TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:04 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 01, 2024 7:37 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


வணக்கமும், பிரியா விடையும்.

2 posters

Go down

வணக்கமும், பிரியா விடையும். Empty வணக்கமும், பிரியா விடையும்.

Post by sakthy Tue Feb 28, 2012 11:02 pm

வணக்கமும், பிரியா விடையும்.

நான் படித்து ரசித்தவையும்,ருசித்தவையும்..................

வினாயகா,சண்டைக் காட்சிகள் இல்லாத சினிமாவில் நான் இரசித்த காட்சிகள். ஒருவரை ஒருவர் பார்க்காது Dating ஆல் இணைக்கப்பட்ட கார்த்திக், மாதவி, வெளித்தோற்றத்தை கண்டதும் கழற்றி விடுவது; மாம் என்று சொன்ன போது மாம் இல்லை சோப்னா என்று பதிலளித்தது;நீங்கள் எல்லாம் தமிழை மறந்து போகிறீர்கள், நான் தமிழைக் கற்றுக் கொண்டேன் என வெளி நாட்டு பெண் சொல்வது போன்றவை.

நாம் வெளி நாடுகளில் sir,madam சொல்வதில்லை. தெரு சுத்தம் செய்யும் தொழிலாளி முதல் நிறுவன மேலதிகாரி வரை பெயர் சொல்லியே அழைக்கிறோம்.Mr. President ஐக் கூட.அது தவிர எல்லோரும் அந்தப் படத்தில் தமிழர்கள்(படத்தில் தான்),ஆனாலும் ஆங்கிலம் தமிழை சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுகிறது.ஆங்கிலம் தெரியாதவர்கள் பார்க்கக் கூடாது என்ற விதியா?ஏன் இந்தக் கொலைவெறி தமிழனிடம்? சமீபத்தில் பார்த்த ஓரளவு பார்க்கக் கூடிய படங்கள் டோனி,மகான் கணக்கு.இரண்டும் இரண்டு செய்திகளை சொல்லியது. ஆனாலும் இவை சரிந்து கொண்டிருக்கும் தமிழ் சினிமாவை சரி செய்ய முடியாத மிக சிறிய மாற்றம் தான்.இன்னமும் கீழே தள்ள வரப் போகிறது, ரஜனியின் உருவத்தை டிஜிட்டல் கிராபிக்ஸ் மூலம்,நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி நடிக்க வைக்கப் போவது தான்.ரஜினி நடிக்காமலேயே படத்தில் அவர் உருவம் வரும்.அதே போல் மறைந்த நடிகர் நாகேசும் நடிக்க இருக்கிறார்,இல்லை அவர் உருவமும் நடிக்க இருக்கிறது.
நாளை சிவாஜியும்,எம்.ஜி.ஆரும் இணைந்து நடிக்கலாம்.யார் கண்டார்கள்.

சென்ற ஆண்டு ஜேர்மனியில் படித்துக் கொண்டிருக்கும் என் பள்ளி நண்பனை சந்திக்க சென்ற போது,அங்கு ஜெர்மானியர்கள் ஆங்கிலம் கலக்காத ஜேர்மனைப் பேசினார்கள், ஜேர்மன் மொழிப் படங்களில் கூட ஆங்கில வார்த்தைகளை தேடிப் பிடிக்க வேண்டி இருந்தது. ஆனால் நாமோ எதிலும் கலப்படமே! அங்குள்ள அன்பான பொலீசாரைப் பார்க்க,அவர்கள் பொலீசாரா இல்லை வரவேற்பாளர்களா என்ற சந்தேகமே வந்தது. வணக்கமும் நன்றியும் சொல்ல அவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜூ.விகடன் தந்து, என் இதயத்தை தொட்ட செய்தி.

மாணவர்களின் ஒழுக்கமின்மைக்கு காரணம் எனன?
எது நாகரீகம் எனற உணராத பெற்றோர்கள், நல்ல நெறிகளைக் கற்பிக்காத பாடத் திட்டம், முன் மாதிரியாக நடந்து கொள்ளாத ஆசிரியர்கள்,கல்வியை தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட அரசாங்கம்... கூட்டுக் குடும்ப அமைப்பு முறையின் சிதைவில் தான் சமுதாயத்தின் ஒழுக்கமின்மை தளிர்க்கிறது.ஆசிரியருக்கு எதிராக மாணவனை கத்தியை தூக்க வைக்கிறது,போதையின் பாதைக்கு திருப்புகிறது,சக தோழனையே சுட்டுக் கொல்ல தூண்டுகிறது,வீட்டை சிறையாக நினைக்கிறது,சொந்தங்கள் அன்னியர்களாக மாறுகிறார்கள்,திருமணங்கள் உடனடியாக கசக்கின்றன,ஆசிரியர்கள் மாணவியரை காதலிப்பதும்,மாணவனுக்கு டீச்சர் லவ் லெட்டர் கொடுப்பதுமாக தொடர்கிறது.வயதானவர்கள் சிறுமியரை பலாத்காரம் செய்வதில் முடிகிறது.
ஆங்காங்கே நடக்கின்ற செய்திகளாக வருகின்ற அவலங்கள் இவை. கலாச்சார ஒழுங்கின்மைக்கு எதிரான யுத்தத்தை பெற்றோர்கள் நடத்தி ஆக வேண்டும்.இதை வேறு யாரும் செய்ய முடியாது.வேறு எவருக்கும் அக்கறையும் கிடையாது. இந்த செய்தி உரியவர்களிடம் போய் சேருமா இல்லை வழக்கம் போல் குப்பைத் தொட்டிக்குள் அடைக்கலமாகுமா?இல்லை நமக்கென்ன என்று இருக்கப் போகிறோமா?

இரண்டு மீனவர்களை கொன்ற இத்தாலியர்களுக்காக துடிக்கிறது இத்தாலிய அரசு. இத்தாலிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் அவர்களை விடுவிக்க தொடர்ந்து படை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொடராக கொல்லப்படும் தமிழக மீனவனைக் காக்கவோ,சில தினங்களுக்கு முன்னரும் கொத்தாக கைது செய்யப்பட்ட மீனவர்களை நிலை பற்றி தட்டிக் கேட்கவோ முன் வரவில்லை சோனியா இந்தியா?

பறவையை கண்டான் விமானம் படைத்தான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்.எதனைக் கண்டான்,மரத்தில்? ஏறி விட்டான். சமீபகால நிகழ்வுகளைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது.நாம் படித்து முடித்து விட்டு பெற்றோர்கள் கடைக் கண் திரும்பாதா என்று தவம் இருக்கும் போது,சமீபத்திய கணக்கெடுப்பின்படி இணைய மூலம் டேட்டிங்க்,dating, மற்றும் திருமண தளங்களுக்கு சென்று தங்களை இணைத்துக் கொண்டவர்களில் 45 வீதமானோர் ஏற்கனவே திருமணமானவர்கள் மட்டுமல்ல மனைவியுடன் ஒன்றாக வாழ்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. எங்கே செல்வேன்,யாரிடம் சொல்வேன்.இவை தான் இணையமும் சினிமாவும் நமக்கு தந்த நன்கொடையா?

ஆசிரியையை கொலை செய்யும் போது ஒருவராவது தடுக்க ஓடி வரவில்லை. கோயம்புத்தூரில் நடுத் தெருவில் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டத்தில் ஒருவராவது காப்பாற்ற துடிக்கவில்லை. இந்த நிலையில் தமிழன் தன் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்,நல்லவற்றில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும், சாதனை புரிய வேண்டும் உலகில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என எண்ணுவதும்,அதற்கு நேரத்தை ஒதுக்குவதும் எந்த அளவில் பலன் தரும் என்ற கேள்விக்கும்,நல்லவற்றைப் படிப்பவர்கள் அறிவை வளர்க்க விரும்புபவர்கள் குறைந்து கொண்டு வருகிறார்களா என்ற கேள்விக்கும் விடை எனக்கு கிடைக்கவில்லை.இவை எல்லாவற்றுக்கும் விடை காண வாழ்வின் கால் நூற்றாண்டில் கால் பதிக்க இருக்கும் எனக்கு அனுபவம் போதவில்லையா என்ற கேள்விக்கும் எனக்கு விடை தெரியவில்லை.

தொழில் நுட்பம் வளர்ந்த இன்றைய நாளில் வேற்றுக் கிரகவாசிகள்,பேய் இப்படி பலவற்றால் ஏமாறும் நாம், அதைப் புரிந்து கொள்ளாத வரையில், எதுவும் சாத்தியமில்லை.

கணினி மற்றும் பொது அறிவுக் கேள்விகளோ,கட்டுரைகளோ இனி என்னிடம் இருந்து வராது என்று சொல்லி,உங்களுக்கு வணக்கம் கூறி,பிரியா விடை பெறுகின்றேன்.

நன்றியுடன்.............................DR. சக்தி.


avatar
sakthy
நிர்வாக குழுவினர்
நிர்வாக குழுவினர்

Posts : 1938
Join date : 26/09/2010

Back to top Go down

வணக்கமும், பிரியா விடையும். Empty Re: வணக்கமும், பிரியா விடையும்.

Post by அருள் Tue Feb 28, 2012 11:04 pm

வணக்கமும், பிரியா விடையும். 917304 நல்ல பதிவு மூட நம்பிக்கை பற்றி
அருள்
அருள்
பண்பாளர்
பண்பாளர்

Posts : 11469
Join date : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum