TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 7:37 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Tue Apr 30, 2024 11:10 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Sat Apr 27, 2024 3:03 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து

Go down

இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து Empty இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து

Post by piraba Sun Aug 14, 2011 7:21 am

இந்திய அணிக்கு அவமானம் * மூன்றாவது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * "நம்பர்-' இடத்தை இழந்தது * தொடரை வென்றது இங்கிலாந்து Andrew-Strauss-large_23


பர்மிங்ஹாம்: இந்திய
அணிக்கு பெரும் அவமானம். மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்திடம் இன்னிங்ஸ்
மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இதையடுத்து டெஸ்ட்
அரங்கில் இந்திய அணி "நம்பர்-1' இடத்தை இழந்துள்ளது. தொடரை 3-0 என வென்ற
இங்கிலாந்து அணி, புதிய "நம்பர்-1' அணியாக மகுடம் சூடியது.
இங்கிலாந்து
சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதலிரண்டு டெஸ்டில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என, முன்னிலையில் இருந்தது.
இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள
எட்பாஸ்டனில் நடந்தது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 224 ரன்களுக்கு
சுருண்டது.
குக் 294, மார்கன் 104 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி
முதல் இன்னிங்சில், 7 விக்கெட்டுக்கு 710 ரன்கள் குவித்து "டிக்ளேர்'
செய்தது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது
இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்தது. காம்பிர் (14),
டிராவிட் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.
காம்பிர் அதிர்ச்சி:
நேற்று
நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் சுவான்
வீசினார். இந்த ஓவரில் ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. அடுத்து ஆண்டர்சன்
வீசய ஓவரில் முதல் பந்தில், முந்தைய நாள் ஸ்கோருடன் காம்பிர் (14),
பெவிலியன் திரும்பி அதிர்ச்சி கொடுத்தார்.
டிராவிட் சொதப்பல்:
பின்
இணைந்த டிராவிட், சச்சின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "அனுபவ' டிராவிட்டும் (18), மேலும் ரன்
எதுவும் எடுக்காமல், ஆண்டர்சன் வேகத்தில் சிக்கினார். அடுத்து வந்த
லட்சுமண், தன்பங்கிற்கு 21 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து, பெவிலியன்
திரும்பினார்.
சச்சின் ஆறுதல்:
இம்முறை
சற்று நம்பிக்கையுடன் காணப்பட்ட சச்சின், ஆண்டர்சன் ஓவரில் அடுத்தடுத்து
பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதேபோல பிரஸ்னன் ஓவரிலும் இரண்டு
பவுண்டரிகள் விளாசினார். இவருடன் இணைந்த ரெய்னா, சுவான் ஓவரில் இரு
பவுண்டரிகள் அடித்த போதும், 10 ரன்கள் எடுத்த நிலையில், இவரிடமே
சிக்கினார்.
அடுத்து சச்சினுடன், கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார்.
இந்நிலையில் கேப்டன் தோனி அடித்த பந்து, எதிர்முனையில் சுவானின் கைவிரலில்
பட்டு, "ஸ்டம்சை' தகர்க்க, சச்சின் (40) பரிதாபமாக ரன் அவுட்டானார்.
இதையடுத்து இந்திய அணி 89 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
தோனி ஆறுதல்:
பீட்டர்சன்
ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்த அமித் மிஸ்ரா, 22 ரன்கள்
எடுத்து வெளியேறினார். இந்நிலையில் தோனியுடன் இணைந்த பிரவீண் குமார்
அதிரடியாக ரன்கள் சேர்த்தார். சுவானின் ஓவரில் தொடர்ந்து ஒரு பவுண்டரி, 2
சிக்சர்கள் அடித்த அசத்தினார். 18 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 40
ரன்கள் எடுத்தநிலையில், பிரவீண் குமார், பிராட்டின் "ஷார்ட் பிட்ச்'
பந்தில் வீழ்ந்தார்.
ஆண்டர்சன் ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசிய தோனி,
டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதம் கடந்தார். அம்பயரின் தவறான தீர்ப்பில்
இஷாந்த் சர்மா, "டக்' அவுட்டானார். கடைசியில் ஸ்ரீசாந்த்தும் (5) அவுட்டாக,
இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி,
இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி (74)
அவுட்டாகாமல் இருந்தார்.வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஆண்டர்சன் 4, பிராட்,
சுவான் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
"நம்பர்-1' உறுதி:
இதையடுத்து
ஒரு டெஸ்ட் மீதமுள்ள நிலையில், 3-0 என்று தொடரை வென்றுள்ள இங்கிலாந்து
அணி, விரைவில் அறிவிக்கப்படும் புதிய "ரேங்கிங்' பட்டியலில், 134 கால
டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதன் முறையாக, "நம்பர்-1' இடத்தை பெறுகிறது.
இரு அணிகள் இடையிலான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, வரும் ஆக.
19ல் ஓவலில் துவங்குகிறது.
---
பள்ளி அணி?
மூன்றாவது
டெஸ்டின் முதல் இன்னிங்சில் 224 ரன்கள் எடுத்த இந்திய அணி, இரண்டாவது
இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து வீரர் குக் மட்டும், தனி
நபராக 294 ரன்கள் குவிக்கும் நிலையில், இந்திய வீரர்கள் பள்ளி, "கிளப்'
அளவிலான போட்டிகளில் போல, விளையாடியது பெரும் ஏமாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது.
------
வீணாக வெளியேறிய டிராவிட்
ஆண்டர்சன்
ஓவரில் டிராவிட் அடித்த பந்தை, விக்கெட் கீப்பர் பிரையர் "கேட்ச்'
செய்ததாக அம்பயர் சைமன் டபல் (ஆஸி.,) அறிவித்தார். ஆனால், "டிவி
ரீப்ளேயில்' பந்து பேட்டில் படவில்லை எனத்தெரிந்தது. "ஹாட் ஸ்பாட்',
"ஸ்னிக்கோ மீட்டர்' தொழில் நுட்பத்திலும், இது உறுதியானது. அம்பயர்
தீர்ப்பை எதிர்த்து முறையிட வாய்ப்புள்ள நிலையில், "ரிவியூ' கேட்காமால்,
டிராவிட் உடனடியாக வெளியேறியது அதிர்ச்சியாக இருந்தது.
---
அதல பாதாளத்தில்...
கடந்த
2009, டிசம்பர் மாதம் சர்வதேச தரவரிசையில், இந்திய அணி "நம்பர்-1' இடத்தை
பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்கும் முன், இந்தியா
(125), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (117) அணிகள், தரவரிசையில் முதல்
மூன்று இடத்தில் இருந்தன. தற்போதைய தோல்வியை அடுத்து (0-3) இந்திய அணி,
முதலிடத்தை இழந்துள்ளது.
* இப்போதுள்ள நிலையில், அடுத்த போட்டி "டிரா'
ஆனாலும், முதலிடத்தில் இங்கிலாந்தும் (124), அடுத்த இரு இடங்களில் இந்தியா
(119), தென் ஆப்ரிக்கா (118) இருக்கும்.
* ஒருவேளை 4வது டெஸ்டிலும்
இந்திய அணி தோல்வியடைந்தால், மூன்றாவது (117) இடத்துக்கு தள்ளப்படும்.
இங்கிலாந்து (125), தசம புள்ளிகள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்கா (117)
முதல் இரண்டு இடத்தில் இருக்கும்.
---
முதல் தோல்வி
இந்திய
டெஸ்ட் அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், 11 தொடர்களில்
பங்கேற்றது. இதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 2,
இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக
தலா ஒரு வெற்றி என மொத்தம் 8 தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. தென்
ஆப்ரிக்காவுக்கு எதிராக 2, இலங்கைக்கு எதிராக ஒன்று என, மூன்று தொடர்
"டிரா' ஆனது. இப்போதுதான் முதன் முறையாக, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில்
தோல்வி கிடைத்துள்ளது.
--
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இந்தியா 224
இங்கிலாந்து 710/7 (டிக்ளேர்)
இரண்டாவது இன்னிங்ஸ்
இந்தியா
காம்பிர்(கே)சுவான்(ப)ஆண்டர்சன் 14(42)
சேவக்(கே)ஸ்டிராஸ்(ப)ஆண்டர்சன் 0(1)
டிராவிட்(கே)பிரையர்(ப)ஆண்டர்சன் 18(39)
சச்சின்--ரன் அவுட்(சுவான்) 40(60)
லட்சுமண்(கே)பிரையர்(ப)ஆண்டர்சன் 2(21)
ரெய்னா-எல்.பி.டபிள்யு(ப)சுவான் 10(24)
தோனி-அவுட்இல்லை- 74(79)
மிஸ்ரா-(கே)பிராட்(ப)சுவான் 22(28)
பிரவீண்(கே)போபாரா(ப)பிராட் 40(18)
இஷாந்த்-எல்.பி.டபிள்யு(ப)பிராட் 0(8)
ஸ்ரீசாந்த்(கே)பீட்டர்சன்(ப)பிரஸ்னன் 5(13)
உதிரிகள் 19
மொத்தம்(55.3 ஓவரில் "ஆல்-அவுட்') 244
விக்கெட் வீழ்ச்சி:
1-3(சேவக்), 2-35(காம்பிர்), 3-40(டிராவிட்), 4-56(லட்சுமண்),
5-87(ரெய்னா), 6-89(சச்சின்), 7-130(மிஸ்ரா), 8-205(பிரவீண்),
9-221(இஷாந்த்), 10--244(ஸ்ரீசாந்த்).
பந்துவீச்சு: ஆண்டர்சன் 18-3-85-4, பிராட் 12-4-28-2, பிரஸ்னன் 10.3-3-19-1, சுவான் 13-1-88-2, பீட்டர்சன் 2-0-12-0.
piraba
piraba
பண்பாளர்
பண்பாளர்

Posts : 1302
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணிக்கு மீண்டும் அவமானம் : ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்தது
» இந்தியாவுக்கு மீண்டும் அவமானம்! * ஓவல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வி * சச்சின்- மிஸ்ரா போராட்டம் வீண்
» நம்பர் -1 இடத்தை தக்க வைத்தது இந்தியா : கோல்கட்டா டெஸ்டில் அபார வெற்றி
» தொடரை வென்றது இந்தியா: ஜிம்பாப்வே ஹாட்ரிக் தோல்வி
» இந்திய அணிக்கு கடின இலக்கு * இயான் பெல் அபார சதம்* வலுவான நிலையில் இங்கிலாந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum