TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு

Go down

காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு Empty காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு

Post by Tamil Mon Dec 16, 2013 8:19 am

சென்னை, டிச.15-
காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை: கருணாநிதி திட்டவட்ட அறிவிப்பு 83996b07-ec0a-4db1-aa79-7266ba5b6d88_S_secvpf
பாராளுமன்றத்துக்கு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரையும் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் துணை பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இந்த பொதுக்குழு கூடி உள்ளது. தி.மு.க. பொதுக்குழுவில் என்ன முடிவு செய்யப்படுகிறது என்பதை இந்த நாடே எதிர்பார்க்கிறது. கட்சியில் எந்த நிலைப்பாட்டை எடுத்தாலும் அதற்கு முன்பாக பொதுக்குழுவில் கருத்து கேட்பது வழக்கம். உங்கள் கருத்தை அறிய இக்கூட்டம் கூட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து பொதுக் குழுவில் பேசிய பெரும்பாலானவர்கள், பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறினார்கள்.

பின்னர் பொதுக்குழுவின் இறுதியில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தோழமை கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்திடவும், தொகுதி பங்கீடு பற்றி கலந்து பேசிடவும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தை குழு ஒன்றை தி.மு.க. சார்பில் அமைத்து அறிவித்திடவும், கூட்டணியை உருவாக்கிடவும் தலைவர் கருணாநிதிக்கும், பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் இப்பொதுக்குழு முழு அதிகாரம் வழங்குகிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.

நிறைவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காலையில் இருந்தே உங்களுடைய கருத்துகளை கேட்டு வருகிறேன். கருத்துகளை கேட்டு முடிவு செய்யும் இயக்கம் நமது இயக்கம். சமீபகாலமாக பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து நரேந்திர மோடி குறித்து பேசுகிறீர்கள். ஆனால் எனக்கோ, பேராசிரியருக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த சலனம் ஏற்படவில்லை.

பாரதீய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம். ஆனால் அப்போது இருந்த பாரதீய ஜனதா வேறு. இப்போதுள்ள பாரதீய ஜனதா வேறு.

கூட்டணி குறித்து பேசும்போது அந்த கட்சியின் தலைமை யார்? என்பதை பார்க்க வேண்டும். அதிலிருந்து வித்தியாசங்களை உணர முடியும். பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியே இல்லை என்று சொல்லவில்லை. குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒரு போதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள், இவர் களை பலிகடாவாக ஆக்கிவிட்டு தப்பி விட்டார்கள். இந்த வழக்கு இன்னும் நடக்கிறது. சி.பி.ஐ. யாருடைய நிர்வாகத்தில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியும். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் தி.மு.க.வை சிக்க வைத்து விட்டார்கள். கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள்.

நீங்கள் (தொண்டர்கள்) இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும். தனித்து நின்று தேர்தலை சந்திக்கும் தைரியம் நமக்கு உண்டு. கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். கடைசி வரை ஒற்றுமையாக இருந்து கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

முன்னதாக பொதுக் குழு கூட்டத்தில் பேசிய சிலர், பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகள் இடம் பெறாத ஒரு அணியை அமைத்து மக்கள் மன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தென்சென்னை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் பேசுகையில்; "வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எக்காரணத்தை கொண்டும் நாம் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கக்கூடாது. அதற்காக பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் தப்பில்லை. அதே நேரத்தில் பாரதீய ஜனதா மந்திரி சபையில் நாம் இடம் பெறக்கூடாது. மந்திரிசபையில் இடம் பெற்றால் மட்டும் நமக்கு என்ன நன்மை விளைந்து விட போகிறது. வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம்" என்றார்.

மேலும் சிலர், "பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும், சேராவிட்டாலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி நமக்கு வேண்டாம். அ.தி.மு.க.வை விட நமக்கு வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தலில் நம்முடைய கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதே இதற்கு சாட்சி. ஆகவே ஒரு புது அணியை நாம் அமைக்க வேண்டும், தேவைப்பட்டால் தனித்து கூட நாம் களம் காணலாம்" என்றனர்.

பெரும்பாலானோர் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெறலாம் என்று கருத்து தெரிவித்தனர். வாஜ்பாய் அரசில் இடம் பெற்று இருந்ததையும் அவர்கள் சுட்டிக்காட்டி பேசினர். இன்னும் சிலர் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை கொண்டு வரலாம் என்று தெரிவித்தனர். கடந்த காலங்களில் நாம் அமைந்த அணி தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் (கருணாநிதி) நீங்கள் இருந்து இருக்கிறீர்கள். ஆகவே அதனை கருத்தில் கொண்டு நம் கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.

பொதுக்குழு கூட்டத்தில், மறைந்த தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஏற்காடு இடைத்தேர்தலின் போது மரணமடைந்த மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜமுருகன், பேராசிரியர் அன்பழகனின் துணைவியார் சாந்தகுமாரி, வீரபாண்டி ஆறுமுகம், முன்னாள் எம்.பி. செ.குப்புசாமி, சமயநல்லூர் செல்வராஜ் உள்பட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இரங்கல் தீர்மானம் வாசித்து முடித்ததும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணை பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, எஸ்.பி.சற்குணபாண்டியன், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கவிஞர் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதிமாறன், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, மகளிர் அணி புரவலர் இந்திரகுமாரி, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், குஷ்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் மற்றும் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,026 பேர் பங்கேற்றனர்.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரசுடன் கூட்டணி தொடரும்—கருணாநிதி
»  கனிமொழியை ஆதரித்திருந்தாலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லையாம் - கருணாநிதி சொல்கிறார்!
» போட்டியில் இல்லை: கலாம் திட்டவட்ட அறிவிப்பு
» எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது: வைகோ திட்டவட்ட அறிவிப்பு.There is no time alliance with the Congress party: Vaiko specific declaration.
» அதிமுகவுடன் இனி கூட்டணி இல்லை: விஜயகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum