TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Wed Apr 24, 2024 2:31 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 23, 2024 12:00 am

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 22, 2024 9:07 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri Apr 19, 2024 9:02 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


துட்டை கண்ணில் காட்டாத ராமதாஸ், அன்புமணி: கடலூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு

Go down

துட்டை கண்ணில் காட்டாத ராமதாஸ், அன்புமணி: கடலூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு Empty துட்டை கண்ணில் காட்டாத ராமதாஸ், அன்புமணி: கடலூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு

Post by மாலதி Mon Jan 09, 2012 7:30 am

கடலூர் மாவட்டத்தில், "தானே' புயல் ஆடிய தாண்டவத்தால், வன்னிய சமுதாய
மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பா.ம.க.,வினர்
நிவாரணம் வழங்கவில்லை. தங்களால் ஆதாயம் பெற்ற பா.ம.க.,வினர் நிவாரண உதவி
வழங்காதது, மாவட்ட மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க., - தி.மு.க.,விடம் மாறி மாறி கூட்டணி வைத்து தங்கள்
செல்வாக்கை தக்க வைத்துக்கொண்டு, அரசியல் ஆதாயம் பெறுவதிலேயே பா.ம.க.,
தலைமை குறியாக இருந்தது. கட்சியின் பிற நிர்வாகிகளும் இதை
சுட்டிக்காட்டவில்லை. ஒரு கட்டத்தில் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டு எந்த
பலனும் கிடைக்காததால், யோசித்த வன்னியர் சமுதாய மக்கள், அந்த கட்சியை
புறக்கணித்துள்ளனர். இதனால், தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் பா.ம.க.,
தனது செல்வாக்கை இழந்து நிர்கதியாக நிற்கிறது. குளத்தில் நீர் வற்றுவதைக்
கண்ட கொக்குகள் போல, பா.ம.க.,வில் இருந்து பலர் வேறு கட்சிகளுக்கு தாவத்
துவங்கியுள்ளனர். கூட்டணி மாற பா.ம.க., கற்றுக் கொடுத்த பார்முலாவையே கட்சி
மாறுவதற்கு அந்த கட்சியினர், இப்போது பயன்படுத்துகின்றனர்.

இருக்கும் கூட்டத்தையாவது, தக்க வைக்கும் முயற்சியில் பா.ம.க., தலைமை
களமிறங்கியுள்ளது. அனுபவ பாடம் கற்றுத் தெளிந்தவர்கள் போல், இனி திராவிடக்
கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி
இளைஞர் சங்க நிர்வாகி அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மேடை போட்டு முழங்கி
வருகின்றனர். இந்நிலையில், "தானே' புயல் ஆடிய தாண்டவத்தால், வன்னிய சமுதாய
மக்கள் அதிகம் வசிக்கும் கடலூர் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
முந்திரி, பலா, வாழை, தென்னை மரங்களை கொண்டு பிழைப்பு நடத்திய விவசாயிகள்,
ஒரே இரவில் ஓட்டாண்டி ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல குடும்பங்களும்
வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தையும், மக்களையும், புயல் பாதிப்பிலிருந்து மீட்பதற்காக
அரசு, கோடிக்கணக்கான ரூபாயை நிவாரண நிதிக்காக பயன்படுத்தி வருகிறது.இது
மட்டுமின்றி, தி.மு.க., தரப்பில் 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க., தரப்பில் 10 லட்சம்
ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம் சீராகும் வரை தண்ணீர்
எடுக்க வசதியாக பல இடங்களில் தற்காலிக ஜெனரேட்டர்களும் தே.மு.தி.க.,வால்
வைக்கப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் மட்டுமின்றி, ஐ.ஜே.கே., சார்பில் 20
லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வன்னியர் சமுதாய மக்கள் ஓட்டு வங்கியை பயன்படுத்தி ஆதாயம் பெற்ற
பா.ம.க., சார்பில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரண உதவி எதுவும்
வழங்கப்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளுக்கு "டூர்' சென்ற ராமதாஸ் மற்றும்
அன்புமணி, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துவிட்டு வந்த வேலை முடிந்ததாக
கிளம்பிச் சென்றுவிட்டனர். பா.ம.க., தலைவர் மணி, ஒரு படி மேலாகச் சென்று,
புயலால் பாதித்த வாழைத்தாரை கையில் வாங்கி பார்த்துவிட்டு கிளம்பி
விட்டார்.இவர்கள் மூவருமே, மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டுமென
பேசிவிட்டு, பாதித்த மக்களுக்கு தங்கள் பாக்கெட்டில் இருந்து 10 ரூபாய்
கூட எடுத்துக் கொடுக்கவில்லை. இது, கடலூர் மாவட்ட மக்கள் மத்தியில்
மட்டுமின்றி, அந்த மாவட்ட பா.ம.க., நிர்வாகிகள் மத்தியிலும் கடும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

"ராமதாஸ் போராட்டம் நடத்தினால் பெட்டி வந்ததும் முடித்துக் கொள்வார்':
ராமதாஸ் டாஸ்மாக், ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவார்,
பெட்டிகள் வந்தவுடன் முடித்துக் கொள்வார் என, வேல்முருகன் குற்றம்சாட்டிப்
பேசினார்.

விழுப்புரத்தில் நடந்த இளம்புயல் பாசறை அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக்
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., வேல்முருகன் பேசியதாவது:இடஒதுக்கீடு
போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்தினர் முறையிட்டபோது ராமதாஸ் அவர்களைக்
கேவலப்படுத்தினார். அவரது எடுபிடிகள், நண்பர்கள், அன்புமணி ஆகியோர்
அமைச்சர்களாவதற்கு தியாகம் செய்த தியாகிகளுக்கும், சமூகத்தினருக்கும் வேலை
வாங்கி கொடுக்கவில்லை. அவர்களது, பினாமிகளை அமைச்சர்களாக்கி
சம்பாதித்தனர்.தீரன் எம்.எல்.ஏ., வாக இருந்தபோது தியாகிகள் குடும்பத்திற்கு
நிதி பெற்று கொடுத்தார், இடையே அது நிறுத்தப்பட்டபோது நாங்கள் போராட
முயன்றதை ராமதாஸ் தடுத்தார். வன்னியர்களிடம் நிதி திரட்டி கட்டிய பல்கலை.,
யில் யாருக்காவது வேலை கொடுத்தாரா. அவர் குடும்பத்தினர் டிரஸ்ட்
நிர்வாகிகளாக உள்ளனர். வெளிநபராக இருந்த கோவிந்தசாமியும் தற்போது
நீக்கப்பட்டுள்ளார்.

மக்கள் "டிவி'யிலும் அவர்கள் குடும்பத்தினரே உள்ளனர். மலையாளி,
தெலுங்கர்கள் தான் நிர்வாகிகளாக, ஆசிரியர்களாக உள்ளனர். தைலாபுரம் பயிற்சி
பட்டறை இயக்குனரும் மலையாளிதான். வாயில்லா பூச்சிகள் தான் அவரிடம்
உள்ளனர்.ஈழத் தமிழர் பிரச்னையின் போது அன்புமணியின் பதவிக்காக கூட்டணியை
விட்டு வெளியேறவில்லை. அதை நான் சுட்டிக் காட்டியதை ராமதாஸ்
ஏற்கவில்லை.டாஸ்மாக், ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம், பின்னர்
பெட்டி வாங்கிக் கொண்டு முடித்துக் கொள்வது. பவர் கார்ப்பரேஷனிடம் கோடிகளை
வாங்கிக் கொண்டு ராமதாஸ் போராட்டத்தைப் பின் வாங்கினார்.

ஏற்காட்டில் மாமியார் பெயரில் 550 ஏக்கர் தோட்டம், 40 கோடியில் தங்கை
பெயரில் மாளிகை, சென்னையில் அக்கா பெயரில் சொத்துகள் உள்ளன. தியாகிகளுக்கு
10 லட்சத்தில் வீடு கட்டச் சொன்னேன், கல்லூரிக்கு அவர்கள் பெயரை வைக்க
கேள்வி கேட்டேன். பதில் கூறவில்லை. கோடிகள் வந்தது குறித்த புள்ளி
விபரங்கள் என்னிடம் உள்ளது. லாபத்திற்காக கட்சி நடத்துகின்றார்.இந்த
தேர்தலுக்கு கூட கருணாநிதியிடம் ராமதாஸ் குடும்பத்தினர் பெட்டி
வாங்கியுள்ளனர். திண்டிவனம் வழக்கில் சி.பி.ஐ., உண்மை கொலையாளிகளை
விசாரிக்க வேண்டும்.இவ்வாறு வேல்முருகன் பேசினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கல்வி உதவித்தொகையை கண்ணில் காட்டாத பள்ளிகள்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
» திமுகவினால்தான் தோற்றோம்: அன்புமணி ராமதாஸ் காட்டம்
» 'எனக்கு வெறி பிடிச்சிருக்கு...' : அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
» அன்புமணி ராமதாஸ் சென்னையில் கைது: அதிமுக அரசு மீது குற்றச்சாட்டு
» அன்புமணி ராமதாஸ் விடுதலையானார்!Anbumani Ramadoss granted conditional bail

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum