Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)by வாகரைமைந்தன் Today at 12:07 am
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:26 pm
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Nov 23, 2024 6:21 pm
» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Nov 18, 2024 4:53 pm
» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun Nov 17, 2024 3:49 pm
» சினிமா
by வாகரைமைந்தன் Tue Nov 05, 2024 1:33 am
» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm
» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm
» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm
» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm
» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm
» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm
» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm
» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm
» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm
» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm
» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm
» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am
» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm
» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am
» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am
» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm
» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm
» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm
» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm
» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm
» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm
» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm
» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm
» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm
» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm
» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm
» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am
» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am
» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am
» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am
» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am
» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am
ரெய்னா சாதனை சதம்: இந்தியா அபார வெற்றி!: "சூப்பர்-8' சுற்றில் நுழைந்தது
Page 1 of 1
ரெய்னா சாதனை சதம்: இந்தியா அபார வெற்றி!: "சூப்பர்-8' சுற்றில் நுழைந்தது
செயின்ட் லூசியா:
சுரேஷ் ரெய்னா சாதனை சதம் விளாச, இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை 14 ரன்கள்
வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் "டுவென்டி-20' உலக கோப்பை
தொடரின் "சூப்பர்-8' சுற்றுக்கு முதல் அணியாக இந்தியா முன்னேறியது.
வெஸ்ட்
இண்டீசில் "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று செயின்ட்
லூசியாவில் நடந்த "சி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தென் ஆப்ரிக்க
அணிகள் மோதின.
காம்பிர் இல்லை:
இந்திய
அணியில் வயிற்றுப்போக்கு காரணமாக காம்பிர் இடம் பெறவில்லை. இவருக்கு பதில்
தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெற்றார். ஜாகிர் கான் நீக்கப்பட்டு, பியுஸ்
சாவ்லா இடம் பெற்றார். டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித், பீல்டிங்
தேர்வு செய்தார்.
விஜய் ஏமாற்றம்:
இந்திய
அணிக்கு துவக்கத்தில் "ஷாக்' காத்திருந்தது. கிளெய்ன்வெல்ட் வீசிய முதல்
ஓவரில் முரளி விஜய் "டக்' அவுட்டானார். பின் ஸ்டைன், மார்கல் மிக
துல்லியமாக பந்துவீச ரன் வறட்சி ஏற்பட்டது. தினேஷ் கார்த்திக் 16
ரன்களுக்கு காலிஸ் பந்தில் வீழ்ந்தார். ஒருகட்டத்தில் 9 ஓவரில் 56
ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தவித்தது.
யுவராஜ் நம்பிக்கை:
இதற்கு
பின் சுரேஷ் ரெய்னா, யுவராஜ் இணைந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர்.
மெர்வி, ஆல்பி மார்கல் பந்துகளில் தலா ஒரு சிக்சர் அடித்தார் யுவராஜ்.
மறுபக்கம் காலிஸ் பந்தை சிக்சருக்கு விரட்டினார் ரெய்னா. இருவரும் ரன் மழை
பொழிய, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. ஐ.பி.எல்., பைனலில் சென்னை கிங்ஸ்
அணிக்காக சூப்பராக ஆடிய ரெய்னா, தனது அசத்தல் ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்
42 பந்துகளில் அரைசதம் எட்டினார். 3வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த
நிலையில், யுவராஜ் 37 ரன்களுக்கு வெளியேறினார்.
ஒரே ஓவரில் 25 ரன்
கிளெயன்வெல்ட்
வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் யூசுப் பதான் ஒரு சிக்சர் அடித்தார்.
அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். பின் "ஹாட்ரிக்' பவுண்டரி அடித்த
ரெய்னா, கடைசி பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, மொத்தம் 25 ரன்
எடுக்கப்பட்டது. யூசுப் 11 ரன்கள் எடுத்தார்.
அதிரடி சதம்:
பின்
ஆல்பி மார்கல் பந்தில் இன்னொரு இமாலய சிக்சர்(90 மீ.,) அடித்த ரெய்னா,
சதம் கடந்து அசத்தினார். அடுத்த பந்தையும் அவசரப்பட்டு தூக்கி அடித்த இவர்
101 ரன்களுக்கு(60 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார். பின்
கேப்டன் தோனி ஒரு சிக்சர் அடிக்க, கடைசி 5 ஓவரில் 75 ரன் எடுக்கப்பட்டது.
இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்தது. தோனி(16)
அவுட்டாகாமல் இருந்தார்.
திணறல் ஆட்டம்:
கடின
இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய பந்துவீச்சில் திணறியது.
நெஹ்ரா, பிரவீண் குமார் துல்லியமாக பந்துவீச, சுலபமாக ரன் எடுக்க
முடியவில்லை. யூசுப் பதான் சுழலில் போஸ்மென்(8) சிக்கினார். போராடிய
காலிஸ், ஹர்பஜன் சுழலில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் அடித்தார். பின்
ரவிந்திர ஜடேஜா பந்திலும் சிக்சர் அடித்தார். கேப்டன் ஸ்மித்(36) ரன்
அவுட்டானார். காலிஸ் 73 ரன்களுக்கு சாவ்லா பந்தில் அவுட்டாக, நம்பிக்கை
தகர்ந்தது.
நெஹ்ரா காயம்:
கடைசி
ஓவரில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. நெஹ்ரா அசத்தலாக
பந்துவீசினார். 3வது பந்தை பீல்டிங் செய்த போது நெஹ்ராவுக்கு "அந்த'
இடத்தில் அடிபட, வலியால் துடித்து கீழே விழுந்தார். பின் சுதாரித்துக்
கொண்ட இவர் கட்டுக் கோப்பாக பந்துவீச, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 5
விக்கெட்டுக்கு 172 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
லீக்
சுற்றில் ஏற்கனவே ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி இரண்டாவது வெற்றியை
பதிவு செய்தது. மொத்தம் 4 புள்ளிகளுடன் "சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி
பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ரெய்னா தட்டிச் சென்றார்.
மூன்றாவது வீரர்
நேற்று101 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னா, சர்வதேச "டுவென்டி-20' வரலாற்றில் சதம்
கடந்த முதல் இந்திய வீரரானார். முன்னதாக காம்பிர் 75 ரன்கள்(எதிர், பாக்.,
2007) எடுத்திருந்தார்.
* சர்வதேச "டுவென்டி-20' வரலாற்றில்
இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக
வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (117 ரன், எதிர்-தென் ஆப்ரிக்கா, 2007),
நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலம் (116* ரன், எதிர்-ஆஸ்திரேலியா, 2010)
இச்சாதனை படைத்திருந்தனர்.
* தவிர, "டுவென்டி-20' உலக கோப்பை
கிரிக்கெட் அரங்கில் சதம் கடந்த முதல் இந்தியர் என்ற மேலும் ஒரு புதிய
சாதனை படைத்தார். முன்னதாக காம்பிர் (75) அதிகபட்ச ஸ்கோரை பெற்றிருந்தார்.
இதேபோல <உலக கோப்பை அரங்கில் இச்சாதனை படைத்த இரண்டாவது வீரர் என்ற
பெருமையும் பெற்றார். முன்னதாக வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (117) இச்சாதனை
படைத்தார்.
* இதன்மூலம் ரெய்னா, சர்வதேச "டுவென்டி-20' கிரிக்கெட்
அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். முன்னதாக கடந்த 2009ல்
கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள்
எடுத்தார்.
மூன்றாவது அதிகம்
தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 186 ரன்கள் குவித்த இந்திய அணி, "டுவென்டி-20' உலக
கோப்பை அரங்கில், தனது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரை பெற்றது. முன்னதாக
இந்திய அணி 218 (எதிர்-இங்கிலாந்து, 2007), 188 (எதிர்-ஆஸ்திரேலியா, 2007)
ரன்கள் எடுத்தது.
உற்சாகம் தந்த சதம்
சதம்கடந்தது குறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில், ""சர்வதேச "டுவென்டி-20'
அரங்கில் முதன்முறையாக சதமடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு சகவீரர்
யுவராஜ் சிங், நல்ல ஒத்துழைப்பு தந்தார். ஐ.பி.எல்., தொடரை அடுத்து, உலக
கோப்பை தொடரிலும் 3வது வீரராக களமிறங்கி அசத்தி வருவது உற்சாகம்
அளிக்கிறது. தொடர்ந்து பேட்டிங்கில் அதிரடி காட்டும் பட்சத்தில், மேலும்
பல சதம் கடந்து சாதிக்க முடியும்,'' என்றார்.
ஸ்கோர் போர்டு
இந்தியா
கார்த்திக்(கே)ஸ்மித்(ப)காலிஸ் 16(17)இந்தியா
விஜய்(கே)பவுச்சர்(ப)கிளெய்ன்வெல்ட் 0(1)
ரெய்னா(கே)டிவிலியர்ஸ்(ப)ஆல்பி மார்கல் 101(60)
யுவராஜ்(கே)ஸ்மித்(ப)கிளெய்ன்வெல்ட் 37(30)
யூசுப் பதான்(கே)மெர்வி(ப)ஸ்டைன் 11(7)
தோனி-அவுட் இல்லை- 16(6)
ஹர்பஜன்- அவுட் இல்லை- 0(0)
உதிரிகள் 5
மொத்தம் (20 ஒவரில் 5 விக்.,) 186
விக்கெட் வீழ்ச்சி: 1-4(விஜய்), 2-32(கார்த்திக்), 3-120(யுவராஜ்), 4-163(யூசுப் பதான்), 5-178(ரெய்னா).
பந்து
வீச்சு: கிளெய்ன்வெல்ட் 4-0-48-2, ஸ்டைன் 4-0-24-1, மார்னே மார்கல்
4-0-32-0, ஆல்பி மார்கல் 3-0-39-1, காலிஸ் 4-0-30-1, மெர்வி 1-0-13-0.
தென் ஆப்ரிக்கா
காலிஸ்(கே)ஜடேஜா(ப)சாவ்லா 73(54)போஸ்மென்(கே)சாவ்லா(ப)யூசுப் பதான் 8(14)
ஸ்மித்--ரன் அவுட்(பிரவீண்/தோனி) 36(28)
டிவிலியர்ஸ்(கே)சாவ்லா(ப)நெஹ்ரா 31(15)
ஆல்பி மார்கல்(கே)ஹர்பஜன்(ப)யூசுப் 12(7)
பவுச்சர்-அவுட் இல்லை- 4(2)
டுமினி-அவுட் இல்லை- 4(1)
உதிரிகள் 4
மொத்தம் (20 ஓவரில் 5 விக்.,) 172
விக்கெட் வீழ்ச்சி: 1-21(போஸ்மென்), 2-118(ஸ்மித்), 3-128(காலிஸ்), 4-152(ஆல்பி மார்கல்), 5-167(டிவிலியர்ஸ்).
பந்து வீச்சு: ஹர்பஜன் 4-0-33-0, பிரவீண் 1-0-3-0, நெஹ்ரா 4-0-27-1, யூசுப் பதான் 4-0-42-2, பியுஸ் சாவ்லா 3-0-27-1, ஜடேஜா 4-0-37-0.
அருள்- பண்பாளர்
- Posts : 11469
Join date : 03/01/2010
Similar topics
» நம்புங்க! * இன்னும் இருக்கு "பைனல்' வாய்ப்பு * விராத் விளாசினார் "வீர' சதம் * இந்தியா "சூப்பர்' வெற்றி
» வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இந்திய வீரர் பின்னி சாதனை ...
» ரெய்னா அதிரடியால் சென்னை அபார வெற்றி: 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
» இந்தியா அபார பந்துவீச்சு: வாட்சன் சதம்
» இந்திய அணி இமாலய வெற்றி : தினேஷ் கார்த்திக் அபார சதம்: 65 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
» வங்கதேசத்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இந்திய வீரர் பின்னி சாதனை ...
» ரெய்னா அதிரடியால் சென்னை அபார வெற்றி: 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஐதராபாத் (வீடியோ இணைப்பு)
» இந்தியா அபார பந்துவீச்சு: வாட்சன் சதம்
» இந்திய அணி இமாலய வெற்றி : தினேஷ் கார்த்திக் அபார சதம்: 65 ரன்னுக்கு சுருண்டது ஆஸி.,
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum