TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 4:56 pm

» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Wed May 08, 2024 11:33 pm

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 07, 2024 3:00 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Wed Feb 21, 2024 8:58 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?

Go down

பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி? Empty பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த என்ன வழி?

Post by மாலதி Mon Jun 06, 2011 12:07 pm

பொதுத்துறையைசேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான்
பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கடந்த
2010-11ம் நிதியாண்டில், கொழுத்த லாபம் கண்டுள்ளன. இந்த லாபம் போதாது;
மக்களை வருத்தி, மேலும் லாபம் ஈட்ட வேண்டும் என்பதே, அரசு மற்றும்
இந்நிறுவனங்களின் நிலைப்பாடாக உள்ளது என்பது வருத்தமளிக்கிறது.
கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், மத்திய அரசு, பெட்ரோல் மீதான விலைக்
கட்டுப்பாட்டை நீக்கியது. அதாவது, சந்தை நிலவரத்திற்கேற்ப, எண்ணெயை
சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலின் விலையை நிர்ணயித்துக்
கொள்ளலாம். சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம்
காட்டி, இந்நிறு வனங்கள் பெட்ரோல் விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.
ஆக, ஓராண்டு காலத்தில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு 32 சதவீதம் (15.40
ரூபாய்) உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில், சென்ற மே 15ம் தேதி
பெட்ரோல் விலையில், லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதைத்
தொடர்ந்து, மீண்டும் விலையை உயர்த்தப் போவதாக, இந்நிறுவனங்கள் அறிவிப்பு
வெளியிட்டு வருகின்றன. தற்போது, டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு
ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொள்ள, எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி
அளிக்கப்படவில்லை. இவற்றின் விலை உயர்வு குறித்து, மத்திய அரசால் மட்டுமே,
முடிவெடுக்க முடியும் என்ற சூழ்நிலை உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள்,
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய நான்கு எரிபொருள்கள்
தவிர, எண்ணெய் சுத்திகரிப்பின் வாயிலாக, பல்வேறு உப பொருள்களையும்
உற்பத்தி செய்து வருகின்றன. இவற்றின் விற்பனை மூலம், இந்நிறுவனங்கள்
சத்தமில்லாமல் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன.
ஐ.ஓ.சி., என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
நிறுவனத்தின் மொத்த விற்றுமுதல், சென்ற 2010-11ம் நிதியாண்டில், 3
லட்சத்து 28 ஆயிரத்து 744 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐ.ஓ.சி.,
வரலாற்றில் முதல் முறையாக இந்த அளவிற்கு விற்றுமுதல் உயர்ந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. பெட்ரோலிய பொருள்களின் விற்பனை, 3.9 சதவீதம் வளர்ச்சி
கண்டுள்ளது. வரிக்கு பிந்தைய லாபம், 7,446 கோடி ரூபாயாக உள்ளது.
(இந்நிறுவனத்திற்கு, இந்த லாபம் போதவில்லை போலும்) கச்சா எண்ணெய்
சுத்திகரிப்பு லாப வரம்பும், ஒரு பீப்பாய்க்கு 4.47 டாலரிலிருந்து 5.95
டாலராக உயர்ந்துள்ளது. நடப்பாண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத
காலத்தில், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு, ஒரு பீப்பாய்க்கு
7.85 டாலராக உயர்ந்துள்ளது. சென்ற நிதியாண்டில், அடக்க விலைக்கும் குறைவாக
பெட்ரோலிய பொருள்களை வழங்கிய வகையில், ஐ.ஓ.சி., 22 ஆயிரத்து 605 கோடி
ரூபாய் இழப்பீடு கோரியுள்ளது. இதில், 11 ஆயிரத்து 662 கோடி ரூபாய்
வழங்கப்பட்டு விட்டது. இத்தகைய மானிய உதவியை பெற்ற நிலையிலும்,
நிறுவனத்திற்கு 4,845 கோடி ரூபாய் இழப்பு (லாபத்தில்) ஏற்பட்டுள்ளதாகவும்,
மொத்த கடன் சுமை 67 ஆயிரத்து 800 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும்,
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற நிதியாண்டில், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர
லாபம், 1,538 கோடி ரூபாயிலிருந்து, 1,547 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்திற்கு மத்திய அரசு, 9,149 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்து வரும், ஓ.என்.ஜி.சி.,
மற்றும் கெயில் நிறுவனங்கள், 6,969 கோடி ரூபாய் மானிய விலையில், இவற்றை
வழங்கியுள்ளன. இதே போல், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தின் நிகர லாபமும் அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த
விற்பனை, 1 கோடியே 38 லட்சத்து 49 ஆயிரத்து 275 ரூபாயாகவும், நிகர லாபம்
17 லட்சத்து 70 ஆயிரத்து 360 ரூபாயாகவும் உள்ளது. இந்நிறுவனங்கள் நல்ல
அளவில் லாபம் ஈட்டியுள்ள போதிலும், மத்திய அரசின் மானிய உதவியில்லை
என்றால், இழப்பைத் தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கின்றன.
பெட்ரோல் விலையை கடந்த மாதம் உயர்த்தியுள்ள போதிலும், ஒரு லிட்டர்
பெட்ரோலுக்கு சராசரியாக 5.50 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக இந்நிறுவனங்கள்
கூறுகின்றன.
பெட்ரோலிய பொருள்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளைக்
குறைத்தால், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது என, பெட்ரோல் நிலைய
உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். சென்னையில், ஒரு லிட்டர்
பெட்ரோல் விலை, 67.22 ரூபாயாக உள்ளது. தற்போது, ஒரு பீப்பாய் கச்சா
எண்ணெய் விலை, 107 டாலர் என்று வைத்துக் கொண்டால், இதன் மதிப்பு 4,858
ரூபாயாக உள்ளது. ஒரு பீப்பாயின் எண்ணெய் கொள்ளளவு 160 லிட்டர். இதன்படி,
ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 30.36 ரூபாய். இதில் சுத்திகரிப்பு
மற்றும் போக்குவரத்து செலவு, 13 ரூபாய், முகவர் தரகு கட்டணம் 1.17 ரூபாய்
என்று வைத்துக் கொண்டால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை, 44.53
ரூபாய் என்ற அளவிற்கு வருகிறது. வரியாக 22.69 ரூபாய் செலுத்தப்படுகிறது.
ஆக, ஒரு லிட்டர் பெட்ரோலின் விற்பனை விலையில், 50 சதவீதம் வரியாக உள்ளது.
சென்ற நிதியாண்டில், பெட்ரோலிய துறை வாயிலாக மத்திய அரசுக்கு, 1 லட்சத்து
35 ஆயிரத்து 433 கோடி ரூபாயும், மாநில அரசுகளுக்கு 90 ஆயிரம் கோடி
ரூபாயும், வரி வருவாயாக கிடைத்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களின் மொத்த இழப்பு, 78 ஆயிரத்து
159 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு மானியமாக,
61.3 சதவீதமும், ஓ.என்.ஜி.சி., உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி
நிறுவனங்கள், 38.7 சதவீத மானியமும் வழங்குகின்றன. இதன்படி கணக்கிட்டால்,
மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியம், 47 ஆயிரத்து
912 கோடி ரூபாய் என்ற அளவிற்கே உள்ளது. இதை, வரி வருவாயில் கழித்தால்,
மத்திய அரசின் நிகர வருவாய், 87 ஆயிரத்து 521 கோடி ரூபாயாக இருக்கும்.
பெட்ரோலிய பொருள்களுக்கான வரியை குறைத்தால், மத்திய அரசின் மானியச்
செலவும், நிகர வரி வருவாயும் குறையும். அதேசமயம், நுகர்வோர்
எரிபொருளுக்காக செலவிடுவதும் குறையும். ஒரு புறம் வரிகள் மூலம், வருவாயை
பெறும் மத்திய அரசு, அதே வரிச் சுமை காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை
உயர்வாலும், எரிபொருள் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியம்
அளிக்கிறது. இந்த முரண்பாடான நடைமுறையை சீரமைக்க, குழு ஒன்று அமைத்து,
அதன் பரிந்துரைக்கேற்ப வரிச் சீர்திருத்தம் மேற்கொண்டால், எரிபொருள் விலை
உயர்வு தொடர்பாக நிரந்தர தீர்வு காணலாம். பெட்ரோல் விலை
பிரச்னையிலிருந்து, மக்கள் விடுபடலாம். அண்மைக்கால பணவீக்க உயர்விற்கு,
பெட்ரோலிய பொருள்களின் விலை உயர்வு, முக்கிய காரணமாக உள்ளது. பெட்ரோலிய
பொருள்களின் விலையை அடிக்கடி உயர்த்தாமல், மக்களின் அன்றாடத் தேவைப்
பொருள்களை, தடையில்லாமல் வழங்கினாலே, பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும்.
அதைவிடுத்து, ரிசர்வ் வங்கி மட்டும், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை
உயர்த்துவதால், அதிக பயன் கிடைக்கப் போவதில்லை. வட்டிச் செலவின
அதிகரிப்பால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகிறது.
மேலும், மோட்டார் வாகனம், தொழில் துறை, நுகர் பொருள்கள் என, அனைத்து
துறைகளும் இடர்பாட்டிற்கு உள்ளாகின்றன.


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெற மத்திய அரசு மறுப்பு
» பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து தில்லியில் பாஜக ஆர்ப்பாட்டம்
» பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெற மம்தா, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
» பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஸ்டிரைக்: கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
» மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜெயலலிதா கடும் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum