TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:16 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு

Go down

மோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு Empty மோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு

Post by mmani Sat May 25, 2013 8:09 am







[You must be registered and logged in to see this image.]ஒரு
வீட்டை விலை பேசி பணம் கொடுத்த பிறகு, அதை நம் பெயருக்குப்
பதிவுசெய்யாமல், அந்த வீட்டுக்குள் குடியிருந்தால் வில்லங்கம் தான். ‘இந்த
வீட்டின் உரிமையாளர் நான்தான். காலி செய்யுங்கள்’ என்று யாராவது வந்து
நம்மை வெளியேற்றிவிடலாம்.

ஹைவே டிபார்ட்மென்ட்டோ அல்லது அரசுத்
துறையோ ‘இது புறம்போக்கு இடம். எனவே அரசுக்குச் சொந்தமானது’ என்று வீட்டை
இடித்துவிட்டுக்கூட போகலாம். இதே போன்ற பிரச்னைகள்தான் வாகனம்
வாங்கும்போதும் ஏற்படும்.

ஒரு முறை எனது கட்சிக்காரர் ஒருவர் வந்தார்...

‘‘சார்,
நல்ல கண்டிஷனில் உள்ள ஒரு செகண்ட் ஹேண்ட் பைக் வாங்கினேன். 18 ஆயிரம்
ரூபாய்க்கு விலை பேசி, அட்வான்ஸாக பத்தாயிரம் கொடுத்தேன். அந்த வாகனத்தின்
ஆர்.சி.புத்தகம் ஃபைனான்ஸ் கம்பெனியில் இருந்ததால், அதை ரிலீஸ் செய்து
கொடுத்த பிறகு பாக்கி 8 ஆயிரம் ரூபாயைக் கொடுப்பதாகப் பேசினோம். மூன்று
மாதம் ஆகியும் ஆர்.சி.புத்தகம் தரவில்லை. பல முறை கேட்டுப் பார்த்தும்
பயனில்லை. ‘பத்தாயிரம் ரூபாய்க்கு நல்ல கண்டிஷனில் உள்ள பைக்
கிடைத்திருக்கிறதே’ என்று நானும் ஆர்.சி.புத்தகம் கேட்பதையே
விட்டுவிட்டேன்’’ என்றார்.

‘‘ஆர்.சி.புத்தகத்தை உங்கள் பெயருக்கு
மாற்றிக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு ஏதாவது விபத்து போன்ற
பிரச்னைகள் வந்தால் ரொம்ப ரிஸ்க்காகிவிடும்’’ என்று நான் சொன்னதும்,
‘‘பேலன்ஸ் 8 ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு ஆர்.சி.புத்தகத்தை வாங்கி


வந்துவிடுகிறேன்’’
என்று சொல்லிவிட்டுச் சென்றவர், ஒரு வாரம் கழித்து திரும்ப வந்து, ‘‘சார்
என் பைக்கை இரண்டு நாளைக்கு முன்னாடி போலீஸ் வந்து தூக்கிட்டுப்
போயிட்டாங்க... அது திருட்டு பைக்காம். எனக்கு பைக் விற்றவன் 20
வண்டிகளுக்கு மேல திருடியதாச் சொன்னாங்க... இப்ப அந்த பத்தாயிரம் ரூபாயை
திரும்ப வாங்குவது எப்படி?’’ என்றார்.

‘‘நீங்க கவனக்குறைவா
இருந்ததற்கு இந்தப் பத்தாயிரம் ரூபாய் அபராதம் என்று நினைத்து விட்டு
விடுங்கள். இதைத் தெரிந்தோ தெரியாமலோ வாங்கியதற்கே உங்கள் மீது திருட்டுப்
பொருளைப் பெற்றதாக வழக்குப்போடலாம். அட்லீஸ்ட், அந்த வழக்கிலிருந்து
தப்பித்தோம் என்று மனதை தேற்றிக் கொள்ளுங்கள்’’ என்று சொன்னேன். இந்தச்
சம்பவம் பைக்குக்கு மட்டும் அல்ல, எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும்!

நாம்
ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்னைகளும் வராதபடி, பதிவுக்குத்
தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுத்து விடுகிறார். நாம்
நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது
எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா?

ஒரு
வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று
வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான
பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது.
ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய
கார், பைக் மற்றும் இதர வாகனங்-களை விற்கும்போதும் வாங்கும்போதும் நாம்
பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி
மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது இருவருடைய கடமை
ஆகிறது.

ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள்
இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை
செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29&ல்
பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட்
அட்டையுடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து
வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்ப வேண்டும். இது விற்பனை செய்பவரின் கடமை.

ஒரு
வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து
இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக
எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம்
தகவல் தரவேண்டும். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே
பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட ‘தடை இல்லாச் சான்று’ (No
objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30
நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப
வேண்டும்.

வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது
வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ
அந்த மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்ஷ¨ரன்ஸ்
அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று
அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்க-வில்லை
என்பதற்கான ஆதாரங்-களுடன் மனு செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு
30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

இப்படி வாங்குபவரோ,
விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால்,
மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை
வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை
ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு இன்ஷ¨ரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு
தொகை பெற முடியாது.

புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில்
மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்ஷ¨ரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய
உரிமையாளர் பெயரில் உள்ள இன்ஷ¨ரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம்
(டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி
எந்தச் சிக்கலும் வராது! ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு
செய்யமுடியுமா?

ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும்
பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம்
காலாவதியாகும்போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை
உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும்
பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான்.
உரிமையாளரின் பெயர், விலாசம் மாறலாம். இந்தியாவின் எந்த மாநிலத்துக்கு எந்த
மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு
மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான்
பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த
முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் சென்னையில்
பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு
பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு
ரீ&ரெஜிஸ்ட்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும்!


பதிவை மறுக்க முடியுமா?

ஒரு
வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம்
சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து
விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில்
குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு
போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து
விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர்
கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண்
விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி
எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய
மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்!


வாகன உரிமையாளர் இறந்துவிட்டால்...

ஒரு
வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும்
வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30
நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப்
போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று
மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம். இந்தக் காலகட்டத்துக்குள்
ஆர்.சி.புத்தகம், இன்ஷ¨ரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும்
அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31&ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு
விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம், உறவுமுறை
ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான
சான்றுகளுடன் மனு செய்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
mmani
mmani
பண்பாளர்
பண்பாளர்

Posts : 8037
Join date : 19/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராததையும் தெரிந்திருக்க வேண்டும் இதோ உங்களுக்காக
» மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமை என்ன? படித்துபாருங்கள்
» அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் - மொபைல் போன் அப்ளிகேஷன்
» மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்!
» இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுரைகள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum