TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


"மனித நேயமும், சமுதாய அக்கறையும் உள்ள சரியான இணையான தம்பதியர்"

Go down

"மனித நேயமும், சமுதாய அக்கறையும் உள்ள சரியான இணையான தம்பதியர்" Empty "மனித நேயமும், சமுதாய அக்கறையும் உள்ள சரியான இணையான தம்பதியர்"

Post by ஜனனி Sun Jan 27, 2013 6:41 pm

"மனித நேயமும், சமுதாய அக்கறையும் உள்ள சரியான இணையான தம்பதியர்"
"மனித நேயமும், சமுதாய அக்கறையும் உள்ள சரியான இணையான தம்பதியர்" Jodi10
அரசுப் பணி புரிபவர்கள் சமூகப் பணியிலும் சாதிக்கலாம் என்று நிரூபித்துள்ளார் திரு.இளங்கோவன் அவர்கள்.

தென்னக ரயில்வேயின் துணைப் பொது மேலாளராகப் பணிபுரியும் இவர் "சுடர்' என்ற
அமைப்பின் மூலம் 12ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத பல ஏழை மாணவிகளின்
மேற்படிப்புக்கு வழி ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்துடன் சமுதாய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இரண்டு ஆவணப் படங்களையும்
இயக்கியுள்ளார். இவருடைய மனைவி கீதாவும் ஓர் அரசு ஊழியர். இவர்
பெண்களுக்காக "கூடு' என்கிற அமைப்பை நடத்திக் கொண்டிருப்பதோடு குறும்பட
இயக்குநராகவும் உள்ளார். இருவரையும் நாம் சந்தித்தோம்.

முதலில் நம்மிடம் பேசினார் இளங்கோவன்.
""அரசுப் பணியில் இருந்தாலும் தனிப்பட்ட மன நிம்மதிக்காக ஏதேனும் செய்ய
வேண்டுமென்று தோன்றியது. அப்போதுதான் நண்பர்களுடன் இணைந்து "சுடர்' என்ற
அமைப்பைத் தொடங்கினேன். ஆதரவற்ற பெண் குழந்தைகளின் மேற்படிப்புக்கு இந்த
அமைப்பின் மூலமாக உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
உதாரணத்திற்கு நான்
மதுரையில் பணிபுரிந்தபோது அங்கிருந்த அரசுக் காப்பகத்திற்கு செல்ல
நேர்ந்தது. அங்கே 12ஆம் வகுப்பு வரை அரசின் சலுகையில் படிக்கும் ஏழைப்
பெண்கள் பலர் அதன்பின் செல்லும் திசை புரியாமல் திகைத்துக் கொண்டிருப்பது
தெரிந்தது.
அவர்களின் பெற்றோருக்கும் போதிய கல்வியறிவு இல்லாத நிலையில்
வறுமை காரணமாக பல மாணவிகள் கூலி வேலைக்கும், மில் வேலைக்கும் சென்றனர்.
அவர்களுக்கு தொழிற்கல்வி கொடுக்க நினைத்தோம். கேட்டரிங், நர்ஸிங்
அஸிஸ்டென்ட், என்ஜினியரிங் போன்ற துறைகளில் படிக்க வைத்தோம். இன்று பலர்
நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதில் சரண்யா என்ற மாணவி என்ஜினியரிங்
படித்துவிட்டு தற்போது ஐ.ஏ.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய
படிப்புக்கான முழு செலவையும் "சுடர்' அமைப்பே ஏற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது சென்னையிலும் இந்த சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
மதுரையில் உள்ள காப்பகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இலவச டியூஷன் நடத்திக்
கொண்டிருக்கிறோம். பல உயர் அதிகாரிகளை அழைத்துச் சென்று அவர்களுக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரைச்
சேர்ந்த மம்சாபுரம் பகுதியில் மாணவர்களுக்காக இலவச பிரெüஸிங் சென்டரும்
நடத்துகிறோம்.
இது தவிர நான் இரண்டு ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளேன்.
முதல் படம் "ஆராயா தீர்ப்பு'. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா முழுவதும் 500
சாதியினரை "குற்றப்பரம்பரை' என்ற பட்டியலில் வைத்திருந்தார்கள். அவர்கள்
மீது 'ரேகைச் சட்டம்' உள்ளிட்ட பல அடக்குமுறைகள் இருந்தன. தமிழ்நாட்டில் 30
வகையான சாதியினர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள். அதில்
"கல்ஒட்டர்' என்று சமூகமும் உண்டு.
ஆங்கிலேயர் ஆட்சியில்
குற்றப்பரம்பரை சட்டத்தால் துன்புறுத்தப்பட்ட அவர்கள் தற்போதும்
துன்பத்தையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அந்தப் படத்தில்
பதிவு செய்திருந்தேன்.
மதுரையிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும்
கல்ஒட்டர் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். குற்றவாளிகள் அகப்படாத பல
திருட்டு வழக்குகளில் அந்த சமுதாய இளைஞர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டி
சிறையில் அடைக்கும் கொடுமையை காவல்துறை செய்து கொண்டிருப்பதை
ஆதாரபூர்வமாகக் கூறியிருந்தேன்.
இந்த ஆவணப் பட வெளியீட்டு விழாவில்
உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டர்கள். இந்தப் படத்தைப்
பார்த்த அப்போதைய மதுரை உயர்நீதி மன்ற நீதிபதி அக்பர் அலி ஒரு வழக்கின்
தீர்ப்பின்போது ஓர் உத்தரவிட்டார். ""இனி கல்ஒட்டர் சமுதாயத்தைச்
சேர்ந்தவர்களை காவல் துறையினர் தன்னிச்சையாகக் கைது செய்யக் கூடாது.

தன்னார்வ அமைப்பினரிடம் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய வேண்டும்'' என்றவர்
அதற்காக ஒரு தன்னார்வ அமைப்பையே நியமித்தார். அதையே இந்தப் படத்திற்குக்
கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
"கல்ஒட்டர் சமூகத்தில்
பிறந்ததற்காக பள்ளியிலும் பல கேலிகளை அனுபவிக்கிறோம்' என்று பல மாணவ,
மாணவிகள் அந்த ஆவணப் படத்தில் கூறியிருந்தார்கள். தற்போது அவர்களில் பல
மாணவ, மாணவிகளை என்.ஜி.ஓ.க்கள் படிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

அடுத்து திருநங்கைகளின் வாழ்வை அடிப்படையாக வைத்து "அஃறிணைகள்' என்ற ஆவணப்
படத்தை இயக்கினேன். லிவிங் ஸ்மைல் வித்யா, ஏஞ்செல் கிளாடி ஆகிய இரண்டு
திருநங்கைகளின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களே இந்தப் படம். திருநங்கைகளின்
வாழ்வாதாரப் பிரச்னைகளை இந்தப் படம் அலசியது.
இந்தப் படத்திற்கு சரத்
சந்திரர் நினைவு விருது கிடைத்தது. இரண்டு படங்களும் த.மு.எ.க.ச.வின்
விருதுகளைப் பெற்றன. மும்பையில் செயல்படும் ஃபிலிம் சொûஸட்டி அமைப்பு உலகம்
முழுக்க இந்தப் படத்தை திரையிடும் முயற்சியில் இறங்கியுள்ளது'' என்றார்.
தொடர்ந்து நம்மிடம் பேசினார் கீதா இளங்கோவன்:
""நான் மதுரையில் பணிபுரிந்தபோது அங்கு "கூடு' என்ற அமைப்பை ஆரம்பித்தேன்.
நான் தற்போது சென்னையில் வசித்தாலும் அந்த அமைப்பு அங்கே இயங்கிக்
கொண்டிருக்கிறது. பெண்கள் பலர் இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த
அமைப்பின் மூலம் இலவச நாடகம் நடத்துகிறோம். "பெண்திரை' என்ற தலைப்பில்
பெண்கள் இயக்கிய குறும்படத்தைத் திரையிட்டோம். "வாழும் பெண்களின் வாய்மொழி
வரலாறு' என்ற தலைப்பில், பிணம் எரிப்பது போன்ற தொழிலைச் செய்யும் பெண்களை
அழைத்து வந்து அவர்களின் வாழ்க்கையைப் பிறர் அறிந்து கொள்ள வைத்தோம்.

இதுதவிர நான் "லிட்டில் ஸ்பேஸ்' என்று குறும்படத்தை இயக்கியுள்ளேன். மூளை
வளர்ச்சியற்ற குழந்தைகளைப் பற்றிய படம் இது. பொது இடங்களில் அவர்கள் படும்
கஷ்டங்கள் அவர்களின் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கிறது என்பதை இந்தப்
படத்தில் கூறியிருந்தேன்.
ஹைதராபாத்தில் நடந்த "சர்வதேச குழந்தைகள்
திரைப்பட விழா'வில் இந்தப் படம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
'ஸ்கார்ஃப்' என்கிற அமைப்பின் விருதையும் இந்தப் படம் பெற்றது. இதையடுத்து
தற்போது "மாதவிடாய்' என்ற குறும்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன்.

இதற்காக பல குக்கிராமங்கள் தோறும் பயணம் செய்து படிப்பறிவில்லாத பெண்கள்
படும் துயரத்தைப் பதிவு செய்துள்ளோம். கிராமப்புற பெண்களுக்கு இதைப் பற்றிய
விழிப்புணர்வே இல்லை. உதாரணத்திற்கு மதுரை அருகிலுள்ள டி.கல்லுப்பட்டி
என்ற கிராமத்திற்கு இந்தப் படம் தொடர்பாக சென்றோம்.
அந்தக்
கிராமத்திலும் அதைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் மாத விலக்கான பெண்கள்
அனைவரையும் அந்த நாட்கள் முடியும் வரை ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள ஒரு
சிறிய வீட்டில்தான் தங்க வைக்கிறார்கள். அந்த வீட்டில் மின்சார வசதிகூட
இல்லை. அந்தப் பெண்கள் அந்த நாட்களில் ஊருக்குள் வரக் கூடாது. இதைவிட
கொடுமை, பிரசவம் ஆன பெண்களை 30 நாட்களுக்கு அந்த வீட்டில்தான் தங்க
வைக்கிறார்கள். பிறந்த பச்சிளங் குழந்தையுடன் அவர்கள் ஊருக்கு ஒதுக்குப்
புறமாக தனியே இருக்கும் அந்த வீட்டில்தான் வசிக்க வேண்டும். முதல் மூன்று
நாட்களுக்கு மட்டும் ஒரு வயதான பெண்மணி அவருக்கு உதவியாக இருப்பார். பிறகு
அவரும் கூலி வேலைக்குச் சென்றுவிடுவார். இந்தப் பெண்களுக்கு சாப்பாடு
மட்டும் அவ்வப்போது யாரேனும் சென்று கொடுப்பார்கள்.
அதுவும் சில
நாட்களுக்குக் கிடைக்காது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கேட்டால்,
"சாமிக்கு பயந்து இவ்வாறு செய்கிறோம்' என்கிறார்கள். இவ்வாறு படித்தவர்கள்
முதல் பாமரர்கள் மத்தியில் வரை மாதவிலக்கு தொடர்பாக உள்ள தேவையற்ற
அறியாமைகளை போக்கும் விதமாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்'' என்று
முடித்தார் கீதா இளங்கோவன்.


- நன்றி தினமணி

Their Projects:

https://www.youtube.com/watch?v=7tDvkLE4RM8&feature=plcp

https://www.youtube.com/watch?v=CYZGsk-f88U&feature=plcp

https://www.youtube.com/watch?v=oiB6oeGb2t8

Mr.Ilangovan Balakrishnan's Interview.

https://www.youtube.com/watch?v=QNbkFAxIYSM&feature=plcp
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஐ.நாவுக்கு இதுவே சரியான தருணம்: மனித உரிமை கண்காணிப்பகம் !
» மனித மூளைக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், லடாக்கில் உள்ள காந்தமலை.
» இன்று உலக மனித உரிமை நாள்! - மனித உரிமை முற்றிலும் கருவருக்கப்பட்ட இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஐ.நா. மனித உரிமை-அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.
» நாங்கள் நிலைய கலைஞர்களா? -கமலின் பதிலும், அக்கறையும்!
» காணாமல் போன பிரான்ஸ் நாட்டு நாயை தேடும் தம்பதியர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum