TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 8:41 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu May 16, 2024 8:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நகங்களை பராமரிப்பது எப்படி?

Go down

நகங்களை பராமரிப்பது எப்படி? Empty நகங்களை பராமரிப்பது எப்படி?

Post by மாலதி Mon Mar 12, 2012 7:52 am

[You must be registered and logged in to see this image.]
நகங்கள், கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு
வகிக்கின்றன. அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம். நகங்களை பராமரிப்பது
குறித்த ஆலோசனைகளை தருகிறார் தோல் மருத்துவர் தேவசேனா. அவர் கூறியதாவது:
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை
பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது
பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக் காட்டி விடும். எனவே நகங்கள்
பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற
வேண்டும். நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது
கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில
டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம்
இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய்
கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள்
செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

உணவு சாப்பிடும்
முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை
சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள்
நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும். சர்க்கரை
நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை
போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.
பெரும்பாலான
நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக
பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம். பெடிக்யூர், மெனிக்யூர் என
நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன.
இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது.
வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம்.

நகங்களில்
அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ
சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை
அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி
தரும். கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ
குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு
பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக்
கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி
பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும்.
இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம்
சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம்
மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும். சர்க்கரை
நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என
ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம்.


ரெசிபி

நெல்லிக்காய்
பச்சடி: பச்சை நெல்லிக்காய் அல்லது காய்ந்த நெல்லிக் காயை வெந்நீரில்
வேகவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். இதை
புளிக்காத தயிரில் கலக்கி எண்ணெயில் கடுகு போட்டு தாளிக்க வேண்டும். இதை
சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பச்சை நெல்லிக்காய் சீசனில் மட்டுமே
கிடைக்கும். ஆனால் நெல்லிமுள்ளி எனப்படும் நெல்லிக்காய் வற்றல் ஆண்டு
முழுவதும் கிடைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

பைனாப்பிள் ரவா பொங்கல்:
ரவை, சிறுபருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் சிறிது நெய் விட்டு வறுக்க
வேண்டும். இதை சரியான அளவு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும்
சர்க்கரை அல்லது வெல்லம் தேவைக்கேற்ப சேர்த்து மீண்டும் சிறிது நேரம் வேக
வைக்க வேண்டும். இதில் பொடியாக அரிந்த பைனாப்பிள் துண்டுகள் ஒரு கப்
சேர்த்து குழைய வேக விடவும். பின்னர் சிறிதளவு பைனாப்பிள் எசன்ஸ், கலர்
சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி, பாதாம், திராட்சை வறுத்து செர்ரி
பழங்கள் சேர்த்து கலந்து கொள்ளலாம். தண்ணீருக்கு பதில் பால் சேர்த்தும்
தயாரிக்கலாம்.

எலுமிச்சை காக்கடா:
சிறிது தண்ணீருடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து கொள்ள வேண்டும். இந்த
தண்ணீரை கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி பதத்துக்கு கெட்டியாக பிசைந்து
கொள்ள வேண்டும். இதை சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மெல்லிய
ரொட்டிகளாக செய்து கல்லில் போட்டு அப்பளம் போல் கரகரப்பாக சுட்டெடுக்கவும்.
மாவில் வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்தும் இதை
செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு சொட்டு எண்ணெய் விட்டால் போதும். மிதமான
தீயில் வைத்து ரொட்டிகள் உப்பாமல் துணியால் அழுத்தி அப்பளம் போல்
மொறுமொறுப்பாக சுட்டு எடுத்து ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு வைத்தால் மாதக்
கணக்கில் கெடாது.

டயட்

உடல்
ஆரோக்கியமாக இருக்க நகங்களையும் முறையாக பாதுகாப்பது அவசியம். வைட்டமின்
சி ஊட்டச் சத்து நகங்கள் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின்
சி அதிகம் உள்ள காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்து கொள்ளலாம். எலுமிச்சை,
சாத்துக்குடி, கமலாஆரஞ்சு, பைனாப்பிள், கொய்யா, நெல்லிக்காய் ஆகியவற்றில்
வைட்டமின் சி அதிகம் உள்ளது. தானியங்களில் முளை கட்டிய பயிறு வகைகளை வாரம் 2
அல்லது 3 முறை சாப்பிடலாம். கொத்மல்லி, புதினா, கருவேப்பிலை, அகத்திக்
கீரை போன்ற கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக முருங்கைக் கீரை நகத்தை பாதுகாக்க உதவும். உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தை பேண உதவும் கால்சியம், இரும்பு,
வைட்டமின் சத்துகள், ஆன்டிஆக்சிடென்ட்ஸ் ஆப்பிளில் அதிகம் உள்ளது.
நெல்லிக்காயில் வைட்டமின், கால்சியம் அதிகம் இருப்பதுடன் எளிதாகவும்
கிடைக்கும். உணவில் சேர்த்தால் எலும்புகள், நகங்களின் ஆரோக்கியம்
அதிகரிக்கும். கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.
தினமும் படுக்க செல்லும் முன்பு இளஞ்சூடான நீரில் கை, கால்களை நன்கு
தேய்த்து கழுவினால் நகங்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும்
அதிகரிக்கலாம்.

பாட்டி பாட்டி

* நகங்கள் பளபளப்பாக இருக்க நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி நகங்களில் மசாஜ் செய்யலாம்.
* புதினா இலை எண்ணை கொண்டு மசாஜ் செய்தால் நகத்தை சுற்றி ஏற்படும் வீக்கம், வலியை குணமாகும்.
* நகச்சுத்தியால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் வைத்துக் கட்டினால் குணமடையும்.
* இளஞ்சூடான நீரில் துளசி, புதினா இலை போட்டு 10 நிமிடம் நகங்கள் மூழ்குமாறு வைத்தால் கிருமிகள் அழிந்து நகம் சுத்தமாகும்.
* நகம் கருப்பாக சொத்தையுடன் இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்றுப் போட்டால் மறையும்.
*
எலுமிச்சை ஆரஞ்சு பழத்தோல்களை காய வைத்து பொடியாக்கி சிட்டிகை உப்பு
சேர்த்து நல்லெண்ணெயில் குழைத்து தொடர்ந்து நகங்களில் தடவினால் பளபளப்பு
கூடும்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum