TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு.

3 posters

Go down

அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு. Empty அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு.

Post by sakthy Tue Apr 08, 2014 12:16 am

அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு.

அந்தந்த நாட்டுச் சட்டங்களுக்கு அமைய குறிப்பாக ஆபாசம்,porno,ஓரினச்சேர்க்கை,மதம் போன்ற  இப்படியான சில காரணங்கள் காரணமாக Morocco, Tunisia, Libya, Sudan, Ethiopia, Syria, Jordan, Saudi Arabia, Yemen, Oman, UAE, Iran, Azerbaijan, Turkmenistan, Uzbekistan, Tajikistan, Pakistan, Bahrain, India, Myanmar, China, Thailand, Vietnam, North Korea and Singapore போன்ற 25 நாடுகளில் இணையத் தணிக்கை நடைமுறையில் உள்ளது. இந்தத் தணிக்கை சில குறிப்பிட்ட தளங்களுக்கும்,முக நூல் போன்றவற்றுக்கும் செயல்படுத்தப்படுகிறது.ஆனால் சீனா போன்ற சில நாடுகளில் இவற்றுக்கு மேலாக அங்கு நடந்துவரும் மனித உரிமை மீறல்கள், அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்படுகிறது.இது freedom of information இல் தலையிடுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் இப்படியான ஒரு தடையை முக்கியமாக புலம்பெயர் தமிழர்கள்,மற்றும் இன உணர்வாளர்கள் நடத்தும் இணையத் தளங்களை,சமீபத்தில் தடை செய்யப்பட்ட தமிழ் அமைப்புகளைப் போல்,தடை செய்யவும், கூடவே விரைவில் முக நூலையும் தடை செய்யவும், இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில்,அப்படி தடை செய்யப்படுமானால், அவற்றை எப்படி பார்ப்பது என்பதைப் பற்றி சிறிது பார்க்கலாம்.

The Great Firewall எனப்படும் இந்த தடை பலவிதமாக செயல்படுத்தப்பட முடியும்.இப்படி Internet filtering செய்ய, ISP களைக் கட்டுப்படுத்துவதன் மூலம், விசேட தனியான மென்பொருள் மூலம், Ad hoc bypass முறை மூலம் அல்லது அரசுக்கு எதிரான,ஈழம் பற்றிய செய்திகள் வரும் இணையப் பக்கங்களை, வலைப்பூக்களை மட்டும் தடை செய்வதன் மூலம், அங்குள்ளவர்கள் பார்க்க முடியாது செய்யலாம்.

இந்த ad hoc fashion என்பது குறிப்பிட்ட URL களை தடை செய்துவிடும்.இப்படி ஏற்படுமானால் URL ஐ சுருக்கி கொடுப்பதன் மூலம், உள் நுழைய முடியும்.இதற்கு  tinyurl.com உதவும். ஆனாலும் இப்படிக் கொடுக்கும் போது URL உடன் டொமைன் பெயரை வைத்து தடையை விரிவுபடுத்த முடியும். அப்படி வரக் கூடும் என்பதால் உலாவியின் URL bar இல் raw IP ஐக் கொடுத்து செல்ல முடியும்.CMD இல் ping command- ping எனக் கொடுக்கும் போது, local DNS server இல் domain IP address காட்டப்படும்.

இங்கேயும் சிக்கல் உண்டு. இதைத் தெரியாமலா இருப்பார்கள்? அதனால் இப்படி domain Url இல் இருந்து உள்ளே செல்ல முயற்சிக்கலாம் என்பதற்காக, பில்டர் செய்து  ping traffic என்பதை தடுத்து விடுவார்கள்.அப்படி அந்த தடை செய்யப்பட்ட URL ஐ ping மூலம் கண்டறிய முடியாது. இதற்கு free online domain IP address மூலம் ஒரு இலக்கத்தைக் பெற்றுக் கொள்ள முடியும்.

IP-Lookup போன்ற ஒன்றிற்குச் சென்று,http:// ஐப் போடாது,டொமைன் பெயரை மட்டும் போட்டால், IP இலக்கம் கிடைக்கும். இதையும் தடை செய்திருந்தால்.............,

Google Search இல் live pages ற்குப் பதிலாக web pages ன் cached versions  ஐக் கண்டறிந்து செல்லலாம்.Cached link (cached pages) களில்,இவை பிரதி பக்கம்(copy page) என்பதால், பொதுவாக தடைகள் செய்ய முடிவதில்லை.சில பக்கங்களுக்கு cookie காரணமாக Cached pages இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் cache: என்பதை முன்னால் போட்டு தேடினால்,cache page வரும்.(உதாரணமாக உலாவி search இல்,  cache:puthiyatamil.net எனப் போட்டு enter செய்தால்,சிந்தனைக்களத்தின் cache page வரும்)

இருப்பினும் ஒரு பொதுவான proxy மூலம் இப்படிச் செல்வது பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பது எனது கருத்தாகும்.ஏனென்றால் தடைக்காகப்  பாவிக்கப்படும் மென்பொருள்(web censorship software ) proxy ஊடான வலை இணைப்பையே கண்காணிக்கும். proxy ஊடான வலைப்பக்கத்தை அல்ல.அத்துடன் பொதுவான proxy இல் செல்லும் போது,proxy உடனான தொடர்பையே கண்காணிக்கும்,தடை செய்யப்பட்ட பக்கங்களை அல்ல.

Proxy இல் செல்வதற்கு IE இல், Internet Options -LAN Settings -Use a proxy server for your LAN என்பதையும், Bypass proxy for local addresses என்பதையும் அக்டிவ் செய்து கொள்ள வேண்டும். இதற்கு தனியான மென்பொருள் இருந்தாலும், இலங்கை போன்ற நாடுகளில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்படும் போது, இராணுவம் தற்செயலாக கணினியை சோதனையிட்டால்,மென்பொருள் இருப்பது தெரிந்து விடும்.பின்னர் பிரச்சனை எதுவும் வராதிருக்க,ஆதரங்கள் எதுவும் இல்லாமல் செய்ய வேண்டும்.

Firefox ஆக இருந்தால் Options -Advanced  -Network-Settings -Manual proxy configuration இல் input boxes enabled ஆகவும் proxy server இன் IP address - port கொடுக்க வேண்டும். No proxy for இல்  local networkஇன் network number (eg.192.168.1.0/24 )கொடுக்க வேண்டும். இந்த பொதுவானproxy முறை இணைய வேகத்தைக் குறைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அடுத்த வழி, Google Babel Fish. மூலம் தடை செய்யப்பட்ட பக்கத்தை அணுகுதல்,RSS முறை மூலம் அணுகுதல் ஆகும்.

இன்னொரு வழி, Web2Mail ற்கு தடைசெய்யப்பட்ட பக்கத்தைக் கொடுத்து, மின் அஞ்சல் செய்தால்,அந்தப் பக்கத்துடனான செய்தியுடன், நமக்கு அஞ்சல் ஒன்று வரும்.அதன் மூலம் படிக்கலாம்.
அடுத்தது, DNS filtering ஊடாக பார்ப்பதாகும்.இது தவிர e-mail gateways மூலமும் தடை செய்யப்பட்ட பக்கத்திற்குச் செல்ல முடியும்.

இதைவிட இன்னொரு முறை, portable OS ஐப் பயன்படுத்தி, CD/DVD இல் இயங்குதளத்தை வைத்து இணையம் சென்றால், தடை செய்யப்பட்ட பக்கத்தை  பார்ப்பது மட்டுமல்லாமல், எந்தவித தடையங்களும் இல்லாமல், ஒன்றும் தெரியாத பாப்பாவாக இருந்து விட்லாம். வந்தட்டில் எந்தத் தடையங்களும் பதிவுகளும் இருக்காது. அந்த CD/DVD ஐ எடுத்து விட்டால் யார் வந்தாலும்,உங்களைப் போல் கணினி தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் கூட, எதுவித ஆதாரங்களையும் கணினியில் இருந்து பெற முடியாது. விரும்பும் போது DVD ஐப் போட்டு இணையம் செல்லலாம். இந்த முறையை சிறந்த முறையாகவும்,பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

இப்படிப் பல முறைகளில் தடை செய்யப்பட்ட பக்கத்தைப் படிக்கலாம். உலகம் முழுவதினதும் ஆதரவின்றி ஒரு பக்கத்தை தடை செய்ய அரசு முடிவெடுத்தால், ஒரு சரியான central plan இருக்காது.அதனால் சீனாவில் தடை செய்யப்பட்ட பக்கங்களைக் கூட, நம்மால் ஏதொ ஒரு வழியில் படிக்க பார்க்க முடியும்.இது அவர்களுக்கும் தெரிந்தது தான்.

வெளி நாடுகளில் உள்ள ஒரு நண்பர், வேண்டிய செய்திகளை மின் அஞ்சல் மூலமும் அனுப்ப முடியும். மற்றவர்கள் படிக்க முடியாதபடி சைபர் மொழியில் அவற்றை அனுப்பிப் படிக்க வைக்கலாம். படித்ததும் அவை தானாக அழிந்துவிடச் செய்யவும் முடியும். இந்த முறையில், நாம் சாதாரணமாக இரகசியமான செய்திகள்,கடிதங்களை வேண்டியவர்களுக்கு அனுப்ப முடியும். யாரும் படிக்க முடியாது.

ஏற்கனவே குறிப்பிட்ட சில இணையத்தள செய்தி ஊடகங்களை இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் தடை செய்துள்ளது. இந்த நிலையில் மேலும் பல ஊடகங்களை உத்தியோகபூர்வமாக தடை விதிக்க திட்டமிட்டுள்ள நிலையில், அந்தத் தளங்களைப் பார்க்க படிக்க இப்படிப் பல வழிகள் உண்டு. இது அரசுக்கும் தெரிந்திருந்தாலும்,ஒரு பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமல்லாது.இந்த வழிமுறைகளை சாதாரண மக்கள் பயன்படுத்த மாட்டார்கள், படிப்பவர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்ற நப்பாசையும் தான்.
avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு. Empty Re: அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு.

Post by krishnaamma Tue Apr 08, 2014 6:21 am

நன்றி சக்தி சமிபத்தில் சவுக்கு தளம் முடக்கப்பட்டது ...அப்பொழுது proxy மூலம் தான் அந்த தளத்திற்கு செல்ல முடிந்தது
krishnaamma
krishnaamma
பண்பாளர்
பண்பாளர்

Posts : 955
Join date : 14/01/2014

Back to top Go down

அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு. Empty Re: அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு.

Post by KAPILS Tue Apr 08, 2014 8:27 am

நன்றி நண்பா தெரியாத செய்தி
KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு. Empty Re: அரசினால் தடைசெய்யப்பட்ட இணையப் பக்கங்களைப் பார்ப்பது எப்படி? முக்கியமாக ஈழத் தமிழர்களுக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரஷ்யாவின் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் முள்ளிவாய்க்காலுக்கு எப்படி வந்தது ?
» ஈழத் தமிழர்களுக்கு வரப்போகிறதா அடுத்த இடி?
» ஈழத் தமிழர்களுக்கு பா.ஜ.க. நண்பனா? - உணர்வாளர்களின் கருத்து!
» கூகிள் Map ல் வானிலை முன்னறிவிப்பு பார்ப்பது எப்படி?
» பிலிப்பைன்ஸ் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு: அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum