TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியாவிடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா: சச்சின் இரட்டை சதம்

Go down

இந்தியாவிடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா: சச்சின் இரட்டை சதம் Empty இந்தியாவிடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா: சச்சின் இரட்டை சதம்

Post by Tamil Thu Feb 25, 2010 7:34 am

இந்தியாவிடம் வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா: சச்சின் இரட்டை சதம் Sachin-TendulkarrF


குவாலியர்:
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்
சச்சின், இரட்டை சதம் அடித்து அசத்தினார். பவுலிங்கில் பவுலர்கள் "தூள்
கிளப்ப' இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 153 ரன்கள் வித்தியாசத்தில்
வீழ்த்தி தொடரை வென்றது. தென் ஆப்ரிக்க அணி மீண்டும் ஒருமுறை பரிதாபமாக
வீழ்ந்தது.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு
நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு நாள் போட்டியில், வென்ற இந்திய
அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது போட்டி நேற்று,
குவாலியரில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய அணியின்
கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
கார்த்திக் அபாரம்:
இந்திய
அணிக்கு சேவக், சச்சின் ஜோடி துவக்கம் கொடுத்தது. அடுத்தடுத்து இரண்டு
பவுண்டரி அடித்த சச்சின், இம்முறை அதிரடியை துவக்கி வைத்தார். சேவக் (9)
நிலைக்கவில்லை. பின் தினேஷ் கார்த்திக், சச்சினும் இணைந்து அசத்தல்
ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சச்சின் ஒருநாள் அரங்கில் 46 வது சதம்
கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்த நிலையில்,
நான்காவது அரைசதம் (79) அடித்த, தினேஷ் கார்த்திக் பெவிலியன்
திரும்பினார்.
30 பந்து, 63 ரன்கள்:
பின்
யூசுப் பதான், சச்சின் இணைந்து, "பேட்டிங் பவர்பிளே'யில் ரன் மழை
பொழிந்தனர். சச்சின் பவுண்டரிகளாக விளாச, யூசுப் பதான் சிக்சர்கள் அடித்து
வாண வேடிக்கை காட்டினார். "பேட்டிங் பவர்பிளே'யில் (30 பந்துகள்) சச்சின்,
யூசுப் பதான் இணைந்து மொத்தம், 63 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் யூசுப்
பதான் (36), மெர்வியின் சுழலில் வீழ்ந்தார்.
சச்சின் சாதனை:
அடுத்து
வந்த தோனி அதிரடியை தொடர்ந்தார். மறுமுனையில் பார்னல் பந்தில் இரண்டு
ரன்கள் எடுத்த சச்சின், ஒருநாள் அரங்கில் 195 ரன்கள் கடந்து புதிய <உலக
சாதனை படைத்தார். தொடந்து அசத்திய சச்சின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில்
முதன் முதலாக இரட்டை சதம் அடித்தார். தவிர, இச்சாதனை படைக்கும் முதல்
வீரர் இவர் தான்.
இமாலய இலக்கு:
மறுமுனையில்
அதிரடியில் மிரட்டிய தோனி, ஒருநாள் அரங்கில் 54 வது அரைசதம் அடித்தார்.
சச்சின், தோனி ஜோடி இணைந்து, நான்காவது விக்கெட்டுக்கு 54 பந்துகளில் 101
ரன்கள் எடுத்தது. இந்திய அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள்
குவித்தது. சச்சின் 200 (147 பந்துகளில் 3 சிக்சர், 25 பவுண்டரி), தோனி 68
(4 சிக்சர், 7 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
துவக்க சரிவு:
இமாலய
இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணிக்கு, கிப்ஸ் 7 ரன்னுடன் வெளியேறி
ஏமாற்றினார். அடுத்து வந்த மெர்வி (12), கேப்டன் காலிஸ் (11) ஆகியோர்
வரிசையாக அவுட்டாகினர். சற்று தாக்குப்பிடித்த ஆம்லா, 34 ரன்களில்
வீழ்ந்தார்.
ஆறுதல் சதம்:
பீட்டர்சன்
(9), டுமினி (0), பவுச்சர் (14) இம்முறையும் அணியை கைவிட்டனர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுமுனையில் டி விலியர்ஸ்,
சர்வதேச அரங்கில் 5வது சதம் கடந்து ஆறுதல் தந்தார். தென் ஆப்ரிக்க அணி
42.5 ஓவரில் 248 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, தோல்வியடைந்தது. டி விலியர்ஸ்
(114*) ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 2-0 என்ற முன்னிலையுடன்,
இந்திய அணி ஒருநாள் தொடரை வென்றது.
சாதனை மன்னன் சச்சின்
தென்
ஆப்ரிக்காவுக்கு எதிராக, குவாலியரில் நேற்று நடந்த, இரண்டாவது ஒருநாள்
போட்டியில், 147 பந்தில் 3 சிக்சர், 25 பவுண்டரி உட்பட 200 ரன்கள்
எடுத்து, புதிய உலக சாதனை படைத்தார், இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின்.
இதன்மூலம் இவரது சாதனை பட்டியலில், மேலும் ஒரு புதிய மைல்கல் சேர்ந்தது.
இதன்மூலம்
சச்சின், ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதம் மற்றும் ஒரு போட்டியில் அதிக
ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவ்வரிசையில்
"டாப்-3' வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி ஆண்டு இடம்
சச்சின் (இந்தியா) 200* தென் ஆப்ரிக்கா 2010 குவாலியர்
காவன்ட்ரி (ஜிம்பாப்வே) 194* வங்கதேசம் 2009 புலவாயோ
அன்வர் (பாகிஸ்தான்) 194 இந்தியா 1997 சென்னை
* ஒருநாள் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முன்னிலை வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 442 17598 46/93
ஜெயசூர்யா (இலங்கை) 444 13428 28/68
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 340 12731 29/76
* டெஸ்ட் அரங்கில் அதிக ரன் மற்றும் அதிக சதம் கடந்த வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடம் வகிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் (இந்தியா) 166 13447 47/54
லாரா (வெ.இண்டீஸ்) 131 11953 34/48
பாண்டிங் (ஆஸ்திரேலியா) 142 11859 39/51
*
நேற்றைய போட்டியில் இரட்டை சதமடித்த சச்சின், ஒரு போட்டியில் அதிக ரன்
அடித்த இந்திய வீரர் என்ற தனது பழைய சாதனையை முறிடித்தார். முன்னதாக இவர்
கடந்த 1999ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக, ஐதராபாத்தில் நடந்த
போட்டியில் 186 ரன்கள் எடுத்திருந்தார்.
இவ்வரிசையில் "டாப்-4' இந்திய வீரர்கள்:
வீரர் ரன் எதிரணி இடம் ஆண்டு
சச்சின் 200* தென் ஆப்ரிக்கா குவாலியர் 2010
சச்சின் 186* நியூசிலாந்து ஐதராபாத் 1999
தோனி 183* இலங்கை ஜெய்ப்பூர் 2005
கங்குலி 183 இலங்கை டான்டன் 1999
* ஒருநாள் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின், முதலிடத்தில் நீடிக்கிறார்.
இவ்வரிசையில் "டாப்-3' இந்திய வீரர்கள்:
வீரர் போட்டி ரன் சதம்/அரைசதம்
சச்சின் 442 17598 46/93
கங்குலி 308 11221 22/71
டிராவிட் 335 10644 12/81
மூன்றாவது முறையாக
ஒருநாள்
கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, மூன்றாவது முறையாக 400 ரன்களுக்கும்
மேல் கடந்துள்ளது. தவிர, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இந்திய அணி, 3
விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் குவித்து, புதிய சாதனை படைத்தது. இதற்கு
முன் கடந்த 2000த்தில் நாக்பூரில் நடந்த போட்டியில், 310 ரன்கள்
எடுத்திருந்ததே அதிகமாக இருந்தது.
இந்தியா எடுத்த அதிக ரன்கள் விபரம்:
ரன்கள் எதிரணி இடம்/ஆண்டு
414/7 இலங்கை ராஜ்கோட்/2009
413/5 பெர்முடா போர்ட் ஆப் ஸ்பெயின்/2007
401/3 தெ.ஆப்., குவாலியர்/2010
சாதனை ஜோடி:
நேற்றைய
போட்டியில் இந்தியாவின் சச்சின், தினேஷ் கார்த்திக் ஜோடி, தென்
ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது விக்கெட்டுக்கு 177 பந்துகளில் 194
ரன்கள் சேர்த்து, சாதனை படைத்தது. இதற்கு முன் சச்சின், டிராவிட் ஜோடி
கடந்த 2000த்தில் (நாக்பூர்) தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, இரண்டாவது
விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து இருந்தனர்.
அடாவடி ரசிகர்:
நேற்று
தென் ஆப்ரிக்க அணியின் ஆல்பி மார்கல், பவுண்டரி எல்லை அருகே பீல்டிங்
செய்து கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ஏதோ ஒரு பொருளை எடுத்து
மார்கல் மீது எறிந்தார். இதையடுத்து அவர் அம்பயரிடம் புகார் செய்ய, ஆட்டம்
சில நிமிடங்கள் தடைபட்டது.
கடுப்பேற்றிய தோனி:
நேற்றைய
போட்டியில் சச்சின் இரட்டை சதத்தை நெருங்கிக்கொண்டிருந்தார். இந்நிலையில்
தொடர்ந்து சச்சினுக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு தராமல் தோனி,
மறுமுனையில் தொடர்ந்து சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். ஒவ்வொரு ஓவரின்
கடைசிபந்திலும் ஒருரன் எடுத்துவிட்டு மீண்டும், தனது பேட்டிங்கை தொடர்ந்த
தோனி, ரசிகர்களுக்கு அதிக கடுப்பேற்றினார்.
5 ரன்கள்:
நேற்று சச்சின் 195 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்த 5 ரன்களை எடுக்க, 5 ஓவர்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இதன் விபரம்:
* 45.4 வது ஓவரில் 196 ரன்கள் எடுத்தார்.
* 46.1 ஓவரில் ஸ்டைன் பந்தில், ஒருரன் எடுத்த சச்சின் 197ஐ எட்டுகிறார்.
* 46.3ல் ரன் எதுவும் இல்லை
* 46.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க, 198 ஆகிறது.
* 47.3 ஓவரில் லாங்கிவெல்ட்டின் பந்தில் ரன் இல்லை
* 47.4ல் சச்சின் ஒரு ரன் எடுக்க 199ஐ எட்டுகிறார்.
* கடைசியில் 49.3 ஓவரில் லாங்வெல்ட்டின் பந்தை எதிர்கொண்டார் சச்சின். இதில் ஒரு ரன் எடுத்த சச்சின், 200 ரன்கள் கடந்து சாதித்தார்.
ஸ்கோர் போர்டு
இந்தியா
சேவக் (கே)ஸ்டைன் (ப)பார்னல் 9(11)
சச்சின் -அவுட் இல்லை- 200(147)
கார்த்திக் (கே)கிப்ஸ் (ப)பார்னல் 79(85)
யூசுப் (கே) டிவிலியர்ஸ் (ப) மெர்வி 36(23)
தோனி -அவுட் இல்லை- 68(35)
உதிரிகள் 9
மொத்தம் (50 ஓவரில், 3 விக்.,) 401
விக்கெட் வீழ்ச்சி: 1-25 (சேவக்), 2-219 (கார்த்திக்), 3-300 (யூசுப்).
பந்துவீச்சு: ஸ்டைன் 10-0-89-0, பார்னல் 10-0-95-2, மெர்வி 10-0-62-1, லாங்கிவெல்ட் 10-0-70-0, டுமினி 5-0-38-0, காலிஸ் 5-0-44-0.
தென் ஆப்ரிக்கா
ஆம்லா (கே)நெஹ்ரா (ப)ஸ்ரீசாந்த் 34(22)
கிப்ஸ் (ப)பிரவீண் 7(8)
மெர்வி (கே)ரெய்னா (ப)ஸ்ரீசாந்த் 12(11)
காலிஸ் (ப)நெஹ்ரா 11(13)
டிவிலியர்ஸ் -அவுட் இல்லை- 114(101)
பீட்டர்சன் (ப)ஜடேஜா 9(16)
டுமினி எல்.பி.டபிள்யு., (ப)யூசுப் 0(1)
பவுச்சர் எல்.பி.டபிள்யு., (ப)யூசுப் 14(31)
பார்னல் (ப)நெஹ்ரா 18(43)
ஸ்டைன் (ப)ஸ்ரீசாந்த் 0(4)
லாங்கிவெல்ட் (கே)நெஹ்ரா (ப)ஜடேஜா 12(11)
உதிரிகள் 17
மொத்தம் (42.5 ஓவரில் "ஆல்-அவுட்') 248
விக்கெட்
வீழ்ச்சி: 1-17 (கிப்ஸ்), 2-47(மெர்வி), 3-61(ஆம்லா), 4-83(காலிஸ்),
5-102(பீட்டர்சன்), 6-103(டுமினி), 7-134(பவுச்சர்), 8-211(பார்னல்),
9-216(ஸ்டைன்), 10-248(லாங்கிவெல்ட்).
பந்துவீச்சு: பிரவீண் 5-0-31-1, நெஹ்ரா 8-0-60-2, ஸ்ரீசாந்த் 7-0-49-3, ஜடேஜா 8.5-0-41-2, யூசுப் 9-1-37-2, சேவக் 5-0-25-0.
Tamil
Tamil
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 11801
Join date : 02/01/2010

https://www.tamilcpu.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆம்லா இரட்டை சதம்: தென் ஆப்ரிக்கா ரன்குவிப்பு: இந்தியா அதிரடி துவக்கம்
» ரோகித் அதிரடி: இந்தியா வெற்றி!: வீழ்ந்தது தென் ஆப்ரிக்கா
» இரட்டை சதம் விளாசினார் சச்சின் : குவாலியர் போட்டியில் விஸ்வரூபம்
» ஹர்பஜன் அசத்தல் பந்துவீச்சு: தென் ஆப்ரிக்கா திணறல்
»  முதல் பக்கம் breadcrumb இந்திய அணி அசத்தல் வெற்றி : ஷிகர் தவான் சதம் : தென் ஆப்ரிக்கா ஏமாற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum