TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் கலந்து கொண்ட அக்னிப் பரீட்சை.

Go down

அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் கலந்து கொண்ட அக்னிப் பரீட்சை. Empty அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் கலந்து கொண்ட அக்னிப் பரீட்சை.

Post by krishnaamma Tue Apr 08, 2014 6:40 am

[You must be registered and logged in to see this image.]
அண்ணன் சுப.உதயகுமார் அவர்கள் கலந்து கொண்ட அக்னிப் பரீட்சை.
புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கியதில் இருந்து, எத்தனையோ அக்னிப் பரீட்சை நிகழ்ச்சிகளை நான் பார்த்ததுண்டு. இன்னும் சொல்லப் போனால் இந்த நிகழ்ச்சியை தவறாமல் தொடர்ந்து பார்த்து வருபவன்.
சிறப்பு விருந்தினர் யாரென்று பார்த்து விட்டு, நாம் விரும்பாத சில கட்சிகளின் கோமாளிகள் என்றால் மட்டும்,இந்த நிகழ்ச்சியை தவிர்ப்பதுண்டு. உதாரண கோமாளிகளை சொல்ல வேண்டும் என்றால் காங்கிரஸ் மற்றும் ,அடிமைகள் திமுக கட்சி சார்பில் வரும் பெரும்பான்மையினர் கோமாளிகளே!
ஆனால் நேற்றைய அண்ணன் சுப.உதயகுமார் அவர்களின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியை, முழுமையாக பார்த்த பொழுது,மிகுந்த மகிழ்ச்சி ! என்ன ஒரு தெளிவான பதில்கள். எந்த கேள்விக்கும் அரசியல்வாதிகள் போல மழுப்பலான பதில்கள் எதுவும் இல்லை. எதார்த்தமாகவும், உள்ளது உள்ளபடியேயும் அண்ணனின் பதில்கள் மிகத் தெளிவாக இருந்தது. பெரும்பான்மையான அரசியல்வாதி களிடம் இது போன்ற தெளிவான, உண்மையான, எதார்த்தமான பதில்களை எதிர் பார்க்க இயலாது.
பொதுத் தளங்களில் பல பொய்களை அள்ளிவிடும், அல்லது வார்த்தை ஜாலங்களில் மக்களை ஏமாற்றும், எத்தனையோ அரசியல் தலைவர்களின் நேர்காணல்களை எல்லாம் பார்த்து இருக்கிறேன். அந்த வகையில் சொல்கிறேன். மிக மிக எதார்த்தமான மற்றும் தெளிவான, உண்மையான பதில்கள் தான் அண்ணன் சுப.உதயகுமார் அவர்களின் நேற்றைய பதில்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜென் ராம் அவர்கள் சொல்லும் போது கூட, இவ்வளவு தெளிவான சிந்தனையும், பதில்களும் பலரிடம் பார்க்க இயலுவதில்லை என்று வெளிப்படையாகவே சொன்னார். நிகழ்ச்சியின் இறுதியில் அவர் நன்றி சொன்ன விதமே அண்ணன் மீது அவர் கொண்டிருந்த மரியாதையை தெளிவாக சொல்லியது.
அணு சக்தி மற்றும் போராட்டம் சார்ந்த கேள்விகளாக இருக்கட்டும், கேஜ்ரிவால் மீதான போர்ட் பௌண்டேசனிடம் நிதி வாங்கிய குற்றச்சாட்டு ஆகட்டும், எல்லாவற்றுக்கும் எளிமையான அதே நேரத்தில் மிக உறுதியான பதில்கள்.
தமிழ்நாடு அரசின் மீதான கடுமையான சாடல்களை, தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் அயோக்கியத்தனங்களை, அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தந்த கட்சித் தலைமைகள், கூட்டணி என்ற பெயரில் எங்கெங்கோ போய் ஒட்டிக் கொண்டிருக்கும் நேர்மையற்ற, கொள்கையற்ற அரசியலையும் சாடத் தவறவில்லை. இவர்களோடு இணைந்து பணியாற்றுவது இயலாத காரியம் என்ற பதிலும் தெள்ளத் தெளிவு.
அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னீர்களே இப்போது களத்தில் நிற்கிறீர்களே என்ற கேள்விக்கு, அரசியலுக்கு வந்து நாடாளுமன்ற வேட்பாளராகி, பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து, டில்லியில் பங்களா வாங்க வேண்டும் என்ற எந்த ஆசையும் எனக்கு இல்லை. அரசியலுக்கு வரவேண்டும் என்பது போராட்டத்தில் பங்கெடுத்த எம் மக்கள் விருப்பமேயன்றி,நான் மனமுவந்து ஏற்றுக் கொண்ட விருப்பம் அல்ல என்று பொளீர் பொளீர் என்று பொட்டில் அறைந்தாற் போல பதில்கள்.
நான் பொதுவாக பல நண்பர்களிடம் சொல்வதுண்டு. நேற்று கூட மதிமுக நண்பர் ஒருவரிடம் பேசும் போது சொன்னேன். அண்ணன் உதயகுமார் அவர்களிடம் நீங்கள் ஒருமுறை நேரில் பேசிப் பாருங்கள். உங்கள் அரசியல் சார்ந்த கேள்விகள் அனைத்தையும் அவரிடம் கேளுங்கள். உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் நேர்மையான பதிலை அண்ணன் தருவார்கள் என்று.
ஆம் ஆத்மி கட்சி குறித்தும் ,அண்ணன் உதயகுமார் குறித்தும் பல்வேறு கேள்விகள் அவரிடம் இருந்து வந்தன.ஆம் ஆத்மியின் கட்சி கொள்கைகள்,தமிழர் நலன் சார்ந்த பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடு,அவர்களின் சித்தாந்தம் என்ன போன்ற பல நியாயமான கேள்விகளை முன் வைத்தார்.
அணு உலை குறித்து ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடு என்ன என்று சொல்லி இருக்கிறார்களா என்று கடந்த சில மாதங்களாகவே பல தரப்புகளில் இருந்து விமர்சனம் வந்தது. ஆனால் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில், அணு உலைக்கு எதிரான கட்சி என்று தெளிவாக சொல்லியாயிற்று. இதற்கு மேலும் என்ன விளக்கம் வேண்டும்? ஆம் ஆத்மியின் இந்த நிலைப்பாட்டுக்கு பின்னால்,
கட்டாயம் அண்ணன் உதயகுமார் அவர்கள் இருப்பார்கள் என்பதை உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
ஆனால் தனித் தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் பாரதிய ஜனதாவிடம், அப்படி ஒரு முடிவை எடுக்க சொல்லி,வைகோ அவர்களால் முடியுமா? அல்லது அணு உலைக்கு எதிரான கட்சி பாரதிய ஜனதா என்று அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்ல சொல்ல முடியுமா?
தேசச்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மின் திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு செவுட்டில் அறைந்தாற் போன்ற நச் பதில்கள். சூரிய,
மற்றும் காற்றாலை மின் திட்டங்கள் குறித்த பதில்கள் அருமை.
வளர்ச்சி வளர்ச்சி என்றால் எது வளர்ச்சி? மேற்கத்திய நாடுகளைப் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் நம் நாட்டுக்கு ஒவ்வாது! சீரான வளர்ச்சி வேண்டும்.இயற்கையை சிதைக்காத வளர்ச்சி வேண்டும். பொன் முட்டையிடும் வாத்தை, மொத்தமாக அறுத்துப் பார்க்கும் முட்டாள் தனங்களை செய்யக் கூடாது. இயற்கை என்பது பொன் முட்டையிடும் வாத்து போன்றது போன்ற உதாரணங்கள் அருமை.
அண்ணன் உதயகுமார் அவர்கள் கலந்து கொண்ட அக்னி பரிட்சை நிகழ்ச்சியை நேற்று பார்க்காதவர்கள், யூ டியூபில் காணக் கிடைக்கிறது. கட்டாயம் பாருங்கள்.
இணைப்பு இதோ:
[You must be registered and logged in to see this link.]
இப்படி ஒரு நல்ல மனிதரை, நியாயமான, நேர்மையான, உண்மையான மனிதரை அரசியல் களத்தில் வெற்றி பெற 
வைக்காவிட்டால் நாம் செய்யும் மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகி விடும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
எம் கன்னியாகுமரி தொகுதி மக்கள் அந்த வரலாற்றுப் பிழையை ஒருபோதும் செய்யமாட்டார்கள்!
அண்ணன் உதயகுமார் அவர்கள் அரசியலில் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது.இன்னும் தமிழ்நாட்டின் மிக உயர்ந்த அரசியல் பதவிகளில், அவர்கள் வருவதற்கு தேவையான அனைத்து திறமைகளும்,மிக முக்கியமாக, மக்கள் மீதுஉண்மையான கரிசனையும் அன்பும் அவர்களிடமும் இருக்கிறது என்பதை உறுதியாக சொல்வேன்.
காலம் அவர்களை உரிய இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு!
வாழ்த்துக்கள் அண்ணே!
அன்பின் ஆழத்தில் 
ஆன்டனி வளன்
07 ஏப்ரல் 2014

krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழீழமே தீர்வு – புதிய தலைமுறை தொலைக்காட்சியில், அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் பரமேஸ்வரன்!
» சட்டமன்ற விளையாட்டு போட்டியில் காமராசர் கலந்து கொண்ட புகைப்படம்
»  அவுஸ்திரெலியாத் தமிழர்கள் கலந்து கொண்ட மாவீரர் நாள் 2010 (காணொளி)
» மன்மோகன் சிங்கிற்கு வைத்த விருந்தில் கலந்து கொண்ட நரி. ஜெர்மனி அதிகாரிகள் திகைப்பு
» சத்தமில்லாமல் வந்து சல்மான் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட ஜூனியர் ராஜபக்சே

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum