TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-

2 posters

Go down

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- Empty மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-

Post by அருள் Thu Feb 07, 2013 2:29 pm

ஆடாதோடை
1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3)
வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும்
அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப்
பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில்
வைத்து வளர்க்கப்படுகிறது.

தமிழ் நாட்டில் எல்லா
மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை,
காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம்
செய்யப்படும்.

4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

5) பயன்கள்:
ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத
உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால்
காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும்.
கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும்.
சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல்
இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின்
பெருக்கைச்
சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று
நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி,
விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும்.
ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி
இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி
அளவு 2-3 முறை கொடுத்தால்
இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2
தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி
குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம்
செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை
வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல்
ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி,
ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும்.
ஆடாதோடை வேரினால் இருமல்,
உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை
நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை
கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம்,
இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும்,
பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத
மூலிகையாகும்.
ஊமத்தை
1) வேறுபெயர்கள் -: ஊமத்தம் உன்மத்தம் எனவும் படும்.இந்தியம் டாட்யூரா, துர்த்தா, கனகா ஆகியவை.

2) தாவரப்பெயர் -: DATURA METEL.

3) தாவரக்குடும்பம் -: SOLANACEAE.

4) வகைகள் -: வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை,கருஊமத்தை எனும் வகைப்படும்.

5) வளரும்
தன்மை -:
எல்லா வகை நிலங்களும் ஏற்றது.வளர்ச்சுயைத்
தாங்கி வளரும்.பற்களுள்ள அகன்றஇலைகளையும், வாயகன்ற நீண்ட குழலுமான புனல்
வடிவ மவர்களையும் முள்நிறைந்த காயையும்உடைய குறுஞ்செடிகள். மலர்கள் வெள்ளை,
மஞ்சள்,கருஞ்சிவப்பு ஆகிய நிரங்களில் இருக்கும். இவைவிதை மூலம் இனப்
பெருக்கம் செய்யப்படுகிறது.நட்ட ஒரு மாதத்தில் பூக்கள் விட ஆரம்பிக்கும்.

6)
பயன்தரும் பாகங்கள் -:
செடியின் எல்லாபாகங்களும் மருத்துவ பயனுடையவை.

7) பயன்கள் -: பொதுவாக
நோய்தணிப்பானாகவும், சிறப்பாக இசிவு நோய் தணிப்பானாப்பானகவும் செயற்படும்.
அறுவை சிகிச்சைக்கும் மகப்பேருக்குமயக்க மருந்தாகவும் பயன்படுகிறது.

இலையைநல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட வாயு, தாய்பால்
கட்டிக்கொண்டு வலித்தல், நெரிகட்டுதல், ஆகியவை குணமடையும்.

இலைச்சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கலந்துகாச்சி, இளஞ்சூட்டில் 2-3 துளி காதில் விடச்சீதளத்தால் வந்த காது வலிதீரும்.

இலையை
நீர் விடாது அரைத்து நல்லெண்ணெயில் வதக்கி நாய்கடிப் புண்ணில்கட்ட
ஆறும்.மூன்று துளிச் சாறு வெல்லம் கலந்து காலை,மாலை 3 நாள் மட்டும் கொடுக்க
நஞ்சு தீரும்.கடும் பத்தியம்- பகலில்
தயிர் சோறும்இரவில் பால் சோறும் உப்பில்லாமல் சாப்பிடவும்.

இலைச்சாற்றைச்
சமளவு தேங்காய் எண்ணெயில் காச்சி சிறிதளவு மயில் துத்தம் கலந்து
வெளிப்பூச்சாகப் பயன்படுத்த ரணம் சதைவளரும் புண்புரைகள், தீரும்.

ஊமத்தைப் பிஞ்சை அவரவர் உமிழ் நீரில்மையாய் அரைத்துத் தடவ புழுவெட்டு தீரும்,புழு இறந்து முடி வளரும்.

இலை, பூ, விதை மூன்றையும் பாலில் பிட்டவியலாய்
அவித்து உலர்த்தி, தூள் செய்து (ஒன்றிரண்டாய்) பிடியாய்ச் செய்து புகைக்க ஆஸ்துமா, மூச்சுத்திணரல் உடனே குறையும்.

ஊமத்தை
மயக்கத்தை உண்டாக்கும். விடத்தன்மையுடையது. இதன் விடம் முறிய
தாமரைக்கிழங்கை அரைத்து பாலில் இரு வேழை மூன்று நாள்கொடுக்கலாம்.

அனைத்து வகைப் புண்ணுக்கும். -
ஊமத்தம்இலைச்சாறு 500 மி,லி.தேங்காய் எண்ணெய்500 மி.லி. கலந்து மயில்
துத்தம் 30 கிராம்போட்டு சுண்டக் காச்சி சாறு வடிக்கவும்.இதனை அனைத்து
வகையான புண்களுக்கும்மேல் பூச்சாக இட குணமடையும்.மேகப் புண்,
நீரிழிவுப்புண், ஆராத குழிப்புண், வளர் புண் குணமடையும்.

நன்றி: மூலிகை வளம் குப்புசாமி அவர்களுக்கு!
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- Empty Re: மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-

Post by அருள் Thu Feb 07, 2013 3:12 pm

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-11

சுண்டை.
[You must be registered and logged in to see this image.]
1. மூலிகையின் பெயர் :- சுண்டை.

2. தாவரப்பெயர் :- SOLANUM TARVUM.

3. தாவரக்குடம்பம் :- SOLANACEAE.

4. வேறு பெயர்கள் :- கடுகிபலம், பீதித்தஞ்சம், பித்தம், அருச்சி, கராபகம், சுவாசகாசினி. முதலியன.

5. பயன் தரும் பாகங்கள் :
- இலை, காய், வத்தல்,
மற்றும் வேர் முதலியன.

6. வளரியல்பு :-
சுண்டை ஒரு பெருஞ்செடி இனத்தைச் சேர்ந்தது. இது சுமார் 5 அடி முதல் 10 அடி
உயரம் கூட வளரக்கூடியது. எல்லா வித மண் வளத்திலும் வளரக்கூடியது. இதற்கு
ஆங்கிலத்தில் TURKEY BERRY என்று சொல்வார்கள்.

சுண்டையில் இரு வகையுண்டு. மலை
காடுகளில் தானே வளர்வதை மலைச்சுண்டை என்றும், தோட்டங்களிலும் சம வெளியிலும்
வளர்வதை ஆனைச்சுண்டை அல்லது பால் சுண்டை என்றும் சொல்வர். அகன்ற இறகாக
உடைந்த நேர் அடுக்கில் அமைந்த இலைகளையும் வெண்நிரப் பூங் கொத்துக்களையும்,
உருண்டையான காய்களையும் உடைய முள்ளுள்ள செடியாகும். பச்சைக் காய்கள்
பழுத்தால் மஞ்சள் நிறமாக
மாறிவிடும்.

பழம் காய்ந்தால் வத்தலாக
மாறிவிடும். ஒரு பழத்தில் சுமார் 200 விதைகள் இருக்கும். காய் சற்று
கசப்புடையது. வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். இது உலகெங்கும் உள்ளது. இதன்
தாயகம் புளோரிடா என்றும் மேற்கிந்தியாவிலும் பின் ஆப்பிரிக்கா, ஆசியா,
ஆஸ்திரேலியா, அவாய், பசிபிக்தீவுகளிலும், நடு அமரிக்காவிலும், தென்
அமரிக்காவிலும், பிரேசிலிலும் பரவியதாகக்
கூறுவர். இதை இன விருத்தி செய்ய விதைமூலமாகவும், கிளைகளை வெட்டி வைத்து
முறைப்படி வளர்த்தியும் பயிரிடுவார்கள்.

7. மருத்துவப் பயன்கள் :-
சுண்டை கோழையகற்றியாகவும், வயிற்றுப்பூச்சிக் கொல்லியாகவும், சுண்டைக்
கசாயம் பாம்புக்கடி வீரியம் குறைக்கவும், நீரிழிவு நோய், இருமல்,
மூலச்சூடு, மூலக்கடுப்பு முதலியன குணமாக்கக் கூடியது. மலேசியாவில் இதன்
விதையை பல் வலி குறையப் பயன்படுத்துகிறார்கள். வியட்னாமில் இதன் இலையை
மாதவிடாய் தொல்லைக்கும், தோல் வியாதியைப் போக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
இதன் பழம் சாப்பிட்டால் வயிற்றுவலி போகும்.

பால் சுண்டைக் காயைச்சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி முதலியன தீரும்.

உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பின்
காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு உணவில் பயன் படுத்தி வர மார்ச்சளி, ஆஸ்துமா, காச நோய் தீரும். வயிற்றுப் போக்கு நின்று விடும்.

சுண்டை
வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம்பருப்பு,
கறிவேம்பு, சீரகம் ஆகியவை தனித்தனியே எடுத்து இளவறுப்பாக வறுத்துப் பொடி
செய்து இடித்த சூரணம் காலை, மாலை 2 சிட்டிகை ஒரு டம்ளர் மோரில் சாப்பிட்டு
வர பேதி, மூலம்,
பசியின்மை, மார்ச்சளி, நீரிழுவு தீரும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு,
மிளகு, சீரகம், வெந்தயம் இளவறுப்பாய் வறுத்து உப்பு சேர்த்து சூரணித்து
உணவில் கலந்து சாப்பிடப் பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள்,
மூலம் ஆகியவை தீரும்.

இதன் வேர்ப்பட்டையை பொடிசெயுது தேய்காய் தொட்டியில் வைத்து ஒரு சிட்டிகை மூக்கிலிட்டு உள் இழுக்க தலைநோய், நீரேற்றம், மண்டைக்
குடச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர் பாய்தல் நிற்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பைப் பிண்ணாக்கு சம அளவு எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழப்பு நோய் தணியும்.

சுண்டை
வேர் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக
வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாச்சல் குணமாகும்.

இதன் வத்தலை காயவைத்து அதனுடன் புளித்த மோர் மற்றும்
உப்பு தேவையான அளவு சேர்த்து உணவுடன் உண்ண நீரிழிவு நோய் குறையும்.

வசம்பு.

[You must be registered and logged in to see this image.]

1. மூலிகையின் பெயர் :- வசம்பு.

2. தாவரப்பெயர் :- ACORUS CALAMUS.

3. தவரக்குடும்பம் :-
AROIDACEAE.
4. பயன்தரும் பாகங்கள் :- வேர் மற்றும் இலைகள்.

5. வேறுபெயர்கள் :-
பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான்.

6.வளரியல்பு :-
வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு.
இதன் பிறப்பிடம் தென் கிழக்கு அமரிக்கா. இது இந்தியாவில் மணிப்பூரிலும்,
நாகமலையிலும் கேராளாவிலும் அதிகமாக வளர்கிறது.

சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும்
நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவை. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த
மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்
படுகிறது.

இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரும்.
வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையவை. இதன் தண்டு வேர்
பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல்
நிறத்துடனும் இருக்கும்.

வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி
நீளம் வரை படரும். வேர்கள் தான் வசம்பு என்பது. நட்ட ஒரு ஆண்டில் பயிர்
மூதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அதாவது ஒரு ஆண்டில் கிழங்கை
வெட்டி எடுக்க வேண்டும். இந்த வசம்பில் அசரோன், அகோரின் மற்றும் கொலாமினால்
போன்ற வேதிப் பொருள்கள் உள்ளன. இது நல்ல வாசனையையுடையது. இது கிழங்கு
மூலம் இனப்பெருக்கம்
செய்யப்படுகிறுது.

7.மருத்துவப்பயன்கள்-வசம்பு
வெப்பத்தை உண்டாக்கி பசியைத் தூண்டி வயிற்றிலே இருக்கின்ற வாயுவை
அகற்றக்கூடிய தன்மை உடையது. இது வாந்தியை உண்டாக்குவதோடு நுண்புழுக்களை
அழிக்கும் தன்மை உடையது.

நாட்பட்ட கீல்வாத நோய்களுக்கு வசம்பை காசிக் கட்டியுடன் சேர்த்து நீர் விட்டு அரைத்து பற்றிட்டு வர குணமாகும்.

வாய்
குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்க வசம்பை நன்கு பொடி செய்து ஒரு கிராம் அளவு உட்கொள்ள வேண்டும்.

வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி, வாயு ஆகியவற்றூ அகற்றுப் பசியை மிகுக்கும்.

வசம்பைச் சுட்டுச் சாம்பலாக்கி தேனில் குழைத்து நாவில் தடவ வாந்தி, ஒக்காளம் தீரும்.

வசம்பைக் கருக்கிப் பொடித்து 100 மில்லி கிராம் அளவாகத் தாய் பாலில்
கலக்கி சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க வயிற்றுப் பொருமல், வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி ஆகியவை தீரும்.

வசம்புத் துண்டை வாயிலிட்டுச் சுவைக்க, உமிழ்நீர் அதிகம் சுரக்கும். தொண்டைக் கம்மல் இருமலை அகற்றும்.

குழந்தைகளுக்கு
உண்டாகும் சுரம், இருமல், வயிற்றுவலி இவை குணமாக வசம்புடன் அதிமதுரம்
சேர்த்து கசாயமிட்டு காலை, மாலை இரண்டு வேளையும் கொடுக்கக்
குணமாகும்.

வசம்பை தூள் செய்து தேனுடன் கலந்து திக்குவாய் உடையவர்கள் தினந்தோறும் காலையில் நாவில் தடவி வர பேச்சு திருந்தும்.

பசியைத்
தூண்டவும், அஜீரணத்தைப் போக்கி வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கவும் வசம்பு
ஒரு பங்கும் பத்து பங்கு வெந்நீரும் சேர்த்து ஊற வைத்து வடிகட்டி
பதினைந்து மி.லி. முதல் முப்பது மி.லி. வீதம் அருந்தி வர வேண்டும்.
குழந்தைகளுக்கு உண்டான
கழிச்சலுக்கும், முறைக் காச்சலுக்கும் இதனை கொடுக்கலாம்.

வயிறில்
சேர்ந்த வாயுவை அகற்ற வசம்பை அடுப்பில் வைத்து சுட்டுக் கரியாக்கி, அதனை
தேங்காய் எண்ணையுடன் கலந்து அடி வயிற்றில் பூசவேண்டும்.

சகலவித விஷக்கடிகளுக்கும் இதன் வேரை வாயிலிட்டு மென்று வர விஷம் முறியும்.

வசம்பு,
பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்த்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சம
அளவு
இடித்துப் பொடித்து ஒரு தேக்கரண்டி காலை, மாலை கொடுத்துவர வயிற்றுவலி,
மூர்ச்சை, காய்சலுக்குப் பின் உண்டாகும் பலக்குறைவு,காக்காய்வலிப்பு ஆகியவை
தீரும்.

நன்றி:மூலிகை வளம் குப்புசாமி அவர்களுக்கு

Post by அருள் Thu Feb 07, 2013 3:14 pm

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-10

பப்பாளி.
1. மூலிகையின் பெயர் -: பப்பாளி.

2. தாவரப்பெயர் -: CARICA PAPAYA.

3. தாவரக்குடும்பம் -: CARUCACEAE.

4. பயன்தரும் பாகங்கள் -: இலை, காய், பால், மற்றும் பழம். முதலியன.

5. வளரியல்பு -:

பப்பாளி
தமிழகமெங்கும் பரவலாக வளர்க்கப்படுகிறது. எல்லாவகை மண்களும் ஏற்றது. நீண்ட
குழல் வடிவ காம்புகளில் பெரிய அகலமான கைவடிவ இலைகளை உச்சியில் மட்டும்
கொண்ட மென்மையான கட்டையுடைய பாலுள்ள மரம். கிளைகள் அரிதாகக் காணப் பெறும்.
பெரிய சதைக் கனியை உடையது, பழம் உருண்டையாகவும், நீண்டும் இருக்கும்.

ஆண் மரம் பெண் மரம் என்று உண்டு.
அயல் மகரந்தச் சேர்க்கையில் அதிக பழங்கள் விடும். பல்லாண்டுப் பயிர். ஒரு
ஏக்கருக்கு 1000 நாற்றுக்கள் தேவைப்படும். இது நடும்பொழுது 8 அடிக்கு 8அடி
இடைவெளி விட்டு 2 X 2 X 2 அடி ஆழக் குழிகள் வெட்டி உரமிட்டு நட வேண்டும்

வாரம் ஒரு முறை தண்ணீர் பாச்ச
வேண்டும். 10 மதத்தில் பலன் கொடுக்கும் இது 700 கிலோ இலைகள் 5000 கிலோ
காய்கள் கிடைக்கும். இலைப்புள்ளி நோய், இலைக் கருகல் நோய் வந்தால்
மருந்தடிக்க வேண்டும்.

பதப்படுத்த நிழலில் 4 நாட்கள் உலர
வைக்க வேண்டும். பப்பாளிக் காயிலிருந்து கீறி விட்டு பால் எடுத்து அதைப்
பக்குவப் படுத்தி மருந்துக்குப் பயன் படுத்ததுகிறார்கள். இதில் முக்கிய
வேதியப் பருள்கள் கார்பன், கார்போசைடு மற்றும் பப்பேன் உள்ளன.

இதில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளன.
வருட செலவு ரூ.30,000 ஒரு வருடத்திற்கு வரவு ரூ.70,000 ஆக வருட வருமானம்
ரூ.40,000. கோவையில் செந்தில் பப்பாயா நிறுவனம் நாற்றுக் கொடுத்து அதன்
பாலை விலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். விவசாயிகள் நல்ல பயன்
அடைகிறார்கள்.

6. மருத்துவப் பயன்கள்-:
பப்பாளி வயிற்றுப் புழுக்கொல்லுதல், தாய்பால் பெருக்குதல்,
மாதவிலக்கைத் தூண்டுதல், நாடி நடையை உயர்த்தி உடலுக்கு வெப்பம் தருதல்,
மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்குவது. சிறுநீர்ப பெருக்குவது கொழுப்பைக்
கரைத்து உடலை இளைக்க வைப்பது.

பப்பாளி பாலை விளக்கெண்ணையில் கலந்து கொடுக்க வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

பெரியோர் 30 துளி விளக்கெண்ணெய் + 60 துளிப் பால்
இளைஞர் 60 துளி விளக்கெண்ணெய் + துளிப் பால்.
சிறுய குழந்தை 15
துளி விளக்கெண்ணெய் + துளிப் பால்.

வயிற்றை இழுத்துப் பிடித்து
வலிப்பது குன்மம் எனப்படும். காயின் பாலை சேகரித்துக் காய்ச்சினால்
பொடித்து உப்பாகி விடும். இந்த உப்பில் ஒரு கிராம் அளவு நெய் கலந்து
சாப்பிட பித்த குன்மம், பிறவயிற்றுவலி, வாய்வு, வயிற்றுப் புண் குணமாகும்.

இதன் பாலை தேங்காய் நெய்யில் கலந்து தடவ வாய்புண், உதட்டுப்புண் குணமாகும். இப்பாலுடன்
பொரித்த வெங்காரம் சேர்த்துத் தடவ வேர்க்குரு குணாகும். மண்டைக்கரப்பான், சொறிக்கு படிகாரத்துடன் இப்பாலை மத்திதுப் போட குணமடையும்.

பப்பாளிக்காயைச்
சமைத்து வாரம் மூன்று நாள் உண்டு வரத் தடித்த உடம்பு குறையும். பழம்
நாளும் ஒரு துண்டு சாப்பிடலாம். தாய்ப் பால் பெருகும்.

மாத விலக்கில் தடை இருந்தால் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நீங்கும். ஓரிரு மாதக்கருவும்
கலையும். விதையைத் தூள் செய்து 5 கிராம் வெல்லத்தில் சாப்பிட கரு கலையும். தடைபட்ட விலக்கு வெளியைறும்.

புலால் செய்வோர் 2-3 துண்டு பப்பாளிகாயைப் போட்டு வேக வைத்தால் எளிதில் வேகும். பதமாகவும் சுவையாகவும் இருக்கும்.

நாள்தோறும்
1 துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வர கல்லீரல், மண்ணீரல், வீக்கம்
குறையும். செரிபாற்றல் பெருகும் குன்மம், ரணம், அழற்சி, வயிற்றுப்
பூச்சி, மலச்சிக்கல், சிறுநீர்பாதை அழற்சி ஆகியவை தீரும்.

பல்லரணையால் வீக்கம் ஏற்பட்டு வலி இருந்தால் பாலைத் தடவ கரைந்து குணமடாயும். பழம் அதிக அளவில் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு வரும்.

சந்தனம்.
1. மூலிகையின் பெயர் -: சந்தனம்.

2. தாவரப் பெயர் -:
SANTALUM ALBUM.

3. தாவரக்குடும்பம்
-:
SANTALACEAE.

4. வேறு பெயர்கள் -: முருகுசத்தம் என அழைப்பர்.

5. ரகங்கள் -: இதில் வெள்ளை, மஞ்சளை சிவப்பு என மூன்று வகைகைள் உள்ளன. அதில் செஞ்சந்தனம் மருந்தாகப் பயன்படுகிறது.

6. பயன் தரும் பாகங்கள் -: சேகுக்கட்டை மற்றும் வேர்.

7. வளரியல்பு -:
தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகம்
காணப்படும் சிறு மரம். சந்தன மரம் தமிழகக் காடுகளில் தானே வளரக்கூடியது.
இது துவர்ப்பு மணமும் உடையது. தமிழகத்தில் தனிப் பெரும் மரமாகும்.

மாற்றடுக்கில் அமைந்த இலைகளை யுடைய
மரம். இலைகளின் மேற் பகுதி கரும்பச்சை நிறமாயும் அடிப் பகுதி வெளிறியும்
காணப்படும். கணுப்பகுதியிலும் நுனிப் பகுதியிலும் மலர்கள் கூட்டு மஞ்சரியாக
காணப்படும். உலர்ந்த நடுக் கட்டை தான் நறுமணம் உடையது. மருத்துவப்
பயனுடையது.

இதை காடில்லாத மற்ற இடங்களில்
வளர்த்தால் அரசு அனுமதி பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இதன் விலை மிகவும்
அதிகம். இது நன்கு வளர்வதற்கு பக்கத்தில் ஒரு மரம் துணையாக இருக்க
வேண்டும். 2-3 ஆண்டுகளில் பழம் விட ஆரம்பிக்கும்.

இந்தப் பழத்தைப் பறவைகள் உட்கொண்டு
அதன் எச்சம் விழும் இடத்தில் விதை மூலம் நாற்றுக்கள் பரவும். விதை மூலம்
இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுப்
பலன் கிடைக்கும்.

8.மருத்துவப்பயன்கள் -:
சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும்
செயற்படும். வியர்வையை மிகுவிக்கும்,
வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை
எரிச்சல் சூட்டைத் தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப்
படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும், தோல் நோய்களை
நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.

முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் என மருத்துவம்
சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியை குறைக்கும் தன்மை உடையது.

கட்டையை
எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர்
தாமரை, வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும்
உண்டாகும்.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக
அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.

சந்தனத்தூள் 20
கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3
வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு,
மந்தம், இதயப் படபடப்பு குறையும். இதயம் வலிவுறும்.

சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்து இரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை
நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்று பல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.

நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வர மதுமேகம் தீரும்.

சந்தன
எண்ணெய்-தைலம் -‘எசன்ஸ்’ 2-3 துளி பாலில் கலந்து குடிக்க உடல் குளிர்ச்சி
பெறும். நெல்லிக்காய்ச்சாறு, அல்லது கசாயம் 50 மி.லி. யுடன் அரைத்த
சந்தனம் 5-10 கிராம் கலந்து 48 நாள் காலை, மாலை குடிக்க நீரிழிவு
குணமாகும்.

நன்றி: மூலிகை வளம் குப்புசாமி அவர்களுக்கு
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- Empty Re: மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-

Post by Tamil Fri May 03, 2013 6:53 am

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-28

ஓரிதழ் தாமரை..!

மூலிகைகளின் சொர்க்க பூமியான நம் நாட்டில் பிறந்த
சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மனித இனத்தை
எப்படி பாதுகாக்கிறது என்பதை கண்டறிந்து சொன்னார்கள்.

பொதுவாக மனிதர்களைத் தாக்கும்
4448 நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டே குணப்படுத்தும்
முறைகளையும் கூறினார்கள். மேலும் நோய்கள் வரும் முன் காக்க இந்த
மூலிகைகளின் பயன்களையும் கண்டறிந்தனர். உணவின் மூலம் நோய்கள் தாக்காமல்
இருக்கவும் வழி வகை செய்தனர். இதனால்
நம் முன்னோர்கள்
நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலிருந்தே இனம்புரியாத
பல்வேறு நோய்களின் பிடியில் மனித இனம் சிக்கித் தவிக்கின்றது.

இடைப்பட்ட காலத்தில் மூலிகைகள் மீது நாம் காட்டிவந்த அலட்சியமே இதற்குக் காரணம்.

நம் அருகே பரவிக்கிடக்கும் மூலிகைகளை களை என்று எண்ணி அழித்த நாம் இன்று அவற்றின் பயன்களை உணர்ந்து தேடும்போது அவை நம்
கண்ணில்
அகப்படுவதில்லை.
இந்த கட்டுரையில் ஓரிதழ் தாமரையின் மருத்துவ
குணங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். தாமரை என்றவுடன் நீரில் இருக்கும்
என்று நினைத்துவிடாதீர்கள். இது நிலத்தில் வளரும் சிறு செடி வகையாகும்

இதன் இலை, தண்டு, பூ, வேர், காய் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டது.

சிலர் உடல் நலம் பேணாமல் இரவு பகல் பாராமல் பொருள் தேடி அலைகின்றனர். அதிக தூக்கமின்மை,
நேரத்திற்கு சரியாக உணவு அருந்தாமை போன்ற காரணங்களால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது.

இத்தகைய
பாதிப்புகளிலிருந்து விடுபட ஓரிதழ் தாமரை மிகவும் பயனுள்ள மருந்தாகும்.
ஓரிதழ் தாமரையின் சமூலத்தை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து பாலில்
கலந்து காலை, மாலை என
இருவேளையும் அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். நோயின் தாக்கத்திலிருந்து
விடுபட்டவர்களுக்கு உடல் தேற ஒரிதழ் தாமரையின் சமூலம் நல்ல மருந்தாகும்.

மேகவெட்டை
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரிதழ் தாமரை சமூலம், பச்சை கற்பூரம், கோரோசனை
இவற்றை சம அளவு எடுத்து இடித்து பசுவின் நெய்யுடன் கலந்து மேகவெட்டை
தாக்கிய பகுதிகளில் பூசி வந்தால் மேகவெட்டை தீரும்.

உடலில்
உள்ள புண்களின் மீது தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும்.

சுரக்காய்ச்சலால்
அவதியுறுபவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை கசாயம் செய்து அருந்தி வந்தால்
சுரக்காய்ச்சல் நீங்கும். இரைப்பு நோய்க்கு இது அருமருந்தாகும். உடல் எடை
குறைய ஓரிதழ்தாமரை கசாயம் சிறந்தது. இளம் வயது ஆண்பிள்ளைகளுக்கு பருவ வயது
வளர்ச்சியின் போது சில பாதிப்புகளால் இரவில் தூங்கும்போது தாது
வெளியேறும். இதனால் தாது நஷ்டப்பட்டு உடல் தேறாமல் நோஞ்சான் போல்
காணப்படுவர். இவர்கள் ஓரிதழ் தாமரையின் சமூலத்தை இடித்து தேன் அல்லது
பாலில் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் இழந்த
தாதுவை மீட்கலாம். இதனை காயகல்பமாகச் சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

[You must be registered and logged in to see this image.]

இணையத்திலிருந்து
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- Empty Re: மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-

Post by Tamil Sat Apr 12, 2014 9:49 pm

நல்ல இருக்கு  நல்ல இருக்கு  நல்ல இருக்கு
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்- Empty Re: மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum