TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:29 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Fri Sep 27, 2024 10:02 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


பயங்கரவாதி கசாப்பிற்கு மரண தண்டனை கிடைக்குமா?

Go down

பயங்கரவாதி கசாப்பிற்கு மரண தண்டனை கிடைக்குமா? Empty பயங்கரவாதி கசாப்பிற்கு மரண தண்டனை கிடைக்குமா?

Post by அருள் Mon May 03, 2010 8:16 am

பயங்கரவாதி கசாப்பிற்கு மரண தண்டனை கிடைக்குமா? Tblfpnnews_27772158385







மும்பை
: மும்பைத் தாக்குதல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த
வழக்கின் குற்றவாளி அஜ்மல் கசாப் மற்றும் அவனுக்கு உதவிய இரண்டு இந்திய
சதிகாரர்களின் தலைவிதி என்ன என்பது, இன்று தெரியும். அவர்கள் குற்றவாளி என
தீர்ப்பில் கூறப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். இந்தத்
தீர்ப்பு முடிவு நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி, மும்பையில்
பயங்கரவாதிகள் 10 பேர் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில்,
வெளிநாட்டவர்கள் 25 பேர் உட்பட 166 பேர் பலியாயினர்; 304 பேர்
காயமடைந்தனர். அதே நேரத்தில், அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில்
பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி
மட்டும் கைதானான். இவன், பாகிஸ்தானின் பரித்கோட்டைச் சேர்ந்தவன்.
தாக்குதலுக்கு காரணமான லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பிற்கு,
தாக்குதல் நடத்த வேண்டிய இடங்களின் வரைபடத்தை தயாரித்து கொடுத்தது உட்பட
பல உதவிகளைச் செய்த இந்தியாவைச் சேர்ந்த பாஹீம் அன்சாரி மற்றும் சபாபுதீன்
அகமது என்ற இருவரும் கைதாகினர்.

இவர்கள் மூன்று பேருக்கும் எதிரான மும்பை
தாக்குதல் வழக்கு, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு
கோர்ட்டில் நடந்து வந்தது.658 பேர் சாட்சியம்: கடந்த ஆண்டு மே மாதம் 8ம்
தேதி துவங்கிய வழக்கு விசாரணை, மற்ற பயங்கரவாத வழக்குகளை விட வேகமாக
நடந்தது. இதில், 658 பேர் சாட்சியம் அளித்தனர். மொத்தம் 271 வேலை
நாட்களில் 3,192க்கும் மேற்பட்ட பக்கங்களில் சாட்சியங்கள் பதிவு
செய்யப்பட்டன. சிறப்பு கோர்ட் நீதிபதி தகிலியானி முன், சாட்சியம்
அளித்தவர்களில் 30 பேர், கசாப் தான் தங்களை சுட்டான் என கூறினர்.இந்த
வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் உஜ்வல் நிகாம், விசாரணையின் போது
பறிமுதல் செய்யப்பட்ட 1,015 பொருட்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
வழக்கிற்கு ஆதரவாக 1,691 ஆவணங்களையும் பதிவு செய்தார்.

'மும்பையில் லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாதிகள்
நடத்திய இந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் தொடர்பு உண்டு' என
குற்றம் சாட்டினார்.மேலும், இந்திய சட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத
வகையில், அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், இந்த
வழக்கில் சாட்சியம் அளித்தனர். தொழில்நுட்ப ரீதியான சில விஷயங்கள்
குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், சி.எஸ்.டி., ரயில் நிலையம், டைம்ஸ்
ஆப் இந்தியா கட்டடம், தாஜ், ஓபராய் ஓட்டல்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்
நடத்திய போது, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும்
சாட்சியங்களாக பதிவு செய்யப்பட்டன. இது தவிர, கசாப் தொடர்பான வேறு சில
படங்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், 'அந்தப் புகைப்படங்களில் இருப்பது
நானில்லை' என கசாப் கூறினான்.

மும்பை ஆர்தர் ரோடு சிறையில், விசேஷமாக
உருவாக்கப்பட்ட குண்டு துளைக்காத மற்றும் வெடிகுண்டால் சேதமடையாத அறையில்
அடைக்கப்பட்டிருந்த கசாப், ஒவ்வொரு நாளும் சிறை வளாகத்தில் உள்ள
கோர்ட்டிற்கு அழைத்து வரப்படும் போது, 10 முதல் 12 போலீசார் பாதுகாவலுடன்
அழைத்து வரப்பட்டான். ஆனால், வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்
போது, தான் கூறியவற்றை எல்லாம் மறுத்தான். தான் அப்பாவி என்றும், சிறுவன்
என்றும் கூறி வழக்கை திசை திருப்ப முற்பட்டான். கசாப்பிற்கு எதிராக
பிப்ரவரி 5ல், 11 ஆயிரம் பக்கம் குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டது.இந்த வழக்கில், கசாப்பிற்கு ஆதரவாக மூன்று வக்கீல்கள்
ஆஜராயினர். முதலில் அஞ்சலி வாக்மேரே என்பவர் ஆஜரானார். இறுதியாக
கே.பி.பவார் என்பவர் ஆஜரானார். 'தன் கட்சிக்காரர் அஜ்மல் கசாப் அப்பாவி
என்றும், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு சில நாட்களுக்கு முன்னரே,
சவுபாதி பகுதியில் இருந்து போலீசார் அவரை பிடித்துச் சென்றனர்' என்றும்
கூறினார்.பயங்கரவாத தாக்குதல் வழக்குகளில், மிக வேகமாக நடைபெற்ற இந்த
வழக்கின் விசாரணை மார்ச் 31ம் தேதி முடிவுக்கு வந்தது. இன்று தீர்ப்பு
வழங்கப்படுகிறது. நீதிபதி தகிலியானி, தீர்ப்பை வழங்குகிறார். நாடே
எதிர்பார்க்கும் பரபரப்பான வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும்
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை
விதிக்கப்படலாம்.

கசாப்பிற்கு ஆபரேஷன் :
மும்பை: மும்பை தாக்குதல் பயங்கரவாதி கசாப், வயிற்று உபாதையால்
அவதிப்பட்டு வருவதால், அவனுக்கு ஆபரேஷன் செய்யப்படலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக தீர்ப்பு வெளியான பின், ஆபரேஷன்
நடக்கும்.இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கசாப்பினால்,
ஒரே நேரத்தில் முழுமையாக சாப்பிட முடியவில்லை. அவ்வப்போது கொஞ்சம்
கொஞ்சமாக சாப்பிட்டு வருகிறான். குறைவாக சாப்பிட்டாலும், நிறைய வாந்தி
எடுக்கிறான். அதனால், கசாப்பிற்கு ஆபரேஷன் நடக்கலாம். இருந்தாலும்,
எப்போது நடைபெறும் என்பதை தெரிவிக்க முடியாது,'' என்றார்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum