TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:45 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:44 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 3:24 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு இரவு நேர மின் வெட்டு இன்று முதல் ரத்து: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

Go down

உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு இரவு நேர மின் வெட்டு இன்று முதல் ரத்து: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு Empty உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு இரவு நேர மின் வெட்டு இன்று முதல் ரத்து: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

Post by மாலதி Mon Aug 08, 2011 4:39 pm

சென்னை, ஆக. 8-


சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த
ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் மின் நிலைமை, நாளுக்கு நாள் மோசமடைந்து,
அனைத்து தரப்பு மின் நுகர்வோர்களுக்கும் பல மணி நேர மின் தடை அமலில்
இருந்தது என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

வீட்டுப்
பயனீட்டாளர்களுக்கு, சென்னை மாநகரத்தில் ஒரு மணி நேர மின் தடையும்;
மாநிலத்தின் பிற பகுதிகளில் மூன்று மணி நேர மின் தடையும் நாங்கள் ஆட்சிப்
பொறுப்பேற்ற போது இருந்தது என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு
அறிவீர்கள்.

எனது தலைமையிலான, அ.தி.மு.க. அரசு
பொறுப்பேற்ற உடன், மின் நிர்வாகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததன்
காரணமாக, சென்னை நீங்கலாக மாநிலத்தின் பிற இடங்களில் இருந்த மூன்று மணி நேர
மின் தடை, 1.7.2011 முதல் இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

உயர்
அழுத்தத் தொழிற்சாலை மற்றும் வணிகப் பயனீட்டாளர்களுக்கு தேவை மற்றும்
பயனீட்டு அளவில் 20 விழுக்காடு மின் தடை அமலில் இருந்து வந்தது. உச்சக்கட்ட
நுகர்வு நேரமான மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலத்தில், அனைத்து
உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கும் மின் வாரியக் கட்டமைப்பிலிருந்து 10
விழுக்காட்டிற்கு மிகாமல் விளக்கு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காக
மின்சாரம் கடந்த 20.8.2010 முதல் வழங்கப்படுகிறது. அதாவது, மாலை 6 மணி
முதல் இரவு 10 மணி வரையான உச்சக்கட்ட நுகர்வு நேரத்தில், உயர் அழுத்தத்
தொழிற்சாலைகளுக்கு 90 விழுக்காடு மின் தடை அமல் படுத்தப்பட்டு வந்தது.

தற்போதும், உயர் அழுத்தத் தொழிற்சாலைகள் மற்றும் வணிகப் பயனீட்டாளர்களுக்கு இந்த மின் கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறையில் உள்ளன.

காற்றாலை
மூலம் பெறப்படும் மின்சாரத்தின் மொத்த உற்பத்தித் திறன், 6,007 மெகாவாட்
ஆகும். ஆனால், காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரம் எப்போதும் ஒரே அளவில்
கிடைப்பதில்லை. காற்று அதிகமாக உள்ள ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில்,
அதிலும், காற்று அதிகமாக வீசக்கூடிய நேரங்களில், காற்றாலை மூலம் பெறப்படும்
மின்சாரம் அதிக அளவில் இருக்கும்.

இவ்வாறு
காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு, மின்சாரத் தேவை குறைவாக
உள்ள இரவு நேரங்களில் தான் அதிகமாக கிடைக்கும். எனவே, பல நேரங்களில்
இவ்வாறு கிடைக்கக் கூடிய மின்சாரத்தைப் பயன்படுத்த இயலாமல் போய் விடுவது
உண்டு. இதன் காரணமாக, காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்போர், அந்த
மின்சாரத்தை, விற்க இயலாத நிலை ஒரு பக்கமும்; மின்சாரத் தேவை உள்ளோர்
அதனைப் பெற இயலாத சூழ்நிலை ஒரு பக்கமும், நிலவுவது உண்டு.

உற்பத்தி
செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க இயலாது என்பதை அனைவரும் நன்கு
அறிவார்கள். எனவே, மின்சாரத் தேவை குறைவாக உள்ள நேரங்களில் கிடைக்கப்பெறும்
அதிக அளவு மின்சாரத்தை, தேவை உள்ளவர்களுக்கு வழங்குவது தான் சிறந்த மின்
நிர்வாகம் ஆகும்.

ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்
மாதங்களில் காற்றாலை மூலம் இரவு நேரங்களில் பெறப்படும் அதிக அளவு
மின்சாரத்தை தற்போது பயன்படுத்த எனது தலைமையிலான அரசு ஒரு செயல் திட்டத்தை
வகுத்துள்ளது.

இதன்படி, காற்றாலை மூலம் இரவு
நேரங்களில் பெறப்படும் சுமார் 100 மெகாவாட் மின்சாரம், உயர் அழுத்தத்
தொழிற்சாலைகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை 20 விழுக்காடு மின்
தடையை விலக்கிக் கொண்டு வழங்கப்படும். காற்றாலை மூலம் இவ்வாறு பெறப்படும்
மின்சாரம் முழுவதும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதால், தமிழ்நாடு மின்சார
வாரியத்திடம் இந்த மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள இசைவு
தெரிவிப்பவர்களுக்கு இது வழங்கப்படும்.

இந்த செயல்
திட்டம் இன்று, அதாவது, 8.8.2011 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன்
மூலம், உயர் அழுத்தத் தொழிற்சாலைகளுக்கு சுமார் 100 மெகாவாட் அளவுக்கு
நிவாரணம் கிடைப்பதுடன், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்பவர்கள் அந்த
மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு விற்பதன் மூலம் பயன் பெறுவர்.


மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் மின் தேவை
மற்றும் மின் பயனீட்டு அளவுக் கட்டணமாக சுமார் 10 கோடி ரூபாய் வருவாய்
ஈட்டும் என்பதையும் தெரிவித்துக்கொண்டு அமைகிறேன்


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 புதிய மாநகராட்சிகள்: சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» "15ம் தேதி இரவு 8 முதல் 9 வரை மின் விளக்குகளை அணையுங்கள்'
» தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று இரவு முதல் ஸ்டிரைக்..
» தமிழகத்தில் இன்று முதல் தடை இல்லா மின்சாரம்
» புதிய மின் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்த தடை: சீரான மின் வெட்டு இருக்காது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum