TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jul 11, 2024 1:06 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Jun 26, 2024 9:47 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jun 20, 2024 4:05 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Jun 07, 2024 6:45 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Mon May 20, 2024 7:12 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி

Go down

நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி Empty நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி

Post by மாலதி Wed Feb 29, 2012 7:51 am











நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி Virat_82



ஹோபர்ட்:முத்தரப்பு
தொடரில் அதிசயம் அரங்கேறியது.நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில்,
விராத் கோஹ்லி சதம் விளாச, இந்திய அணி 321 ரன்களை 36.4 ஓவரில் எடுத்து
"சூப்பர்' வெற்றி பெற்றது. இதன் மூலம் முக்கியமான போனஸ் புள்ளியை பெற்று,
"பைனல்' வாய்ப்பை தக்க வைத்தது. இலங்கையின் தில்ஷன், சங்ககராவின் சதம்
வீணானது. மார்ச் 2ல் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை
வீழ்த்தினால், இந்தியா பைனலுக்கு செல்வது உறுதி.
இந்தியா,
ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர்
ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதிய லீக்
போட்டி ஹோபர்ட்டில் நடந்தது. "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங்
தேர்வு செய்தார். இந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்குப் பதில்,
ஜாகிர் கான் இடம் பெற்றார்.
சூப்பர் ஜோடி:
இலங்கை
அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, தில்ஷன் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது.
ஜாகிர் கான் பந்தில் சிக்சர் அடித்த ஜெயவர்தனா (22), ஜடேஜா சுழலில்
வீழ்ந்தார். பின் தில்ஷனுடன் இணைந்த சங்ககரா, பொறுப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தினார்.
இரண்டு சதம்:
சிறப்பான
ஆட்டத்தை வெளிப்படுத்திய தில்ஷன், ஒருநாள் அரங்கில் 11வது மற்றும்
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் சதம் அடித்தார். சங்ககரா தன்பங்கிற்கு 13வது
மற்றும் இந்தியாவுக்கு எதிரான 4வது சதத்தை பதிவு செய்தார். இந்த ஜோடியை
பிரிக்க தோனி எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. இரண்டாவது
விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்த போது, ஒருவழியாக பிரவீண் குமார்
வேகத்தில், சங்ககரா (105 ரன்கள், 87 பந்து) போல்டானார்.
இமாலய இலக்கு:
பெரேரா
(3) ரன் அவுட்டானார். மாத்யூஸ் 14 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில்
தில்ஷன், சிக்சர்களாக விளாச, இலங்கை அணி 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 320
ரன்கள் எடுத்தது. ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில், தனது அதிகபட்ச ரன்களை
எடுத்த தில்ஷன் (160 ரன்கள், 165 பந்து), சண்டிமால் (2) அவுட்டாகாமல்
இருந்தனர்.
கடின கணக்கு:
இந்திய அணி 40 ஓவரில்
321 ரன்கள் எடுத்து வென்றால் மட்டுமே, "போனஸ்' புள்ளி கிடைக்கும் என்ற
நிலையில் களமிறங்கியது. சேவக், சச்சின் ஜோடி நல்ல துவக்கம் தந்தது.
குலசேகராவின் அடுத்தடுத்த ஓவர்களில் இருவரும் தலா ஒரு 2 பவுண்டரி
விளாசினர். மலிங்கா ஓவரில் சேவக், அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் அடிக்க,
இந்திய அணியின் ஸ்கோர், 5.3 ஓவரில் 50 ரன்களை எட்டியது.
இந்நிலையில் சேவக் (30), சச்சின் (39) இருவரும் சீரான இடைவெளியில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தனர்.
இனித்த இளமை:
இதன்
பின் "இளம்' வீரர்கள் காம்பிர், விராத் கோஹ்லி ஜோடி பொறுப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தியது. இவர்கள் பந்துகளை வீணாக்காமல், ஒன்று இரண்டு ரன்களை
எளிதில் எடுக்க, அணியின் "ரன்ரேட்' சீராக இருந்தது. பின், மாத்யூஸ் பந்தில்
விராத் கோஹ்லி, சிக்சர் அடித்து அதிரடியை துவக்க 27.2 ஓவரில் இந்திய அணி
200 ரன்களை எட்டியது.
மூன்றாவது விக்கெட்டுக்கு 109 பந்துகளில், 115 ரன்கள் சேர்த்த நிலையில், 63 ரன்கள் எடுத்த காம்பிர், ரன் அவுட்டானார்.
அதிரடி சதம்:
அடுத்து
வந்த ரெய்னா, விராத் கோஹ்லிக்கு நல்ல "கம்பெனி' கொடுக்க, குலசேகராவின் ஒரு
ஓவரில், இவர் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்தார். விராத் கோஹ்லி ஒருநாள்
அரங்கில் தனது 9வது சதம் (76 பந்து) அடித்தார். மலிங்கா வீசிய போட்டியில்
35வது ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரி என அடுத்தடுத்து விளாச, 35வது ஓவரில்
இந்திய அணி 300 ரன்களை கடந்தது.
"சூப்பர்' வெற்றி:
மலிங்காவின்
அடுத்த ஓவரில் விராத் கோஹ்லி, மீண்டும் இரண்டு பவுண்டரி அடிக்க, இந்திய
அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி
பெற்றது. நான்காவது விக்கெட்டுக்கு 55 பந்துகளில் 120 ரன்கள் சேர்த்த
விராத் கோஹ்லி (86 பந்து, 133 ரன்கள்), ரெய்னா (40) ஜோடி அவுட்டாகாமல்
இருந்தது.

பைனலுக்கு செல்வது எப்படி
முத்தரப்பு
தொடரில் இன்னும் ஒரு லீக் போட்டி மீதமுள்ளது (மார்ச் 2, ஆஸி-இலங்கை).
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியா (19 புள்ளி), இந்தியா (15), இலங்கை (15)
அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. கடைசி லீக் போட்டியில் இலங்கை
வெல்லும் பட்சத்தில், இந்திய அணி வெளியேற நேரிடும். மாறாக ஆஸ்திரேலியா
வென்றால், இந்தியா, இலங்கை அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும்.
அப்போது இத்தொடர் விதிப்படி, இரு அணிகள் மோதிய 4 போட்டியில் இந்திய அணி 2ல்
வெற்றி பெற்றுள்ளதால், பைனலுக்கு சென்று விடும்.


321 ரன்களை அடைந்த வழி
ரன்கள் பந்துகள்
முதல் 50 ரன்கள் 5.3 ஓவர் (33 பந்து)
100 ரன்கள் 11.1 ஓவர் (67 பந்து)
150 ரன்கள் 18.2 ஓவர் (110 பந்து)
200 ரன்கள் 27.2 ஓவர் (164 பந்து)
250 ரன்கள் 31.1 ஓவர் (187 பந்து)
300 ரன்கள் 35 ஓவர் (210 பந்து)
321 ரன்கள் 36.4 ஓவர் (220 பந்து)


எங்கள் கையில் எதுவும் இல்லை: தோனி
இந்திய
அணி கேப்டன் தோனி கூறுகையில்,"" நான் பங்கேற்ற ஒருநாள் போட்டிகளில்
சிறப்பானவற்றில் இதுவும் ஒன்று. 40 ஓவரில் 321 ரன்கள் தேவை என்ற நிலையில்,
சச்சின், சேவக் நல்ல துவக்கம் கொடுத்தனர். இதை கோஹ்லி, காம்பிர் நன்கு
பயன்படுத்திக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக சிறப்பான முறையில் திறமை
வெளிப்படுத்தியதே வெற்றிக்கு காரணம். பைனலுக்கு முன்னேற இனி எங்கள் கையில்
எதுவும் இல்லை,'' என்றார்.


அதிவேக சதம்
நேற்றைய
போட்டியில் 44 பந்துகளில் அரைசதம் கடந்த விராத் கோஹ்லி, பின் 76
பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஒரு நாள் அரங்கில் இவர் எடுத்து
அதிவேக சதம் இது தான்.
* இதுவரை 9 சதம் அடித்துள்ளார் கோஹ்லி. இதில் 8 போட்டிகளில் இந்தியா வென்றது.
* நேற்று இவர் எடுத்த 133 ரன்கள் தான், ஒரு நாள் கிரிக்கெட்டில் எடுத்த அதிகபட்ச ரன்கள்.
*
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர் எடுத்த மூன்றாவது அதிகபட்ச ரன்கள் இது.
இதற்கு முன் கங்குலி (141, எதிர்-பாகிஸ்தான், அடிலெய்டு-2000), யுவராஜ்
சிங் (139, எதிர்-ஆஸ்திரேலியா, சிட்னி, 2004)
* சமீபத்தில் நடந்த
டெஸ்ட் தொடரில் சச்சின், லட்சுமண், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் இருந்த
நிலையில், விராத் கோஹ்லி மட்டும் தான் சதம் (116) அடித்து இருந்தார்.
தற்போது, ஒருநாள் தொடரிலு<ம் சதம் அடித்து அசத்தியுள்ளார்.


சிறந்த "சேஸ்'
நேற்று
321 ரன்களை துரத்திய வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய மண்ணில்
இது, சிறந்த "சேசாக' அமைந்தது. இதற்கு முன் இத்தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு
எதிராக 270 ரன்களை "சேஸ்' செய்து வென்று இருந்தது.
*
ஒட்டுமொத்தமாக இந்திய அணிக்கு, ஒருநாள் அரங்கில் இது மூன்றாவது சிறந்த
"சேஸ்' . முன்னதாக, இங்கிலாந்து (326 ரன்கள், லார்ட்ஸ்-2002), வெஸ்ட்
இண்டீஸ் (325 ரன்கள், ஆமதாபாத், 2002), அணிக்கு எதிராக பெரிய இலக்கை
துரத்தி வெற்றி பெற்றது.
* தவிர, 2010ல் நியூசிலாந்துக்கு எதிரான பெங்களூரு போட்டியில் 321 ரன்கள் எடுத்து வென்றது.
*
இந்திய அணி 300 அல்லது அதற்கு மேலான ரன்களை "சேஸ்' செய்து வெற்றி பெறுவது
12 வது முறை. இதை இலங்கை (4 முறை), இங்கிலாந்து (3), பாகிஸ்தான் (2)
மற்றும் நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக
இந்த இலக்கை எட்டியுள்ளது.


இரண்டாவது அணி:300க்கும்
மேற்பட்ட ரன்களை 40 ஓவருக்குள் "சேஸ்' செய்து வென்ற அணிகள் வரிசையில்
இந்திய அணி இரண்டாவது இடம் பெற்றது. இதற்கு முன் இங்கிலாந்துக்கு (321/7)
எதிராக, 2006ல் லீட்சில் நடந்த போட்டியில், இலங்கை அணி 37.3 ஓவரில், 324/2
என்ற ரன்களை எடுத்து முதல் அணியாக சாதித்துள்ளது.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» விராத் கோஹ்லி சதம்: இந்தியா அசத்தல் வெற்றி!
» "வீரன் விராத்! * இந்தியா "சூப்பர் வெற்றி * பணிந்தது பாகிஸ்தான்
» ரெய்னா சாதனை சதம்: இந்தியா அபார வெற்றி!: "சூப்பர்-8' சுற்றில் நுழைந்தது
» சதம் விளாசினார் வார்னர்! * டில்லி அணி அசத்தல் வெற்றி * டெக்கான் மீண்டும் பரிதாபம்
» ரகானே விஸ்வரூபம்! * முதல் சதம் விளாசினார் * ராஜஸ்தான் அசத்தல் வெற்றி * பெங்களூரு அணி சொதப்பல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum