TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்?

Go down

வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்? Empty வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்?

Post by அருள் Thu Mar 25, 2010 7:00 am

வினாத்தாள் மாறிய மாணவர்களுக்கு முழு மதிப்பெண்? Tblfpnnews_41637384892







சென்னை
: ''பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நடந்த தமிழ்
முதல்தாள் தேர்வில் கேள்வித்தாள் மாற்றிக் கொடுக்கப்பட்ட விவகாரத்தில்,
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்.
அப்பாடத்தில் அவர்கள் தோல்வி அடையாத வகையில், தேர்வுத்துறை உரிய நடவடிக்கை
எடுக்கும்,'' என தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உறுதி
அளித்துள்ளார். குளறுபடி நடந்த இடங்களில் பணியில் ஈடுபட்ட அலுவலர்கள்,
ஆசிரியர்களை, இனி தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்றும், அரசு
அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி கல்வித்துறை
இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வுத்துறை இயக்குனர்
தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, நேற்று
முன்தினம் துவங்கியது. எஸ்.எஸ்.எல்.சி., - மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன்
மற்றும் ஓரியன்டல் ஆகிய நான்கு போர்டு மாணவர்களும் கலந்து ஒரு அறையில்
தேர்வெழுத வைக்கப்பட்டனர். முதல் நாள், தமிழ் முதல்தாள் தேர்வு நடந்தது.
காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., மெட்ரிக் பள்ளியில், ஒரு அறையில் மெட்ரிக்
மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி., கேள்வித்தாளும், எஸ்.எஸ்.எல்.சி.,
மாணவர்களுக்கு மெட்ரிக் கேள்வித்தாளும் மாற்றி வழங்கப்பட்டன. இதேபோல்,
தென் மாவட்டங்களில் ஒரு சில மையங்களிலும் கேள்வித்தாள் மாற்றி
வழங்கப்பட்டன. இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அழுது புலம்பினர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு,
உரிய மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து, தேர்வுத்துறை
இயக்குனர் வசுந்தரா தேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: பிரச்னைக்குரிய
தேர்வு அறைகளில், மெட்ரிக் மாணவர்களுக்கும், எஸ்.எஸ்.எல்.சி.,
மாணவர்களுக்கும் கேள்வித்தாள்கள் மாற்றி வழங்கப் பட்டுள்ளன. விசாரணை
நடத்தியதில், 29 மாணவர்கள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. 29
விடைத் தாள்களும், இன்று (நேற்று) தேர்வுத்துறைக்கு கொண்டு வரப்பட்டு
விட்டன. மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு ஆசிரியர்களைக் கொண்டு, இந்த 29
விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பிரச்னையில், 29
மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதபடி, விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு
கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கப்படும். இன்று நடந்த (நேற்று) தமிழ் இரண்டாம்
தாள் தேர்வில், இந்த மாணவர்கள் பெறும் மதிப்பெண்களும், பள்ளிகளில் நடந்த
தமிழ் முதல்தாள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு,
தமிழ் முதல் தாளுக்கு மதிப்பெண் வழங்கப்படும். சம்பந்தபட்ட 29
மாணவர்களும், தமிழ் முதல் தாள் தேர்வில் தோல்வி அடைய மாட்டார்கள்.
அவர்களுக்கு சிறிய பாதிப்புகூட ஏற்படாது. இந்தப் பிரச்னையில்,
மாணவர்களும், பெற்றோரும் கவலைப்பட வேண்டாம்.

நடவடிக்கை என்ன?
கேள்வித்தாள் மாற்றப்பட்ட அறைகளில் தேர்வுப் பணி பார்த்தவர்கள் மற்றும்
மையத்தின் முதன்மை கண்காணிப் பாளர், தேர்வுப் பணியை கண்காணிக்க
நியமிக்கப்பட்ட தேர்வு அலுவலர் ஆகியோரை, இனி வரும் காலங்களில் தேர்வுப்
பணிகளில் ஈடுபடுத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். பிரச்னை நடந்த
மூன்று பள்ளிகளுமே தனியார் பள்ளிகள். எனவே, தனியார் பள்ளி ஆசிரியர்கள்
மீது தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்க முடியாது. சம்பந்தப்பட்ட பள்ளியின்
தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்டநடவடிக்கைகளை
எடுக்க வேண்டும் என, தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் நேற்றே தேர்வுப் பணியில்
இருந்து விடுவிக்கப்பட்டனர். துறை அலுவலர்களாக செயல் பட்ட, அரசுப் பள்ளி
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை
இயக்குனருக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு தேர்வுத்துறை இயக்குனர்
கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள், சம்பந்தபட்ட
பாடத்தில் தோல்வி அடையாமல், தேர்ச்சிக்குரிய மதிப் பெண்கள் அளிக்கப்படும்
என்பதை தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கேள்வித்தாளை சரியான முறையில்
வழங்கியிருந்தால், நன்றாக தேர்வெழுதி அதிகபட்ச மதிப்பெண்களை மாணவர்கள்
பெற்றிருக்க முடியும். எனவே, 29 மாணவர்களுக்கும் அதிகபட்ச மதிப்பெண்களை
வழங்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தமிழ் பாடத்தில்
பெறும் மதிப்பெண்கள், உயர்கல்வி சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்
படுவதில்லை என்பதால், மதிப்பெண்களை அதிகமாக வழங்குவதால் எந்தவித
பிரச்னையும் ஏற்படாது என்றும் தெரிவிக்கின்றனர்.

தண்டனையா... பரிசா...?
கேள்வித்தாளை மாற்றி வழங்கிய விவகாரத்தில், 'சம்பந்தபட்ட ஆசிரியர்கள்,
அலுவலர்களை, இனிமேல் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்த மாட்டோம்' என,
தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை, சம்பந்தபட்ட
ஆசிரியர்கள், அலுவலர்கள் ஏகமனதாக வரவேற்பார்கள் என்பதில் துளியும்
சந்தேகம் இல்லை. தேர்வுப் பணிகளை பெரும்பாலான ஆசிரியர்கள்
விரும்புவதில்லை. குறிப்பாக, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், 'ஆளை விட்டால்
போதும்' என்ற எண்ணத்தில் தான் இருக்கின்றனர். புதிதாக வேலையில் சேர்ந்த
ஆசிரியர்கள் தான், உற்சாகத்தில் எந்தப் பணி கொடுத்தாலும் செய்கின்றனர்.
எனவே, ஏதாவது சிறிய பிரச்னை என்றாலும், 'இனிமேல் தேர்வுப் பணி கிடையாது'
என, தேர்வுத்துறை முடிவெடுத்தால், ஆசிரியர்களை பொறுத்தவரை, அதை தண்டனையாக
கருதாமல், 'பரிசாக'த்தான் கருதுவர்.
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஜாக்பாட்: கடினமில்லா வினாத்தாள் தயாரிக்க உத்தரவு
» 50 வயதில் பெண்ணாக மாறிய ஆணுக்கும், 46 வயதில் ஆணாக மாறிய பெண்ணுக்கும் திருமணம்.
» எல்.ஐ.சி., வினாத்தாள் லீக்: ரூ.5 லட்சத்துக்கு விற்பனை
» வினாத்தாள் குளறுபடி : 10ம் வகுப்பு மாணவர்கள் தவிப்பு
» மே 25-ல் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum