TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Yesterday at 10:47 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 11, 2024 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

4 posters

Go down

சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு Empty சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

Post by ஜனனி Thu Apr 22, 2010 7:18 am

சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு Tblfpnnews_82616823912










சென்னை
: ஐ.பி.எல்., சார்பில் நடத்தப்படும், 'டுவென்டி-20' கிரிக்கெட்
போட்டிகளில் பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சையை நாடு முழுவதும்
நடந்த சோதனையின் ஒரு பகுதியாக,சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியின் பங்குதார்
சீனிவாசன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை
நடத்தினர். இதேபோல் அனைத்து அணிகளின் அலுவலகங்களிலும் வருமான
வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்
ஒரு பிரிவான ஐ.பி.எல்., சார்பில், 'டுவென்டி-20' கிரிக்கெட் போட்டிகள்
நடத்தப்பட்டு வருகின்றன. ஐ.பி.எல்., அணிகள் ஏலம் எடுக்கப்பட்டதில்
பெருமளவு முறைகேடு நடந்துள்ளதாகவும், பினாமி பெயர்களில் பல முக்கிய
வி.ஐ.பி.,க் களுக்கு அணிகளில் பங்குள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஐ.பி.எல்., போட்டிகளில் பெருமளவு வருவாய் ஈட்டிய அணிகள் கூட, நஷ்டம்
ஏற்பட்டுள்ளதாக பொய் கணக்கு காட்டியதாகவும் புகார் எழுந்தது. மேலும்,
ஐ.பி.எல்., சார்பில் விளையாடும் அணிகளுக்காக, வெளிநாடுகளில் இருந்து
பெருமளவு பணம், சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும்
தகவல் வெளியானது.

இதையடுத்து, ஐ.பி.எல்.,லில் அங்கம் வகிக்கும்
எட்டு அணிகள் மற்றும் புதிதாக சேர்ந்துள்ள இரண்டு அணிகளின்
உரிமையாளர்களின் பெயர்கள், இந்த அணிகளில் பங்கு உள்ள நபர்களின் விவரங்கள்,
இதுவரை இந்த அணிகள் ஈட்டியுள்ள வருவாய் தொடர்பான அனைத்து விவரங்களையும்
தெரிவிக்கும்படி, ஐ.பி.எல்., நிர்வாகத்துக்கு, வருமானவரித் துறை நோட்டீஸ்
அனுப்பியது.இது தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் லெவன் அலுவலகம், ஐ.பி.எல்.,
தலைவர் லலித் மோடியின் மும்பை அலுவலகத்தில் ஏற்கனவே, வருமானவரித் துறை
அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தொழிலதிபரிடம் ரெய்டு:
நாடு முழுவதும் நடந்த சோதனையின் ஒரு பகுதியாக, சென்னையில் நேற்று மாலை
3.30 மணியளவில், 'சென்னை சூப்பர் கிங்ஸ்' அணியின் பங்குதாரரும், பிரபல
தொழிலதிபரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பி.சி.சி.ஐ.,) செயலருமான
சீனிவாசன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை
நடத்தினர்.ஐ.பி.எல்., போட்டிகளில், சென்னையை மையமாகக் கொண்டு, 'சென்னை
சூப்பர் கிங்ஸ்' அணி விளையாடி வருகிறது. அணிகளுக்கான ஏலத்தில், இந்த அணி
400 கோடி ரூபாய் மதிப்பில், அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
தற்போது அணிகளுக்கான ஏல சர்ச்சை நடந்து வருவதால் வருமானவரித் துறையினர்
இச்சோதனையை நடத்தியுள்ளனர்.வருமானவரித் துறையின் புலனாய்வு பிரிவு துணை
இயக்குனர்கள் ஸ்ரீதர், ராமகிருஷ்ண பண்டி, சுப்பாராவ் மற்றும் சரவணன்
தலைமையில், 27 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். நள்ளிரவு வரை
நீடித்த இந்த சோதனையில், ஐ.பி.எல்., அணிகளுக்கான ஏலம் தொடர்பான முக்கிய
ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது.

சோதனை குறித்து, பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசனைத் தொடர்பு கொண்டு, செய்தியாளர்கள் கேட்டபோது, 'நான் தற்போது டில்லியில் இருக்கிறேன். நான் இல்லாதபோது, வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்' என்றார்.

ப்ரீத்தி ஜிந்தாவுக்கு நோட்டீஸ் :
பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி, தனது ஆண்டு நிதி நிலை அறிக்கையை தாக்கல்
செய்யவில்லை என, சண்டிகாரில் உள்ள கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகம்
புகார் தெரிவித்தது. இதையடுத்து, இந்த அணியின் உரிமையாளர்கள் ப்ரீத்தி
ஜிந்தா, தொழிலதிபர் நுஸ்லி வாடியாவுக்கு சண்டிகார் மாஜிஸ்திரேட் கோர்ட்,
நேற்று நோட்டீஸ் அனுப்பியது.நாடு முழுவதும் சோதனை: இந்த விவகாரத்தில்
நேற்று அதிரடி திருப்பம் ஏற்பட்டது. நாடு முழுவதும் உள்ள ஐ.பி.எல்.,
தொடர்புடைய பெரும்பாலான அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் ஒரே
நேரத்தில் சோதனை நடத்தினர்.

ஐ.பி.எல்., போட்டிகளை, 'டிவி'யில் ஒளிபரப்பும்
உரிமையை பெற்றுள்ள 'வேர்ல்டு ஸ்போர்ட்ஸ் குரூப் மற்றும் சோனி மல்டி
ஸ்கிரீன் மீடியாவின் மும்பை அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இது
தொடர்பாக, லலித் மோடியிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதேபோல்,
கோல்கட்டாவில் உள்ள நடிகர் ஷாருக் கானின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ்
அலுவலகத்திலும், ஐதராபாத்தில் உள்ள டெக்கான் சார்ஜர்ஸ் அணியின்
அலுவலகத்திலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சென்னை,
புனே, கொச்சி, ஐதராபாத், பெங்களூரு, சண்டிகார், டில்லியில் உள்ள
ஐ.பி.எல்., அணிகளின் அலுவலகங்களிலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது. ஒரே
நேரத்தில் நாடு முழுவதும் நடந்த இந்த அதிரடி சோதனை, ஐ.பி.எல்.,
வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கப் பிரிவும் கிடுக்கிப்பிடி :
ஐ.பி.எல்., அணிகளுக்காக வெளிநாடுகளிலிருந்து சட்ட விரோத பண பரிமாற்றம்
நடந்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அமலாக்க பிரிவு அதிகாரிகளும்
விசாரணையை துவக்கியுள்ளனர்.

அமலாக்க பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:ஐ.பி.எல்.,
அமைப்பில் நடந்துள்ள முறைகேடு குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள்,
ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஐ.பி.எல்., அணிகளுக்காக
மொரீஷியஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பெருமளவு பணம், சட்ட விரோதமாக
இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியானது. ரிசர்வ் வங்கியின்
அனுமதி இல்லாமல், வெளிநாடுகளிலிருந்து, இந்தியாவுக்கு பணம் வந்துள்ளது
குறித்து, அமலாக்க பிரிவு அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.இது
தொடர்பாக, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோத பண பரிமாற்ற
விவகாரத்தில், யாருக்காவது தொடர்பு இருப்பது தெரியவந்தால், அந்த நபரும்
வழக்கில் சேர்க்கப்படுவார். இதன் பின்னர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி
விளக்கம் கேட்கப்படும்.இவ்வாறு அமலாக்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

Post by kalairaja Thu Apr 22, 2010 11:51 am

ஊழல், ஊழல் என மாறிபோச்சு,இதே பேச்சு.
அடுத்த ஊழல் வரும் வரை....
kalairaja
kalairaja
கணினி கவிஞன்
கணினி கவிஞன்

Posts : 500
Join date : 09/04/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

Post by அருள் Thu Apr 22, 2010 2:10 pm

சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு 171745 சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு 171745 சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு 171745
kalairaja wrote:ஊழல், ஊழல் என மாறிபோச்சு,இதே பேச்சு.
அடுத்த ஊழல் வரும் வரை....
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

Post by Rikaz Thu Apr 22, 2010 5:52 pm

எரிச்சல்
Rikaz
Rikaz
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 662
Join date : 28/01/2010

Back to top Go down

சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு Empty Re: சென்னை சூப்பர் கிங்ஸ் சீனிவாசன் அலுவலகத்தில் அதிரடி ரெய்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் வீரர்களுக்கு சூப்பர் ஸ்டார் சேலஞ்ச் - வீடியோ!
» பைனலில் சென்னை கிங்ஸ்! * ரெய்னா "சூப்பர்' ஆட்டம்
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது
» பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரைச் சாய்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!!
» ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கப்படுமா?.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum