TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பழங்களும் பயன்களும்

Go down

பழங்களும் பயன்களும் Empty பழங்களும் பயன்களும்

Post by அருள் Wed Apr 28, 2010 8:07 am

பழங்களும் பயன்களும் 180px-Feige-Schnittஇயற்கை
அன்னை தமது குழந்தைகளுக்காகப் படைத்தளித்துள்ள பல்வேறு பழங்களுடைய
நற்குணங்களைப் பற்றியும் இந்தப் பகுதியில் நாம் பார்த்தோம். அதன்
தொடர்ச்சியாக இன்னும் சிற்சில பழங்களின் மகிமைகளை இப்பொழுது
தெரிந்துகொள்ளலாமா?

அதிசயப் பலன்கள் தரும் அத்திப்பழம்:

அத்திப்பழம் உயர்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வல்லது. இதில் உள்ள தாதுப்பொருளான
பொட்டாசியமே அதற்குக் காரணம். இன்று உலகில் அதிக மக்கள் ஆர்வமாக உண்ணும்
பதப்படுத்தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவுகள், துரித உணவுகள்
இவற்றில் அடங்கியுள்ள சோடியமானது உயர் இரத்த அழுத்தத்தைத்
தூண்டக்கூடியது. பொதுவாக அனைத்துப் பழங்களிலும் சோடியத்தை விடப்
பொட்டாசியம் அதிகம் காணப்படும். குறிப்பாக அத்திப்பழத்தில் பொட்டாசியம்
நிறைய உள்ளது. எனவே தினமும் அத்திப்பழத்தை உணவில் சேர்த்துக்கொள்வது
சாலச்
சிறந்தது.

உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கவேண்டும்
என்று நினைப்பவர்களுக்கும் அத்தி ஒரு வரப்பிரசாதமே! இது நார்ச்சத்து
நிரம்பிய பழம். எனவே, இது உடல் எடை அதிகரிப்பைத் தடுக்கவல்லது.

அதிக
அளவு கால்சியமும், இரும்புச்சத்தும், மாங்கனீசும்கூட இந்தப்பழத்தில்
காணப்படுகின்றன. இரும்புச்சத்து, இரத்த சோகை நோயைத் தடுக்கக்கூடியது.
வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்வைக் கட்டுப்படுத்த வல்லது
கால்சியம். இப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய
கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க
இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.

மேலும், மாதவிலக்கு
நின்றுபோன பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் அத்திப்பழத்தைத்
தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு ஏற்படுவதில்லை என ஆய்வுகள்
தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள்
புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது. நீரில்
கரையக்கூடிய மற்றும் கரையாது நார்ப்பொருள் அத்தியில் மிகுந்துள்ளதால் இது
மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு
வந்தால் நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம்.

இத்தனை பலன்களைக்
கொடுக்கும் அத்திப்பழம், சற்று விலை அதிகமானதுதான். அதனால் என்ன? தினமும்
இரண்டு உலர் அத்திப்பழங்கள் சாப்பிடுவது, ஒரு மாதுளம்பழத்தைச்
சாப்பிடுவதற்கு ஒப்பானதாயிற்றே!

கொய்யாவில் இத்தனை பயன்களா?

ஆசியநாடுகளில்,
குறிப்பாக இந்தியாவில் அதிகம் விளையும் பழம் கொய்யா. இளமஞ்சள் அல்லது
பச்சையான தோல்பகுதியையும், சிவப்பு அல்லது வெள்ளை நிற சதைப்பகுதியையும்
உடையது இது. மலிவான பழமான இதனைப் பலரும் அலட்சியம் செய்வதுண்டு. ஆனால்,
இதைப் படித்தவுடன் கொய்யா மீதான உங்கள் மதிப்பு சரசரவென உயரும்.

கொய்யாப்பழம்
அதிக நார்ச்சத்து உடைய பழம். இது உங்கள் சீரண சக்தியை அதிகரிக்கிறது.
உடலில் உள்ள நீர்ச்சத்தைத் தக்க வைக்கிறது. அதே சமயம், மலச்சிக்கல்
ஏற்படாமல் காப்பாற்றுகிறது. உங்கள் சீரண உறுப்புகள் சரியாக வேலை செய்தாலே
உடலில் பல நோய்கள் அண்டாதல்லவா? அதற்குக் கொய்யா மிகவும் உதவி செய்கிறது.

முற்றாத
கொய்யாக்காய் அல்லது கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வடிநீர்
(Decoction) இருமல் மற்றும் சளியைக் கட்டுப்படுத்தக்கூடியது. கொய்யா,
'விட்டமின் சி' மற்றும் இரும்புச்சத்து நிரம்பியது. இவை இரண்டுமே, சளி
மற்றும் விஷக்காய்ச்சலை எதிர்க்கக் கூடியவை.

கொய்யாவில்
காணப்படும் ஆஸ்ட்ரின்ஜென்ட்கள் (ஒருவிதக் கூட்டு வேதிப்பொருள்) தளர்ந்த
தசைகளை இறுக்கக்கூடியது. எனவே வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியினைக்
கட்டுக்குள் வைக்கவல்லது. மேலும் இந்த வேதிப்பொருள் நோய்த்தொற்றுகளை
நீக்கவும் பயன்படுகிறது. கொய்யாவில் உள்ள இரும்புச்சத்து, விட்டமின் சி,
கரோடினாய்டுகள் இவை அனைத்துமே சீரண உறுப்புகள் சரிவரப் பணி செய்யவும்,
இவற்றில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் நீங்கவும் உதவுகின்றன.

கொய்யாவில்
உள்ள ஆஸ்ட்ரின்ஜென்ட்கள் (ஒருவிதக் கூட்டு வேதிப்பொருள்), அழகு
சாதனப்பொருட்களிலும் பயன்படுத்தப் படுகின்றன. தசைகளை இறுக்க இந்த
வேதிப்பொருள் உதவுவதால், உடல் அழகு பெறுகிறது. முகத்தில் உள்ள
சுருக்கங்கள் நீங்குகின்றன. இதற்குக் கொய்யாவை அதிக அளவு உணவில்
சேர்த்துக் கொள்ளலாம். கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப் பட்ட
வடிநீரைக்கொண்டு முகம் கழுவி வந்தாலும், முகத்தசைகளில் தளர்வு நீங்கி
இறுகுவதை உணர முடியும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும்
கொய்யாவால் முடியும். அது மட்டுமல்ல. இரத்தத்தின் அடர்த்தி
அதிகமாகாமலும், இரத்த ஓட்டம் சீராக இருக்குமாறும் கொய்யா செயல்புரிகிறது.

உடல்
எடை அதிகமாக இருப்பவர்கள் எடைக்குறைப்பு செய்யவும், ஒல்லியாக இருப்பவர்கள்
எடையை அதிகரிக்கவும் கொய்யா உதவும் என்றால் அதிசமல்லவா? அதிக நார்ச்சத்து
எடைக்குறைப்பில் உதவுகின்றது. இதில் அடங்கியுள்ள பலவிதமான சத்துக்களோ,
எடை குறைவாக உள்ளவர்களுக்கு எடை கூடவும் உதவுகிறது.

விட்டமின் சி
ஏராளமாகக் காணப்படுவதால், இக்கனியானது 'ஸ்கர்வி' நோயைத் தீர்க்கும்
அருமருந்தாக விளங்குகிறது. இவை தவிர புற்றுநோய், பல்வலி இவற்றிற்கும்
மருந்தாகச் செயல்படக்கூடியது கொய்யா.

துரியன் பழம்: தென்கிழக்கு
ஆசியாவில் மிகுந்த அளவில் விளையும் பழம் துரியன் பழம். மூக்கினைத்
துளைக்கும் ஒரு விதமான மணம் (துர்நாற்றம்???) உடையது இப்பழம் என்பதால் இதை
முகர்ந்து பார்ப்பவர்கள் முதலில் முகம் சுளிக்கலாம். ஆனால், இதை
உண்பவர்கள் இதற்கு அடிமையாவார்கள். இப்பழத்தை உண்பதால் உண்டாகும் பயன்களோ
ஏராளம், ஏராளம்.

துரியன்பழத்தில் அதிக அளவு விட்டமின் பி, சி
மற்றும் இ அடங்கியுள்ளது. இப்பழத்தை உண்பவர்கள் தமது உடல்
நலக்குறைபாடுகளில் இருந்து உடனடியாக விடுபடுவது உறுதி. இதன் இலைகளையும்,
வேர்களையும் பயன்படுத்தி காய்ச்சலுக்கும் மஞ்சள் காமாலைக்கும் மருந்துகள்
தயாரிக்கப்படுகின்றன.

இப்பழம் இரத்தத்தைச் சுத்திகரிக்க வல்லது.
இதில் உள்ள மென்புரதச்சத்தானது, தசைகளை வலுப்படுத்தக் கூடியது. துரியன்
பழத்தில் உள்ள 'டிரைப்டோபான்' என்ற அமினோ அமிலம் பதட்டம், மன அழுத்தம்,
தூக்கமின்மை இவற்றைக்குறைக்கவும், மகிழ்ச்சியைத் தூண்டக்கூடிய
'செரோடினின்' என்ற மூளையில் உள்ள ஹார்மோனைத் தூண்டவும் பயன்படுகிறது.
இப்பழம் உடலில் உள்ள கொழுப்புச் சத்தினை மட்டுப்படுத்துகிறது.

துரியன்
பழத்தையும் இலைகளையும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் வடிநீர்
வீக்கங்களையும், சரும வியாதிகளையும் கட்டுப்படுத்தக் கூடியது.

மேலும் சில பழங்களைப்பற்றிய விவரங்களுடன் மீண்டும் சந்திப்போம். thanks:http://eelanation.com
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum