TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:22 pm

» Simon Daniel
by வாகரைமைந்தன் Yesterday at 10:02 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Sep 25, 2024 12:46 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Sep 23, 2024 4:19 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun Sep 22, 2024 7:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am


ஈரோட்டில் நடந்த சமையல்காரர் கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி–ஆட்டோ டிரைவர் கைது பரபரப்பு தகவல்

Go down

ஈரோட்டில் நடந்த சமையல்காரர் கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி–ஆட்டோ டிரைவர் கைது பரபரப்பு தகவல் Empty ஈரோட்டில் நடந்த சமையல்காரர் கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி–ஆட்டோ டிரைவர் கைது பரபரப்பு தகவல்

Post by mmani Wed Nov 27, 2013 1:21 pm

ஈரோட்டில் நடந்த சமையல்காரர் கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி–ஆட்டோ டிரைவர் கைது பரபரப்பு தகவல் Erd_261102

ஈரோடு,
ஈரோட்டில் நடந்த சமையல்காரர் கொலை வழக்கில் கட்டிட தொழிலாளி மற்றும் ஆட்டோ டிரைவரை போலீசார் கைதுசெய்தனர்.
தலையில் கல்லைப்போட்டு கொலை
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் உள்ள பிரகாசம் வீதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை முன்பு கடந்த 24–ந் தேதி சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர் யார்? என்ற விவரம் முதலில் தெரியவில்லை.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ஈரோடு மாநகர் பகுதியில் சுமார் 100 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
ரோந்து
இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்–இன்ஸ்பெக்டர்கள் பக்ருதீன், தங்கவேல், சுந்தரம் மற்றும் போலீசார் கிருஷ்ணா தியேட்டர் அருகில் ரோந்து சுற்றி வரும்போது அங்கு சந்தேப்படும்படி நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள் ஈரோடு மரப்பாலம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த கேபிள் பாலு என்ற பாலமுருகன்(வயது 37). கட்டிட தொழிலாளி. ஈரோடு முகைதீன் வீதியை சேர்ந்த அலாவுதீன் (31). ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் சேர்ந்துதான் சமையல்காரரை கொலை செய்ததும் தெரியவந்தது.
போதை நட்பு
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:–
ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா அருகில் பிரகாசம் வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு கேபிள் பாலு என்பவர் சம்பவத்தன்று சென்று உள்ளார். பின்னர் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாருக்கு சென்றார். அங்குள்ள ஒரு இருக்கையில் கேபிள் பாலு மது குடிக்க இருந்தார்.
அப்போது அதே இருக்கையில் ஏற்கனவே ஒருவர் அந்த பாரில் மது குடித்துக்கொண்டிருந்தார். 2 பேரும் போதையில் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். இதையடுத்து 2 பேரும் மது குடிக்க தொடங்கினார்கள்.
குடும்பத்தில் பிரச்சினை
அப்போது மதுபோதையில் இருந்த சமையல்காரர் தன்னுடைய குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை கேபிள் பாலுவிடம் கூறி உள்ளார். மேலும் தன் குடும்ப பிரச்சினை தீர ஒரு நல்ல வக்கீல் தனக்கு தேவை என்றும் கேபிள் பாலுவிடம் கூறி உள்ளார். உடனே கேபிள் பாலு தனக்கு தெரிந்த நல்ல வக்கீல் உள்ளார் என்றும் அவரிடம் நான் உங்களை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி உள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு வக்கீலை சந்திப்பதற்காக சமையல்காரரை கேபிள் பாலு அழைத்து சென்றார். ஆனால் அவர்கள் போதையில் இருந்ததால் அந்த வக்கீல் அவர்களை சந்திக்க அனுமதி மறுத்ததுடன் அவருடைய அலுவலகத்தில் இருந்து வெளியேறி செல்லும்படி கூறி உள்ளார். உடனே 2 பேரும் வக்கீல் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.
வாய்த்தகராறு
அலுவலகத்தில் இருந்து வெளியேறும்போது 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றியதில் தகாத வார்த்தையால் கேபிள் பாலுவை சமையல்காரர் திட்டி உள்ளார். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தனித்தனியாக சென்று விட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு கேபிள் பாலு மற்றும் அலாவுதீன் ஆகிய 2 பேரும் மீண்டும் பிரகாசம் வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கினார்கள்.
தலையில் கல்லை போட்டனர்
இதற்குள் இரவு 10 மணி ஆகிவிட்டதால், பார் மூடப்பட்டுவிட்டது. எனவே அவர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடைக்கு எதிர்புறம் உள்ள பகுதியில் இருந்து மது குடித்தனர். அப்போது அவர்கள் மதுக்குடித்து கொண்டு இருந்த பகுதியிலேயே மதுபோதையில் சமையல்காரரும் படுத்து இருந்தார்.
இதனை கவனித்த கேபிள் பாலு தன்னை தகாத வார்த்தையால் கூறியவர் இவர்தான் என்று அலாவுதீனிடம் கூறினார். பின்னர் மதுபோதையில் இருந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து, அங்கு கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து, சமையல்காரரின் தலையில் போட்டனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார். பின்னர் 2 பேரும் ஒன்றும் நடக்காதபோல் அங்கிருந்து சென்றனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
2 பேர் கைது
இதையடுத்து போலீசார் கேபிள் பாலு, அலாவுதீன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த கொலையில் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் கொலையானவர் யார் என்ற விவரம் இன்னும் போலீசாருக்கு தெரியவில்லை.
இதற்கிடையே கொலை செய்யப்பட்டவர் திருச்சியை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் திருச்சிக்கு விரைந்து உள்ளனர். போதையில் அறிமுகம் ஆன ஒரு நாள் நட்பு போதையிலேயே முடிந்த சம்பவம் ஈரோட்டில் பெரும்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலியை பார்க்க சென்ற ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் அடித்துக் கொலை
» ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு துறையால் ஐந்து அல்-உம்மா தீவிரவாதிகள் கைது
» ரூ.1.9 கோடியை திருப்பி கொடுத்த ஆட்டோ டிரைவர்
» கர்நாடக இசைக் கச்சேரியில் கலக்கிய ஆட்டோ டிரைவர்
» அதிமுக மேயர் வேட்பாளர் பற்றி ஈரோட்டில் பரபரப்பு போஸ்டர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum