TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

TamilYes
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
TamilYes
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின் நூல்கள் தரவிறக்க.. (தொடர்)
by வாகரைமைந்தன் Today at 12:02 am

» தினம் ஒரு தகவல் (தொடர்)
by வாகரைமைந்தன் Yesterday at 8:24 pm

» உலகச் செய்திகளில் விநோதம் (தொடர்)
by வாகரைமைந்தன் Fri May 17, 2024 5:06 pm

» கணினி-இணைய -செய்திகள்/தகவல்கள்
by வாகரைமைந்தன் Sun May 12, 2024 10:47 pm

» வரலாற்றில் வினோதங்கள் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Apr 29, 2024 4:32 pm

» How to earnings online?
by Tamil Mon Dec 11, 2023 8:15 pm

» ‘பிரிவு 370 நீக்கம் சரியே..!’ - உச்ச நீதிமன்றத் தீர்ப்பும், ஜம்மு காஷ்மீரின் எதிர்காலமும்!
by Tamil Mon Dec 11, 2023 6:52 pm

» மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்... விதிமுறைகள் என்ன சொல்கிறது?
by Tamil Mon Dec 11, 2023 6:49 pm

» ``கமல்ஹாசன், ஒரு சீட்டுக்காக திமுக-வுக்கு லாலி பாடுகிறார்!" - விளாசும் செல்லூர் ராஜூ
by Tamil Mon Dec 11, 2023 6:44 pm

» Bigg Boss 7 Day 70: `வன்மம்... வன்மம்... வன்மம்' அர்ச்சனா, விஷ்ணுவுக்கு கமல் நடத்திய பரேடு!
by Tamil Mon Dec 11, 2023 6:38 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sun Oct 29, 2023 6:26 pm

» My open letter to Brother VincentSelvakumar and Sadhu Sundar Selvaraj of Jesus Ministries in India
by வாகரைமைந்தன் Sun Oct 22, 2023 3:15 pm

» பாஸ்டர் வின்சென்ட் செல்வகுமார் புத்தகங்கள் வேண்டும்
by gnanaseharj Sat Oct 21, 2023 8:31 pm

» புத்தகம் தேவை
by gnanaseharj Sun Sep 17, 2023 9:19 pm

» நாவல் தேவை
by jayaragh Sat Jun 10, 2023 9:58 pm

» ஆன்லைன் இணைய மோசடிகள் + பாதுகாப்பு முறைகள்
by வாகரைமைந்தன் Mon Oct 24, 2022 3:26 pm

» தினம் ஒரு திருக்குறள்- படிப்போம்
by வாகரைமைந்தன் Sun Sep 18, 2022 1:15 pm

» சிறுவர் கதைகள்
by வாகரைமைந்தன் Fri Aug 12, 2022 12:28 am

» கதை படிக்கலாம்-கதையும் படிக்கலாம் (தொடர்)
by வாகரைமைந்தன் Mon Aug 08, 2022 4:48 pm

» வல்லிபுரத்தினில் கண்ணன் தலத்தினில் மாயவனின் திருநடனம் வண்ணமயத்தினில் வண்ணநிலத்தினில் அகன்றிடுமே பெருஞ்சலன
by veelratna Fri Jul 22, 2022 11:14 am

» கண்முன்னே பரிதவிக்கும் பிள்ளையின் நிலை கண்டு துடிக்கும் பெற்ற மனம்
by veelratna Fri Jul 15, 2022 11:59 am

» இணையத்தில் தரவுகள்+பாதுகாப்பு (தொடர்)
by வாகரைமைந்தன் Tue May 03, 2022 3:16 pm

» ஆரம்ப - மேல் நிலை கணினி-இணையப் பாடம்
by வாகரைமைந்தன் Mon Jan 31, 2022 4:07 pm

» பாடல் என்ன தெரியுமா? கேள்வியும்-பதிலும் (தொடர்)
by வாகரைமைந்தன் Thu Jan 27, 2022 5:47 pm

» சித்தமருத்துவ நூல்கள் தரவிறக்கம் செய்ய..
by வாகரைமைந்தன் Sun Jan 02, 2022 4:04 pm

» யாழ்ப்பாணம் கோட்டை
by Tamil Mon Dec 13, 2021 6:44 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் - மின்நூல்
by வாகரைமைந்தன் Fri Dec 10, 2021 11:14 pm

» கவிதை படிக்கலாம்
by வாகரைமைந்தன் Thu Dec 02, 2021 4:09 pm

» சினிமாவில் தொழில்நுட்பம்+செய்தி
by வாகரைமைந்தன் Fri Nov 19, 2021 4:45 pm

» மனசு அமைதி பெற .......
by veelratna Mon Nov 08, 2021 12:13 pm

» கீரிமலையில் அமைந்துள்ள சிவன் கோயில் நகுலேஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 12:11 pm

» இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படட சில பழைய விளம்பரங்கள் அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே
by veelratna Mon Nov 08, 2021 12:06 pm

» பக்தி பாடல்கள்
by veelratna Mon Nov 08, 2021 12:04 pm

» தவில் நாதஸ்வரம்
by veelratna Mon Nov 08, 2021 11:58 am

» புது வரவு விளையாட்டு
by veelratna Mon Nov 08, 2021 11:56 am

» கீரிமலை நாகுலேஸ்வரம் கோவில்
by veelratna Tue Oct 26, 2021 11:51 am

» நாச்சி முத்தையா நாச்சி முத்தையா
by veelratna Tue Oct 26, 2021 11:48 am

» மெல்லிசை பாடல்
by veelratna Mon Oct 25, 2021 11:35 am

» யாழ்ப்பாணம் கச்சேரி பழய நினைவுகள்
by veelratna Mon Oct 25, 2021 11:31 am

» கீரிமலை கேணியடி ,நகுலேஸ்வரம் கோவிலடி
by veelratna Wed Oct 20, 2021 12:53 pm


திட்டமிட்ட ஒதுக்கீடு!

Go down

திட்டமிட்ட ஒதுக்கீடு! Empty திட்டமிட்ட ஒதுக்கீடு!

Post by மாலதி Wed Mar 02, 2011 7:34 am


திட்டமிட்ட ஒதுக்கீடு! Editorialimg





நாடாளுமன்றப் பொதுக் கணக்குக்குழு கடந்தவாரம் கொஞ்சம் கோபமாகவே இருந்தது.
இதற்குக் காரணம், தீவிரப்படுத்தப்பட்ட பாசனப் பயன்பாட்டுத் திட்டங்களுக்கான
நிதிஒதுக்கீட்டில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதுதான்.
பல திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் தொடங்கி, ஒப்பந்ததாரர்களுக்கு விதிகளை
மீறி அளித்த பணம், சலுகை எல்லாமும் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதால், இந்தத்
திட்டங்களின் உண்மைத்தன்மை என்ன, எதுவரையிலும் நடைபெற்று முடிந்துள்ளது என்கிற
முழுவிவரங்களை பொதுக் கணக்குக் குழுவிடம் 6 மாதத்துக்குள் அளிக்க வேண்டும் என்று
கட்டளையிட்டிருக்கிறார்கள்.
2008-ம் ஆண்டில் 253 சிறிய மற்றும் பெரிய பாசனத் திட்டங்கள் அனுமதிக்கப்பட்டன.
இதில் 100 திட்டங்கள் முடிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்லப்பட்டது. இப்படிச்
சொல்லப்பட்ட திட்டங்களில் 12 பாசனத் திட்டங்கள் செய்து முடிக்கப்படாமலேயே,
நடைமுறைக்கு வராமலேயே இருப்பதைக் கண்ட பொதுக் கணக்குக் குழு, இவ்வளவு பணம்
செலவழித்து என்ன லாபம் என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது. இந்தத் திட்டங்களை
மத்திய அரசின் நீர் ஆதார அமைச்சகம் ஏன் கண்காணிக்கவில்லை என்கிற கேள்வியைக்
கேட்டிருக்கிறது.
தீவிரப்படுத்தப்பட்ட பாசனப் பயன்பாட்டுத் திட்டம் 1996-97-ல் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் பாசனப் பரப்பை அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் பாசன
வாய்க்கால் அமைக்கவும், நதிகளை இணைத்து அல்லது அணைகள் எழுப்பி தண்ணீரை
நெடுந்தொலைவுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து விவசாயிகளுக்குப் பாசனம் தருவதுமே இதன்
நோக்கம். அத்திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப மத்திய அரசின் நிதியுதவி அளவும் 50
விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை இருக்கும்.
ஆனால், இத்திட்டத்தின்கீழ் நிதி பெற்ற மாநிலங்கள் பணியைச் சரியாகச்
செய்யவில்லை. பத்திரிகையாளர்களிடம் இதுபற்றிக் குறிப்பிடும் நாடாளுமன்றப் பொதுக்
கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ""இதில் நடைபெற்றுள்ள முறைகேடுகளால்
மக்கள் பணம் வீணாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, வாய்க்கால் கட்டியிருக்கிறார்கள். ஆனால்,
அதில் ஒரு சொட்டுத் தண்ணீர் கிடையாது. ஏனென்றால், தலைமடைப் பிரிவில் பணி
முடிக்கப்படவே இல்லை. அதனால், இந்த வாய்க்காலில் தண்ணீருக்கு வழியில்லை. ஆனால்,
திட்டம் முடிக்கப்பட்டதாக ஒப்பந்ததாரர்களுக்குப் பணம் வழங்கி இருக்கிறார்கள். இதனால்
விவசாயிகளுக்குத் துளியும்கூட நன்மை ஏற்படவில்லை''.
இந்த நிலை குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பிகார், மணிப்பூர்,
கேரளம் ஆகிய மாநிலங்களில் காணப்பட்டாலும், பொதுக் கணக்குக் குழுவுக்குப் பெரும்
கோபம் விளைவித்த மாநிலங்கள் இரண்டுதான். ஒன்று ஆந்திரம்; அடுத்தது கர்நாடகம்.
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, "ஜலயக்ஞம்' என்கிற
திட்டத்தைத் தொடங்கினார். பாசனம் இல்லாத பகுதியே இல்லை என்று ஆந்திர மாநிலத்தை
மாற்றிவிடுவோம் என்பதுதான் அவரது தேர்தல் சபதமாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ்
ஆட்சி நடைபெற்றதால், அவரால் இத்திட்டத்துக்கு ரூ. 2,000 கோடி வரை நிதி பெறவும்
முடிந்தது. ஆனால், இப்போது அந்தத் திட்டங்களுக்கான பணிகள் குறித்து ஆய்வுகள்
நடத்தியபோது, பொதுக் கணக்குக் குழுவினருக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.
பல பாசனத் திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்களிடம் மறுமதிப்பீடு பெற்று அதற்கான
தொகையை அளித்துள்ளனர். இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் சிமென்ட், இரும்புக்
கம்பி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களுக்கும் சுங்கவரி கிடையாது என்கிற சலுகை உள்ளதால்,
இத்திட்டத்துக்கு வாங்கப்பட்ட மூலப்பொருள்கள் வேறு வேலைக்குத்
திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் பழுது அல்லது குறை ஏற்பட்டால்
ஒப்பந்ததாரர் பொறுப்பேற்க வேண்டும் என்கிற நிபந்தனையை மாநில அரசு வலியுறுத்தவேயில்லை.
திட்டம் நிறைவேறும் முன்பாகவே பணம் வழங்கப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. ஆந்திர
மாநிலத்தில் கல்வாகுர்தி பாசனத் திட்டத்தில் மட்டுமே ஒப்பந்ததாரர்கள் அடைந்த பலன்
ரூ.160 கோடி வரை இருக்கும் என்று பொதுக் கணக்குக் குழு அனுமானித்துள்ளது.
இதுபோன்று கர்நாடக மாநிலத்தில் மேல் கிருஷ்ணா பாசனத் திட்டம் நிலை-1, நிலை -2
உள்பட நான்கு திட்டங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதை, பொதுக் கணக்குத் தணிக்கைத்
துறையே எடுத்துக் காட்டிவிட்டது.
இந்தத் திட்டங்களை மேற்பார்வையிடும் பொதுப்பணித் துறை, நீர் ஆதார அமைப்புகளின்
உயர் அதிகாரிகளை, பொதுக் கணக்குக் குழு அழைத்து கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளது.
"உங்கள் மீது ஏன் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது?' என்று கேட்டதாகவும்கூடச்
சொல்லப்படுகிறது.
இந்த முறைகேடுகளுக்கு அடிப்படைக் காரணம் மாநில அரசுகள் தரும் திட்டங்களின்
சாத்தியத் தன்மை குறித்து மத்திய அதிகாரிகள் முறையாக மறுஆய்வு செய்யாமல்
இருப்பதும்தான். ஆய்வுக்காக வரும் உயர் அதிகாரிகளை எப்படி மனம்மகிழச் செய்வது என்பதை
மாநிலங்கள் தெரிந்துவைத்திருக்கின்றன.
ஓர் ஆறுதல். இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு பெற்ற நிதியுதவி மிகமிகச்
சொற்பம். 2007-ம் ஆண்டில்தான் இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறும் முயற்சியைத்
தமிழக அரசு மேற்கொண்டது. காவிரி-குந்தாறு இணைப்புத் திட்டம் ரூ.189 கோடி செலவிலும்,
தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம் ரூ.369 கோடியிலும்
நிறைவேற்றக்கோரி கருத்துரு அளித்தது. 2010-ம் ஆண்டு ஆளுநர் உரையில்கூட, மத்திய அரசு
நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை நிதி
கிடைக்கவில்லை.
மக்கள் வரிப்பணம் எப்படியெல்லாம் சூறையாடப்பட்டு வருகிறது என்பதற்கு இது
இன்னொரு உதாரணம். திட்டமிடப்பட்டிருக்கிறது, திட்ட ஒதுக்கீடு என்று சொல்வதெல்லாம்
மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்
திட்டமிடுவதால் ஏற்பட்ட காரணப்பெயர் என்று இப்போதல்லவா தெரிகிறது!


[You must be registered and logged in to see this link.]
மாலதி
மாலதி
பண்பாளர்
பண்பாளர்

Posts : 17076
Join date : 12/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» திட்டமிட்ட இனப்படுகொலை.
» இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை: முதலமைச்சர்
» விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு – இந்திய உளவுத்துறையின் திட்டமிட்ட சதி!
» டெசோ அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டம் தமிழினத்தை திசை திருப்பும் திட்டமிட்ட நாடகம்
» இலங்கையில் இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை: இந்தியாவும் உதவியது! டில்லியில் அடித்துச் சொன்ன திருமுருகன் காந்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum