TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 9:39 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 13, 2024 11:42 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon May 13, 2024 6:34 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


இந்தியாவுக்கு இமாலய இலக்கு! * பிரையர் அசத்தல் சதம் * டிராவிட், லட்சுமண் நம்பிக்கை

Go down

இந்தியாவுக்கு இமாலய இலக்கு! * பிரையர் அசத்தல் சதம் * டிராவிட், லட்சுமண் நம்பிக்கை Empty இந்தியாவுக்கு இமாலய இலக்கு! * பிரையர் அசத்தல் சதம் * டிராவிட், லட்சுமண் நம்பிக்கை

Post by logu Mon Jul 25, 2011 7:30 am

இந்தியாவுக்கு இமாலய இலக்கு! * பிரையர் அசத்தல் சதம் * டிராவிட், லட்சுமண் நம்பிக்கை Pr-b-f


லண்டன்:
லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 458 ரன்களை வெற்றி இலக்காக
இங்கிலாந்து நிர்ணயித்தது. மாட் பிரையரின் அசத்தல் சதம் இங்கிலாந்து
அணிக்கு கைகொடுத்தது. இந்தியா சார்பில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா
நான்கு விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் டிராவிட், லட்சுமண்
பொறுப்பாக ஆடி, நம்பிக்கை அளித்தனர்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய
அணி முதல் கட்டமாக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதன் முதல்
இன்னிங்சில் இங்கிலாந்து 474/8(டிக்ளேர்) மற்றும் இந்தியா 286 ரன்கள்
எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது
இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்று
நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. இந்திய வீரர்கள் மிக துல்லியமாக பந்துவீச,
இங்கிலாந்து அணி எடுத்த எடுப்பிலேயே ஆட்டம் கண்டது. 27 பந்துகளை சந்தித்த
அலெஸ்டர் குக், ஒரு ரன் மட்டும் எடுத்த நிலையில் பிரவீண் குமார் வேகத்தில்
வீழ்ந்தார். ஹர்பஜன் சுழலில் கேப்டன் ஸ்டிராஸ்(32) சிக்கினார்.
விக்கெட் சரிவு:
இதற்கு
பின் இஷாந்த் சர்மா கலக்கினார். போட்டியின் 24வது ஓவரை வீசிய இவர், இரட்டை
"அடி' கொடுத்தார். கடந்த இன்னிங்சில் இரட்டை சதம் அடித்த பீட்டர்சனை(1),
முதல் பந்தில் வெளியேற்றினார். இந்த ஓவரின் 6வது பந்தில் இயான் பெல்(0)
விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து மிரட்டிய இவரது பந்துவீச்சில்
டிராட்டும்(22) நடையை கட்டினார். 32 பந்துகளில் 8 ரன்களுக்கு நான்கு
விக்கெட்டுகளை பறிகொடுக்க, இங்கிலாந்து அணியின் நிலைமை மோசமானது. பின்
மார்கனையும்(19) பெவிலியனுக்கு அனுப்பிய இஷாந்த், தனது நான்காவது
விக்கெட்டை பெற்றார்.
கடின இலக்கு:
இதற்கு பின்
மாட் பிரையர், ஸ்டூவர்ட் பிராட் இணைந்து பொறுப்பாக ஆடினர். அசத்தலாக பேட்
செய்த பிரையர், டெஸ்ட் போட்டிகளில் தனது 6வது சதம் கடந்தார். மறுபக்கம்
பிராட் தனது 7வது அரைசதம் எட்டினார். இங்கிலாந்து அணி இரண்டாவது
இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 269 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
இதையடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு 458 ரன்கள் என்ற கடின இலக்கு
நிர்ணயிக்கப்பட்டது. மாட் பிரையர்(103), ஸ்டூவர்ட் பிராட்(74)
அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 4 விக்கெட் வீழ்த்தினார்.
டிராவிட் உறுதி:
சவாலான
இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு முகுந்த்(12) ஏமாற்றினார். தேநீர்
இடைவேளைக்கு பின் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 80
ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் ஒரு முறை உறுதிமிக்க ஆட்டத்தை
வெளிப்படுத்திய டிராவிட்(34), லட்சுமண்(32) அவுட்டாகாமல் இருந்தனர்.
இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 378 ரன்கள் தேவைப்படுவதால், பேட்ஸ்மேன்கள் கையில் தான் முடிவு உள்ளது.
------------
"சேஸ்' செய்ய முடியுமா?
லார்ட்ஸ்
மைதானத்தில் 1984ல் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிகபட்சமாக 344 ரன்களை "சேஸ்'
செய்து வென்றுள்ளது. அப்போது கார்டன் கிரீடிட்ஜ் 214 ரன்கள் எடுத்தார்.
எனவே, இந்திய அணி "சேஸ்' செய்து வெற்றி பெறவோ அல்லது போட்டியை "டிரா'
செய்யவோ கடுமையாக போராட வேண்டும்.
-----------------------
சச்சினுக்கு காய்ச்சலால் சிக்கல்
முதல்
இன்னிங்சில் காய்ச்சலுடன் பேட் செய்த சச்சின், நேற்று "பீல்டிங்' செய்ய
துவக்கத்தில் வரவில்லை. மாத்திரைகள் எடுத்துக் கொண்டு ஓட்டலில் ஓய்வு
எடுத்த இவர், இரண்டு பகுதி ஆட்டம் முடிந்து, கடைசி கட்டத்தில் தான்
களமிறங்கினார். கிரிக்கெட் விதிமுறைப்படி மிகவும் தாமதமாக வரும் வீரர், 5
விக்கெட் வீழ்ந்த பின் தான் பேட்டிங் செய்ய களமிறங்க முடியும்.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில், தனது வழக்கமான நான்காவது இடத்தில்
சச்சின் வர முடியாது. ஏழாவது பேட்ஸ்மேனாக தான் வர முடியும். இதன் விளைவாக
லார்ட்ஸ் அரங்கில், தனது 100வது சதம் அடிக்கும் இவரது கனவு நனவாக அனேகமாக
வாய்ப்பு இல்லை.
---------
காம்பிர் காயம்

இந்திய அணியை இம்முறை சோதனை துரத்துகிறது. ஜாகிர்(தொடையில்
தசைப்பிடிப்பு), சச்சினை(காய்ச்சல்) தொடர்ந்து கவுதம் காம்பிரும்
காயத்தில் சிக்கினார். நேற்றைய போட்டியின் 55வது ஓவரை ஹர்பஜன் வீசினார்.
அப்போது இங்கிலாந்து வீரர் மாட் பிரையர் "ஸ்வீப் ஷாட்' அடிக்க...படுவேகமாக
வந்த பந்து "ஷார்ட் லெக்' திசையில் "பீல்டிங்' செய்து கொண்டிருந்த
காம்பிரின் இடது முழங்கை பகுதியில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த
இவர், களத்தை விட்டு வெளியேறினார். உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்
செல்லப்பட்ட இவருக்கு "எக்ஸ்-ரே' எடுத்து பார்க்கப்பட்டது. இதன் முடிவை
பொறுத்து இவர் இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்வாரா என்பது தெரிய வரும்.
இவர் நேற்று களமிறங்காததால், டிராவிட் துவக்க வீரராக வந்தார்.
----------------------
தோனிக்கு தடை?
லார்ட்ஸ்
டெஸ்டில் இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசாததால் கேப்டன்
தோனிக்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. முதல்
இன்னிங்சில் ஒரு மணி நேரத்தில் 15 ஓவருக்கு பதிலாக 13 ஓவர்கள் மட்டுமே
வீசப்பட்டன. ஐ.சி.சி., விதிமுறைப்படி 12 மாத காலத்தில் 3 போட்டிகளில்
தாமதமாக பந்துவீசினால், அந்த அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் பங்கேற்க
தடை விதிக்கப்படும். கடந்த ஜனவரியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது
டெஸ்ட் மற்றும் சமீபத்திய வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான பார்படாஸ் டெஸ்டில்,
இந்தியா தாமதமாக பந்துவீசியது. தற்போது லார்ட்சிலும் இதே பிரச்னை
ஏற்பட்டிருப்பதால், தோனிக்கு சிக்கல் காத்திருக்கிறது. ஒருவேளை
இப்போட்டியில் இருந்து தப்பினாலும், இத்தொடர் முழுவதும் தடை ஆபத்து
நீடிக்கும்.
--------------
ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 474/8(டிக்ளேர்)
இந்தியா 286
இரண்டாவது இன்னிங்ஸ்
இங்கிலாந்து

ஸ்டிராஸ் எல்.பி.டபிள்யு.,(ப)ஹர்பஜன் 32(70)
குக்(கே)தோனி(ப)பிரவீண் 1(27)
டிராட்(ப)இஷாந்த் 22(55)
பீட்டர்சன்(கே)தோனி(ப)இஷாந்த் 1(3)
பெல்(கே)தோனி(ப)இஷாந்த் 0(5)
மார்கன்(கே)காம்பிர்(ப)இஷாந்த் 19(56)
பிரையர்-அவுட் இல்லை- 103(120)
பிராட்-அவுட் இல்லை- 74(90)
உதிரிகள் 17
மொத்தம்(71 ஓவரில் 6 விக்., "டிக்ளேர்') 269
விக்கெட் வீழ்ச்சி: 1-23(குக்), 2-54(ஸ்டிராஸ்), 3-55(பீட்டர்சன்), 4-55(பெல்), 5-62(டிராட்), 6-107(மார்கன்).
பந்துவீச்சு: பிரவீண் 20-2-70-1, இஷாந்த் 22-6-59-4, ஹர்பஜன் 21-1-66-1, ரெய்னா 6-0-43-0, தோனி 2-0-16-0.
இந்தியா
முகுந்த்(ப)பிராட் 12(32)
டிராவிட்-அவுட் இல்லை- 34(73)
லட்சுமண்-அவுட் இல்லை- 32(58)
உதிரிகள் 2
மொத்தம்(27 ஓவரில் 1 விக்.,) 80
விக்கெட் வீழ்ச்சி: 1-19(முகுந்த்).
பந்துவீச்சு: ஆண்டர்சன் 8-0-26-0, டிரம்லட் 8-3-22-0, பிராட் 6-2-12-1, சுவான் 5-0-19-0.
logu
logu
பண்பாளர்
பண்பாளர்

Posts : 6689
Join date : 12/02/2010

http://tamilarkalinsinthanaikalam.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» லட்சுமண், தோனி அசத்தல் சதம்! *வலுவான நிலையில் இந்தியா *வெ.இண்டீஸ் ஏமாற்றம்
» ஹர்பஜன் அசத்தல் சதம்* மீண்டும் கைகொடுத்தார் லட்சுமண்* முதல் டெஸ்ட் "டிரா' ஆனது
» டிராவிட், லட்சுமண் களத்தில் பயந்தது கிடையாது: கும்ளே
» லட்சுமண், தோனி சதம்: இந்தியா ஆதிக்கம்
» இந்தியாவுக்கு இமாலய வெற்றி! * ஹர்பஜன் "சுழலில்' இங்கிலாந்து காலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum