TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 11:23 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 4:12 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 10, 2024 4:56 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


நான்கு வழிச்சாலை - ஒருவழிப்பாதையில் தவறாக நுழைந்த பள்ளி வேன் மீது லாரி மோதல்

Go down

நான்கு வழிச்சாலை - ஒருவழிப்பாதையில் தவறாக நுழைந்த பள்ளி வேன் மீது லாரி மோதல் Empty நான்கு வழிச்சாலை - ஒருவழிப்பாதையில் தவறாக நுழைந்த பள்ளி வேன் மீது லாரி மோதல்

Post by ஜனனி Tue Feb 16, 2010 11:13 pm

நான்கு வழிச்சாலை - ஒருவழிப்பாதையில் தவறாக நுழைந்த பள்ளி வேன் மீது லாரி மோதல் TblSambavamnews_53789919615

விருதுநகர்
: விருதுநகரில் நான்கு வழிச்சாலையில் ஒரு வழிப்பாதையில் தவறாக நுழைந்த
பள்ளி வேன் மீது லாரி மோதியதில் பள்ளி வேன் மூன்று முறை சுழன்று
தலைகுப்புற கவிழ்ந்தது. அருகில் வந்த லாரி கட்டுப்படுத்த முடியாமல்
சர்வீஸ் ரோட்டில் புகுந்தது. பின்னால் வந்த இண்டிகா கார் லாரி மீது
மோதியது. பள்ளி வேனில் பயணம் செய்த 11 குழந்தைகளில் 6 பள்ளிக்குழந்தைகள்,
வேன் டிரைவர் காயமடைந்தனர்.


ஒரு வழிப்பாதையில் புகுந்த பள்ளி வேன்:
விருதுநகர் போலீஸ் பாலம் வழியாக வரும் இணைப்பு சாலை நான்கு வழிச்சாலை
இணைக்கும் பகுதியில் இடது புறமாக திரும்பி சிவகாசி "அண்டர் பாஸ்' பாலம்
வழியாக செல்ல வேண்டும். விருதுநகர் மெட்ரிக்., பள்ளி வேன் போலீஸ் பாலம்
வழியாக வந்து இடது புறம் திரும்புவதற்கு பதிலாக பள்ளிக்குழந்தைகளை
இறக்குவதற்காக சர்வீஸ் ரோட்டில் இருந்து வலது புறமாக திரும்பி ஒரு
வழிப்பாதைக்குள் மாலை 4.40 மணிக்கு வந்தது. அப்போது எதிரே மதுரை ரோட்டில்
இருந்து இரண்டு லாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வேகமாக வந்து
கொண்டிருந்தது. பள்ளி வேன் திடீரென ஒரு வழிப்பாதையில் புகுந்ததால்
அதிவேகமாக வந்த லாரிகள் செய்வதறியாது திகைத்தன. பள்ளி வேன் டிரைவர்
மகேந்திரன் செய்வதறியாது பள்ளி வேனை ரோட்டில் நிறுத்திவிட்டார். இதில்
ஒரு லாரி மோதியதில் பள்ளி வேன் தூக்கி வீசப்பட்டு மூன்று முறை சுழன்று
20 அடிக்கு அப்பால் ரோட்டில் உள்ள தடுப்பில் வீசப்பட்டது. அருகில் வந்த
லாரி, கட்டுப்பாட்டை இழந்து சர்வீஸ் ரோட்டுக்குள் புகுந்தது. வேன் மீது
மோதிய லாரிக்கு பின்னால் வந்த இண்டிகா கார் லாரியில் மோதியது.


11 குழந்தைகள் காயம்: பள்ளிக்குழந்தைகள்
அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வேன் பின் பக்க கண்ணாடியை
உடைத்து பள்ளிக்குழந்தைகளை மீட்டனர். 11 குழந்தைகள் பயணம் செய்ததில் வீர
செல்லையாபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகள் ஜெயதேவி(6), விருதுநகர்
அண்ணாதுரை மகள் கவுசல்யா(4), சுப்பையா மகள் நாகபாண்டீஸ்வரி(7), வீர
பெருமாள் மகன் பிரகதீஸ்வரன்(8), மகள் பிரியதர்ஷினி(4), ராஜபாண்டி(4),
பள்ளி வேன் டிரைவர் மகேந்திரன்(45) ஆகியோர் காயமடைந்தனர்.
108
ஆம்புலன்ஸ், தீயணைப்புத்துறை வாகனங்கள் மீட்டு விருதுநகர் அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் அருகே உள்ள குழந்தைகளின்
பெற்றோர் திரண்டனர். பலர் குழந்தைகளுக்கு என்னவாகியதோ என அழுது
புலம்பினர். அருகில் இருந்தவர் தேற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி
வைத்தனர். அங்கு குழந்தைகளை பார்த்த பின்னரே பெற்றோர்கள் அமைதியாயினர்.
சம்பவ இடத்திற்கு கலெக்டர் சிஜிதாமஸ், எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்
சென்று பார்வையிட்டனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆஸ்பத்திரியில்
சிகிச்சை பெற்ற குழந்தைகளை பார்வையிட்டு பெற்றோர்களுக்கு ஆறுதல்
தெரிவித்தார்.


தொடர்ந்து விதி மீறல் :
* பள்ளி வேன் ஓட்டும் டிரைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அரசு
கட்டுப்பாடுகள் விதித்துள்ளது, இருந்தும் ஒரு வழிப்பாதையில் பள்ளி வேன்
சென்றதால் விபத்துக்கு காரணமாகியுள்ளது.
* பள்ளி வேன் டிரைவர் சீருடையில் இல்லாமல் லுங்கி அணிந்து பணியில் இருந்துள்ளார்.
*
தொடர்ந்து பள்ளி வேன்களை ஓட்டும் டிரைவர்கள் கவனக்குறைவாகவும், விதி
முறைகள் மீறினாலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாதது தான்
விபத்துக்கு காரணமாகியுள்ளது.
* நான்கு வழிச்சாலையில் பணிகள்
முடியாமல் பல முறை ரோடுகளில் நெடுஞ்சாலைத்துறையினர் மாற்றுப்பாதையில்
செல்ல வலியுறுத்துவதால் தொடர்ந்து நான்கு வழிச்சாலைகளில் விபத்து
ஏற்படுகிறது.
*
ஒரு வழிப்பாதையில் விதி முறை மீறி செல்லும் வாகனங்கள், டிரைவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்போடு உள்ளது. இதனை செயல்படுத்த
அதிகாரிகள் முன் வரவில்லை.
* பள்ளி வேன் விபத்தில் சிக்கியதால் விருதுநகர் நகருக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* விபத்தில் சிக்கிய வேனில் இருந்த பள்ளிக்குழந்தைகள் 10 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.


அன்றே சொன்னது தினமலர் :
நான்கு வழிச்சாலையில் விதிமீறல்கள் அதிக அளவு உள்ளது. இதனால்,
விபத்துக்கள் அதிக அளவு நடைபெறும் என ஏற்கனவே கடந்த ஜனவரி 11ம் தேதி
தினமலர் இதழில் "நான்கு வழிச்சாலை விதிமீறல்கள்' என்ற முழுபக்க படங்கள்
வெளியிட்டு இருந்தோம். அன்று சொன்னது.. இன்று நடந்தது. அதிர்ஷ்டவசமாக
உயிர் பலி எதுவும் இல்லை. விதிமுறை மீறல் உள்ளது என்று
சுட்டிக்காட்டியும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், இந்த விபத்து
நடந்துள்ளது. பெரிய விபரீதம் ஏற்படும் முன், அதிகாரிகள் தக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும். வாகனம் ஓட்டுபவர்களும் விதிமுறைகளை மீறாமல் இருந்தால்
விபத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஜனனி
ஜனனி
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

Posts : 16302
Join date : 11/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அரூர் அருகே இன்று விபத்து: பள்ளி வேன் கவிழ்ந்து 20 குழந்தைகள் படுகாயம்
» சீனாவில் பள்ளி வேன் தண்ணீரில் மூழ்கியது: 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக மரணம்
» பள்ளி வேன் விபத்தில் 13 பேர் காயம்:பிளஸ் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு
» விஜயகாந்த் பிரசார வேன் மீது செருப்பு வீச்சு.
» நான்கு கி.மீ. தினமும் நடந்தே செல்லும் பள்ளி மாணவர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum