TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஒரு சின்னக் கேள்வி!ஆன்மீக கட்டுரை

Go down

ஒரு சின்னக் கேள்வி!ஆன்மீக கட்டுரை  Empty ஒரு சின்னக் கேள்வி!ஆன்மீக கட்டுரை

Post by அருள் Sat Nov 23, 2013 9:53 pm

ஒரு சின்னக் கேள்வி!
ஒரு சின்னக் கேள்வி!ஆன்மீக கட்டுரை  1453266_560903373982609_867031580_n
இந்தப் பதிவை நீங்கள் தமிழில் படித்துக் கொண்டிருக்கிறீர்களாயின், நீங்கள் கிறிஸ்தவர் அல்லது இஸ்லாமியர் அல்லாதவர் ஆயின், நீங்கள் சைவம் அல்லது வைணவம் அல்லது சுமார்த்தம் எனும் மூன்று இந்து சமயப் பிரிவுகளில் ஒன்றில் அடங்குகிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

அப்படி சைவம் என்றால், தத்துவ ரீதியில் “சித்தாந்தம்” அல்லது “வீரசைவம்” எனும் இரண்டில் ஒரு பிரிவில் அடங்குவீர்கள் என்றோ, வைணவம் என்றால் “விசிட்டாத்வைதம்” அல்லது “துவைதம்” அல்லது “அசிந்திய பேதாபேதம்” எனும் மூன்றில் ஒரு பிரிவில் அடங்குவீர்கள் என்றோ உங்களுக்குத் தெரியுமா?

சமயம் என்பது சமயத்தின் பேரில் திருட்டுத்தனமாக உழைக்கும் வெறும் சாமியார்களும் சமய நிறுவனங்களும் அல்ல! தானே கடவுள் என்று கூறி மக்களை ஏமாற்றுபவர்கள் அல்ல! இந்தக் குப்பைகளையெல்லாம் தாண்டி எத்தனை மேலான தத்துவங்களை போதிக்கிறது என்று நாம் யாராவது அறிந்து வைத்திருக்கிறோமா?

நமது தத்துவம் என்ன? சமயம் உண்மையில் என்ன சொல்கிறது? மதம்பிடித்து ஆடச் சொல்கிறதா? அல்லது, நூலறிவை நூலோடு வைத்துக் கொள்ளாமல் வாழ்க்கையிலும் கடைப்பிடி என்று சொல்கிறதா? புராண – இதிகாசங்கள் வெறும் கதைகள் தான், கதைகளிலிருந்தான நீதிகளே நமக்குத் தேவை என்பதை நாம் அறிவோமா?

நன்மையோ தீமையோ எல்லாம் அவன் தருவது தான்… கடவுள் என்று ஒருவன் இருந்தால், அவன் நன்மை மட்டுமே தரவேண்டும், துன்பத்தைத் தருபவனோ, துன்பத்தைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பவனோ கடவுள் இல்லை என்று கூறுவது வடிகட்டிய முட்டாள்த் தனம் என்று “பகுத்தறிந்தாவது” நாம் உணர்ந்துகொள்கிறோமா?

நேற்று வெட்டியாக முகநூலில் உலாவிக்கொண்டிருந்தபோது, ஒரு சமய விவாதத்தைக் காண நேர்ந்தது. இருபா இருபஃது, போற்றிப் பஃறொடை, சிவ தருமோத்தரம் என்று அந்த சைவ இறையேற்பர் (ஆத்திகர்) தன் சமயக் கருத்துக்களை அடுக்க, “என்ன உளறுகிறீர்கள்? என்ன இதெல்லாம்?” என்று அப்பாவித்தனமாக கேட்டார் அந்த இறைமறுப்பர் (நாத்திகர்). அவை சைவ சமய நூல்கள் என்று, கடவுளை மறுக்கும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, வேண்டாம்; கடவுளை நம்பும் நமக்காவது தெரியுமா?

சமயம் பற்றி சிறிதும் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருப்பதைத் தான், அடிக்கடி முகநூலில் காணக்கிடைக்கும் சமய விவாதங்கள் உணர்த்துகின்றன.

நடிகர் மீதான தனிப்பட்ட அபிமானத்தில் திரைப்படமே பார்க்காமல், இணையத்தில் விமர்சனம் எழுதுபவர்களுக்கும், வாழ்க்கையில் கண்ட துன்பங்களால் பாதிப்புற்று, சமயம் பற்றி சிறிதுகூட அறியாமல், கடவுளே இல்லை என்று வாதிடுவோருக்கும் எந்த வித்தியாசத்தையும் காண முடியவில்லை.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. சமயம், சமய நூல்கள் பற்றி எதுவுமே அறியாமல், யாரோ நாலுபேர் சொல்வதை நம்பித் தான் அவர்களது வாதங்கள் அமைகின்றன. குறைந்தபட்சம் அப்படி தாம் கண்டது, கேட்டது உண்மைதானா என்றுகூட அவர்கள் சோதித்துப் பார்ப்பதில்லை, பாவம்!

சமயமே ஒரு சாக்கடை….இதையெல்லாம் தெரிந்துவைத்திருப்பதால் எனக்கென்ன லாபம் என்று உங்களில் பலர் கேட்கலாம். நல்லது…

சமயம் என்பது வாழ்க்கைநெறி.. தமிழரைப் பொறுத்தவரை, நம் பண்பாட்டை, நாகரிகத்தை சமயத்திலிருந்து பிரித்தெடுத்தால் வெறும் பூச்சியம் தான் மிஞ்சும்.

அரைகுறைப் புரிதலுள்ளவர்கள் தான் சமயத்தை வெறும் அடையாளமாகப் பார்த்து, தன் சமயம் உயர்ந்தது என்று போர்க்கொடி தூக்குவார்கள். அதை வாழ்விலக்கணமாகப் பார்க்கும் யாருமே, அடுத்தவனை வற்புறுத்துவதோ, அடுத்தவன் பாதையில் தலையிடுவதோ இன்றி, தன்பாட்டில் அதன்வழி ஒழுக முற்படுவார்கள்.

சமயம் – மனிதனை மனிதனாக சமைப்பது!
நெறி – தவறுகளிலிருந்து திருத்தி மனிதனை நெறிப்படுத்துவது!

அவ்வளவுதான் சமயம்! புரிவதும், புரியாதும் அவரவர் விருப்பம். தூங்குபவர்களை எழுப்பலாம்… தூங்குவது போல் நடிப்பவர்களை?! 
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum