TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பிரசவத்திற்கு பின்னர் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்!

2 posters

Go down

பிரசவத்திற்கு பின்னர் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்! Empty பிரசவத்திற்கு பின்னர் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்!

Post by KAPILS Wed Aug 28, 2013 7:48 pm

ஸ்ட்ரெட்ச் மார்க் என்பது நாம் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையாகும். குறிப்பாக பெண்கள், இந்த பிரச்சனைக்கு அதிகம் பாதிக்கப்படுவார்கள்.





அதிலும் திடீரென உடல் எடை கூடுதல், அளவுக்கு அதிகமாக உடல் எடை குறைதல், பெண்மை அடைதல் அல்லது கருவுற்றல் போன்றவைகளால் சருமம் சுருங்கவோ அல்லது விரிவடையவோ செய்யும். அதன் விளைவாக சருமத்தின் பல பகுதிகளில் சிவப்பு அல்லது பழுப்பு நிற வரிகள் உண்டாகும். முக்கியமாக வயிறு, நெஞ்சு, தொடை மற்றும் கை பகுதிகளில் இதனை காணலாம். இந்த ஸ்ட்ரெட்ச் குறிகள் சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழப்பதால் உண்டாகிறது. இது அழகை பாதிப்பதால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இவ்வகை மார்க்குகளை நீக்க பல க்ரீம்களும், மருந்துகளும் சந்தையில் கிடைத்தாலும், அவைகள் எல்லாம் விலை உயர்ந்ததாக உள்ளது. மேலும் அதில் கலக்கப்பட்டுள்ள சின்தடிக் ரசாயனங்கள் சருமத்திற்கு ஆபத்தாக கூட முடியும். அதிலும் அதனை தொடர்ந்து பயன்படுத்தினால், பக்க விளைவுகள் இன்னும் மோசமாகத் தான் இருக்கும். அதனால் இவ்வகை மார்க்குகளை நீக்க சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அதிலும் சமயலறையில் உள்ள பொருட்கள் அல்லது அருகில் இருக்கும் கடைகளில் வாங்கி அந்த பொருட்களை கொண்டு ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம்.



சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண மிகவும் எளிய மருந்தாக விளங்குகிறது தண்ணீர். இது சருமத்தை நீர்ச்சத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஈரப்பதம் இருப்பதால், சருமம் நெகிழ்ச்சி தன்மையை இழக்காமலும், வறட்சி அடையாமலும் இருக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தினமும் 8-10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உடல் எடையை குறைக்கும் பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட வேண்டும். இதனால் சருமம் சுலபமாக விரிவடையவும், சுருங்கவும் செய்யும். ஆகவே எந்த ஒரு விரிவடையும் குறிகள் உண்டாகாமல் தடுக்கலாம்.



இயற்கை எண்ணெய்கள் மற்றும் பாதரச கலவைகளை பல வகையாக கலந்து மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் 30 மில்லி அளவு அவகேடோ, ஜோஜோபா, ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய், 6 சொட்டு சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது 4 டீஸ்பூன் சுத்தமான ஆலிவ் எண்ணெய், 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரையை சேர்த்து செய்த பேஸ்ட்டை பயன்படுத்தி மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை நீக்கலாம். குறிப்பாக இதனை குளிக்கும் முன்பாகவோ அல்லது படுக்கும் முன்பாகவோ, இந்த கலவையை நன்றாக கலந்து ஸ்ட்ரெட்ச் குறிகளின் மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும். சீரான முறையில் இதனை மெதுவாக மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமத்தில் ஸ்ட்ரெட்ச் குறிகள் நீங்கும்.



பாதிப்படைந்த பகுதிகளில் ஓட்ஸ் அல்லது ஆப்ரிக்காட் மூலம் செய்த ஸ்க்ரப்களை தேர்ந்தெடுத்து, சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கி விட வேண்டும். எலுமிச்சை ஸ்கரப்பையும் இதற்கு பயன்படுத்தலாம். அதனை பயன்படுத்தும் முறையாவன எலுமிச்சையை கொண்டு நன்றாக உடலில் தேய்த்து எடுத்து, பின் சரும நெகிழ்ச்சிக்கான லோஷன், வைட்டமின் C அடங்கியுள்ள குழந்தைகளுக்கான எண்ணெய் போன்றவைகள் கலந்த கலவையை பயன்படுத்தி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் குளிப்பதற்கு முன் எலுமிச்சையை நன்றாக சருமத்தின் மீது தேய்த்து, 1-2 மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதனால் அதிலுள்ள வைட்டமின் சி, சரும துளை வழியாக ஆழமாக உள்ளேறும். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டிக் பைபர்கள் பாதிப்படையாமல் உள்ளிறங்கும். இதனால் காலப்போக்கில் ஸ்ட்ரெச் குறிகள் நீங்கும்.



வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிடும் போது, இதிலுள்ள ஆக்சிஜனேற்றத் தடுப்பான் மற்றும் கொலாஜென் தயாரிப்பு பண்பு, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுக்கும். சருமத்தின் அழகை பாதுகாக்க வேண்டுமானால், அதிலுள்ள முக்கிய புரதமும், பைபர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். பொதுவாக வைட்டமின் ஏ, சி, டி3, ஈ மற்றும் போலிக் அமிலம் உள்ள உணவுகளை கர்ப்பக் காலத்தில் சாப்பிட வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இது கருவின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் விளங்கும். இந்த வைட்டமின்கள் அடங்கிய உணவுகளை உண்ணுவதால், கொலாஜென் பைபர்களை உண்டாக்கும். இது சருமத்தின் செல்புறத்திலுள்ள இடங்களை வலுப்படுத்தும். இதனால் சரும பாதிப்புகளை குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஸ்ட்ரெட்ச் குறிகளையும் நீக்கும். கேரட், கீரை, முலாம் பழம் என வைட்டமின் ஏ உள்ள உணவுகளை உண்டால், உடலில் அதிக அளவு கொலாஜென் நிலவும். சிட்ரஸ் பழங்கள், மிளகு, ப்ராக்கோலி என வைட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொண்டால், சருமத்திற்கு கொலாஜெனை அளிப்பதோடு, ஸ்ட்ரெட்ச் குறிகள் வேகமாக குணமாக்க வலிய ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக விளங்கும்.



வைட்டமின் ஈ உள்ள எண்ணெயை பயன்படுத்தியும் ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம். வைட்டமின் ஈ, கொலாஜென் பைபர்களை தயாரிக்க ஊக்குவிப்பதாக இருப்பதால் பாதிப்படைந்த சரும திசுக்கள் மீண்டும் வளர்ச்சி பெற உதவும். மேலும் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டான இடங்களில் குறிகளை நீக்கவும் உதவும்.



ஜெனிஸ்டீன் என்ற பைட்டோ ஈஸ்ட்ரோஜென் பாலாடை கட்டி, சோயா பால், சோயா பீன்ஸ் மற்றும் இதர சோயா பொருட்களில் உள்ளது. இது கொலாஜென் தயாரிப்பதை அதிகரிக்க உதவும்.



செடிகளில் காணப்படும் மஞ்சள் நிறப் பசையான லுடீன் எனப்படும் பொருள், சருமம் பாதிப்படையாமல் காக்க ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக விளங்குகிறது என்று ஹார்வர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதிலும் கரும்பச்சை காய்கறி மற்றும் இலை வகை கீரைகளான பசலைக் கீரை, கடுகு கீரை, வெண்டைக்காய், செலரிக் கீரை, லெட்யூஸ், பச்சை பட்டாணி, ஆலிவ், அவகேடோ, கிவி, நூல்கோல் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இது சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து, சுருக்கம் மற்றும் ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுக்கும்.



ஸ்ட்ரெட்ச் குறிகள் அரிப்பை ஏற்படுத்தும். அதனால் இது குணமாகும் காலமும் அதிகரிக்கும். ஸ்ட்ரெட்ச் குறிகள் ஏற்படுத்தும் அரிப்பை உடனடியாக நீக்க, அதன் மேல் தேங்காய் எண்ணெயை தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின்பு குளிக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக 2 வாரங்கள் செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் குறிகளை தடுத்து, அதனை நீக்கவும் செய்யும்.



பாதாமில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. அதனால் பாதாமை அதிகம் சாப்பிடலாம் அல்லது ஸ்ட்ரெட்ச் குறிகள் உள்ள இடத்தில் பாதாம் எண்ணெயை தடவலாம். இது கொலாஜென் மற்றும் எலாஸ்டிக் பைபர்கள் உருவாகச் செய்யும். இந்த இரண்டு புரதமும், ஆரோக்கியமான சருமத்தை பெற உறுதுணையாக இருக்கும். குறிப்பாக இது கர்ப்ப காலத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான சிகிச்சையாக விளங்குகிறது. மேலும் தாய்க்கும், கருவிற்கும் சிறந்த ஊட்டச்சத்தாகவும் விளங்கும். முக்கியமாக மூளை வளர்ச்சிக்கு அத்தியாவசிய மூலமாக விளங்குகிறது.



சைக்கிள் ஓட்டுவது, படுத்து எழுந்திருப்பது போன்ற வயிறு சம்பந்தப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், தசைகள் வலுவடைந்து உடல் எடையும் குறையும். அதனால் ஸ்ட்ரெட்ச் குறிகள் உண்டாவதும் தடுக்கப்படும். யோகா செய்யும் போது சில மூச்சு பயிற்சி அல்லது ப்ராணயாமத்தில் ஈடுபட்டாலும் கூட, சருமத்தின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்தி ஸ்ட்ரெட்ச் குறிகளை நீக்கலாம்.



ஆல்பா-ஹைட்ராக்ஸி அமில குடும்பத்தை சேர்ந்ததாகும் க்ளைகோலிக் அமிலம். இது சருமத்தில் உள்ள இறந்த அணுக்களை நீக்கும் சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் விளங்குகிறது. கரும்பு மற்றும் பழுக்காத திராட்சையிலிருந்து எடுக்கப்படும் இந்த அமிலம், பாதிப்படைந்த சருமத்தின் மேல் பகுதியை நீக்கி விடும். அதனால் சருமத்தின் உட்புறம் உள்ள ஆரோக்கியமான அடுக்கு வெளிப்படும். இது கொலாஜென் பைபர்கள் உருவாகுவதிலும் உறுதுணையாக விளங்குகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. ஸ்ட்ரெட்ச் குறிகள் ஏற்படும் பாதிப்பை சரிசெய்ய, இந்த கொலாஜென் பைபர்கள் உதவுகிறது. அதனால் இதன் பயன்பாடு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.



மேற்கூறிய இயற்கை சிகிச்சைகள் சருமத்தை இயற்கையான முறையில் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இவைகளை தினமும் பயன்படுத்தினால், ஸ்ட்ரெட்ச் குறிகள் மெதுவாக நீங்கும். இருப்பினும் பாதுகாப்பாக இருக்க, எந்த ஒரு சிகிச்சையை பின்பற்றுவதற்கு முன்னும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். அதனால் பயன்பாட்டின் அளவு அதிகமாக போகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

KAPILS
KAPILS
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 4340
Join date : 11/12/2011
Location : Tamilnadu

http://kabiltech.blogspot.in/

Back to top Go down

பிரசவத்திற்கு பின்னர் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்! Empty Re: பிரசவத்திற்கு பின்னர் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க சில டிப்ஸ்!

Post by mmani Wed Aug 28, 2013 11:05 pm

அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு அறிவிப்பு
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum