TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ராமஜெயம் கொலைக்கு காரணம் என்ன? பொறுமை காக்க கருணாநிதி வேண்டுகோள்

Go down

ராமஜெயம் கொலைக்கு காரணம் என்ன? பொறுமை காக்க கருணாநிதி வேண்டுகோள் Empty ராமஜெயம் கொலைக்கு காரணம் என்ன? பொறுமை காக்க கருணாநிதி வேண்டுகோள்

Post by மாலதி Fri Mar 30, 2012 9:19 am

திருச்சி: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலைக்கு, அரசியல்
காரணமா அல்லது தொழில்போட்டியா என்ற கோணத்தில், ஐந்து தனிப்படை அமைத்து
போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கட்சியினர்
பொறுமை காக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி வேண்டுகோள்
விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் அசைக்க முடியாத, "சக்தி'யாக, தி.மு.க., ஆட்சியில்
வலம் வந்த ராமஜெயம் கொலை செய்யப்பட்டது, மாவட்ட, தி.மு.க.,வினர் மத்தியில்
கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது கொலைக்கான காரணம், பின்னணி
குறித்து விசாரித்தபோது, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. நேருவுக்கு
அரசியல் பின்புலமாக ராமஜெயம் இருந்தார். நேருவை கூட எளிதில் பார்த்து
விடலாம்; ஆனால், ராமஜெயத்தை பார்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று
தி.மு.க.,வினரே கூறுவர். கடந்த, 2007ம் ஆண்டு வையம்பட்டி அருகே, ரியல்
எஸ்டேட் அதிபர் துரைராஜ், அவரது டிரைவர் சக்தி ஆகியோர், குவாலிஸ் காரோடு
எரித்துக் கொலை செய்யப்பட்டனர். அடுத்தநாள் காலை, துரைராஜ் அண்ணன்
தங்கவேல், மணிகண்டம் அருகே, தன் நிலத்தில் மர்மமான முறையில் இறந்து
கிடந்தார். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரால் விசாரிக்கப்பட்டு
வருகிறது. வழக்கு தொடர்பான விசாரணை வளையத்தில் ராமஜெயம் உள்ளார். துரைராஜ்
மற்றும் ராமஜெயத்துக்கும் இடையே, ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக
முன்விரோதம் இருந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், பிரபல ரவுடி மணல்மேடு சங்கர், என்கவுன்டரில்
சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னணியில் ராமஜெயம் இருந்ததாக அப்போது
பரபரப்பாக பேசப்பட்டது. ஆகையால், மணல்மேடு சங்கர் கூட்டாளிகள் யாராவது இந்த
கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ராமஜெயத்தின் மொபைலிலிருந்து கடைசியாக பேசப்பட்ட கால், தஞ்சை அருகேயுள்ள
அம்மாப்பேட்டை பகுதியிலிருந்து வந்தாக, போலீசார், பதிவுகள் மூலம் தெரிந்து
கொண்டுள்ளனர்.

ராமஜெயம், தி.மு.க., ஆட்சிகாலத்தில் மதுரையில் உள்ள ரவுடிகளிடம்
நிலப்பிரச்னை தொடர்பாக முறைத்துக் கொண்டதாக தெரிகிறது. ஒருவேளை அவர்கள்
பழிவாங்கும் நோக்குடன் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாமா என்ற கோணத்தில்
விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, நேரு
அமைச்சராக இருந்ததை பயன்படுத்தி, ராமஜெயம் பல பிரச்னைகளில் தலையிட்டார்.
அதில் பாதிக்கப்பட்ட யாராவது, ராமஜெயத்தை கடத்தி கொலை செய்து விட்டார்களா
என்ற கோணத்திலும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த லோக்சபா
தேர்தலில், ராமஜெயம், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட விருப்பம்
தெரிவித்து, கட்சி தலைமையிடம் மனு செய்திருந்தார். ஆனால், அதேதொகுதியில்
போட்டியிட நெப்போலியன் சீட் வாங்கி விட்டார். அதுமுதல் நேரு
குடும்பத்துக்கும், நெப்போலியன் குடும்பத்துக்கும் பிரச்னை ஏற்பட்டது.
நேருவின் அம்மா இறந்தபோது, நெப்போலியன் வந்ததிற்கு கூட ராமஜெயம் எதிர்ப்பு
தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக நேருவுக்கும், நெப்போலியனுக்கும் இடையே
பெரும் இடைவெளி ஏற்பட்டது. இதனால், சிறையில் இருந்த நேருவைப் பார்க்க
நெப்போலியன் வரவில்லை. நேரு மகன் திருமணத்துக்கு நெப்போலியனுக்கு அழைப்பே
இல்லை; இந்த விஷயத்தையும் போலீசார் தீவிரமாக விசாரிக்க முடிவு
செய்துள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கில் துப்புதுலக்க ஐந்து தனிப்படைகளை, மாநகர போலீஸ்
கமிஷனர் அமைத்துள்ளார். மேலும் காலை, 5 மணி முதல், 7 மணி வரை திருச்சி
மாநகரில் சென்ற வாகனங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டறியும்
முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக ராமஜெயம்
கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

என்னென்ன வழக்குகள்? கொலை செய்யப்பட்ட ராமஜெயம் மீது நான்கு
வழக்குகள் உள்ளன. நாமக்கல் டாக்டர்.கதிர்வேல் கொடுத்த ஓட்டல் அபகரிப்பு
வழக்கு, திருச்சியில் மொரைசஸ் என்பவர் கொடுத்த நில அபகரிப்பு புகார்,
கலைஞர் அறிவாலயம் கட்ட துறையூர் டாக்டர். சீனிவாசனிடம் நிலத்தை அபகரித்த
வழக்கு, 2007ல் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் துரைராஜ் கொலை வழக்கு உள்ளிட்ட,
நான்கு வழக்குகளில் ராமஜெயம் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரியல்
எஸ்டேட் அதிபர் வழக்கு தவிர, மற்ற மூன்று வழக்குகளிலும் ஜாமின்
பெற்றிருந்தார்.

வேனில் கடத்தப்பட்டாரா: ராமஜெயம் உடல், திருச்சியிலிருந்து
கல்லணை செல்லும் வழியில் உள்ள திருவளர்ச்சோலை என்ற இடத்தில் காவிரி
ஆற்றங்கரையோரம் வீசப்பட்டிருந்தது. அவரது உடல் வீசப்பட்டிருந்த இடத்தை
திருச்சி போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் பார்வையிட்டார். அப்போது,
பனையபுரத்தைச் சேர்ந்த ஒருவர், "சார் எங்க ஊர்ல சந்தேகத்துக்கு இடமாக இன்று
(நேற்று) காலையிலிருந்து ஒரு வெள்ளை நிற டெம்போ டிராவலர் வேன் (எண்:
டி.என்., 07 கே-8136) நிற்கிறது' என்று கூறினார். இதையடுத்து,
பத்திரிகையாளரும், போலீசாரும் அங்கு விரைந்தனர். ராமஜெயம் உடல் கிடந்த
இடத்திலிருந்து, 3 கி.மீ., தொலைவில் உள்ள பனையபுரம் என்ற ஊருக்குள்
நுழையும் இடத்தில், அந்த வேன் கேட்பாரற்று நின்றது. இருக்கைகள் கலைந்து
கிடந்தன. வேனின் வலது பக்க பின், "டயர்' நகராதபடி கல் வைக்கப்பட்டிருந்தது.
வேனுக்கு எதிரே பிரபுராமு, 46, என்பவர் வீடு உள்ளது.

பிரபுராமு கூறுகையில், ""எனக்கு ஊருக்குள் இரண்டு வீடு உள்ளது. நான்
நேற்றிரவு, 9 மணிக்கு ஊருக்குள் இருக்கும் வீட்டுக்குச் சென்றேன். அதுவரை
இந்த வேன் இல்லை. காலை, 5.30 மணிக்கு வந்தேன். அப்போதிலிருந்து இந்த வேன்
இங்கே தான் நிற்கிறது,'' என்றார். முன்னாள் ஊராட்சித் தலைவர் கர்ணன்
கூறுகையில், ""இந்த வேனை காலை, 5.30 மணிக்கு பார்த்தேன். எதற்காக நிற்கிறது
என்று தெரியாது. இப்போது தான் விஷயமே தெரிந்தது,'' என்றார்.
சந்தேகத்துக்கு இடமாக நிற்கும் அந்த வேனில் தான் ராமஜெயம் கடத்தி
வரப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடைப்பயிற்சி சென்ற போது கொலை செய்யப்பட்டவர்கள்

அண்ணாநகர் பாலன்: முன்னாள் எம்.எல்.ஏ., அண்ணாநகர் பாலன் 2000ம்
ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பயிற்சி சென்ற போது கடத்தப்பட்டார். பணத்துக்காக
கடத்திச் சென்றவர்கள் 2001 ஜன., 1ம் தேதி கொலை செய்தனர்.

தா.கிருஷ்ணன்: 2003ம் ஆண்டு மே 20ம் தேதி மதுரை கே.கே.நகரில்,
தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் நடைப்பயிற்சி சென்ற போது, அவரது
வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஆலடி அருணா: நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் 2004ம் ஆண்டு
டிச.31ம் தேதி, காலை நடைப்பயிற்சிக்கு சென்ற போது, தி.மு.க., முன்னாள்
அமைச்சர் ஆலடி அருணாவும், அவரது நண்பர் பொன்ராஜூவும் கொலை செய்யப்பட்டனர்.

ராமஜெயம்: முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம்
நடைப்பயிற்சி சென்ற போது நேற்று காலை 6.30 மணியளவில் கடத்தப்பட்டார்.
மதியம் 12 மணியளவில் கல்லணை அருகே திருவளர்சோலையில் கை, கால்கள் கட்டப்பட்ட
நிலையில் அவர் பிணமாக மீட்கப்பட்டார்.

கருணாநிதி வேண்டுகோள்: ராமஜெயத்தை இழந்துள்ள திருச்சி தி.மு.க.,
வினரை, எப்படி தேற்றுவது எனத் தெரியவில்லை. இந்த நேரத்தில், கட்சியினர்
பொறுமை காக்க வேண்டும். நேருவின் குடும்பத்துக்கும், தி.மு.க.,வினருக்கும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தி.மு.க., தலைவர் கருணாநிதி
தெரிவித்துள்ளார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு
» தேர்தல் தோல்விக்கு நானே காரணம்: கருணாநிதி பேட்டி
» முல்லைப் பெரியாறு பிரச்னைக்கு கருணாநிதி, காங்., தான் காரணம்
» திமுக ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள்! - முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்
» கர்நாடக அரசை கலைப்பது பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum