TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்

Go down

தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம் Empty தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்

Post by மாலதி Wed Sep 28, 2011 9:00 am

சென்னை :தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ.,
தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக
கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக
சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை
வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு
முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13)
அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில்
அறிமுகப்படுத்தப்படும்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:கல்வி கற்கும் முறை
மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக
தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர்களை
மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தும் வகையில் பல மாறுதல்கள்
செய்யப்பட்டு வருகின்றன.தற்போதுள்ள தேர்வு முறை, மானப்பாடம் செய்து எழுதும்
வகையில் உள்ளது. வகுப்புகளில் படிப்பதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து
செயல்படும் வகையில் இல்லை. கேள்வித்தாள்களும், பாடங்களுக்கும் அப்பாற்பட்டு
அவர்களை சிந்திக்கவிடுவதில்லை.

எனவே, தேசிய கல்விக் கொள்கைபடி, பாடங்கள் மற்றும் பாடங்கள் அல்லாத
உடற்கல்வி, ஓவியம் போன்றவற்றையும் ஒருங்கிணைத்து மதிப்பிடும் முழுமையான
தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய தேர்வு
மதிப்பீட்டு முறையால், குழந்தைகளுக்கு அழுத்தத்தை குறைப்பதோடு அவர்களது
தனித் திறனை வளர்க்க உதவும். இந்த மதிப்பீட்டு முறை, ஏற்கனவே சி.பி.எஸ்.இ.,
பாடத்திட்டத்திலும் கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில்
அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்திலும் தற்போதுள்ள தேர்வு மதிப்பீட்டு
முறையை மாற்றி, முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது
அவசர, அவசியமாகிறது.

புதிய தேர்வு முறைப்படி, கல்வியாண்டு மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு
தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் செப்டம்பர் முதல் பருவம், அக்டோபர் முதல்
டிசம்பர் வரை இரண்டாவது பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலம் மூன்றாவது
பருவமாகும்.

ஒரு பருவம் முழுவதும் வகுப்பறைகளில் தேர்வு நடத்தி உடனடியாக மதிப்பீடு
செய்வது . இது உடனடி மதிப்பீடு. பருவ இறுதியில் தேர்வு நடத்தி மதிப்பீடு
செய்வது, மொத்த மதிப்பீடு என்ற வகையில் தேர்வு நடத்தப்படும். இதில்
வகுப்பறை உடனடி தேர்வுகளுக்கு மொத்த மதிப்பெண் 40, பருவ இறுதியில்
நடைபெறும் மொத்த தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 60. இரண்டு மதிப்பெண்களை
கூட்டினால் கிடைக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும்.
மொத்தம் 6 வகுப்பறை தேர்வுகள் நடத்தப்பட்டு, இதில் அதிக மதிப்பெண்கள்
எடுத்துள்ள 4 தேர்வுகள் கணக்கில் கொள்ளப்படும்.பாடங்களுக்கும், பாடங்கள்
அல்லாத உடற் பயிற்சி கல்வி உள்ளிட்டவற்றுக்கும் மதிப்பெண்கள்
கணக்கிடப்படும்.

பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில் 55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும்
மாணவர்களுக்கு ஏ1 கிரேடு அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல்
49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற
வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்படும். இதில், 12
மதிப்பெண்களுக்கு கீழே எடுத்திருந்தால் இ2 கிரேடு மட்டும் வழங்கப்படும்.
புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை
தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.

வகுப்பறை தேர்வு மற்றும் பருவ இறுதி தேர்வு இரண்டையும் சேர்த்து மொத்த
மதிப்பெண் 100 என நிர்ணயித்து, அதன் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும்.
இதுபோன்று, ஒவ்வொரு பருவத்துக்கும் தேர்வு நடத்தப்பட்டு, கிரேடு
வழங்கப்படும்.

இதில், ஏ கிரேடு எடுத்தால் மிக மிக சிறந்த மாணவன், (பி) கிரேடு மிக
சிறந்த மாணவன், (சி) கிரேடு சிறந்த மாணவன், (டி) கிரேடு திருப்திகரம், (இ)
கிரேடு திருப்தி இல்லை. இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என
நிர்ணயிக்கப்படும். ஒரு பருவத்தில் படிக்கும் பாடங்களை அடுத்த பருவத்தில்
படிக்க தேவையில்லை.

கல்லூரிகளை போல, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு செமஸ்டர் முறை
அமல்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அரசு உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தேர்வு முறை கல்வியாளர்கள் வரவேற்பு : ""தேர்வு முறையில்
தமிழக அரசு கொண்டு வந்துள்ள மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தை
குறைக்கும். சி.பி.எஸ்.இ., திட்டத்தை பின்பற்றி தமிழக அரசு அறிவித்துள்ள
தேர்வு மதிப்பீடு முறை வரவேற்கத்தக்கது,'' என, கல்வியாளர் சதீஷ் கூறினார்.

ஆர்.எம்.கே., கல்வி குழுமத்தின் முதன்மை முதல்வரும், கல்வியாளருமான சதீஷ் கூறியதாவது:தமிழக
அரசு பள்ளி தேர்வு மதிப்பீட்டு முறையில் மிகப் பெரிய மாற்றத்தை
அறிவித்துள்ளது. இத்திட்டம் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும். தொடர்
மதிப்பீட்டு முறை என்பது வரவேற்கத்தக்கது. ஒரேயொரு தேர்வு முடிவை வைத்து,
மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவெடுப்பது முறையல்ல.மாணவர்களின்
தேர்ச்சிக்கு காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என, மூன்று
தேர்வுகளின் முடிவுகளை கருத்தில் கொள்வது சரியானது. மதிப்பெண்களை மட்டும்
வைத்து ஒரு மாணவனின் கல்வித்திறனை மதிப்பிட முடியாது. சி.பி.எஸ்.இ., முறையை
பின்பற்றி, "கிரேடு' முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது
மகிழ்ச்சிக்குரியது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, பள்ளி
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம்.இவ்வாறு சதீஷ் கூறினார்.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நிர்வாக முறையில் மத்திய அரசை பின்பற்றி தமிழக அரசு துறைகளில் மாற்றம்
» தமிழக அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றம்
» ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை: அடுத்தாண்டிலிருந்து புது தேர்வு முறை அறிமுகம்
» தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?
» தமிழக உள்துறை, நிதித்துறை செயலர்கள் மாற்றம் : அரசு அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum