TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


சம்மன் வந்த வேகத்தில் சி.பி.ஐ., முன் ராமதாஸ் ஆஜர்: பா.ம.க., பக்... பக்...

Go down

சம்மன் வந்த வேகத்தில் சி.பி.ஐ., முன் ராமதாஸ் ஆஜர்: பா.ம.க., பக்... பக்... Empty சம்மன் வந்த வேகத்தில் சி.பி.ஐ., முன் ராமதாஸ் ஆஜர்: பா.ம.க., பக்... பக்...

Post by ஜனனி Tue Mar 13, 2012 8:40 am

அமைச்சர் உறவினர் கொலை வழக்கு தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்,
அவரது மகன் அன்புமணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சி.பி.ஐ., விசாரணையை நடத்தி
முடித்துள்ளனர். விசாரணை முடிந்துள்ளதால், அடுத்தது என்ன நடக்கும்; ராமதாஸ்
சிக்குவாரா என்ற பரபரப்பு, பா.ம.க.,வில் அதிகரித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு விழுப்புரத்தில், அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை
செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஐகோர்ட் உத்தரவுப்படி சி.பி.ஐ., விசாரணை
நடத்தி வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக எட்டு பேரை கைது செய்த சி.பி.ஐ.,
அதிகாரிகள், அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பா.ம.க., நிறுவனர்
ராமதாசின் சகோதரர் சீனிவாசன் மற்றும் அக்கட்சி நிர்வாகி கருணாநிதி ஆகிய
இருவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் வேகம் அதிகரித்து
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்ததாக ராமதாஸ்,
அன்புமணி ஆகியோரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்
வெளியானது.

ஒரு வாரத்திற்குள் இந்த விசாரணை நடக்கும் என்பது குறித்த செய்தி, கடந்த 8ம் தேதி, "தினமலர்' நாளிதழில் வெளியானது.

தனயனிடம் துவங்கியது : சி.பி.ஐ., திட்டமிட்டபடி முதலில்
அன்புமணியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னைக்கு வெளியேயுள்ள ரகசிய
இடத்தில் வைத்து சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 8ம் தேதியே இந்த விசாரணையை
நடத்தி முடித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து 9ம் தேதி, ராமதாசின் மகள் வழி
உறவினரிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். இருவரிடம்
நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்களையும் சி.பி.ஐ., அதிகாரிகள்
சேகரித்துள்ளனர்.இவர்களை தொடர்ந்து 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி,
ராமதாசிற்கு சம்மன் அனுப்பபட்டிருந்தது.ஆனால், "உடல்நிலை சரியில்லாத
காரணத்தால், தன்னால் அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக முடியாது' என, ராமதாஸ்
மறுத்துள்ளார்.இதையடுத்து, 11ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று(நேற்று
முன்தினம்) விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ., தரப்பில்
ராமதாசிற்கு மீண்டும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணைக்கு
ஒத்துழைக்கா விட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என,
சி.பி.ஐ., அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை, 10 மணியளவில் சென்னையில் உள்ள
அரசு அலுவலகம் ஒன்றில், ராமதாசிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் ரகசிய விசாரணையை
துவக்கினர். விஷயம் வெளியே கசியாமல் இருப்பதற்காக, சென்னையில் உள்ள உறவினர்
வீட்டில் தங்கியிருந்த ராமதாஸ், வாடகை காரில் வந்து விசாரணைக்கு ஆஜரானார்.
இருப்பினும், ராமதாசிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து, வெளியே தெரியாத
வகையில் ரகசியம் காக்கப்பட்டுள்ளது.

மாலை 5 மணி வரை: அவரிடம் தமிழ் கடவுள் பெயரைக் கொண்ட சி.பி.ஐ.,
அதிகாரி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தியதாகத்
தெரிகிறது. இந்த விசாரணையின் போது ராமதாசிடம், 100க்கும் மேற்பட்ட
கேள்விகளை சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்டுள்ளனர். ராமதாஸ் சகோதரர் சீனிவாசன்
தெரிவித்த தகவல் அடிப்படையிலும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இரண்டு பேர் தந்த தகவல்களும் சரியாக இருக்கிறதா என்பதை, அப்போது சி.பி.ஐ.,
அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். ராமதாசிடம் மாலை 5 மணி வரை விசாரணை
நடந்துள்ளது. விசாரணைக்கு மத்தியில், சி.பி.ஐ., ஏற்பாடு செய்திருந்த மதிய
உணவையே ராமதாஸ் சாப்பிட்டுள்ளார்.

ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ.,
அதிகாரிகள், அவற்றை கம்ப்யூட்டரில் தொகுத்து, தங்களது மேலிடத்திற்கு நேற்று
அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்,
அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது. மேலிடத்தின் வேகத்தை
பொறுத்து இவ்வழக்கு காலதாமதம் ஆகுமா என்ற விவரம் தெரியும். தேவைப்பட்டால்,
மூவரிடமும் மீண்டும் விசாரணை நடத்தவும் சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு
செய்துள்ளதாகத் தெரிகிறது.ராமதாஸ், அன்புமணியிடம் சி.பி.ஐ., விசாரணை
நடத்திய தகவல், பா.ம.க., வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. அடுத்தது என்ன நடக்குமோ என்ற பரபரப்பு, பா.ம.க.,வினர்
மத்தியில் எழுந்துள்ளது.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அவதூறு வழக்கு : கருணாநிதி, ராமதாஸ், விஜயகாந்துக்கு சம்மன்
» ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு: எஸ்ஸார் நிறுவன அதிகாரி சி.பி.ஐ. முன் ஆஜர்
» குஜராத் கலவரம் வழக்கு : சிறப்பு விசாரணைக்குழு முன் மோடி 27ம் தேதி ஆஜர்
» பொது கணக்குக் குழு முன் ஆடிட்டர் ஜெனரல் இன்று ஆஜர் : பிரதமர் ஆஜராவது எப்போது?
» காதலனை கொன்றவனை தேடி வந்த பாம்பு : வீட்டு முன் படம் எடுத்து ஆடியதால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum