empty உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்?

Post by krishnaamma Tue Apr 15, 2014 5:05 pm

"தானியங்கி விமான நிறுவனத்தை வாங்க திட்டமிடும் ஃபேஸ்புக்!" என்ற தலைப்பில் விகடன்.காமில் கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதியன்று ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையின் ஃபாலோ-அப் கட்டுரைதான் இது!  

[முதல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்]

ஃபேஸ்புக் நிறுவனம் பிரபல தானியங்கி விமான (Drone) நிறுவனமான டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்கத் திட்டமிட்டு இருந்தது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இந்நிலையில், சத்தமில்லாமல் டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அசென்ட்டா (Ascenta) நிறுவனத்தை 20 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிவிட்டது ஃபேஸ்புக். இந்நிலையில் ஃபேஸ்புக் முதலில் கண்வைத்த டைட்டன் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தை வாங்கியுள்ளது கூகுள்.

உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்? Google%20and%20titan
கூகுள் எவ்வளவு விலை கொடுத்து இந்த தானியங்கி விமான நிறுவனத்தை வாங்கியது என்ற தகவலை வெளியிடவில்லை. ஆனால், ஃபேஸ்புக் வாங்க விரும்பிய சில நிறுவனங்களையெல்லாம் கூகுள் கொத்திக் கொண்டு செல்வதைக் கவனிக்கவேண்டும். இதற்குமுன் Waze, Deep Mind போன்ற நிறுவனங்களை ஃபேஸ்புக் வாங்கத்திட்டமிட்டிருந்தது. ஆனால், இவற்றிற்கு அதிக விலை கொடுத்து கூகுள் வாங்கியது. இதுமட்டுமில்லாமல் ஒரே வருடத்தில் 8 ரோபாட்டிக் நிறுவனங்களை வாங்கியுள்ளது கூகுள். 

ஃபேஸ்புக் நிறுவனம் இந்த அசென்ட்டா (Ascenta) நிறுவனத்தை வாங்குவதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்தான் 2 பில்லியன் டாலர்கள் கொடுத்து 'Oculus VR' என்ற பிரபல மெய்நிகர் ரியாலிட்டி (Virtual Reality) கேமிங் நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது! 

ஏன் ஃபேஸ்புக்கும், கூகுளும் தானியங்கி விமான நிறுவனங்களை வாங்குகின்றன? 

முதலில் கூகுளின் ப்ராஜெக்ட் லூன் மற்றும் சில டெக் நிறுவனங்களின் கூட்டு முயற்சியான internet.org திட்டத்தைப் பற்றி இங்கு பார்க்க வேண்டும். இந்த இரு முயற்சிகளுமே இன்று உலகில் இணைய வசதி இல்லாத இடங்களுக்கும், மக்களுக்கும் இணையத்தைக் கொண்டு சேர்ப்பதற்காக செய்யப்படுகின்றன. ஆனால், கூகுள் இதை அதிக உயரத்தில் பறக்கும் பலூன்கள் மூலம் செய்ய விரும்புகிறது. internet.org-ல் அங்கம் வகிக்கும் ஃபேஸ்புக் இதை தானியங்கி விமானங்களின் உதவியுடன் செய்யத் திட்டமிட்டுள்ளது. internet.org திட்டத்தில் ஃபேஸ்புக் மட்டுமில்லாமல் எரிக்ஸன், மீடியாடெக், ஓபரா, சாம்சங், நோக்கியா மற்றும் குவால்காம் ஆகிய நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

உலகின் மொத்த மக்கள் தொகையில் 66 சதவிகித மக்களுக்கு இணைய வசதி கிடையாது. இந்த 66 சதவிகிதத்தினருக்கும் இணையத்தை அளிப்பதே இந்த இரு திட்டங்களின் நோக்கம். இந்த 66 சதவிகிதத்தினரும் இருப்பதோ வளர்ச்சியில் பின்தங்கிய, வளரும் நாடுகளாகிய ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வடமேற்கு ஆசியா ஆகிய இடங்களில் தான். இந்த மாதிரியான இடங்களில் மக்கள் அடர்த்தி (ஒரு சதுர கி.மீ.க்கு எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் என்ற கணக்கு) குறைவாக இருக்கும் என்பதால் நகரத்தில் இருப்பதுபோல செல்ஃபோன் டவர்கள் அமைப்பதில் பிரயோஜனமில்லை. இவர்களுக்கு தேவை மிகக்குறைவான விலையிலோ, இலவசமாகவோ இணைய வசதி அளிக்க வேண்டியிருக்கும். 

செல்ஃபோன் டவர்களும், வை-ஃபை பாயிண்ட்டுகளையும் அமைக்காமல் எப்படி இணைய வசதி அளிப்பது? என யோசிக்கையில்தான் தானியங்கி விமானங்களும், பலூன்களும் வருகின்றன. இவற்றை மிக அதிக உயரத்தில் பறக்கவிட்டு, பூமிக்கு இணைய வசதி அளிப்பதுதான் சிறந்தது என டெக் நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன. மிக அதிக உயரத்தில் இருந்து இணையத்தை அளிக்கும்போது தரையில் அதிக பரப்பளவில் சிக்னல் கிடைக்கும். [உதாரணம், ஒரு விளக்கு குறைவான உயரத்தில் இருக்கும்போது அதன் வெளிச்சத்தின் பரப்பளவுடன், உயரமான இடத்தில் இருக்கும் விளக்குடைய வெளிச்சம் படும் பரப்பளவை ஒப்பிட்டுப் பாருங்கள்].

உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்? Loon
ஆனால், உயரம் அதிகரிக்க, அதிகரிக்க சிக்னலின் வீரியம் குறைந்துவிடும் என்பதையும் கவனிக்க வேண்டுமல்லவா?. இணையத்திற்கான சிக்னலின் வீரியம் குறைந்தால் என்ன ஆகும்? யூடியூப், பதிவிறக்கம் போன்ற அதிக வேகம் தேவைப்படும் இணைய வேலைகளைச் செய்யமுடியாது. ஆனால், மெயில் சோதிப்பது, மெசேஜ் அனுப்புவது போன்ற அடிப்படை வேலைகளைத் தாராளமாகச் செய்யமுடியும். [உதாரணம், வேகம் குறைந்த இணைப்பில் யூடியூப் பார்க்கமுடியாது, ஆனால் வாட்ஸ்-அப் வேலை செய்ய அதுபோதும்]. அதாவது இந்த திட்டங்களின் மூலம் அடிப்படை இணையத்தை அனைவருக்கும் அளித்துவிட முடியும். இந்த சேவையை கூகுள் பலூன்கள் மூலம் இதைச் செய்கிறது, ஃபேஸ்புக் தானியங்கி விமானங்கள் மூலம் செய்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்! 

இந்த வேலையை திறம்பட செய்யப்போவது கூகுளின் பலூன்களா? ஃபேஸ்புக்கின் தானியங்கி விமானங்களா? என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால், அதற்குள் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் இதைப் பற்றி அளித்திருக்கும் விளக்கத்தில், 'பலூன்கள் இதற்குச் சிறந்தது அல்ல' என்று கூறியுள்ளார். அவர் அளித்திருக்கும் உரையில் ஒரு வரி - "Be able to precisely control the location of these aircraft, unlike balloons". 

ஃபேஸ்புக் இதற்காக 'கனெக்டிவிட்டி லேப்' என்ற பிரத்யேக மையத்தை உருவாக்கியிருக்கிறது. இங்குதான் Ascenta நிறுவனத்தில் இருந்த ஊழியர்கள் வேலை செய்யப்போகிறார்கள். மேலும், இந்த ப்ராஜெட்டுக்காக போயிங், ஹனிவெல், ஹாரிஸ் கார்பொரேஷன், நாஸா ஜெட் ப்ரொபல்ஷன் ஆராய்ச்சி மையம் போன்ற பெரிய நிறுவனங்களில் வேலை செய்தவர்களை இங்கு அழைத்து வந்து பணியமர்த்தியுள்ளது ஃபேஸ்புக். இங்கு தானியங்கி விமானங்கள் மூலம் மட்டுமல்லாமல் சேட்டிலைட்டுகள், Free Space Optics மூலம் எப்படி இணையத்தை அளிப்பது என்ற ஆராய்ச்சிகளும் நடக்கும். 'Breitling Orbiter' என்ற உலகைச் சுற்றிவந்த பலூனை நினைவிருக்கிறதா? அதை உருவாக்கியவர்களும் இங்கு இருக்கிறார்களாம். 

தானியங்கி விமானங்களும், சட்டச்சிக்கல்களும்! 

எந்தக் காரணத்துக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், நாம் நினைப்பதுபோல் தானியங்கி விமானங்களை (Drones) ஒரு நாட்டின் வான்வெளியில் பறக்க விடுவது அவ்வளவு எளிதல்ல. ஃபேஸ்புக்கும், internet.org-ம் இதை உணர்ந்திருப்பதாலோ என்னவோ, இந்த திட்டங்களைப் பற்றி இதுவரை எங்கு பேசினாலும் 'Drone' என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தாமலே இருக்கிறது.

உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்? Facebook_Zephyr_74284a(1)
ஃபேஸ்புக்கின் Yael Maguire, சீஃப் ஆஃப் என்ஜினியரிங், ஃபேஸ்புக்கின் வீடியோவில் 'airplane' என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறார்.  Ascenta நிறுவனத்தின் Zephyr தானியங்கி விமானத்தை (Drone), மார்க் ஸக்கர்பெர்க் “the world’s longest flying solar-powered unmanned aircraft” என்று தான் அழைக்கிறார். internet.org கூட்டமைப்பு அதே  Zephyr தானியங்கி விமானத்தை "high-altitude long-endurance vehicles" என்று அழைக்கிறது. இது ஏன்? 

இதற்கான காரணம் 'Drone' என்றால் மக்கள் மனதில் இருக்கும் பிம்பம்தான். இதற்குமுன் நாம் செய்திகளில் 'Drone' என்ற வார்த்தையை கேட்டது எல்லாம் அமெரிக்க ராணுவம் தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்று ஈரானிலும், பாகிஸ்தானிலும் 'Drone'-களைப் பயன்படுத்தியபோதுதான். இதுவரை அமெரிக்க ராணுவம் பாகிஸ்தானிலும், ஏமனிலும், சோமாலியாவிலும் 2002ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை 461 'Drone' ஸ்ட்ரைக்குகளை (அட்டாக்) செய்திருக்கிறது. இவற்றில் சுமார் 3,520 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதில் 457 பேர் ஒரு பாவமும் செய்யாத பொதுமக்கள். 

இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளிடம் சென்று 'உங்கள் நாட்டுக்கு மேல் எங்களுடைய தானியங்கி விமானங்களைப் பறக்கவிட அனுமதி கொடுங்கள். உங்கள் மக்களுக்கு நாங்கள் மிகக்குறைந்த விலையில் இணையத்தை அளிக்கிறோம்.' என்று அனுமதி கேட்டால் ஏற்றுக்கொள்வார்களா? இந்தியாவில் இதுபோல் பறக்கவிட நீங்கள் அனுமதிப்பீர்களா? 

[அமேசான் நிறுவனம் தன்னிடம் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை ட்ரோன்கள் மூலம் வீட்டிற்கே வந்து டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது தனிக்கதை] 

'Drone' என்ற வார்த்தைக்கு மக்களிடம் இருக்கும் பிம்பத்தை மாற்றுவதுதான் ஃபேஸ்புக்கிற்குப் பெரிய தலைவலியாக இருக்கும். மேலும், ஏற்கனவே ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் மீது ஏகப்பட்ட ப்ரைவஸி குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. சமீபத்தில் அமெரிக்க அரசு  சிக்கிய 'PRISM' உளவுப்பிரச்னையில் ஃபேஸ்புக்கும், கூகுளும் சேர்ந்து சிக்கியது இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம். 

கேபிள், செல்ஃபோன் டவர் மூலம் கிடைக்கும் இணைய வசதியிலேயே ஃபேஸ்புக்கும், கூகுளும் ஏகப்பட்ட ப்ரைவஸி பிரச்னைகளில் சிக்கும்போது, அவர்களுடைய தானியங்கி விமானங்களையும், பலூன்களையும் நமக்குமேல் பறக்கவிட்டால் நம்மிடம் இருந்து எந்த மாதிரியான தகவல்களை, நாம் அவர்களுக்கு விலையாகக் கொடுக்கவேண்டி இருக்கும். ஜிமெயிலில் நம்முடைய மெயிலைப் படித்து அதற்கேற்ற விளம்பரங்களைக் காட்டுகிறது கூகுள். இவர்கள் உளவு பார்க்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

பிரச்னை என்னவென்றால், இந்தக் கட்டுரையை படிக்கக்கூட ஃபேஸ்புக் மற்றும் கூகுளின் உதவி தேவைப்படும். இதுதான் நிதர்சனம்! 

உண்மையில் நமக்கு 'கனெக்டிவிட்டி' அவ்வளவு தேவையா? 

உதவி: Nathaniel Mott - Pando.com, drones.pitchinteractive.com, internet.org

-ர. ராஜா ராமமூர்த்தி
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்? Empty Re: உளவு வில்லன்களா ஃபேஸ்புக் - கூகுள்?

Post by Tamil Wed Apr 16, 2014 8:03 am

அப்படியா ?
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum