TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இதைக் கண்டிப்பாகப் படியுங்க!

2 posters

Go down

இதைக் கண்டிப்பாகப் படியுங்க! Empty இதைக் கண்டிப்பாகப் படியுங்க!

Post by ஜனனி Thu Jul 12, 2012 12:57 pm

மிகச்சிறப்பாக
எழுதப்பட்ட கட்டுரை (என்னுடைய பார்வையில்). நான் எழுதி இருந்தாலும் இதையே
தான் கூறி இருப்பேன் ஆனால், தற்போது இவர்கள் அட்டகாசத்தால் வெறுப்பின்
எல்லைக்கு போய் விட்டதால், தற்போதெல்லாம் இதை எழுதப் பிடிப்பதில்லை.
எரிச்சல் தான் வருகிறது. நான் கூற நினைத்ததை அப்படியே இதில் கண்டதால்
உங்களுடன் பகிர்கிறேன். இதை நீங்க உடனே படிக்க வேண்டும் என்பது கூட
அவசியமில்லை, உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ, என்ன நடக்கிறது நமது
நாட்டில் என்று, தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்
படியுங்கள். கட்டுரை பெரியது தான், ஆனால் அனைத்துப் பகுதிகளையும்
எளிமையாகத் தொட்டு வந்து இருக்கிறது.

இதில் கூறப்பட்டுள்ள சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளன என்றாலும், இதில் உள்ள சம்பவங்கள், நடவடிக்கைகள் உண்மை தான்.

இந்தக் கட்டுரையின் உரிமையாளர் விகடன். இதைப் பகிர்ந்து கொண்ட பிரியமுடன் பிரபுவிற்கு நன்றி.

இதைக் கண்டிப்பாகப் படியுங்க! Manmohan-Singh-300x215சுதந்திர
இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம்
செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு
முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா?
உண்மை!

சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது
உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம்,
பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும்
கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு
முன்… சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா
முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி
இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.

சிங்கின் ஆட்சி முதலில் இந்த நாட்டைப்
பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று இரண்டு தேசமாகப்
பிளந்தது. பிறகு, அது மெள்ள மெள்ள சரியத் தொடங்கியது. இந்தியா இப்போது
சரிந்துகொண்டு இருக்கும் தேசம்… ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல அது
சரிகிறது… அதன் பொருளாதாரம், கூட்டாட்சித் தத்துவம், சர்வதேச உறவுகள்,
பாதுகாப்பு எனச் சகல கட்டுமானங்களும் சிதறுகின்றன!

அடிவாங்கிய அஸ்திவாரம்!

பிரதமராக ஆட்சிப் பொறுப்பேற்றபோது,
”நாட்டின் வளர்ச்சியைக் கல்வியில் இருந்து தொடங்கி இருக்கிறோம்.
அனைவருக்குமான வளர்ச்சியின் அஸ்திவாரம் அதுதான்” என்றார் சிங். நாடு
முழுவதும் 1964-ல் ஆய்வுசெய்த கோத்தாரி ஆணையம், இந்தியா கல்வித் துறையில்
தன்னிறைவு அடைய வேண்டும் என்றால், அதற்கு நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில்
ஆறு சதவிகிதத் தொகையைக் கல்வித் துறைக்கு ஒதுக்க வேண்டும் என்றது. ஆனால்,
தொடர்ந்து வந்த காங்கிரஸ் அரசுகள் அதில் பாதி அளவை ஒதுக்கீடு செய்யவே
யோசித்தன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி
பொறுப்பேற்றபோது, கல்வித் துறையின் தேவை 16 சதவிகித ஒதுக்கீட்டைக் கோரியது.
நிச்சயம் இனிமேலாவது ஆறு சதவிகித ஒதுக்கீடு செய்வோம் என்றார் சிங். ஆனால்,
அவரது வார்த்தைகள் அவருடைய காதுகளுக்கே கேட்காமல்போயின. விளைவு, அரசுப்
பள்ளிகளின் வீழ்ச்சி! உலகில் கல்விக்குக் குறைந்த அளவே ஒதுக்கும் நாடுகள்
தொடர்பான ‘யுனெஸ்கோ’வின் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறது இந்தியா.
ஆனால், சிங் பொறுப்பேற்றதற்குப் பிறகான இந்த எட்டு ஆண்டுகளில் நாடு
முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 18.84 சதவிகிதத்தில் இருந்து
26.09 சதவிகிதமாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, மணிப்பூர் போன்ற வட
கிழக்கு மாநிலங்களில் மூன்றில் இரு பள்ளிகள் என்ற அளவுக்குத் தனியார்
ஆதிக்கம் பள்ளிக் கல்வியில் ஓங்கி இருக்கிறது.

கல்வித் தரத்திலும் இந்தியா
ஜொலிக்கவில்லை. சர்வதேச அளவிலான பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் முன்னேற்ற
அமைப்பு (ஓ.இ.சி.டி.) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு இந்தியக் கல்வித்
துறைக்குக் கிடைத்த மிகப் பெரிய அடி. 15 வயதுக்கு உட்பட்ட இந்திய மாணவர்கள்
பாடங்களை வாசிப்பதிலும் அறிவியல் பாடங்களி லும் கடைசி வரிசையில் இருப்பதை
அந்த அமைப்பு நடத்திய சர்வதேச அளவிலான தேர்வு முடிவுகள் கூறின. அரசு சாரா
நிறுவனமான ‘பரதம்’ அமைப்பின் ஆய்வறிக்கையோ (அசெர்) இந்தியாவில்
பெரும்பான்மையான ஐந்தாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்புப்
பாடங்களையே படிக்க முடியவில்லை என்கிறது.

பெண் கல்வியில் ஆப்பிரிக்கா நீங்கலாக
ஆஃப்கன், பூடான், பாகிஸ்தான், பபுவா நியு கினியா ஆகிய ஐந்து நாடுகள்தான்
இந்தியாவைவிடக் கீழ் நிலையில் இருக்கின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம்,
கல்வி உரிமைச் சட்டம் என அரசின் எந்த நடவடிக்கையாலும் ஆரம்பக் கல்வியை
மீட்டெடுக்க முடியவில்லை. உயர் கல்வியோ முழுக்க முழுக்கத் தனியாருக்குத்
தாரை வார்க்கப்பட்டுவிட்டது!

சுகாதாரத்தைப் பீடித்த நோய்!

ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளை
எடுத்துக்கொண்டால், இந்தியா உலகிலேயே அடிமட்ட நிலையில் இருக்கிறது. சிசு
மரணத்தை எடுத்துக்கொண்டால், உலகில் ஆஃப்கன், கம்போடியா, மியான்மர்,
பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக மோசமான நிலையில் இந்தியாதான்
இருக்கிறது. தொற்றா நோய்கள் எனப்படும் புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய்
போன்றவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பத்தில் எட்டு
மரணங்களுக்குக் காரணம். சுகாதாரத்துக்கு அரசு கிட்டத்தட்ட 600 மடங்கு
தன்னுடைய ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய சூழல். ஆனால், அரசோ ஏற்கெனவே உள்ள
அரசு மருத்துவமனைக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக தனியாரை
ஊக்குவிக்கும் மருத்துவக் காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.

சிங் ஆட்சியின் இந்த எட்டு ஆண்டு
காலகட்டத்தில் மட்டும் வசதியின்மையால் சிகிச்சை பெற முடியாதவர் களின்
எண்ணிக்கை நகர்ப்புறங்களில் 10 கோடியில் இருந்து 21 கோடியாகவும்
கிராமப்புறங்களில் 15 கோடியில் இருந்து 24 கோடியாகவும் அதிகரித்து உள்ளது.
71 சதவிகிதம் பேர் தனியார் மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்பட்டனர். உலக
சுகாதார நிறுவனம், 70 சதவிகித இந்தியர்கள் தங்கள் வருமானத்தின்
பெரும்பகுதியை மருந்துக்காகச் செலவழிக்கும் நிலையை மாற்ற இந்தியா நடவடிக்கை
எடுக்க வேண்டியது அவசியம் என்றது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு,
12-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கு
என 2.5 சதவிகிதம் தொகையை ஒதுக்கீடு செய்வோம் என்று கூறியது. ஆனால், இப்போது
அதையும் 1.4 சதவிகிதமாக்கும் முயற்சியில் இருக்கிறது. பொது
சுகாதாரத்துக்கு அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதற்கு 2010-ல்
மட்டும் மலேரியாவுக்கு 46,800 இந்தியர்கள் பலியானது ஒரு சின்ன உதாரணம்!

காத்திருக்கும் வெடிகுண்டு!

உலகின் மிகப் பெரிய ஆயுத இறக்குமதியாளராக
இந்தியா உருவெடுத்தது சிங் ஆட்சிக் காலத்தில்தான். 2007-2011-க்கு இடையே
உலகில் நடந்த ஆயுத ஏற்றுமதி யில் 10 சதவிகிதம் இந்தியாவின் பங்கு. ஆனால்,
”ஒரு போர் வெடித்தால் இரண்டு நாளைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க வெடி
பொருட்கள் நம்மிடத்தில் இல்லை” என்று நம் பாதுகாப்பு அமைப்பின் லட்சணத்தை
நாட்டின் தரைப் படைத் தளபதியே போட்டு உடைத்ததும் சிங் ஆட்சிக்
காலத்தில்தான். இந்தியாவின் மீது கிட்டத்தட்ட ஓர் அறிவிக்கப்படாத போர்த்
தாக்குதலாக மும்பைத் தாக்குதல் நடந்தது. கடல் வழியே நடந்த அந்தத்
தாக்குதலுக்குப் பிறகும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பாடம்
கற்றுக்கொள்ளவில்லை என்பதை அடுத்த சில மாதங்களிலேயே பாதுகாப்புப் படையினர்
யாருக்கும் தெரியாமல் வர்கோவில் தரை தட்டி நின்ற 1,000 டன் கப்பல்
‘எம்.வி.பாவிட்’ அம்பலமாக்கியது.

பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருக்கும்
இந்தியாவின் அதிபயங்கரக் குற்றவாளிகள் என்று பாகிஸ்தான் அரசுக்கு உள்துறை
அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய 50 பேர் பட்டியலில் மும்பை, தானேயில்
வசிக்கும் உள்ளூர் வியாபாரியான வஜுல் கமர்கான் பெயர் இருந்ததைப் பார்த்து
சர்வதேச உளவுத் துறைகள் நக்கல் அடித்தன. காமன்வெல்த் போட்டிகளின்போது நேரு
மைதானத்துக்குள் அம்மோனியம் நைட்ரேட் வெடிமருந்தைக் கடத்திச் சென்று
ஆஸ்திரேலியத் தனியார் தொலைக்காட்சி படம் காட்டியபோது, நம்முடைய பாதுகாப்பு
அமைப்புகளைப் பார்த்து உலகமே சிரித்தது!

அணு சக்தித் துறையில் சர்வதேசத்தின்
போக்கை ஃபுகுஷிமாவுக்கு முன் – ஃபுகுஷிமாவுக்குப் பின் என்று இரு
பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஆக்கபூர்வ அணு சக்தி என்பதும் அணு சக்திப்
பாதுகாப்பு என்பதும் வடிகட்டிய பொய் வாதங்கள் என்பதை நிரூபித்த இடம்
ஃபுகுஷிமா. அணு சக்தி மின்சார உற்பத்தியில் உலகுக்கே முன்னோடியாக இருந்த
ஜப்பான், ஃபுகுஷிமாவுக்குப் பின் தன்னுடைய நாட்டில் உள்ள அத்தனை உலைகளையும்
மூடியது. அணு சக்தி வேண்டுமா, வேண்டாமா என்று இத்தாலி நடத்திய பொது
வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்களின் விருப்பப்படி, அணு சக்திக்கு எதிரான
முடிவை இத்தாலி எடுத்தது.

ஜெர்மனி தன்னுடைய நாட்டில் உள்ள அனைத்து
அணு உலைகளையும் 2022-க்குள் மூடப்போவதாக அறிவித்தது. தன்னுடைய முதலாவது
ஆட்சிக் காலத்தில் இந்திய அணு சக்தித் துறையைப் பன்னாட்டுப்
பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிட்ட சிங்கின் அரசோ, ஃபுகுஷிமாவுக்குப்
பிறகுதான் அணு சக்தித் துறையை வெறித்தனமாக உசுப்பிவிட ஆரம்பித்தது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அடித்தட்டு மக்களின் பெருந்திரள் அறவழிப்
போராட்டத்தின்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக
தேசத் துரோக வழக்குகளைப் பதிவுசெய்தது, இந்த அரசின் குரூர முகத்தின்
வெளிப்பாடுகளில் ஒன்று. கொடுமை என்ன என்றால், அணு சக்தி நாடுகளில்,
பாதுகாப்பான கட்டமைப்புக்கான தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 32
நாடுகளில், இந்தியா இருப்பது 28-வது இடத்தில்!

வீங்கும் பொருளாதாரம்!

சிங் பொருளாதாரத்தில் பெரிய நிபுணராக
இருக்கலாம். ஆனால், அவருடைய அரசுக்கு மரண அடி விழுந்திருப்பதே பொருளாதாரத்
துறையில்தான். சர்வதேச அளவிலான பொருளாதாரத் தர மதிப்பீட்டு நிறுவனமான
‘ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ்’, இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம்
‘நிலைத்த தன்மை’ என்ற நிலையில் இருந்து ‘எதிர்மறைத் தன்மை’ என்ற நிலைக்குப்
போகிறது என்று கடந்த ஏப்ரல் மாதம் எச்சரிக்கை விடுத்தது. இந்த வாரம்
‘ஃபிட்ச்’ நிறுவனம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இப்படி எச்சரிக்கைக்கு
உள்ளாகும் நாடுகள் எல்லாம் படிப்படியாகப் பொருளாதார மந்தநிலையை நோக்கிப்
போய்க்கொண்டு இருக்கின்றன என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

இந்த மதிப்பீடுகள் எல்லாம் இந்தியாவில்
செல்லாது என்றார் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. ஆனால், மத்தியப்
புள்ளியியல் நிறுவனம் தந்துள்ள தகவல்களின்படி பார்த்தாலே, இந்த ஆண்டு
நாட்டின் மொத்த வளர்ச்சி 6.5 சதவிகிதமாகத்தான் இருக்கும். கடந்த காலாண்டில்
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வெறும் 5.3 சதவிகிதம்தான். கடந்த
ஒன்பது ஆண்டுகளில் மிகக் குறைந்தபட்ச அளவு இது. அதாவது, தாங்கள்
பொறுப்பேற்பதற்கு முன் இருந்த காலகட்டத்துக்குப் பொருளாதாரத்தைத் தள்ளி
இருக்கின்றனர் சிங்கும் அவருடைய சகாக்களும்.

விலைவாசி, பணப்புழக்கம், பணவீக்கம் என்ற
கணக்கை எல்லாம் விடுங்கள். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு
பொறுப்பேற்றபோது ஒரு டீயின் விலை 2. இன்றைக்கு 6. மூன்று மடங்கு உயர்ந்து
இருக்கிறது. சென்னை நகரில் கடந்த ஆண்டு 4,000 வாடகைக்குக் கிடைத்த 300 சதுர
அடி வீட்டின் இன்றைய வாடகை 6,000. நம்முடைய வருமானம் எத்தனை மடங்கு
உயர்ந்து இருக்கிறது?

உலகிலேயே பெட்ரோலியப் பொருட்களை அதிகம்
பயன்படுத்துவதில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஒரு நாடு, அதுவும் தன்னுடைய
பெட்ரோலியத் தேவையில் 70 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில்
இருக்கும் நாடு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில்
என்ன செய்ய வேண்டும்? நகைமுரணாக, இப்படி ஒரு காலகட்டத்தில்தான் இந்தியாவில்
வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்தது. பெட்ரோல் விற்கும்
இரான்கூட ரேஷன் முறையைக் கொண்டுவந்தது. ஆனால், பொருளாதாரச் சூரர் சிங்கின்
அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதேபோல, விலைவாசி உயர்வைத்
தடுக்க ஊகபேர வணிகத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்ற கோரிக்கைக்கும்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செவி சாய்க்கவில்லை.

இந்திய விவசாயிகள் கிராமங்களைவிட்டு
நகரங்களுக்கு இடம்பெயர்தல் என்பது காலம்காலமாகத் தொடரும் சாபக்கேடு. ஆனால்,
விவசாயிகளை மாநிலங்களுக்கு இடையே அகதிகளாக இடம்பெயரவைத்தது ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசுக்கே உரிய தனித்துவ சாதனை. இன்றைக்கு உத்தரப்
பிரதேசம், பீகார், ஜார்கண்ட், சட்டீஸ்கர், மணிப்பூர், ராஜஸ்தான்
மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையையும் பெங்களூரையும்
திருவனந்தபுரத்தையும் நோக்கிப் படையெடுக்கிறார்கள் என்றால், என்ன காரணம்?

ஓர் இந்திய விவசாயி கடனாளியாகப்
பிறக்கிறான், கடனாளியாகவே வாழ்கிறான், கடனாளியாகவே சாகிறான். அலங்கார
வாக்கியம் அல்ல இது. அரசின் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அமைப்பு சொல்லும்
உண்மை. நாட்டின் இரண்டு விவசாயிகளில் ஒருவர் கடனாளியாக இருக்கிறார்.
இன்னொருவர் கடன் வாங்கும் நிலையில் இருக்கிறார். ஐக்கிய முற்போக்குக்
கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் அரை மணி நேரத்துக்கு ஒரு விவசாயியின்
உயிர் இந்த மண்ணைவிட்டுப் பிரிகிறது. உலகிலேயே மிகப் பெரிய தற்கொலைப்
பிரதேசம்… மகாராஷ்டிர மாநிலத்தின் விதர்பா!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது
ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் 60,000 கோடிக்
கடன்களை ரத்துசெய்ததை வரலாற்றுச் சாதனையாகச் சொல்லிக்கொண்டார் சிங். ஆனால்,
அதே அரசு பெருநிறுவனங்களுக்கு மானியமாகவும் வரிச் சலுகையாகவும் கடந்த
ஆண்டு மட்டும் வாரி வழங்கியது 4.87 லட்சம் கோடி. வறுமை ஒழிப்புக்காக நாடு
முழுவதும் உள்ள மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அளிக்கப்பட்ட மொத்த
மானியத்துக்குச் சமமானது இது.

நாட்டுக்கு சிங் அறிமுகப்படுத்திய புதிய
பொருளாதாரக் கொள்கை நம்மை எவ்வளவு சுருட்டி இருக்கிறது என்பதை டாலருக்கு
எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி எளிமையாகச் சொல்லிவிடும். 1991-ல் ஒரு
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21. இப்போது 57.00.

சர்வம் ஊழல்மயம்!

ஞாபகம் இருக்கிறதா? சிங் அரசை நம்பிக்கை
வாக்கெடுப்பில் காப்பாற்ற ஆளும் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக பா.ஜ.க.
உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டிய காட்சி!
இந்தியர்களுக்கு கோடி என்ற வார்த்தையின் போதாமையை உணர்த்திய ஆட்சி ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டில்
1,76,379,00,00,000 முறைகேடுநடந்து இருக்கிறது என்ற செய்தி வெளியானபோது,
பெரும்பான்மை இந்தியர்கள் அதை எப்படிப் படிப்பது என்று தடுமாறிப்
போனார்கள். ஏதோ… அரசியல்வாதிகள், நிர்வாக அதிகாரிகள்தான் ஊழல் செய்வார்கள்
என்று இருந்த சூழலை உடைத்து எறிந்ததும் இந்த அரசின் சாதனைதான். சிங்கின்
ஆட்சியில் ஊழல் நடக்காத, ஊழலில் ஈடுபடாத அரசுத் துறையினரே இல்லை.

”ராணுவக் கொள்முதலில் நடக்கும் ஊழலுக்கு
ஒத்துழைக்க எனக்கே லஞ்சம் கொடுக்க முயன்றார்கள்!” என்றார் நாட்டின் தரைப்
படைத் தளபதியாக இருந்த வி.கே.சிங். முன்னாள்தளபதி ஜெனரல் கபூர் உள்ளிட்ட
ராணுவ உயர் அதிகாரிகள் பலர், ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேட்டிலும் நில
ஒதுக்கீடு முறைகேடுகளிலும் சிக்கினர். நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்த
கே.ஜி.பாலகிருஷ்ணன் முறைகேடு குற்றச்சாட்டுகளில் சிக்கினார்.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சுதந்திர
இந்தியாவின் முதல் பதவி நீக்க விசாரணையை நாடாளுமன்றத்தில் நீதிபதி சௌமித்ர
சென் எதிர்கொண்டார். சுரங்கக் கொள்ளையர்கள் ரெட்டி சகோதரர்கள் மீதான
வழக்குகளில் ஜனார்த்தன ரெட்டியை விடுவிக்க, 5 கோடி லஞ்சம் வாங்கிய ஆந்திர
மாநில சி.பி.ஐ. நீதிபதி பட்டாபி ராமராவ் கைது செய்யப்பட்டார். பிரதமரின்
கட்டுப் பாட்டில் இயங்கும் நாட்டின் அறிவியல் தலைமையகமான ‘இஸ்ரோ’ 4.5
லட்சம் கோடி அலைக்கற்றை முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளானபோது, தேசமே
அதிர்ந்தது. சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியதற்குப் போட்டியாக,
காமன்வெல்த் போட்டிகளை 40 ஆயிரம் கோடிகளைச் செலவிட்டு நடத்தினார் சிங்.
ஆனால், அது இந்தியாவுக்குப் புகழ் சேர்க்கவில்லை.

சுரேஷ் கல்மாடி மூலம் இந்தியாவின் ஊழல்
முகம் சர்வதேச அளவில் வெளிப்படத்தான் வழிவகுத்தது. கட்டிய பூச்சு
காய்வதற்குள் நேரு மைதானம் முன் அமைக்கப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததும்,
ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள டிரெட்மில் இயந்திரங்கள் ஒன்பது லட்ச ரூபாய்
வாடகைக்கு எடுக்கப்பட்டதும் யாராலும் மறக்க முடியாத சம்பவங்கள். இப்போது
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் 10 லட்சம் கோடி
முறைகேடு இந்தியப் பிரதமரின் காலைப் பாம்பாகச் சுற்றிக்கொண்டு நிற்கிறது.
இவ்வளவுக்குப் பிறகும், ‘திருவாளர் பரிசுத்தம்’ தோற்றத்தோடு சிங்
உலவிக்கொண்டு இருப்பதுதான் அவருடைய சாதனைகளின் உச்சம்!

கறுப்புப் பூதம்!

ரேஷன் கடைக்கு 12.37-க்குக் கொடுக்கப்
படும் மண்ணெண்ணெய், வெளிச் சந்தையில் 40-க்கு விற்கப்படுவது யாரால்? இந்திய
ஆறுகளின் மடி வறளும் அளவுக்கு மணல் கொள்ளை அடிக்கப்படுவது யாரால்? இந்திய
ரியல் எஸ்டேட் துறை யாருடைய கண் அசைவில் இயங்குகிறது? கள்ளச் சந்தை,
சூதாட்டம், கடத்தல், ஹவாலா… அட, நாட்டின் பொருளாதாரக் கேந்திரமான மும்பை
யார் கையில் இருக்கிறது? நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில்
ஒரு பங்கு மாஃபியாக்கள் கையில் போனது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்
முக்கியமான சாதனைகளில் ஒன்று.

உலகிலேயே தரமான இரும்புத் தாது கிடைக்கும்
பெல்லாரியை உலகமே பார்க்க… ரெட்டி சகோதரர்கள் சுரண்டித் தின்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஓட்டு போடச் சென்றாலே, போலீஸார் போட்டுத்தள்ளிவிடுவார்களோ
என்று பயந்து பதுங்கிக்கிடந்த அருண் காவ்லி மகாராஷ்டிரத்தின் சட்டப்பேரவை
உறுப்பினராகப் பவனிவந்தார். ஜார்கண்டில் மட்டும் ஆண்டுக்கு 7 லட்சம் டன்
நிலக்கரி சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. சுரங்கக் கொள்ளையில் தரகு
பார்த்தே உலகெங்கும் உள்ள வங்கிகளில் 1,800 வங்கிக் கணக்குகளை மதுகோடா
தொடங்கினார். அரசின் எதிர் வினை என்ன?

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஒரு
வரலாற்று வாய்ப்பைக் காலம் கொடுத்தது. இந்தியர்களின் பணம் 22.5 லட்சம்
கோடி வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதை
அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அமைப்பு ஒன்று பட்டியலிட்டது. இந்தியாவின்
மொத்த உள் நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட சரி பாதித் தொகை இது. சிங்கும்
பிரணாப்பும் சிதம்பர மும் நினைத்திருந்தால், கறுப்புப் புள்ளிகளைக் கட்டம்
கட்டி அவர்கள் மூலமாகவே இந்தப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியும்.
ஆனால், இந்த விவரங்கள் வெளியானதையே அரசு ஒரு சங்கடமாகக் கருதியது.

கடந்த 2008-ல் ஜெர்மனி அரசு 50
இந்தியர்களைப் பற்றிய விவரங்களை இந்திய அரசிடம் கொடுத்தது. எல்லாம்
கறுப்புப் புள்ளிகள். அரசு அலட்டிக்கொள்ளவே இல்லை. ”அந்தப் பட்டியலில்
இருக்கும் விவரங்களை வெளியிடுவதில் அரசுக்கு என்ன சிரமம்?” என்று உச்ச
நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அரசோ, சர்வதேச உடன்படிக்கைகளைக் காரணம்
காட்டி சப்பைக் கட்டு கட்டியது.

2011-ல் சுவிஸ் வங்கி ஒன்றின் முன்னாள்
ஊழியர் ஒருவர் கறுப்புப் புள்ளிகள் 2,000 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை
‘விக்கிலீக்ஸ்’ ஜூலியன் அசாஞ்சேவிடம் அளித்தார். இதற்குப் பின், ‘சுவிஸ்
வங்கிகளில் அதிகம் பணம் போட்டிருப்பவர்கள் இந்தியர்கள்தான்” என்று அசாஞ்சே
சொன்னார். இந்தக் கறுப்புப் பணத்தில் கணிசமான பகுதி சட்ட விரோதமான முறையில்
அந்நிய மூலதனமாகப் பங்குச் சந்தைக்குத் திரும்பி வருவதை நம்முடைய உளவு
நிறுவனங்கள் அரசுக்குக் கூறின. எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை அரசு.

இந்தியாவின் ஹவாலா மன்னன் ஹசன் அலி
கானுக்கு சுவிஸ் வங்கியில் உள்ள ஒரு கணக்கில் மட்டும் 8 பில்லியன் டாலர்
இருப்பு இருப்பது தெரியவந்தது. அலி 50 ஆயிரம் கோடி வரி பாக்கி
வைத்திருப்பதாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது. இத்தனைக்குப் பிறகும்
அலியை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை!

வெளியுறவு பொம்மலாட்டம்!

‘இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே இந்தியா
தனித்து இயங்குவதே – எல்லோருக்கும் நல்லவராக இயங்குவதே சரி’ என்று
ஜவஹர்லால் நேரு முடிவெடுத்தது ராஜதந்திர ரீதியாக ஓர் எடுபடாத முடிவாக
இருக்கலாம். ஆனால், அதில் ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்தது. முக்கியமாக,
அந்தப் பார்வையில் அறம் இருந்தது. அணிசேரா நாடுகள் அமைப்பின் பின்னணியில்,
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஒரு மதிப்பை அது தந்தது. ஆனால், இன்றைக்கு
இந்தியாவுக்கு உள்ள மதிப்பு என்ன? நம்முடைய நிலைப்பாடுதான் என்ன? முதலில்
நமக்கு என்று இன்று தனியாக ஒரு வெளியுறவுக் கொள்கை இருக்கிறதா? நம்முடைய
அண்டை நாடு ஏதாவது நமக்கு நண்பனாக இருக்கிறதா?

நேபாளத்தில் மக்கள் மாவோயிஸ்ட்டுகளைத்
தேர்ந்தெடுத்தபோது, அங்கு ஆட்சிக் கவிழ்ப்பை சிங் அரசு நடத்தியது.
இந்தியாதான் வங்க தேசம் என்ற தேசம் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால்,
இந்தியாவுக்குள் வரும் கள்ளத் துப்பாக்கிகள் தொடங்கி போதைச் சமாசாரங்கள்
வரை சகலமும் வங்க தேசம் வழியாகத்தான் வருகின்றன. சீனாவுடனும்
அமெரிக்காவுடனும் அளவுக்கு மீறிக் கொஞ்சிக்கொண்டு இருந்த இலங்கையை
அடக்கிவைக்க தமிழ்ப் போராளிக் குழுக்களை இந்தியாதான் வளர்த்துவிட்டது. சிங்
அரசோ, இறுதியில் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு அவர்களை அழித்தொழித்தது.

ஆஃப்கன் அரசியலில் அடியெடுத்துவைத்த
நாடுகள் அனைத்தும் இது வரை அழிவையே சந்தித்து இருக்கின்றன. இந்தியாவுக்கு
அங்கு என்ன வேலை? ஆஃப்கனில் இந்தியத் தூதரகங்கள் சும்மாவா தாக்குதலுக்கு
ஆளாகின்றன? மியான்மரில் மக்கள் ஆட்சியைக் கொண்டுவந்திருக்க வேண்டியது
இந்தியாவின் பணி. ஆனால், சீனாவுக்கு நெருக்கமான ராணுவ ஆட்சியாளர்களுடன்
அரசு கை கோத்திருந்தது. பாகிஸ்தானை இந்திய அரசால் அடக்கிவைக்கவே
முடியவில்லை. சீனாவுடனோ இன்னொரு பனிப் போரை உருவாக்கிக்கொண்டு இருக்கிறது.
அரபு வசந்தத்தின்போது சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் குரல்
ஒலித்தது. நாளைக்கே அமெரிக்கா இரானுக்கு எதிராகப் போர் தொடுத்தால்,
மன்மோகன் படைகளை அனுப்பிவைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

பெருநிறுவனங்களின் பேயாட்டம்!

நீரா ராடியா உரையாடல் பதிவுகளை நீங்கள்
கேட்டு இருக்கிறீர்களா? இந்த நாடு யாருடையது, இந்த நாட்டை யார்
நிர்வகிக்கிறார்கள் என்பதை உலகுக்குச் சொன்ன உரையாடல்கள் அவை. ரத்தன்
டாடாவைப் பற்றி, அம்பானி சகோதரர்களைப் பற்றி, சுனில் மிட்டலைப் பற்றி,
தருண் தாஸைப் பற்றி, கருணாநிதியைப் பற்றி, ராஜாத்தி அம்மாளைப் பற்றி,
தயாநிதி மாறனைப் பற்றி, பிரபு சாவ்லாவைப் பற்றி, பர்கா தத்தைப் பற்றி… சிங்
அரசாங்கத்தின் சூத்திரதாரிகளைப் பற்றி என்றென்றைக்குமான பதிவுகள் அவை.
அலைக்கற்றை வழக்கு விசாரணையின்போது, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவினரிடம்
நீரா அளித்த ஒரு வாக்குமூலம் போதும், சிங்கின் அரசு யாருடைய பிரதிநிதி
என்று சொல்ல! நீராவின் அந்த வாக்குமூலம்: ”ஆமாம். அலைக்கற்றை ஒதுக்கீடு
தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுடன் பேசினேன். என்னுடைய வாடிக்கையாளர்களுக்குச்
சாதகமாக அரசின் முடிவை மாற்றினேன். அதற்காக 60 கோடி பெற்றேன். அது என்
சேவைக்கான கட்டணம்!”

எல்லாவற்றையும்விட சங்கடம் தரும் செய்தி
இது. ஜனநாயகத்தின் மீதான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தாக்குதல்.
இந்தியப் படைகள் இன்றைக்கு எதிர்கொள்ளும் பெரிய எதிரிகள் யார் தெரியுமா?
தன் சொந்த மக்கள். காஷ்மீரில் 10 பேருக்கு ஒருவர் என்னும் விகிதத்தில்
கிட்டத்தட்ட 4 லட்சம் வீரர்களைக் குவித்து காஷ்மீரில் அமைதி நிலவுவதாக
சிதம்பரம் நம்பச் சொல்கிறார். ஆனால், காஷ்மீரிகள் ‘இந்திய ஆக்கிரமிப்பு
காஷ்மீர்’ என்றே எழுதவும் பேசவும் செய்கிறார்கள். வட கிழக்கு
மாநிலங்களிலும் இதே நிலைமைதான். சுதந்திர நாளை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறார்கள்.

இந்திய இயற்கை வளத்தை – பல லட்சம் கோடி
ரூபாய் மதிப்புள்ள 30 வகையான கனிமச் சுரங்கங்களைப் பெருநிறுவன
முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்காக சிதம்பரம் நடத்தும் ‘பச்சை வேட்டை’
வனங்களின் பூர்வகுடிகளை அரசுக்கு எதிரான போராட்டத்தில் தள்ளி இருக்கிறது.
விளைவு… நாட்டின் 16 மாநிலங்கள், 222 மாவட்டங்கள் மாவோயிஸ்ட்டுகள்
ஆதிக்கத்தில். அதாவது, மூன்றில் ஒரு பங்கு இந்தியா மாவோயிஸ்ட்டுகள் கையில்
இருக்கிறது. தெலங்கானா, ஹரித்பிரதேசம், பந்தல்கண்ட், பூர்வாஞ்சல்,
மிதிலாஞ்சல், போடோலாந்து, கூர்காலாந்து, கட்ச், விதர்பா என்று ஒன்பது
பிராந்தியங்கள் தனி மாநிலக் கோரிக்கையோடு நிற்கின்றன.

இத்தனையும்
தாண்டி இந்தியா எப்படித் தாக்குப் பிடிக்கப்போகிறது? இந்தியர்களின் தனி
மனித உழைப்பையும், இந்த நாட்டின் ஆன்மாவில் கலந்திருக்கும் ஒருமைப்பாட்டு
உணர்வையும்தான் நம்ப வேண்டி இருக்கிறது!
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

இதைக் கண்டிப்பாகப் படியுங்க! Empty Re: இதைக் கண்டிப்பாகப் படியுங்க!

Post by மாலதி Thu Jul 12, 2012 9:29 pm

இதைக் கண்டிப்பாகப் படியுங்க! 917304 இதைக் கண்டிப்பாகப் படியுங்க! 917304 இதைக் கண்டிப்பாகப் படியுங்க! 917304 இதைக் கண்டிப்பாகப் படியுங்க! 917304


மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum