TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:13 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:00 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


மதுரை வரலாறு -தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)

Go down

மதுரை வரலாறு -தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி) Empty மதுரை வரலாறு -தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)

Post by ஜனனி Wed Nov 09, 2011 5:09 pm


மதுரை வரலாறு -தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி) Madurai

மதுரை வரலாறு -தொல்லியல் அறிஞர் வேதாட்சலம் (தொகுப்பு - கவிஞர் இரா. இரவி)
கற்காலத்தை
மூன்று வகையாகப் பிரிக்கலாம். பழைய கற்காலம், புதிய கற்காலம், பழைய
கற்காலக் கருவிகள் மதுரை பகுதியில் கிடைக்கவில்லை.இடை கற்காலக் கருவிக்
மதுரையி;ல் கிடைத்துள்ளது. மதுரை என்றால், மதுரையின் மையப்பகுதி இதுவரை
அகழவாராய்ச்சி செய்யப்படவில்லை என்பது வருத்தத்திற்குரிய உண்மை. மதுரையைச்
சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று உள்ளது.
மதுரையின் மையப்பகுதியில் எதிர்க்காலத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதால்
இன்னும் பல வரலாற்று சான்றுகளைப் பெற முடியும் என்பது உண்மை.
உலகின் மூத்த குடி தமிழ்க்குடி மதுரையில் வாழந்துள்ளான். மதுரை மனிதன்
ப+மியில் புதைந்து கிடந்துள்ள கற்களை சிறுசிறு கருவியாகப் பயன்படுத்தி
இருக்கின்றான். கி.மு 4000 ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கற்காலக் கருவி
துவரிமான், அரிட்டாபட்டி, மாங்குளம் போன்ற பகுதிகளில் கிடைத்தது. நாடோடி
வாழ்க்கையில் இருந்து மாறி, ஓரிடத்தில் தங்கி வாழும் வாழ்க்கைக்கு
மாறுகிறான். கற்காலத்திற்குப் பின் இரும்பு காலம் வருகின்றது. கி.மு. 1000
இரும்பு உருவாகின்றது. இரும்பு கண்டுபிடிப்பிற்கு பின் மனித வாழ்க்கையில்
பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றது. மதுரையின் புறப்பகுதியில் இரும்புக்கால
மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் பல கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் மனிதன்
இறந்ததும் எரிக்கும் பழக்கம் இல்லை. சுமாதிகள் கட்டும் பழக்கம்
இருந்துள்ளது. சமாதியைச் சுற்றி கல்வட்டம் அமைத்தல், ப+மிக்கு மேல் கல்லறை
கல்திட்டு அமைத்துள்ளனர். இடு துளை வழியாக படையல் பொருட்கள் ஆண்டுதோறும்
போடும் பழக்கம் இருந்துள்ளது. பின் குத்துக்கல் வைத்து நடும் முறை, பின்
எழுதி வைக்கும் கல்வெட்டு முறை, முதுமக்கள் தாழிகள் இட்டு புதைக்கும் முறை
வந்தது. மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி பெருமாள் மலை அருகே ஆயிரக்கணக்கான
கல்லறைகள் இன்றும் உள்ளது. சில அழிந்து விட்டது.
மதுரையில் கோவலன் பொட்டல் என்ற பகுதியில் கல்லறைக்ள உள்ளது. இறந்தவர்களை
புதைத்தல் பின்னர் அவர்களது எலும்புகளை எடுத்து கலயத்தில் வைத்துள்ளனர்.
மண்ணோடு புதைக்கப்பட்ட எலும்புகள் 200 வருடத்திற்குள் அழிந்து விடும்.
தூழிகளில் வைக்கப்பட்ட எலும்புகள் ஆயிரம் வருடங்களானாலும் அழியாமல்
அப்படியே இருக்கும். அந்த ஆற்றல் உள்ள கலயத்தை அன்றே கண்டுபிடித்து
உள்ளான். இன்றைக்கு மதுரையில் ஆவின் பால் நிறுவனம் உள்ள சாத்தமங்கலம்
பகுதியில் கல்லறைகள் நிறைய இருந்தன. கி.மு 400 ஆண்டில் மதுரையின் நாகரிக
வளர்ச்சிக்கு பத்துப்பாட்டு எட்டுத் தொகையில் இலக்கியச் சான்றுகள் உள்ளது.
கி.மு நூற்றாண்டிலேயே மதுரை என்ற பெயர் இருந்துள்ளது. அழகர் மலையில்
கி.மு.2ஆம் நூற்றாண்டில் மதிரை என்ற சொல் வருகின்றது. மதிரை என்பது ஒரு
பெண் தெய்வத்தின் பெயராக இருந்திருக்கலாம். ஆதிரை என்பது போல மதிரை என்பது
மதுரையாக பிறகுதான் மாறுகின்றது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் பாண்டி
நெடுஞ்செழியன் முனிவர்களுக்கு கல் படுகை அமைத்துக் கொடுத்ததற்கான சான்று
உள்ளது. மதுரையில் பௌத்தம், சமணம் என பல்வேறு சமயங்களும் இருந்துள்ளது.
மதுரையைச் சுற்றி 13 இடங்களில் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
புலிமான் கொம்பு என்ற இடத்தில் நடுகற்கள் கிடைத்தது.இந்தியாவிலேயே
தொன்மையான சான்றாக அசோகர் காலச் சான்று சொல்லப்படுகின்றது. அதற்கும்
முந்திய சான்றுகள் மதுரையில் உள்ளது. ப+லாங்குறி என்ற ஊரில் மதுரையைப்
பற்றிய சாசனம் கிடைத்தது. சேந்தன், சேந்தன்குட்டன் என்ற மன்னர்கள்
வரலாற்றில் மதுரையைப் பற்றி வருகின்றது. சங்க காலத்திற்கு பிறகான கல்வெட்டு
நிறைய கிடைத்துள்ளது. சமண மதத்தில் வாசுதேவன் என்ற கடவுள் இருந்தது.
குளக்கரையில் முனிவர்கள் வசித்த இடம். இப்படி பல்வேறு சான்றுகள் பல்வேறு
சமணர்களின் கல் படுக்கைகள் உள்ளது.
மதுரை மீண்டும் பாண்டியர்கள் வசம் வருகின்றது. கடுங்கோன் என்ற மன்னன்
கைப்பற்றுகின்றான். இதற்கான செப்பேடு உள்ளது. குருவிக்காரன்சாலை பகுதியில்
வைகை ஆற்றில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு கல்லை எடுத்துப் பார்த்த
போது வட்டெழுத்து கல்வெட்டாக இருந்தது. கிபி.7ம் நூற்றாண்டு கல்வெட்டு
தடுப்பணை, மதகு அமைத்து வாய்க்கால் வெட்டி நீர் பாசனம் நடந்ததை
தெரிவிக்கின்றது.அடுத்தவர்களை பாதிக்கும் வண்ணம் பெரிய அணைகள் அன்று
கட்டப்படவில்லை. இந்த கல்வெட்டு மீனாட்சி கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில்
இன்றும் உள்ளது. மதனகோபால் சாமி கோவிலில் கிடைத்த வட்டெழுத்து கல்வெட்டு
மதுரை வரலாற்றை பதிவு செய்துள்ளது. நெடுமாறன் காலத்து செப்பேடு கிடைத்தது.
சோழர்கள் வருகிறார்கள். யானைமலை கல்வெட்டு கிடைத்தது.ராஜராஜன் ஆட்சி
பற்றியும் உள்ளது. இஸ்லாமியர் வருகை அவர்களது ஆட்சியும் மதுரையில்
நடைபெற்றுள்ளது. விஜயநகர ஆட்சி நாயக்கர்கள் ஆட்சி இப்படி பல ஆட்சி
மாற்றங்களை மதுரை சந்தித்து உள்ளது. நாயக்கர்கள் ஆட்சியின் போது கிராம
ஆட்சி ஒழிக்கப்பட்டு பாளையக்காரர்கள் ஆட்சி வருகின்றது. சமுதாய மாற்றங்கள்
பல நிகழ்ந்துள்ளது.
மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தொல்லியல் ஆய்வின் போது மதுரை
வரலாற்றை அறிவியல் ரீதியாக அறியக்கூடிய பல சான்றுகள் கிடைத்துள்ளன. பாண்டிய
மன்னர்களின் சதுர வடிவ நாணயங்கள் 2ம் நூற்றாண்டு நாணயங்கள், யானை,மீன்
சின்னம் இருக்கும். ரோமானியர்கள் வெளியிட்ட செப்புக் காசுகள் சோழர் நாணயம்,
பிற்காலப் பாண்டியர்கள் நாணயம், பானை ஓடுகள் உள்ளது. ரோமானியர்கள் உறவை
உறுதிப்படுத்தும் மது ஜாடிகள் கிடைத்து உள்ளது. சுட்ட மண்ணால் ஆன ஆபரணங்கள்
இப்படி பல சான்றுகள் கிடைத்தது. மாடக்குளம் என்ற குளத்திலிருந்து வந்த
நீரின் மூலம் மதுரையில் பெருமளவில் விவசாயம் அன்றே நடந்துள்ளது. மாடக்குளம்
கீழ்மதுரை என்று வருகின்றது.
தொல்லியல் அறிஞர் திரு.வேதாட்சலம் அவர்கள் மதுரை திருமலை நாயக்கர்
அரண்மனையில் என்னுடன் பணிபுரிந்தவர். அவரது தொல்லியல் தொடர்பான கடின
உழைப்பை ஈடுபாட்டை நான் நன்கு அறிவேன். அவரது உரையை கேட்டு முடித்த பின்,
மதுரையில் பிறந்ததற்காக பெருமை கொண்டேன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி என்பது வரலாற்று உண்மை.
இந்தியாவில் மிக தொன்மையான நகரம் மதுரை. உலகின் முன்மொழி தமிழ்மொழி என
அறிஞர்கள் மெய்ப்பித்து விட்டார்கள். உலகின் முதல் மனிதன் மதுரையில்
வாழ்ந்தான் என்ற சான்றும் விரைவில் கிடைக்கும். நகைச்சுவையாக ஒரு பழமொழி
உண்டு. மதுரையைச் சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு போகாது. என்று. கழுதையே
அப்படி என்றால், மனிதனைச் சொல்லவும் வேண்டுமோ? நான் பல நட்சத்திர
விடுதிகளில் பல ஊர்கள் பல்வேறு வசதிகளுடன் தங்கும் வாய்ப்பை பெற்று
இருக்கிறேன். ஆனால் உலகின் எந்த மூலையில் எத்தனை வசதிகளுடன் தங்கினாலும்
மதுரைக்கு ஈடான ஊரை நான் எங்கும் கண்டதில்லை. பிறந்த மண் பாசமாகக் கூட
இருக்கலாம். எனக்கு மட்டுமல்ல, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் பிறந்த
மண் பாசம் அவசியம் இருக்க வேண்டும். நான் பிறந்த மண் மதுரை வரலாறு கேட்டு
அதனை பதிவு செய்ததை பெருமையாகக் கருதுகின்றேன். உலகம் உள்ளவரை மதுரையின்
புகழ் நிலைக்கும்
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum