TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


என்ன துணிச்சல்?நகருக்குள்ளும் கேரள செருப்புக்கழிவு

Go down

என்ன துணிச்சல்?நகருக்குள்ளும் கேரள செருப்புக்கழிவு Empty என்ன துணிச்சல்?நகருக்குள்ளும் கேரள செருப்புக்கழிவு

Post by அருள் Tue Apr 13, 2010 5:54 am

என்ன துணிச்சல்?நகருக்குள்ளும் கேரள செருப்புக்கழிவு Tblfpnnews_60829889775







கேரளாவிலிருந்து
கொண்டு வரப்பட்டு இதுவரை மாநில எல்லையில் மட்டுமே கொட்டப் பட்டு வந்த
செருப்புக் கழிவுகள், தற்போது எல்லை மீறி, கோவை மாநகராட்சி பகுதியிலும்
கொட்டப்படுகின்றன.

கேரள எல்லையை ஒட்டியுள்ள கோவை நகரின் வழியாக
கேரளாவுக்கு மணல், சிமென்ட், பால், அரிசி, பருப்பு, கறிவேப்பிலை, காய்கறி
உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மாடு, கோழி உள்ளிட்டவை
கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஓரிரு நாட்கள் இப்பொருட்கள் அங்கு
போகாவிட்டாலும், கேரளாவில் சிக்கலாகி விடும். உணவுப்பொருட்களை கேரளாவுக்கு
அனுப்பும் தமிழகத்துக்கு 'பிரதி உபகாரமாக' அங்கிருந்து கழிவு பொருட்களை
கொண்டு வந்து தமிழக எல்லைக்குள் கொட்டுவது வாடிக்கையாகி வருகிறது.
பொள்ளாச்சி அருகில் மாட்டிறைச்சி கழிவுகளை கொட்டி, பெரும் போராட்டமாக
வெடித்த பின், நிறுத்தப்பட்டது.அதன்பின், மருத்துவக் கழிவுகள் கொண்டு
வந்து கொட்டப்பட்டன. அதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பை காட்டிய பின், அந்த பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போது, அடுத்ததாக செருப்புக்கழிவுகள்
குவிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டில், பாலக்காடு ரோட்டில் எட்டிமடை,
திருமலையாம்பாளையம், க.க.சாவடி பகுதிகளில் ரோட்டின் இரு புறமும் மலை,
மலையாக செருப்புக் கழிவுகள் கொட்டப்பட்டன. அவை அங்குள்ள மழை தண்ணீரில்
ஊறி, பெரும் நாற்றத்தை ஏற்படுத்தின; சுகாதாரமும் சீர்கெட்டது.

அதையொட்டிய பகுதிகளில் உள்ள கிராமத்து
மக்கள், பெரும் அவதிக்கு உள்ளாகி மாவட்ட நிர்வாகத்திடம் புகார்
கொடுத்தனர். அப்போதும், நடவடிக்கை இல்லாததால், தாங்களாகவே இரவு
நேரங்களில் ரோந்து மேற்கொண்டு, கழிவுகளை கொட்டும் வாகனங்களை பிடித்தனர்.
சில வாகனங்களை கேரளாவுக்கே திருப்பி அனுப்பினர். மக்களின் கோபத்தை
அறிந்து, பல மாதங்களாக தமிழகத்துக்குள் செருப்புக் கழிவுகள் வருவது
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது, அந்த கழிவுகள் எல்லை கடந்து,
கோவை மாநகராட்சி எல்லைக்குள்ளேயே வந்து குவிக்கப்படுகின்றன. கேரள - தமிழக
எல்லையைக் கடந்து, மதுக்கரை, கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர் வழியாகவோ
அல்லது செல்வபுரம் வழியாகவோ வரும் இந்த வாகனங்கள், இரவோடு இரவாக
செல்வபுரம் பைபாஸ் ரோட்டின் இரு புறமும் செருப்பு கழிவுகளை மூட்டை
மூட்டையாக கொட்டிச் செல்கின்றன. கேரளாவிலிருந்து கொண்டு வந்து
கொட்டியதற்கான அடையாளங்கள் செருப்புகளில் காணப்படுகின்றன. கேரளாவிலிருந்து
இங்கு வந்து செருப்புக் கடைகள் வைத்துள்ளவர்களுக்கும், இதற்கும் தொடர்பு
இருக்குமா என்பது, அதிகாரிகள் விசாரித்தால் அம்பலமாகும்.

மாநில எல்லையை கடந்து கழிவுகள், இங்கு வர
தமிழக எல்லையிலுள்ள அரசுத்துறைகளின் சோதனைச் சாவடிகளில் உள்ள அலுவலர்களே
காரணம். கேரளாவிலிருந்து வரும் வாகனங்களில் என்ன இருக்கிறது, என்பதை
சோதனைச்சாவடி அலுவலர்கள் சோதனை செய்வதே இல்லை. வணிகவரித்துறை,
போக்குவரத்துத்துறை சோதனைச் சாவடிகளில் இருப்பவர்கள், மாமூல் பெற்று இந்த
வாகனங் களை அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது. கேரளாவுக்கு வாகனத்தில்
பொருட்களை கொண்டு செல்வோர், தமிழகத்துக்கு திரும்பி வரும் போது
செருப்புக்கழிவுகளை ஏற்றி வந்து, இங்கே கொட்டி விடுவதாகவும்
கூறப்படுகிறது. இதற்காக, இவர்கள் அதிகமான வாடகை வாங்குவதாகவும் தெரிகிறது.
பெரும்பாலும் வாகன உரிமையாளர்களுக்கு தெரியாமல், டிரைவர்கள், கிளீனர்கள்
இந்த அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு செய்யும் வாகனங்களை பிடித்து,
உரிமத்தையும், டிரைவர்களின் லைசென்சையும் ரத்து செய்தால் மட்டுமே
அத்துமீறல்களை தடுக்க முடியும்.

சோதனைச் சாவடிகள் வைத்துள்ள அரசுத்துறை
உயரதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகம் அழைத்து, கண்டிப்பான உத்தரவுகளை வழங்க
வேண்டும். இது போன்ற வாகனங்களை அனுமதிக்கும் அலுவலர்கள் மீது கடும்
நடவடிக்கை மேற்கொள்ள எடுக்க வேண்டும். பல நூறு கோடி ரூபாய் செலவழித்து,
கோவை நகரை அழகு படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகமும் இந்த விஷயத்தில்
கவனம் செலுத்தி, இத்தகைய வாகனங்களை பிடிக்க களம் இறங்குவது அவசியம்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கேரள நடிகர் மம்முட்டி ஜெ திடீர் இரகசியச் சந்திப்பு! தமிழ் திரைத்துறையினரின் நிலை என்ன?
»  மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?
» யாருக்கும் பயப்படமாட்டார்: ஜெயலலிதாவின் துணிச்சல் பாராட்டுக்குரியது; சத்யராஜ்-மணிவண்ணன் பேச்சு
» ஏழை குழந்தைகள் படிக்க உதவும் துணிச்சல் இளைஞர்: புதுமையான நடவடிக்கைகளால் சாதனை
» யூசுப் அதிரடி: இந்தியா "திரில்' வெற்றி! * ஹர்பஜன் துணிச்சல் ஆட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum