TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


ஏன் நடக்காது?

Go down

ஏன் நடக்காது? Empty ஏன் நடக்காது?

Post by மாலதி Wed Feb 22, 2012 10:01 am


ஏன் நடக்காது? Edi




சென்னையில் இரண்டாவது முறையாக, ஒரு பொதுத்துறை வங்கியொன்றில், பட்டப் பகலில்
ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்திருக்கிறது. இதில் கொள்ளை போன பணம் ரூ.14 லட்சம் என்பது,
வங்கியைப் பொருத்தவரை, மிகச் சிறிய தொகை என்றாலும், வங்கிகள் தங்களைப்
பாதுகாத்துக்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மீண்டும்
உறுதியாகியுள்ளது.
மிகச் சிறிய வங்கிக் கிளை என்றாலும்கூட, குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு
ஊழியர்கள் இருந்திருப்பார்கள். அத்துடன் துப்பாக்கி ஏந்திய காவலரும் இருந்திருக்க
வேண்டும். வங்கிக்குள் 7 வாடிக்கையாளர்களும் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில்
சுமார் 5 பேர் மட்டுமே நுழைந்து ஒரு கொள்ளையை நடத்தினார்கள் என்பதும், அனைவரிடமும்
செல்போனை பறித்துக்கொண்டார்கள் என்பதும், ஒரு எதிர்ப்புகூட இல்லை என்பதும், வங்கி
ஊழியர்கள் அனைவரும் வெறுமனே உடன்பட்டார்கள் என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.
அதற்காக, வங்கி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் நேரடி மோதலில் ஈடுபட்டு
உயிரைப் பலிகொடுத்திருக்க வேண்டும் என்று சொல்வது நமது நோக்கமல்ல. இச்சம்பவத்தை
வெளியுலகுக்கு, அல்லது தங்கள் மேலிடத்துக்கு மிக நுட்பமாகத் தெரிவித்து உதவிகோரும்
வகையில் தகவல் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தாதது ஏன்? என்பதுதான் நமது கேள்வி.
சுயசேவை பிரிவு வைத்திருக்கும் சாதாரண மளிகைக்கடையில்கூட குளோஸ் சர்க்யூட்
கேமராக்கள் உள்ள நிலையில், ஒரு வங்கியில் இத்தகைய கேமராக்கள் பொருத்துவதிலும், அதன்
மூலம் வேறுஇடத்தில் உள்ள வங்கியின் அதிகாரி அல்லது பணியாளர் மூலம் கண்காணிக்க வகை
செய்வதிலும் வங்கிகள் இன்னமும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அவர்களின்
மெத்தனப்போக்கையே காட்டுகின்றது.
ஆளில்லா ஏடிஎம் மையங்களில் யார் யார் எல்லாம் வந்தார்கள், பணம் எடுத்தார்கள்
என்று கண்டறிய ரகசிய கேமரா வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சில நேர்வுகளில்,
அதன் மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டும் உள்ளார்கள். அத்தகைய ஏற்பாடுகள்
இந்த வங்கியில் இருந்திருக்குமேயானால், இந்நேரம் அவர்கள் யார் என்பது குறைந்தபட்சம்
போலீஸôருக்காவது தெரியவந்திருக்கும்.
வங்கி மூடப்பட்ட பிறகு, வங்கிக்குள் இருக்கும் கருவூலம் திறக்கப்பட்டால்
சைரன் ஒலிக்கும் வசதி எல்லா கிளைகளிலும் இருக்கின்றது. இருப்பினும், பகல்நேரத்தில்
ஒரு கொள்ளைச் சம்பவம் அல்லது ஒரு வாடிக்கையாளர் ஆத்திரத்தில் வங்கி ஊழியரைத் தாக்க
முயலும் சம்பவம் நடக்கும்போது, உதவி கேட்டு சைரன் ஒலி எழுப்பும் வசதி, மேலாளர்
மேசையில், அல்லது காசாளர் மேசையில் இருக்காது என்றால், அவர்கள் எத்தகைய நிலைமையில்
பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்?
ஒரு ரயிலில் நடைபெறும் கொள்ளையைக்கூட செயினை இழுத்து ரயிலை நிறுத்த முடிகிறது,
எல்லா பெட்டிகளிலும் செயின் இருக்கிறது என்றால், ஒரு வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்
அல்லது ஊழியர் உதவிகேட்டு, சைரன் ஒலிக்கச் செய்யும் வசதி, வங்கியின் எல்லா
அறைகளிலும் ஏற்படுத்த முடியாதா? வங்கியில் உள்ள லாக்கர் அறையில்தான் வங்கி ஊழியர்கள்
அடைக்கப்பட்டுள்ளனர். இந்த லாக்கர் அறையில்கூட ரகசிய பொத்தான் வைத்திருந்தால் ஒலி
எழுப்பி உதவி கேட்க முடிந்திருக்குமே? இதற்கான பயிற்சியும், தொழில்நுட்பமும் வங்கி
ஊழியர்களிடம் இல்லை என்பதைத்தானே இந்தக் கொள்ளைச் சம்பவம் மீண்டும் நிலைநாட்டுகிறது.
சம்பவம் நடந்த நேரம் பகல் 2.05 மணி. கீழ்க்கட்டளை பகுதியில் பகல் 2 மணி முதல்
3 மணி வரை மின்நிறுத்தம் இருந்தது என்பதை ஒரு காரணமாகக் கொள்ள முடியாது. மின்தடை
நிலவும் நேரத்திலும் கணினியைப் போன்று, இத்தகைய சைரன்களையும் யுபிஎஸ்-ஸில் இணைத்து
எந்தநேரமும் செயல்படச் செய்வது ஒன்றும் அசாத்தியமானதல்ல.
எல்லாக் கொள்ளைகளையும் காவல்துறை வந்துதான் தடுக்க வேண்டும் என்று
எதிர்பார்த்துக் காத்திருந்தால், கொள்ளைகள் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கும்.
குறைந்தபட்சமாக வங்கிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தங்களுக்குள் ஒரு பாதுகாப்பு
ஏற்பாட்டை, இன்றைய தகவல் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் அமைத்துக்கொள்ள வேண்டியது
அவசியம்.
விபத்து நடந்தால், தொலைபேசி, செல்பேசி எதுவென்றாலும் 108-க்கு தொடர்பு
கொண்டால் போதும். எந்த இடத்தில் விபத்து என்றாலும், யார் வேண்டுமானாலும் 108-க்கு
தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கிறார்கள். அந்த அளவுக்கு அனைவருக்கும் மனதில்
பதிந்துபோன எண்ணாக இருக்கிறது.
ஒரு கொள்ளை அல்லது வன்முறை நடக்கும் இடத்தில் காவல்துறைக்கு எந்த இடம், என்ன
நடக்கிறது என்பதை விளக்கிக் கொண்டிருக்க முடியாது என்றாலும், ஒரு வாடிக்கையாளர்
காவல்துறைக்கு சமிக்ஞை தரும் வழிமுறையை உண்டாக்க முடியாதா என்ன! அல்லது வங்கி
ஊழியர்கள் எந்த வகையில் ரகசியமாக சமிக்ஞைகளை காவல்துறைக்கு அல்லது மற்றவர்களுக்குக்
கொண்டு செல்ல முடியும் என்பதில் முக்கிய ஊழியர்கள் அனைவருக்கும் பயிற்சியும்,
அதற்கேற்ற தகவல்தொழில்நுட்ப வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வது கூடவா இயலாத காரியம்?
பலகோடி ரூபாய் பணமும் நகைகளும், லாக்கர்களும் இருக்கும் வங்கிகள் ஏன் செய்யாமல்
இருக்கின்றன என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
நுகர்வோர் கலாசாரத்தால் ஏற்பட்டிருக்கும் தாக்கமும், அதிகரித்துவிட்ட ஏழை -
பணக்கார வித்தியாசமும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் என்பது
எதிர்பார்த்த ஒன்றுதான். வாடிக்கையாளர்களின் சேவைக்காக வங்கிகள் இயங்கிய நிலைமை மாறி,
லாபத்துக்காக மட்டுமே வங்கிகள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்ட நிலையில், மக்களின்
பணத்தைப் பாதுகாக்கவும், கொள்ளை, திருட்டைத் தவிர்க்கவும் காவல்துறையை மட்டுமே
நம்பியிருக்கக்கூடாது. தாங்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளை எல்லா வகையிலும்
பலப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, கதவுகளை இரும்புக் கம்பிகளை ஓர் ஆள் நுழையும் அளவுக்கு மட்டுமே
விரித்துவைத்து சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள். கத்தி, துப்பாக்கி சகிதம் ஒரு
நபர் உள்ளே நுழைந்தால் அபாயஓசை ஒலிக்கும் ஸ்கேனர் நுழைவுகள் அமைக்க என்ன
செலவாகிவிடும் இவர்களுக்கு?
சந்தைப் பொருளாதாரச் சிந்தனையின் அடிப்படைத் தத்துவங்களில் ஒன்று, "ஏமாறுபவன்
இருந்தால் ஏமாற்றுபவனும் இருப்பான்' என்பது. அது வங்கிகளுக்கும் பொருந்தும்!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நடக்கும் என்பார் நடக்காது,நடக்காது என்பார் நடந்து விடும் இன்றைய சுவையான அரசியல் செய்தி
» ராணா படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்காது... - யூகங்களை வெல்வாரா ரஜினி
» தமிழக மீனவர்கள் மீது இனி துப்பாக்கிச் சூடு நடக்காது : சோனியா வாக்குறுதி
» 2ஜி ஊழல் விசாரணை இனி திகார் ஜெயிலில் தான்...: தினமும் "வெளியே' வந்து செல்வது இனி நடக்காது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum