TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 10:39 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Sun May 05, 2024 7:48 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat May 04, 2024 5:18 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களை ஒதுக்காதீர்கள் : முதல்வர் ஜெயலலிதா

Go down

காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களை ஒதுக்காதீர்கள் : முதல்வர் ஜெயலலிதா Empty காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களை ஒதுக்காதீர்கள் : முதல்வர் ஜெயலலிதா

Post by ஜனனி Sat Oct 22, 2011 4:34 pm

காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களை ஒதுக்காதீர்கள் : முதல்வர் ஜெயலலிதா Evening-Tamil-News-Paper_58774530888


புதுடெல்லி: காங்கிரஸ் ஆட்சி இல்லாத மாநிலங்களை ஒதுக்காதீர்கள் என்று
தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா
வலியுறுத்தியுள்ளார். தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் மன்மோகன்
சிங் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக அரசு சார்பில்
கலந்து கொண்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதாவின் உரையை
படித்தார். அதில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:
நாட்டின் 12வது ஐந்தாண்டு
திட்டம் குறித்து ஆலோசிக்கவும், திட்டங்களுக்கு அனுமதி வழங்கவும் தேசிய
வளர்ச்சி கவுன்சில் கூட்டம் கூடியுள்ளது.

ஆனால், இந்த கூட்டம்
குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துக்கு வழிவகுக்காமல் சம்பிரதாயமாக மட்டுமே
நடத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின்
மக்கள் பிரச்னைகளை, மத்தியில் உள்ள இந்த அரசு புரிந்து கொள்ளவில்லை.
காங்கிரஸ் ஆட்சி அல்லாத மாநிலங்களின் நியாயமான கோரிக்கைகள், தேவைகளை கூட
மத்திய அரசு நிறைவேற்றித் தருவதில்லை. சிறப்பு உதவி, நிதி ஒதுக்கீடு
குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும் தமிழகத்துக்கு மத்திய அரசிடம்
இருந்து எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், மத்தியில் ஆளும்
கூட்டணியில் இருப்பதாலேயே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு
வங்கத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கி தரப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி இல்லாத
மாநிலங்கள் மீது மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை இது நன்கு
எடுத்துக் காட்டுகிறது. மத்திய அரசு எடுக்கும் பல நடவடிக்கைகள் பாசிச
மனப்பான்மையுடனும் ஜனநாயக விரோதமாகவும் உள்ளன. குறிப்பாக மதக்கலவரத்தை
தடுக்க புதிய சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது மாநில
அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயல். எல்லா அதிகாரமும் தன்னிடமே குவிந்து
கிடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் எண்ணத்தை இதுபோன்ற நடவடிக்கைகள்
எடுத்துக் காட்டுகின்றன.

இதனால் எல்லா விஷயத்துக்கும் மத்திய அரசை
கையேந்தும் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்படும். இதேபோல் மாநிலங்களின்
எதிர்ப்பையும் மீறி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை கொண்டுவர
மத்திய அரசு முயற்சிக்கிறது. இது மாநிலங்கள் விதிக்கும் மதிப்பு கூட்டு
வரியை (வாட்) பறிக்கும் முயற்சியாக உள்ளது. இதனால் மாநிலங்களுக்கு பெரும்
வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, ஜிஎஸ்டி வரியை கொண்டு வரும் திட்டத்தை
தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது.

தொழில் கல்வி சேர்க்கைக்கு பொது
நுழைவுத் தேர்வு விஷயத்தில், மாநிலங்களின் நிலைமை, கருத்துகள் கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாநில கல்வித் துறையிலும் மத்திய அரசு அடிக்கடி
தலையிடுகிறது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி
நடத்தும் தாக்குதலை, இந்தியா மீது நடத்தும் தாக்குதலாக இதுவரை மத்திய அரசு
நினைக்கவில்லை. மீனவர் மீதான தாக்குதல் ஏதோ தமிழகத்துக்கான சிறிய
பிரச்னையாக மத்திய அரசு நினைக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை
கடும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்ற சூழ்நிலைகளில் தேசிய
வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் கூடுவதால் எந்த பயனும் ஏற்படாதோ என்ற அச்சம்
எனக்கு எழுந்துள்ளது. கவுன்சில் திட்டமிட்டுள்ள விரைந்த, கூடுதல் வளர்ச்சி
என்ற இலக்கு சரியான பாதையை நோக்கி செல்லவில்லை. 12வது ஐந்தாண்டு திட்டம்
பற்றி யோசிக்கும் இந்த நேரத்தில், 11வது ஐந்தாண்டு திட்டங்களை
செயல்படுத்தும் போது ஏற்பட்ட தோல்விகளை பற்றி ஆராய வேண்டும். அதன்
அடிப்படையில் 12வது ஐந்தாண்டு திட்டத்தை குறைகள் இல்லாமல் அமல்படுத்த
வேண்டும்.

நாட்டின் வளர்ச்சிக்கு மாநில முதல்வர்களை
கலந்தாலோசிக்கவும், அவர்களை சம பங்குதாரராக நினைத்து திட்டங்களை வகுக்கவும்
அமைக்கப்பட்டதுதான் தேசிய வளர்ச்சி கவுன்சில். ஆனால், மாநிலங்களை
பங்குதாரர்களாக மத்திய அரசு கருதுகிறதா என்று தெரியவில்லை. ஏழைகளுக்கு
மானிய விலையில் வழங்க கூடுதல் கெரசின், கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்
என்ற நியாயமான கோரிக்கைகளை கூட மத்திய அரசு நிறைவேற்றித் தரவில்லை என்றால்,
இதுபோன்ற கூட்டங்கள் வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும். இதனால்
மாநிலங்களும் மக்களும் கடும் அதிருப்திக்கு ஆளாவார்கள் என்பதை தெரிவித்துக்
கொள்கிறேன்.

நம்பிக்கை இல்லாத இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டிய நேரம்
வந்துள்ளதாக நம்புகிறேன். நாட்டின் ஏழை மக்கள் வளர்ச்சிக்கு பயனுள்ள
வகையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும், மாநிலங்களின் கோரிக்கைகளை சரியான
நேரத்தில் நிறைவேற்றித் தரவேண்டும் என்று இந்தக் கூட்டத்தை
வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், விலைவாசி
உயர்வு, பணவீக்கம், வேளாண்மை, உற்பத்தி துறைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி
பெறாதது, ஏழை - பணக்காரன் வித்தியாசம் அதிகரித்துள்ளதால் சமூகத்தில்
நிலவும் ஏற்றத் தாழ்வுகள் போன்ற பிரச்னைகள் குறித்தும் ஜெயலலிதா தனது
உரையில் கவலை தெரிவித்துள்ளார்.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்- முதல்வர் ஜெயலலிதா
» முதல்வர் பொறுப்பேற்ற பின் எந்த சொத்தும் வாங்கவில்லை : முதல்வர் ஜெயலலிதா
» ஆட்சி மாறும் நிலையில் புலிகளுக்கான தடையை 5 வருடத்திற்கு நீடித்தது காங்கிரஸ்
» ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு: டெல்லி முதல் மந்திரி ஆகிறார், கெஜ்ரிவால்?
» திமுக ஆட்சி தொடர ஆதரவு தாருங்கள்! - முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum